மெடிட்டிரேனியன் கடலில் 500 அகதிகள் கடலில் மூழ்கிப் பரிதாபமாக மரணித்துப்போயினர் என நம்பப்படுகிறது. பலஸ்தீனம், எகிப்து, சிரியா மற்றும் சூடான் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் போர்க்களமாக மாற்றியுள்ள நிலையில் அந்த நாடுகளிலிருந்து தப்பிச்செல்லும் அகதிகளின் தொகை அதிகரித்துள்ளது. மோல்டா கடற்பிரதேசத்திலேயே இக் கோரச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இடப்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயிர்தப்பிய இருவருடன் பேசியதிலிருந்து இத்தகவல்கள் வெளியானதாக அந்த அமைப்பு கூறுகிறது. நாடுகள் மீது போரைக் கட்டவிழ்த்துவிடுவதும், அங்கிருந்து தப்பிச் செல்லும் அகதிகளைத் தடுப்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற்றச்செயலாக நடைபெற்று வருகின்றது.
குறித்த அமைப்பு வெளியிட்ட மேலதிக தகவல்களின் அடிப்படையில், ‘சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில் புறப்பட்டு சென்றனர். எகிப்தில் உள்ள டமிட்டா என்ற இடத்தில் இருந்து சுமார் 500 பேர் புறப்பட்டனர்.
கடந்த 6–ந்தேதி புறப்பட்ட இவர்கள் 10–ந்தேதி மத்திய தரைக்கடலில் மால்டா தீவு அருகே வந்தபோது கப்பலில் அழைத்து வந்த கடத்தல் காரர்கள் அகதிகளை பல சிறிய படகுகளில் ஏறி செல்லுமாறு கூறினர்.
அவை மிக சிறியதாக இருந்ததால் அதில் ஏற அகதிகள் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கப்பலை தாக்கி அடித்து கடலில் மூழ்கடித்தனர்.’
எனத் தெரிவிக்கின்றனர்.
The human will to live and die. To run away to better pastures. That is also a part of human history on the face of this earth.