இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் டுபாய் வங்கியில் 500 மில்லியன் அமெரிக்க டொலரை மீளப்பெற்றுள்ளதாகவும், இலங்கையின் முன்னணிக் குடும்பம் ஒன்று அதே வங்கியில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை வைப்புச் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி செயற்பாடுகளின் பிரதானிகள் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தியுள்ளார்.
நேற்று பாராளுமன்ற அமர்வுகளின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
டுபாய் வங்கியில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை வைப்புச் செய்துள்ள முன்னணிக் குடும்பத்தினர் யார்? ரணில் விக்கிரமசிங்க குடும்பத்தினரா? அல்லது ராஜபக் ஷ குடும்பத்தினரா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்
Omg!
It does not matter what party they belong. All are crooks.