2013 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்களால் 561 குழந்தைகளும் 235 பெண்களும் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 2959 அப்பாவிகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளினால் கொலைசெய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்க்கான ஐ.நா இன் உதவி செயற்பாட்டகம்-UN Assistance Mission for Afghanistan (UNAMA)- நடத்திய ஆய்வு ஒன்றில் இத் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்களில் 5600 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 1195 குழந்தைகள் அடங்குகின்றனர். நாளாந்த வாழ்வின் போதே குழந்தைகளும் பெண்களும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், பாடசாலைகளிலும், கல்விக்கூடங்களுக்குப் பயணிக்கும் போதும், வீடுகளிலும், பொது நிகழ்ச்சிகளுக்குப் பயணிக்கும் போதுமே கொலைகள் நடைபெற்றிருப்பதாக மேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களதும் காயமடைந்தவர்களதும் தொகை 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 14 வீதம் அதிகமானது என அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. ஆய்வுகளுக்கு உட்படாதவர்களின் தொகை மேலும் அதிகமானது என ஆப்கானிஸ்தானுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
உலகின் கொலைக் கருவிகளான அமெரிக்கப்படைகள் இப்போது ஆசிய நாடுகளை மையப்படுத்தி அந்த நாடுகளை இராணுவமயமாக்கி வருகின்றன.
ஆசிய மையம் என்ற அமெரிக்காவின் புதிய வெளிவிகாரக் கொள்கையில் தெற்காசிய இராணுவ மையப்புள்ளியாக இலங்கை மாற்றமடைந்து வருகிறது. அதனை அடிப்படையாகக்கொண்டே அமெரிக்காவின் அனைத்து மனித உரிமைச் சோகங்களும் நகர்த்தப்படுகின்றன. இலங்கையில் அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய இராணுவமாக இலங்கை இராணுவம் செயற்படுகின்றது.
1967. Tet Offensive. About 2,500 American soldiers dead. Over 25,000 Vietnamese dead. The collateral damage. Why do people fight. Turning point in the political life of Lyndon Baines Johnson. Tough Tall Texan.