சுன்னாகம் அனல் மின் நிலையம் இன்னு மூடப்படவில்லை இன்று கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. யாழ் குடா நாட்டின் ஒரு பகுதியை அழித்துச் சிதைத்துவரும் சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுவதற்கு இலங்கையின் மின் வலுத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு தற்காலிகமான கண்துடைப்பே என்பது இப்போது தெரியவந்துள்ளது.
பேரினவாதியும் பௌத்த அடிப்படைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க பல வருடங்களாக அனல் மின் நிலையத்தினூடாக நடத்தப்படும் திட்டமிட்ட அழிப்பின் பின்னணியில் செயற்பட்டவர் என்பது அறிந்ததே.
அழிவிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வளர்ந்து வரும் நிலையில் அவற்றைச் சிதைக்கும் வகையில் தன்னார்வ நிறுவனங்கள் (NGO) களமிறங்கியுள்ளன. நீரும் நிலமும் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டாம் என்றும் தாம் குழாய் கிணறுகளை அமைத்துத் தருவதாகவும் ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் தமது சதி வேலையை ஆரம்பித்துள்ளன.
அதே வேளை மகிந்த ராஜபக்ச அரசின் கீழ் பல்வேறு கிரிமினல் வேலைகளை மேற்கொண்ட சிறீ ரெலோ என்ற துணை இராணுவக் குழுவும் சுன்னாகத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை உள் நோக்கங்களைக் கொண்டது.
தன்னார்வ நிறுவனங்கள், துணை இராணுவக் குழுக்கள் போன்றவற்றின் தலையீட்டுக்கு அப்பால் இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பறை-விடுதலைக்கான குரல் அமைப்புத் தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் பெயர் விபரங்கள்?
ஆழமில்லா நிலக்கீழ் நீர்த்தேக்கங்கள் உள்ள பகுதிகளில் கூடிய ஆழங்களிலிருந்து நீர் தருவிக்க குழாய்க்கிணறுகள் அடிப்பது நன்கு ஆராயப்பட்டு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட வேண்டியது.
குடாநாட்டின் நிலக்கீழ் நீர்த்தேக்கங்கள் பற்றி விரிவான ஆய்வுகள் பலவற்றை யாழ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பலராலும் உளவு பார்க்கப்பட்டு, பல்தேசிய அநியாயமான தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்திருப்பதுவும் அவர்கள் ஒட்டுண்ணிகள் போல் சுன்னாகத்தில் நடந்துவரும் நீர் மாசடைவை அறிவியல் முறைமையில் எதிர்கொள்ளாமல் நீடிப்பதுவும் கவனத்தி எடுக்கப்பட வேண்டும்.
சம்பிக்க ரணவக்க, மலிந்த செனவிரட்ன போன்ற அதி துவேசவாதிகளும் இன்னொரு புறத்தில் தமது பழைய மொறட்டுவை பல்கலைக்கழகத்தினூடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேல் தமது முறுகிய நிலைப்படுகளை திணித்துள்ளனர். என்.ஜி.ஓ -க்களுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் சுற்றுச் சூழல் மாசடைவதை எதிப்பதையும் பெரிதும் தமது கைகளிலேயே அடக்கியுமுள்ளனர்.
சம்பிக்க ரனவக்க-இன் ஏமாற்று வித்தைகள் பற்றி:
இவையனைத்தும் 2000 ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி அமெரிக்க தூதராலய அதிகாரிகள் மூவர் ஆனையிறவால் ஆன புண்ணை நக்கிக்கொண்டிருந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஒருமாததுக்குள் எஸ். எல். குணசேகர -இன் வீட்டிலேயே வைத்து ‘சிங்கள உறுமய’ என்று பெயரிடப்பட்டிருந்த, கண்டி தலதா மாளிகைக்கு வெளியே பிரித்தானிய இளவரசனை வரவேற்க கட்டப்பட்டிருந்த மேடை தகர்க்கப்பட்டதை காரணங் காட்டி கூட்டப்பட்டிருந்த சொறிக்கூட்டத்தை பலப்படுத்தியதன் விளைவே.
‘சிங்கள உறுமய’ மகாநாயக்க தேரன்களிடம் காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உருவானதே ஜாதிக ஹெல உறுமய.
கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களுக்கு முழங்காலில் முண்டியடித்துக் கொண்டு தன்னையும் ஒருவிதத்தில் இதே கூட்டத்தில் எப்படியாவது சேர்த்துக் கொள்ளவும் என்றே கெஞ்சியதாக கருத வேண்டும்.
சர்வதேச ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ் வடகடல் சார்ந்த நில அபகரிப்பில் ஒருசில வருடங்களுக்கு முன்னரே ‘புனித [பௌத்த] வலயம்’ என்று கோஷமிட்டபடி சம்பிக்க ரணவக்க மாதகல் பகுதியில் செயற்பட்டதும் அக்காலகட்டத்தில் “நூறு முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம்” என்று சண்டித்தனம் பேசியதும் அமெரிக்க ஆதிக்கத்துக்கு அடியாளாக செயற்படும் ஒரு ஏமாற்றுக் காரனை வெளிப்படுத்துவது.
துவேச அரசியலுக்கு அப்பால் சம்பிக்க ரணவக்க கோத்தபாய-உடன் சேர்ந்தே நிலக்கரி கொள்வனவில் ஊழல்களில் இறங்கியவன். 2007 இல் ஸ்ரீதுங்க ஜயசூரிய போன்றோர் கொழும்புப் பிரதேசத்தில் போருக்கெதிராக கூட்டிய பொதுக்கூட்டத்தை அடித்து நொருக்கி கலைத்ததில் ரணவக்க-இன் பங்காளியான இன்னொரு சண்டியன் மேர்வின் சில்வா தற்போது ராஜபக்ச குடும்மப்த்துக்கு எதிராக கொடிதூக்கியுள்ளது போன்றே இவனது நாடகம் முனெடுக்கப்படுகிறது. கலாநிதிப் பட்டம் பெற்ற மேர்வின் சில்வா ஆவது ஒரு அறிவிலி என்பதில் ஒருவருக்கும் ஐயமில்லை. ஆனால் சம்பிக்க ரணவக்கை ஆடும் நாடகமும் அந்த ஆட்டத்தில் பங்கேற்கும் தமிழ் மூடர்களும் பற்றி அவதானம் இன்றைய அவசிய தேவை.