உள்ளக விசாரணைகள் எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் விசாரணைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டம் கட்டமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.