Wednesday, May 14, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சுப்பர் சிங்கரில் ஜெசிக்கா வெற்றி – தோற்றது யார்? : வியாசன்

இனியொரு... by இனியொரு...
02/06/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
19
Home பிரதான பதிவுகள் | Principle posts

பிரித்தானியாவில் தற்காலிகப் பாலுறவோடு மட்டும் திருப்தியடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதாகவும் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் குறைந்து செல்வதாகவும் விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் விவாகரத்து விகிதம் சிறிய அளவில் குறைந்திருப்பதாக பெருமை பேசிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு சிதைந்து செல்லும் சமூகத்தின் பெரும் பகுதியை நிறுத்த முடியவில்லை.

Kim Kardashian
Kim Kardashian

உலகத்தின் ஒரு பகுதியில் மக்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட அமெரிக்காவில் கிம் காட்டாஷியன் என்ற பெண் தனது ஆண் நண்பருடன் பாலுறவில் ஈடுபட்ட காணொளியை தொலைக்காட்சிகள் எல்லாம் பரபப்பாக ஒளிபரப்புகின்றன. கிம் உம் சகோதரிகளும் அமெரிக்காவிம் ரோல் மொடல்கள் ஆகிவிடுகிறார்கள். மில்லியன்கள் அவர்கள் வசமாகின்றன.

தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் தொண்ணூறு வீத நிர்வாணமாக வீடொன்றொல் ஒரு பெண் அலைந்து திரிகிறார். அவர் யாரோடு எப்போது பாலுறவு வைத்துக்கொள்வார் என்பதை அறிய குடும்பம் குடும்பமாக தொலைக்காட்சிக்கும் முன்னால் காத்திருந்தார்கள்.

சமூக வலைத் தளங்கள், குறுஞ் செய்திகள் என்று தொடர்பு சாதனங்கள் இதனைப் பேசிக்கொண்டன. நாங்கள் தான் அதிகம் செக்சியானவர்கள் ஆக நாமே இப்படியான நிகழ்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என பிரஞ்சுப் பெண் தேசியம் பேசியதை ஒரு பத்திரிகை வெளியிட்டது.

மூன்றாமுலக நாடுகளில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று மேற்கு மயப்பட்ட நவ தாராளவாதப் பெண்ணியவாதிகள் கூச்சலிடுவதைக் கேட்டிருக்கிறோம். மேற்கில் பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் அடிமைகளாகவே மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் சிறுகக்ச் சிறுக நடத்தப்பட்ட பண்பாட்டு அழிப்பின் ஊடாகவே நடைபெற்றுள்ளது. பண்பாட்டையும் அவற்றின் தொகுப்பான கலாச்சாரத்தையும் கூட்டுணர்வும், உழைப்பும் கொண்ட புதிய நிலைக்கு வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அவற்றை அழித்துச் சிதைத்துள்ளார்கள்.

அதன் விளைவுகளையே நாங்கள் இன்று காண்கிறோம்.
அறுபதுகளின் இறுதியில் ஐரோப்பா முழுவதும் போராட்டங்கள் தோன்றின. மக்கள் உரிமைக்காகக் குரல்கொடுத்தார்கள். தமது உழைப்பிற்குத் தகுந்த பெறுமானத்தை வழங்க வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் பல்வேற்ய் தளங்களில் ஐரோப்பாவை அதிரவைத்தது. அப் போராட்டங்களைக் கண்டு அஞ்சிய அதிகாரவர்க்கம் பாலியல் சுதந்திரத்தை அறிமுகப்படுத்துவதன் ஊடாக சமூகத்தின் சிந்தனையை மாற்ற முற்பட்டது. உரிமை கேட்போரைத் தடுப்பதற்கான ஒரு ஆயுதமாக பாலியலைப் பயன்படுத்தியது.

சமூகத்தின் அரைவாசிப் பகுதியான பெண்கள் ஆண்களின் பாலியல் சார்ந்த தேவைகளைப் பூர்த்கிசெய்வதற்கான அடிமைகளாக சமூகத்தின் முன்னர் நிறுத்தப்பட்டனர். அறுபதுகளின் இறுதிப்பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நவ தாராளவாதக் கலசாரத்தின் பிரதான பகுதி யாக இது செயற்பட்டது. மூன்றாமுலக நாடுகளில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்றால் ஐரோப்பிய நாடுகளில் தமது பாலியல் உறுப்புக்களைக் காட்டியே சமூக அங்கீகாரம் பெற முடியும் என்ற நிலைக்குத் அவர்கள் தள்ளப்பட்டனர். சமானிய ஐரோப்பியப் பெண் மார்பங்களையும், தொடைகளையும் மூடிக்கொண்டு விழா ஒன்றிற்குச் சென்றால் வேடிக்கையாகவே அவரைப் பார்ப்பார்கள்.

அதிகாரவர்க்கத்தின் இத்திட்டங்களை கருத்தியல்ரீதியாகச் செயற்படுத்தும் கருவிகளாக ஊடகங்களே செயற்பட்டன.

விஜய் தொலைக்காட்சியை நடத்தும் ஊடக மாபியா ரூபெர்ட் மெடொக்
விஜய் தொலைக்காட்சியை நடத்தும் ஊடக மாபியா ரூபெர்ட் மெடொக்

 

அறுபதுகளிலேயே இதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இக் காலப்பகுதியில் ஊடகத் துறைக்குள் நுளைந்த பல்தேசிய மாபியாக்களுள் பிரதானமாவர் ரூபெட் மெடொக் என்பவர். பிரித்தானியாவில் இவர் நடத்தும் சண் நாளிதழை வழமையாக அலுவலகங்களிலும் வீடுகளிலும், ஏன் பள்ளிகளிலும் கூடக் காணலாம். அந்த இதழின் இரண்டம் பக்கத்தில் முழு நிர்வாணப்படம் ஒன்று வெளிவருவதைப் பற்றி யாரும் அசட்டை செய்வதில்லை.

முதலில் ஐரோப்பிய நாடுகளில் பின்நவீனத்துவம் போன்ற தத்துவங்கள் ஊடாகவும் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மஜிகல் ரியலிசம் என்றும் கலாச்சாரத்தைச் சிதைத்து அவற்றின் தவறான விழுமியங்களை மட்டும் வாழ வைத்த அதிகார வர்க்கம் ரூபட் மெடகொக்கை ஆலமரம் போல வளர்த்துவிட்டது.
மெடொக்கின் பொக்ஸ் தொலைக்காட்சி நேரடியாக நிறவாதம் பேசுவதை எல்லாம் அரசுகள் கண்டுகொள்வதில்லை. பிரித்தானியாவில் ரூபெட் மெடொக் குடும்பம் அரசுகளை மாற்றுவதில் நேரடியான பங்கு வகித்திருக்கிறது.

ஊடகத் துறையில் ஐந்து தசாப்தங்களாக பழம் தின்று கொட்டை போட்ட மெடொக் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை திரடிவைத்துக்கொள்வார்.. தான் விரும்பும் தலைவர்களை ஆட்சியிலமர்த்த அவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்.

மெடொக் போன்றவர்கள் ஏற்படுத்திய இவ்வாறான எல்லாச் சிதைப்பு நடவடிக்கைகளும் இன்றைய ஐரோப்பியச் சமூகத்தை உருவாக்கியுள்ளது. அதன் வளர்ச்சி தடுக்கப்பட்டு பாலியல் வக்கிரமும் பண வெறியும் கொண்ட சமூகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதே மெடொக் இந்தியாவில் தோற்றுவித்த தொலைக்காசியின் பெயர் தான் விஜய்.

தமிழ் நாட்டில் நடத்தப்படும் சுப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோ என்ற மூடி மறைக்கப்பட்ட உணர்ச்சி வியாபாரத்தின் ஊற்றுமூலமே விஜய் தொலைக்காட்சி தான்.

குழந்தைகளை வைத்து உணர்ச்சி வியாபாரம் நடத்தும் இந்த நிகழ்ச்சி இன்று புலம் பெயர் நாடுகளிலும் பிரபலம். லண்டனில் தனது அலுவலகத்தை வைத்திருக்கும் விஜய் தொலைக்காட்சி ஒடுக்குமுறை காரணமாக இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்துவது கூட இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே.

சுப்பர் சிங்கர் தொடர் ஒன்றில் பாலியல் வக்கிரங்களோடு கூடிய பாடலைப் பாடிய ஒரு பச்சிழம் குழந்தையை நோக்கி, தேவையான பாவங்களோடும் ‘பீலிங்’ உடனும் அந்தப்பாடலைப் பாடியிருப்பது தம்மை அசத்தியிருப்பதாக நடுவராக வந்த சினிமாப் பாடகர் ஒருவர் கூறியதற்கு மக்கள் கைதட்டிக் ஆர்ப்பரித்தார்கள். இன்றைய விஜய் தொலைக்காட்சி எதிர்கால கிம் கட்டாஷியன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

அரைகுறை ஆங்கிலத்தையும், அரைகுறைத் தமிழையும் கலந்து மொழியின் ஆளுமையை அழித்துச் சிதைத்து நச்சுக் கலவையாக அப்பாவிகளிடம் வழங்கும் இத் தொலைக்காட்சி கச்சிதமாக பண்பாட்டின் அழுகிய பகுதிகளைப் பாதுகாத்து அதன் முன்னேறிய பகுதிகளைச் சிதைக்கிறது.

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தமிழர்கள் அல்லாதவர்களை சிலரை ஆரம்பத்தில் தெரிவு செய்த விஜய் தொலைக்காட்சி தமிழின வாதத்தைத் தூண்டியது. இனிமேல் தமிழர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என விஜய் தொலைக்காட்சிக்கு தமிழினவாதிகள் சமூக வலைத் தளங்களில் இலவசப் பிரச்சாரம் செய்தார்கள். அதாவது கலாச்சாரத்தைச் சிதைக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு தமிழ் உனர்வின் பெயரால் இலவசமாகப் விளம்பரம் செய்து கொடுத்தவர்கள் தமிழர்களே.

இதெல்லாம் மெடொக் குழுமத்தின் அறியப்பட்ட தந்திரோபாயங்கள் என்பதை அறிந்துகொள்கின்ற அளவிற்கு பார்வையாளர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் அல்ல. நேற்று நடைபெற்ற சுப்பர் சிங்கர் நிகழ்வில் 4.5 மில்லியன் வாக்களார்கள் வாக்களித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் உணர்வு என்றே வாக்களித்துள்ளனர். இத் தமிழ் உணர்வை மிகவும் நுட்பமான வகையில் தூண்டிவிட்டு வியாபாரமாக்கிக் கொண்டது விஜய் ரிவி. ஒரு புறத்தில் அதிகாரவர்க்கத்தின் பண்பாட்டுச் சிதைப்பும் மறுபுறத்தில் இலாபவெறியும் தமிழ் உணர்வின் துணையோடு வெற்றி பெற்றிருக்கிறது. தோல்வியுற்றிருப்பது மக்களின் சமூக உணர்வும் தமிழர்களின் பாரம்பரியமும்!

jesicaகனடாவில் பிறந்த ஈழத் தமிழ்க் குழந்தையான ஜெசிக்கா வெற்றி பெற்றுள்ளார் என்பதை முக நூலில் ஈழத் தமிழர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? தென்னிந்திய சினிமாக் குப்பைகளில் பொறுக்கியெடுக்கப்பட்ட பாலியல் அடிமைத்தனத்தை இசையோடு பாடுவதில் என்ன பெருமை?

லண்டனில் பிறந்து தனது சொந்தப்பாடல்கள் ஊடாக சமூகத்தை பற்றிக் கொஞ்சமாவது பேசும் மாயா இவர்களை விட ஆயிரம் மடங்கு மேல். தமிழ் என்பதால் வாக்களிக்கிறோம் என்று விஜய் தொலைக்காட்சிக்கு இலவச விளம்பரம் தேடிக்கொடுத்தவர்கள் ஒரு தடவை நிகழ்சிகளை உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள் குழந்தைகள் தட்டித்தவறி ‘நன்றி’ சொன்னாலும் நடுவர்கள் ‘தாங்சு’ தான் சொல்வார்கள்.

விஜய் தொலைக்காட்சியின் கலாச்சார அழிப்பு இந்திய உளவுத்துறையின் துணையுடன் தான் நடைபெறுகிறதா என்பதற்கான ஆதாரங்கள் நேரிடையாக இல்லை. ஆயினும் உண்மையில் அதுவும் ஒரு காரணமாகவிருந்தால் வியப்பில்லை.

இவற்றிற்கு எதிராக பண்பாட்டின் மற்றுமொரு பகுதியப் பாதுகாப்பதாக் கூறிக்கொள்ளும் இந்துத்துவ ஆதிக்க வெறியர்களும், தமிழின வெறியர்களும் இவற்றை வளர்பதற்காகவே மறை முகமாகப் பயன்படுகின்றனர்.
சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடும் மக்கள் கூட்டத்தின் புலம்பெயர் குழந்தைகளின் மக்கள் பற்றும் சமூக உணர்வுமே புதிய உத்வேகம் மிக்க சமூகத்தை நாளை உருவாக்கும். -விஜய் தொலைக்காட்சிகளும் இத்தியாதிகளும் உருவாக்கும் சமூகம் அருவருப்பான வியாபார வெறிகொண்ட சமூகமாகவே அமையும்.

மெடொக்கினதும் தென்னிந்தியாவினதும் குப்பைகளை நிராகரித்து நமது வாழ்வின் அவலங்களைக் கூறும் புதிய கலாச்சாரம் தோற்றுவிக்கப்பட வேண்டும். இவற்றிற்கெல்லாம் தொலைக்காட்சிகள் தேவையில்லை துண்டுக் காகிதங்களே போதும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சிங்கள அதிகாரவர்க்கத்திடம் ஒட்டிக்கொள்வதை நல்லிணக்கம் என்கிறார் சம்பந்தன்

சிங்கள அதிகாரவர்க்கத்திடம் ஒட்டிக்கொள்வதை நல்லிணக்கம் என்கிறார் சம்பந்தன்

Comments 19

  1. a voter says:
    10 years ago

    மெடொக்கினதும் தென்னிந்தியாவினதும் குப்பைகளை நிராகரித்து நமது வாழ்வின் அவலங்களைக் கூறும் புதிய கலாச்சாரம் தோற்றுவிக்கப்பட வேண்டும். இதனை வெளிப்படுத்தும் பாடல்கள் தமிழில் உருவாக்கப்பட்டால் அவை பயன்படும்.

    தொலைக்காட்சி சிறந்த பொழுதுபோக்கு சாதனம். அதனை வீண் பொழுது கழிப்பதிலிருந்து சமூகப் பிரக்ஞை நோக்கி நகர்த்த வேண்டும்.

    • தமிழ் மூடன் says:
      10 years ago

      “தொலைக்காட்சி சிறந்த பொழுதுபோக்கு சாதனம். அதனை வீண் பொழுது கழிப்பதிலிருந்து சமூகப் பிரக்ஞை நோக்கி நகர்த்த வேண்டும்”
      .ஜெசிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்ததைவிட அந்தச் சிறுமியின் குடும்பம் செய்த நன்கொடை தமிழர் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
      அகதிகளாக வந்து மில்லியன் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் உழைக்கும் புலம்பெயர் வியாபாரிகள் (லைகா , லிபரா உள்பட )தமது இலாபத்தின் ஒரு சிறு பகுதியை அனாதைகளுக்குக் கொடுப்பார்களா ?
      ஜெசிக்கா வின் குடும்பத்தினருக்கு வேண்டுகோள் !
      1)
      புலம்பெயர் தொண்டு நிறுவனங்களிடம் ஒரு கிலோ தங்கத்தைக் கொடுத்து அவர்களை அனாதைச் சிறுவர்களுக்குப் பங்கிடச் சொல்லாதீர்கள் .அவர்கள் உங்களுக்குக் கள்ளக் கணக்குக் காட்டி அவர்களின் மனைவி பிள்ளைகளின் கழுத்துகளில் அந்தத் தங்கத்தை தவழ விடுவார்கள்.பங்கிடுவதை நீங்களாகவே செய்யுங்கள்
      2)
      அந்தத் தங்கம் எந்தெந்தப் பிள்ளைகளுக்குப் போய் சேர்ந்தது என்பதை இணையத் தளங்களில் வெளியிட்டால் நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் கூறியது வெறும் பிரபல்யமாவதற்க்கு அல்ல என்பதை என்னைப்போன்ற மூடர்களும் நம்புவார்கள்

      • Gundu Balu says:
        10 years ago

        Do you know how much Lebara spends on charity every year, probably not. Don’t arrive at your conclusion before checking your facts. It’s ok for you to be jealous about them but don’t teach your lazy lifestyle to your kids too.

  2. mannan says:
    10 years ago

    செய்திகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது
    சமையல் செய்யப் பழக்கப்பட்ட உலகத் தமிழ் பெண்கழும்
    அவர்களை கண்டும் காணாததுமாக வாழும் ஆண்கழும்
    உள்ளவரை தமிழினம் இவ்வாறான வியாபார ஊடகங்களின் மாயையினுள்ளே தான் அகப்பட்டு தவிக்கும் .

    • lala says:
      10 years ago

      I think you are talking about your family ladies.

      • mannan says:
        10 years ago

        முப்பது வருடமாக பல புலம்பெயர் தமிழ் தொலைக்காட்சிகழும் ஊடகங்கழும் வன்னியில்
        இரத்த ஆறு ஓட வைத்தவர்கள். அதன் மூலம் பலனடைந்தவர்கள். அதற்கெல்லாம் சபாஸ் போட்டு
        வாழ்ந்த புலம்பெயர் சமூகமல்லவா.

        தமிழ் ஊடகங்கள் பல பிழைப்பிற்காகவா அல்லது
        தமிழரின் நலன்களிற்காகவா என்பதே கேள்வியாகவுள்ளது

  3. music lover says:
    10 years ago

    why cant you people be happy, She is a 16 year old child with an amazing voice. You guys have nothing productive to do, All of you said that she is singing rubbish songs. Then why in the world you all watched these songs. You all are Hippocrates So stop bullshitting and go on with your sad life.

    • Kumar says:
      10 years ago

      Have you ever heard that 80 percents of donkeys directly or indirectly sacrificing their life to the rest of 20?
      May be you are the one in 80.
      Ignorance is the big evil of humanity.

    • a voter says:
      10 years ago

      Dear Music Lover,
      First, this article was written when Jessika won the “wild card round”.
      Music is a powerful medium. Through this people could be united, divided and emotionally hijacked. The question is more about how to use this music. I do not think Ini Oru is finding fault in Jessika. They are exposing Vijay TV’s business using Tamil’s feelings and struggle.

      As far as Jessika is concern, I do not expect much (on social side) from her. He is just an ordinary girl. From her side, she did something better than most of our people do.
      1. She used at least few songs which brings back the days of liberation struggle and plight of our people.
      2. She decided to give her prize money to the poor.

      I do not care how much popularity she got because of this. I look at it as she took the opportunity and did something which is amazing.

      However, I expect as a society to go for much valuable products. When we go for it, the standard of the programs will improve.

  4. Sivashankar says:
    10 years ago

    உங்கள் கருத்துக்கள் ஏற்புடையவை. அத்துடன் எமது பண்பாட்டுடன் ஒத்துவராத உடை பாவனையும் இந்த நிகழ்ச்சியில் காணப்படுகின்றது. உங்களுடைய இவ்விமர்சனங்கள் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.

  5. LILY says:
    10 years ago

    I have seen a lot of negative comments, these are bunch of hypocrites who writes these, The same people who subscribe to sun TV, Jeya TV, and Vijey TV and watch all these episodes and movies all the time. But they just couldn’t stand the fact their own Sri Lankan girl came this far. We are our own worst enemy some times. Support your own, people. She is only a 16 year old , She dint commit any crime. Be happy for her for once.

  6. Rob Gomez says:
    10 years ago

    உங்களுடைய மாயை உலகில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். கற்பனையிலும், லெனினசித்திலுமே தனியே வாழ்ந்து விட முடியாது. உலகை முழுமையாக பார்க்கப் பழகுங்கள்.

  7. Logan says:
    10 years ago

    The writer want to publish his side, by telling rubbish things about others! You are big stupid , first start learn how to tell ur views!! Don’t think as ur are big writer!

  8. M.Packiyanathan says:
    10 years ago

    Bull shit and senseless commence.

  9. Kumar says:
    10 years ago

    Great worries from Inioru!
    I really appreciate it/
    Some irresponsible comments make me sad.

  10. Gundu Balu says:
    10 years ago

    I can only feel sorry for the author. He needs to grow up. He has every right to express his views. I believe humans are smart enough to decide what is best for them and their society. Let them choose what they want to do. For me if I do not like to watch something the remote control comes very handy.

  11. சாதாரண மனிதன் says:
    10 years ago

    கவனிக்க வேண்டிய விஷயம் . நன்றி!

  12. K says:
    10 years ago

    Good…………

  13. sakkaravarththi says:
    10 years ago

    எழுத்தாளருக்கு இன்னும் மூடத்தனம் குறையவில்லை. எல்லாவற்றிலும் கலாச்சாரம் கலாச்சாரம். கலாச்சாரம் தேவைதான் அந்த சினிமாவைக்கொண்டும் எமது ஈழத்தை ஒருமுறை அனைவர் பார்வைக்கும் கொண்டுவரும் சக்தி இருக்கு என்பதை இறுதிச்சுற்றிலாவது பரிந்திருப்பார் எனநினைக்கிறேன். அந்த சினாமா வெற்றியாலும் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என்பதையும் நீங்கள் அறிந்தால் நல்லம். எழுதவேண்டும் என்பதற்காக லூசுத்தனமா அலட்டக் கூடாது. கன்னடக்காரனும் மலையாளியும் வந்து தமிழகத்தில் பரிசுபெறுவதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் ஏன் ஓர் தமிழச்சி பரிசு பெறுவதை கொச்சைப்படுத்துகின்றீர்கள். எழுத்தாளர்தான் லூசு என்றால் இனியொரு ஆசிரியர் என்ன செய்கின்றார்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...