500 கிழக்கு இளைஞர்களுக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு

கிழக்கு மாகாணத்தில் படித்து முடித்துவிட்டு வேலையற்றிருக்கும் 500 இளைஞர், யுவதிகளுக்கு கொரியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
மேற்படி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் இளைஞர், யுவதிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் கொரிய மொழி தொடர்பான பாட நெறிக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இரு தொழில் பயிற்சி நிலையங்களை நிறுவி அதனூடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன் ஏற்கனவே கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.