சுன்னாகம் அனல் மின் நிலையத்திலிருந்து யாழ் குடாநாட்டை அழிக்கும் நோக்கில் நச்சுக் கழிவுக்ளை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றியமை பல மைல் சுற்றாடல் பிரதேசத்தை நாசப்படுத்தியுள்ளம தெரிந்ததே. இலங்கையில் சில ஆர்வலர்களும் பிரித்தானியாவில் இனியொரு இணையம் மற்றும் பறை-விடுதலைக்கான குரல் என்ற அமைப்பும் இப் பிரச்சனையை வெளிக்கொண்டு வரும் வரைக்கும் இது பேசாப் பொருளாகவே இருந்தது.
இன்று பல்வேறு வர்த்தக ஊடகங்களே பேசும் அளவிற்கு சமூகத்தின் பிரதான பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டதென்றால் அதன் தீவிரம் அறிந்துகொள்ளக் கூடியதே.
சுன்னாகத்தில் மின்சாரம் தயாரிக்க எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்ட பேர்கன் கழிவு எண்ணை யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதும் பரவி வருவதை ஊடகங்களில் செய்திகளாக வெளியிடுவதை மாகாண அரசின் சுகாதார அமைச்சர் தடைவிதித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாங்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் அதனால் போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்கக் கூடாது எனவும் ஐங்கரநேசன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த போராட்டம் ஒன்றிற்கு மாகாண அமைச்சின் பணிப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக இலங்கை அரசுடன் இணைந்து மாகாண அரசு குடி நீருக்கான செயலணி ஒன்றை உருவாக்கியது. இதன் நோக்கம் சுன்னாகத்தில் மின் உற்பத்தியை நிறுத்துவதல்ல. மாறாக பாதிக்கப்படுவோரைப் போராடாமல் தடுப்பதற்காக குடி நீர்ப் பிச்சை போடுவதே.
உறுதியான அரசியல் தலைமை இல்லாத நிலையில் தம்மை அழிப்பவர்களையே ஆதரிக்கும் நிலைக்குத் தமிழ் மக்கள் செல்வதும் பின்னர் பின்வாங்குவதுமான அவலமான சூழல் நிலவுகிறது. பிழைப்புவாதிகளை வளர்த்து மக்களின் மேய்ப்பர்களாக அவர்கள் மத்தியில் விதைபதற்கு வர்த்தக ஊடகங்கள் துணை செல்கின்றன.
அதே வேளை சுன்னகம் அழிப்பின் பின்னணியில் செயற்பட்ட பிரித்தானிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினருக்கு எதிராக ‘பறை – விடுதலைக்கான குரல்’ அமைப்பு ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் லண்டன் அலுவலகம் முன்பாகப் போராட்டம் ஒன்றை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிக்கை ஒன்றைக் கையளித்திருந்தது. நிர்ஜ் தேவா என்ற அந்த உறுப்பினரின் இணையத் தளம் இப்போது இயங்கவில்லை.(nirjdeva.com)
யாழ்ப்பாணத்தை நச்சாக்கிய இக் கிரிமினல் செயற்பாட்டின் பின்னணியில் செயற்பட்டவர்கள் சுற்றுச் சூழலுக்கு எதிரான சர்வதேசக் கிரிமினல் சட்டங்களின் அடிப்படையில் தண்டிக்கப்படுவதும், அழிவு நிறுத்தப்படுவதும், நச்சு நீர் சுத்திகரிக்கப்படுவதும் அவசியமானதாகும். அதுவரை ‘பறை -விடுதலைகான குரல்’ அமைப்பின் போராட்டங்கள் தொடரும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கேடுகெட்ட ம(ா )க்களின் மேய்ப்பர்களை நினைத்து விட்டால் …..
இவர்களின் (ராஜதந்திர )நடத்தைகளினால் தான் .. துப்பாக்கிகளுக்கு வேலை வருகின்றது போலும் ……
எல்லாம் வல்ல இறைவன் இவர்களை ( மேய்ப்பர்களாக) இல்லாது செய்யட்டும்
The start of the fraud…
The present government will investigate this…?
http://www.sundayobserver.lk/2009/06/07/new20.asp