Saturday, June 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

50 ஆண்டு கால ஆதிக்க சக்திகளின் தடையை தகர்த்து தலித் மக்கள் ஆலய பிரவேசம்!

இனியொரு... by இனியொரு...
02/05/2010
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடி கிராமத்தில் 50 ஆண்டு கால ஆதிக்க சக்திகளின் தடையை தகர்த்து தலித் மக்கள் ஆலய பிரவேசம் நடத்தினர்.

இந்த கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொது ஏரியில் இம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு, அய்யனார்கோவிலில் வழிப்படும் உரிமை ஆகியவற்றை ஆதிக்க சாதியினர் மறுத்து வந்தனர். இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் 30ம் தேதி ஆலயத்திற்குள் பொங்கலிட்டு சாமி கும்மிடும் போராட்டம் நடத்தினர். அப்போது கிராம ஆதிக்க சக்தியினர் திரண்டு வந்து பொங்கலை மட்டும் வைக்க அனுமதி அளித்து, வழிப்பாடு நடத்த அனுமதி மறுத்து கோவி லையும் பூட்டி அராஜகம் செய்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சமாதான கூட்டம் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. பிப். 5அன்று பொங்கலிட்டு சாமியை வழிப்படுவது என்று கிராம மக்கள் வாலிபர் சங்கத்தின் சார்பில் முடிவு செய்தனர். இதைய டுத்து வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று (பிப்.5) மாநில தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் கிராம மக்களை அழைத்துக் கொண்டு அய்யனார் கோவிலில் பொங்கலிட்டு வழிப் பாடு நடத்தினர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் எம். செந்தில், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், சிபிஎம் வட்ட செயலாளர் கே.முனியாண்டி, ஒன்றிய செயலா ளர்கள் சத்தியராஜ், காளி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 தங்களது உரிமையை மீட்டுக் கொடுத்த வாலிபர் சங்க தலைவர்களுக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். கிராமத்திற்கு நூலகம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த போராட்டம் கார ணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் பெ.சீத் தாராமன், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கருணாநிதி பாராட்டு விழாவில் ஆட மறுத்த நடிகைகளுக்கு தமிழ் திரையுலகம் தடை விதித்துள்ளது.

Comments 9

  1. JAMES FREDRIC says:
    16 years ago

    கடந்த 30 ஆண்டுகளாக,தாராளமயமாக்கல் பொருளதார கொள்கைகள்,உலகமயமாக்கல் போன்றவற்றால்,ஏற்ப்பட்டுள்ள மாற்றங்களை கணக்கெடுக்க தவறியுள்ளோம்.சென்னை போன்ற நகரங்களில் சதி பிரச்னை இல்லை.கிராம மட்டங்களில் இருந்த பழைய தீண்டாமை,கோயில் பிரச்சனைகள்,ஒட்டுமொத்த விவசாய சமூகங்களின் பொருளாதார சிதைவுகளினால் காணாமல் போயுள்ளன.இந்த செத்த பாம்பை தூக்கி நிறுத்தி வன்முறைகளைவிதைத்துக் கொண்டிருப்பவர்கள்,நகரங்களில் வேகமாக பெரும்பாலான மக்களை ஏழைகளாக்கிக் கொண்டு,”பில்லினேயர்களாகிக் கொண்டிருக்கும்” அரசியல் வாதிகளிடம்,இட ஒதுக்க்கீடுகள் மூலம் அரசாங்க உத்தியோகங்களில் முன்னேறி,தற்போது ஜாதிய – இடதுசாரி இயக்க தலைவர்களாக?,பில்லினேயர்களின் ஊழியர்களாக!,இருப்பவர்களே – பில்லினேயர்களிடம் கையேந்தி நிற்கும் வெளிநாட்டு என்.ஜி.ஓ.க்கள் போல.இவர்கள் தொல்லை தாங்காது மற்ற ஜாதியை சார்ந்த ஏழை நடுத்தர வர்க்க மக்கள் வலது சாரி இயக்கங்களை நாடினால்,வலதுசாரி என்ரு குறை சொல்ல கூடாது.இது இந்தியாவுக்குள் தீர்வு காணும்.ஆனால்,வெளிநாட்டு தலையீடு இருக்குமானால்,இலங்கை அரசு பாணியில்,இந்தியாவுக்குள் கால்வைக்கும் ஒவ்வொருவனுக்கும் வெள்ளை வேனை உபயோகப் படுத்தினால்,புலன் பெயர்ந்தவர்கள் வருத்தப் படக் கூடாது!.இப்போது இருக்கும் பிரச்சனை நடுத்தரவர்கத்தினரை பலப்படுத்தி பில்லீனேயர்களை கட்டுப் படுத்துவதே ஆகும்!.

  2. தமிழ் மாறன் says:
    16 years ago

    ஜேம்ஸ் அவர்களுக்கு தமிழத்தின் உண்மை நிலை தெரிய வாய்ப்பில்லை என தோன்றுகிறது. நகரங்களில் ஜாதிய வேறுபாடு இல்லை என இவரிடம் யாராவது வந்து கூறினார்களா?

    நவீன அடிமைத்தனம் இன்னும் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற அரசு சார்ந்த இலாக்காக்களில் / நிறுவனங்களில் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது.

    முள் தைத்தவனுக்குத் தான் வலி தெரியும்.

    அதனால் இதை படித்தோமா, பிரச்னை இல்லாத பின்னூட்டம் இட்டோமா என இருக்க வேண்டும்.

  3. JAMES FREDRIC says:
    16 years ago

    பிரச்சனையை தவிர்க்க நாங்கள் விரும்பவில்லை,மோதிப் பார்க்கவே விருப்புகிறோம்,பல இலட்சம் உயிர்களை பலிகொடுத்து! தமிழ் மாறன் அவர்களே!.இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் முக்குலத்தோரும்,தமிழக வட மாவட்டங்களில் வன்னியரும் பொருளாதார ரீதியில் சராசரி கூலி வேலையாவது கிடைக்கும்(விவசாய பொருளாதாரம் நசிந்த பிறகு) “பரையர்களை” விட கீழ் நிலையிலேயே இருக்கிறார்கள் .ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் கூட இல்லாத பிராமணர்கள் பணிபுரியும்,வேலை வாய்ப்புகளில்,விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் வங்கி வேலைவாய்ப்புகளில்,இடஒதுக்கீடு மூலம்,வேலைவாய்ப்புகளை பெற்றுவிட்டு,”மேனேஜர் பதவிக்கு” அந்த இடஒதுக்கீட்டு மூலமே,உங்கள் சொந்தங்களுக்கு(தலித்துக்களுக்கு அல்ல) பதவி உயர்வு வாங்குவதற்கு,புலன் பெயர் இலங்கைத் தமிழருடன் சேர்ந்து கூத்தடித்து,”பூச்சாண்டி காட்டும்” உங்களுடன் இரத்தக் களரிக்குத் தயார்!.

  4. thamilmaran -thamil.maran@yahoo.com says:
    16 years ago

    முட்டாள்களே மூர்க்கம் கொண்டவர்களாக இருக்கிரார்கள். அவர்களது வாழ்க்கைச் சூழலே அவர்களது எண்ண ஓட்டத்தை தீர்மானிக்கிறது.பறயர்களூக்கும் தேவர்களூக்கும்நடக்கிற சண்டையில்நாயுடுக்கள்நுழைந்து தேவர்களதுநிலங்கலை வாங்கி விடுகிறார்க்ள். கோட்டு வாசலுக்குநடந்த தேவனும் கூலியாகிறான் சாதிப் பிரச்சனை தொடர்கிறது.

  5. JAMES FREDRIC says:
    16 years ago

    நீங்கள் “விருமாண்டி திரைப்படத்தை” கூறுகிறீர்கள்!.நான் அங்குள்ள நிலைமையை கூறுகிறேன்.இந்தியா என்பது தமிழ்நாடு அல்ல.ஆந்திராவில் பார்த்தீர்களென்றால்,”ரெட்டிகள்” இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு “நாயுடுகளிடம்” பல நிலங்களை இழந்திருக்கிறார்கள்!.இந்தியா முழுவதும் இந்த பிரச்சனை பலவித நாயுடுகளாகவும்,ரெட்டிகளாகவும் காணப்படுகிறது.ஆனால் இலங்கைத் தமிழர்கள்,மற்றும் அவர்களை பேராசை படுகுழியில்(முள்ளிய வாய்க்கால்) தள்ளிய வெளிநாட்டு என்.ஜி.ஓ.க்கள்,”இடைச் சொருகள்” தமிழ்நாட்டில் மட்டுமே எதிர்வு கூறப்படுகிறது!.முட்டாள் முரட்டுத்தனம் என்பது இந்தியா முழுவதும் பரவியிருக்கும் நடுத்தர வர்க,”சமூக பிரச்சனை ஆகும்”.இதற்கு வெளிநாட்டிலிருந்து தீர்வைதான் முள்ளியவாய்க்காலில் பார்த்தோம்.இதே “ஏலியன் ஐடியாலஜி தீர்வை” நாங்கள் விரும்பவில்லை!.

  6. thamilmaran thamil.maran@yahoo.com says:
    16 years ago

    ஜேம்ஸ்நான் விருமாண்டி படத்தைக் கூறவில்லை எந்துநண்பர் ரசூல் கூறீயதைக் கூறூகிறேன்.தேவர்மாரின் காணீகலை எல்லாம் தந்திரமாக்நாயுடுக்கள் வாங்கி விடுவதாக் அவரே கூறீனார்.தேவர்மாரும் இப்போது கூலிகள்தான் என்றூ அவரே கவலைப்பட்டார்.தேவர்மார் குடிச்சே சொத்துக்கலை அழிப்பார்கள் என்ற தகவலையும் தந்தார்.

  7. JAMES FREDRIC says:
    16 years ago

    தமிழ்மாறன்!,தேவர்,தேவர்,என்று கீறல் விழுந்த கிராம்போன் பிளேட் மாதிரி நீங்கள் இயம்புவதிலிருந்து தெரிகிறது,நீங்கள் ஒரு வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர் என்று.முதலில் ஐரோப்பிய, கனடாவில் இருந்துக்கொண்டு,ஜன்னலை திறந்து பார்த்து ,அட என்னடா!,யாழ்ப்பாணத்தில் ஒரே வெளைக்காரர்களாக நடமாடுகிறார்கள் என்று கூற வேண்டாம் .அதனால் ஏற்ப்படும் விளைவுகள் உங்களுடைய பிரச்சனை.இந்தியா என்பது தமிழகம் அல்ல.இத்தகைய குறுகிய நோக்கத்தோடு,இந்தியாவை நீங்கள் அணுகும் போது சிறு சலசலப்பு ஏற்படுகிறது.அவ்வளவே!.இது முக்கியமான காலகட்டமாகையால்,வேலை வெட்டியை விட்டு இதில் அமர்ந்திருக்கிறேன்.மற்றப்படி,இன்னும் சிறிது காலத்தில் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிவிடும்,ஏனென்றால்,”தேவர்கள்,வ்ன்னியர்கள்” மாதிரி பல தேவர்கள்,வன்னியர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் இதே பிரச்சனைதான்.அதற்கான தீர்வு உள்ளுக்குள்ளிலிருந்தே மெதுவாக முகிழும்!.நன்றி!.

  8. thamilmaran says:
    16 years ago

    தமிழன் சாதியால் பிளவுண்டு கிடக்கிறான் தன்னைத்தமிழனாய் உணராது தமிழை இழந்து கொண்டிருக்கிறான்,பெரியார் கொண்டு வந்த திராவிடம் தமிழனை அழிது தமிழனல்லாதவனையே வாழ்வித்து கொண்டிருக்கிறது.உங்கலைப் போன்ற பிதற்றல் வாதிகளால் தமிழன் இழிந்தநிலையில் இருந்து விடுபட முடியவில்லை அவனை உங்கலை போன்றோர் சிந்திக்கவும் விடுவதில்லை.

  9. NADUVAN says:
    14 years ago

    மதியாதார் தலை வாசல் மிதியாதே! உங்களை புறக்கனிக்கும் இந்து மதத்தை புறக்கனியுங்கள்..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...