Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்

இனியொரு... by இனியொரு...
02/11/2015
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

nirj_deva_ranilசுன்னாகத்தில் பரா டீசல் எண்ணையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்ப் படுக்கைகளும், விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டன. சுன்னாகம் அனல் மின்னிலையத்திலித்திலிருந்து நீர், நிலம், மக்கள் குடியிருப்புக்கள் போன்றன அழிக்கப்பட்டமை பேரினவாத நிகழ்சி நிரலின் ஒரு பகுதி என்பதை பலர் கூறிவந்தனர். பல்தேசியப் பண வெறியும், ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு நோக்கமும், பேரினவாத அரசியலும் இணைந்த நச்சுக் கலவையாகவே சுன்னாகத்திலிருந்து அழிப்பு நடத்தப்பட்டது.

அதன் பின்னணியில் எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய நிறுவனம் செயற்பட்டது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவரான நிர்ஜ் தேவா என்பவர் பிரித்தானியாவில் வாழ்ந்துவருகிறார். பிரித்தானிய ஆளும் கட்சியின் பிரமுகரும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் நண்பருமான தேவாவைத் தண்டிக்கக் கோரி ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் லண்டன் அலுவலகம் முன்பாக ‘பறை-விடுதலைக்கான குரல்’ என்ற அமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.

அப்போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நிர்ஜ் தேவாவின் இணையம் முடக்கப்பட்டுள்ளது தற்செயலானதல்ல. ( nirjdeva.com ).
நேற்று இது குறித்து வட மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இப் பிரேரணையை முன்மொழிந்தார்.

ஜெயலலிதாவிலிருந்து ஐங்கரனேசன் வரைக்கும் தீர்மானங்களை முன்மொழிந்துவிட்டு அலுவலங்களுக்குள் முடங்கியிருக்கும் நிலை இருந்தாலும் தீர்மானம் இன்றைய காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிராகரிக்க இயலாது.

தீர்மானத்தின் முழுமை கீழே:

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை
10.02.2015

வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப் பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே, எண்ணெய் மாசு வடமாகாண சபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் விடயமாகவும் ஆகியிருக்கிறது. அந்தவகையில் கௌரவம் மிக்க இந்தச் சபையி;ல் இதுபற்றிச் சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சுன்னாகம் அனல் மின்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளில், இலங்கை தரநிர்ணய நிறுவகத்தால் (Srilanka Standard Institute) குடிநீரில் இருக்கலாம் என அனுமதிக்கப்பட்ட எண்ணெய் மாசின் அளவைவிட (1மில்லிகிராம்ஃ இலீற்றர்) அதிக அளவில் எண்ணெய் மாசாக உள்ளது என 2012 ஆம் ஆண்டே தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையின் நீர்ப்பகுப்பு ஆய்வுகளில் இருந்து அறிய முடிகிறது. இதே கிணறுகளில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை மேற்கொண்ட ஆய்வுகளிலும் எண்ணெய் மாசு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாசுக்கான காரணம்

நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்திருப்பதற்கு சுன்னாகத்தில் உள்ள அனல் மின்நிலையமே காரணமாகக் கருதப்படுகிறது 1958ஆம் ஆண்டுமுதல் சுன்னாகத்தில் அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது.

1. ஆரம்பத்தில் இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான டீசல் அனல் மின்பிறப்பாக்கியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. யுத்தகாலத்தில் விமானக்குண்டு வீச்சால் சேதமடைந்த எரிபொருள் தாங்கியில் இருந்து 1500 கன மீற்றருக்கும் அதிகமான டீசல் வெளியேறியுள்ளது. ஒருபகுதி டீசல் எரிந்துபோக, பெரும்பகுதி அருகாமையில் உள்ள தாழ்வான குளத்தை நோக்கி வடிந்தோடியுள்ளது. இது ஊர்மக்களால் எண்ணெய்க் குளம் எனஅழைக்கப்பட்டுள்ளது.

2. இதன்பின்னர் சுன்னாகம் அனல்மின் நிலைய வளாகத்தில் 2009ஆம் ஆண்டுவரை அக்றிக்கோ (யுபபசமைழ) என்னும் நிறுவனத்தால் டீசல் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. போர்க்காலம் என்பதால் இப்பகுதியினுள் வேறுயாரும் சென்று வரமுடியாத நிலையால் சுற்றாடல் அதிகாரிகளால் எவ்வித கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். நிலத்தடி நீரை மாசுறுத்தியதில் அக்றிக்கோ நிறுவனத்துக்கும் பங்கு இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 12.11.2014 திகதியிட்ட அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

3. அக்றிக்கோ நிறுவனத்தின் பின்னர் நொதேண் பவர் (Northern Power) என்ற நிறுவனம் நீதிமன்றால் அண்மையில் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை டீசல் மின்பிறப்பாக்கிகளின் மூலம் மின் பிறப்பித்து வந்துள்ளது. 2013ஆம் ஆண்டே இந்நிறுவனத்துக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதி (Environmental Protection License) இலங்கை முதலீட்டுச் சபையால் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டுள்ளது. அதுவரையில் இந்நிறுவனமும் சுற்றாடல் தொடர்பான அக்கறையின்றியே இயங்கியிருக்கின்றது. அக்றிக்கோ நிறுவனம் எண்ணெய்க் கழிவுகளை வெளியேற்றிய இடத்திலேயே இந்நிறுவனமும் தொடர்ந்து வெளியேற்றிவந்திருக்கிறது. அத்தோடு இந்நிறுவனத்தின் மின்பிறப்பாக்கி, புதியது அல்ல. வெளிநாட்டில் இருந்து பாவித்தநிலையிலேயே தருவிக்கப்பட்டுள்ளது.

4. சுன்னாகம் அனல் மின் நிலையவளாகத்தில் 2014ஆம் ஆண்டுமுதல் இலங்கை மின்சாரசபை உத்துறு ஜனனி என்ற மின்நிலையத்தை இயக்கி வருகிறது. நவீன இலத்திரனியல் தொழில்நுட்பத்துடன்கூடிய புதிய மின்பிறப்பாக்கி என்பதால் இதனால் இதுவரையிலும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாணசபையின் நடவடிக்கைகள்

தூய குடிநீர் பெறுவது ஒருவரின் அடிப்படை மனிதஉரிமைகளில் ஒன்று. அதை வழங்க வேண்டியது அரசின் தார்மீகக் கடமை. அந்த வகையில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசாக் கலந்திருக்கும் இவ்விவகாரத்தை உரிய முறையில் எதிர் கொண்டு மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரைக் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு, இலங்கை மத்திய அரசுக்கு மாத்திரம் அல்லாமல் வடக்கு மாகாண சபையினராகிய எங்களுக்கும் உண்டு. அதனடிப்படையில், நாம் இது தொடர்பாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. குடிநீர் விநியோகம் – பாதிக்கப்பட்ட வலிதெற்கு, வலிவடக்குப் பிரதேசசபைகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் குடிநீரை விநியோகித்து வருகின்றன. இப்பிரதேச சபைகளுடன் இணைந்து எனது அமைச்சுக்கு உட்பட்ட நீர்வழங்கல் பிரிவின் நீர்த்தாங்கி வாகனங்களின் மூலமும் நீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. மத்திய அரசின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் நீர்வழங்கல் வடிகால்சபையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மருதங்கேணியில் அமையவுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளுக்குக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டு உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2. நிபுணர் குழு – விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் பெறப்படும் துல்லியமான முடிவுகளே சரியான தீர்வுக்கும், சட்ட நடவடிக்கைகளுக்கும் அவசியம் என்பதால் வடக்குமாகாண கௌரவ முதலமைச்சரின் பணிப்பின்பேரில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்வதற்காக நிபுணர்குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துறைசார் வல்லுநர்களைக் கொண்டுள்ள இந்நிபுணர்குழு எண்ணெய் மாசின் மூலம், அது பரவும் திசை, குடிநீரில் உள்ள மாசுக்களின் வகைகள் மற்றும் அளவுகள், எண்ணெய் மாசு இப்போதும் பரவுமாயின் அதனைத் தடுப்பதற்கான பொறிமுறைகள், எண்ணெய் மாசை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றைக் கண்டறியும் நோக்கில் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவர்களது ஆய்வுக்கு கொழும்பில் இயங்கும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகமும் (Industrial Technology Institute-ITI) அனுசரணை வழங்கிவருகிறது. இது இலங்கை மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள் யாழ்ப்பாணம் வந்து எமது நிபுணர்குழுவுடன் இணைந்து நீர்மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், தொண்டைமானாறில் அமைந்துள்ள வடமாகாண நீரியல் ஆய்வு மையத்திலும் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Ground Penetration Radar (GPR) என்ற றேடார் உபகரணத்தைப் பயன்படுத்தி நிலத்தின்கீழ் உள்ள எண்ணெயின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக நேற்றைய வடமாகாண அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

நீரில் எண்ணெய் கலந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுக்குத் தற்போது 5மணித்தியாலம் செலவாகிறது. இதைக்கருத்திற்கொண்டு எண்ணெய் கலந்துள்ளதா இல்லையா என்பதை உடனடியாகவே தெரிந்து கொள்ளக்கூடிய 1.3மில்லியன் ரூபா பெறுமதியான கருவி ஒன்று அமெரிக்காவில் இருந்து உடனடியாகத் தருவிப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது. புலம் பெயர்ந்து வாழும் எமது தமிழ் உறவுகள் அன்பளிப்பாக இதனை வழங்க உள்ளனர்.

சுன்னாகம் அனல் மின்நிலையம் தவிர்ந்த வேறு காரணிகளும் எண்ணெய் மாசுக்குக் காரணமாக அமைந்துள்ளனவா என்பது தொடர்பிலும் நிபுணர்குழு கவனம் செலுத்தும். ஆய்வுகள் யாவும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கை ஒருமாதக்காலத்தினுள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. தூய குடிநீருக்கான செயலணி – மாகாணசபை தனித்து இயங்காமல் மத்திய அரசின் துறைகளும் இணைந்து செயற்பட்டாலே தீர்வினை விரைந்து எட்டமுடியும் என்பதால் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சரின் இணைத்தலைமையின் கீழும் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரின் துணைத்தலைமையின் கீழும் தூய குடிநீருக்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டள்ளது. இச்செயலணி வாராந்தம் ஒன்றுகூடி இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்பற்றி மீளாய்வு செய்வதோடு, அடுத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தீர்மானிக்கிறது.

வடக்கு மாகாண சபை எதிர்கொள்ளும் சவால்கள்

1. நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு என்பது வடக்குக்கு மாத்திரம் அல்ல, இலங்கைக்கே இதுவரையில் முன்னுதாரணம் அற்ற ஒரு அனர்த்தம் என்பதால் இதனை எதிர் கொள்வதில்; சில தடங்கல்களும் தயக்கங்களும் நிலவுகின்றன. இதனால் பொருத்தமான நடவடிக்கைகளை அடையாளம் கண்டு செயற்படுத்துவதில்; கால தாமதம் ஏற்படுகிறது.

2. குடிநீரில் எண்ணெய் மாசு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றும் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களும், மருத்துவர்களும் கவனயீர்ப்பு நிகழ்ச்சிகளை தூயநோக்கோடு ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இது அவசியமானதும்கூட.

ஆனால், இந்த ஜனநாயக வாய்ப்பைப் பயன்படுத்திப் பிரச்சினையின் பரிமாணத்தை மிகப்பன்மடங்காக உருப்பெருப்பித்துச் சுய இலாபம் பெறப் பல்வேறு சக்திகளும் களம் இறங்கியுள்ளன. இவற்றில் சில குடிநீர் வணிகநிறுவனங்களும், இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று எப்பாடுபட்டாவது யாழ்ப்பாண மக்களால் கோரிக்கை முன்வைக்கப்படவேண்டும் என்று படாதபாடுபட்டவர்களும், வடமாகாண சபைக்கு எதிராகக் மக்களைத் திசைதிருப்பவேண்டும் என்று காத்துக் கிடப்பவர்களும் அடங்குகின்றனர். இவர்களது பரப்புரையால் மக்கள் பதட்ட நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுக் கிணற்றில் மிதக்கும் தூசிப்படலத்தையும்கூட எண்ணெய் என்று நம்பிக் குடிநீருக்கு அலையும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆய்வின் செல்திசையைக் குழப்புவதாக அமைவதோடு, உண்மையாக எண்ணெய் மாசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எங்களால் போதிய கவனம் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்துகிறது என்பதையும் வருத்தத்துடன் இங்கு பதிவு செய்து, எல்லாத் தடங்கல்களையும் தாண்டி இக்குடிநீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு விரைவில் எட்டப்படும் என்று உறுதிகூறி அமர்கின்றேன்.
பொ.ஐங்கரநேசன்
அமைச்சர்
விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி,
உணவு வழங்கல், நீர் வழங்கல் நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு,
வடமாகாணம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை

யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை

Comments 2

  1. Parai player says:
    11 years ago

    நிராஜ் தேவாவுடன் சேர்த்து கவனிக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் மூன்று தனவந்தர்கள்.
    1. ரவி விஜேரட்ன (ரவிலால் விஜேரட்ன என்றும் திரிபவன்; வேறு பெயர்களும் உண்டு) …இந்தக் கொள்ளைக்காரன் ஜேம்ஸ் பக்கரின் ஆஸ்திரேலிய சூதாட்ட விடுதியை கொழும்புக்கு கொண்டுவர முயன்ற ராஜபக்ச குடும்பத்தின் ஒரு அங்கத்தவன் போல் செய்ற்படும் அரசியற் செல்வாகுடையவன்

    2. ‘ஜெஹான் ப்ரசன்ன அமரதுங்க’
    எம்.டி.டீ வோக்கர்ஸ்-க்கு நொதர்ன் பவர் கொம்பனி 100% கட்டுப்பட்டுக்குள் வர வழிவகுத்தவன்

    3. தம்மிக பெரேரா
    ஏற்கனவே வெலிவேரியா-இல் நீர்ப்பிரச்சனையத் தீர்க்க 2013 இல் இராணுவ அடக்கு முறை பாவனையுடன் தொடர்புடைய இவனே எம்.டி.டீ கப்பிடல்-இன் 90% சத வீதத்துக்கும் அதிகமான முதலீட்டின் அடுத்த படியாக எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவனத்தில் இரண்டாவது நிலையத்தில் உள்ல சிறுபான்மை பங்குதாரி. ஒருகாலத்தில் ஸ்ரீ லங்கா முதலீட்டுச் சபை -யின் பொறுப்பாளனாக் ராஜபக்ச அரசுக்கு கொள்ளைக்கார தலைமைத்துவம் வகித்த தம்மிக பெரேரா பஙகு வகிப்பது என்பது அரசியல் தலையீட்டின் உச்சக்கட்டட்துக்கு ஒப்பானது.
    ஏற்கனவே ஹேலீஸ் நிறுவனத்தின் உப நிறுவனங்கள் பலவற்றினூடாக ‘தம்மிக பெரேரா’ நிராஜ் தேவா-டன் சக இயக்குனனாக பல தொடர்புகளையும் பேணுபவன்.

    தொடர்புள்ள பல விடயங்களுக்கு இங்குள்ள கருத்துப்பதிவையும் நோக்கவும்:-
    https://inioru.com/44906/jaffna-s-water-contamination/

    ‘பார எரி எண்ணெய்’ அல்லது ‘பார எண்ணை’ எனும் பதத்தை Heavy Fuel Oil (HFO) ஐ குறிப்பிட பாவிக்கவும்.

  2. Parai player says:
    11 years ago

    நிராஜ் தேவா-இன் ஆருயிர் நண்பன் போல் செயற்படும் பிரித்தானிய பாராளுமன்றின் அனைத்துக்க்கட்சி ஸ்ரீலங்காவுக்கான குழுஇன்- தலைவன் பொய்மூட்டை (பிரபு) நெசபி – Lord Naseby அண்மைய ஸ்ரீ லங்கா விஜயத்தை ஐ.நா போர்க்குற்ற விசாரணையை மழுங்கடிக்கச் செய்யுமுகமாக மேற்கொண்டிருந்தான்.
    அதன் ஒரு கூறாக புதிய ஆளுனனாக பதவியேற இருந்த முன்னாள் ஐ.நா -உக்கான இனப்படுகொலைக்கு துணைபோன தூதுவனும் (ஜெனிவா-இலும், பின்னர் 2009-இன் முக்கிய காலபபகுதியில் நியூயோர்க்-இலும் ), கற்ருக்கொண்ட பாடங்கள்- நல்லிணக்க ஆணைக்குழு-இன் உயிர்வாழும் நபர்களில் மூத்தவனுமாகிய எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரா-வை யாழ்ப்பாணத்தில் சந்தித்துள்ளான்.

    https://archive.today/xNcnS

    அதோடு நிற்காமல் பொய்மூட்டை நெசபி சுன்னாகத்தில் ஒரு விடுதியில் தங்கியதாகவும் செய்திக்குறிப்பொன்று அடிபடுகிறது.

    http://www.tamilwin.com/show-RUmtyCTXKdmp1.html
    “நேற்றைய தினம் யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் குடாநாட்டுப் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்”

    இப்பாதகன் நெசபி-உக்கு என்ன அலுவல் சுன்னாகத்தில்?!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...