எம்ரிடி வோக்கஸ் நிறுவனத்தின் உப நிறுவமனாம நோர்தன் பவர் நிறுவனத்தின் கழிவு எண்ணெய் கசிவு தொடர்பில் பிரச்சினைக்குள்ளான இந்நிறுவனத்தை மூடும்படி எந்த அறிவித்தலும் வரவில்லை என்று இந் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தங்களது நிறுவனத்தினை மூடும் படி தமக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை அதனால் நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
கிராண்ட ஒரியன்டல் ஹோட்டலில் இன்று நடாத்திய விசேட ஊடகலியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
சுற்றுச் சூழலை நச்சாக்கித் திட்டமிட்டு அழிக்கும் இந்த நிறுவனம் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் ஒரு பகுதியா என்ற சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த நிறுவனத்தின் பின்னணியில் செயற்படும் கிரிமினல்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்த அழிப்பிற்கு எதிராகப் போராடிவருகிறார்கள்.
சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்
Is this like a another Mullivaikkaal…
Here all are in slow process…
Already in the type of poisoning the land in long-term low-level exposure…
Self poisoning with agricultural pesticides represents a major hidden health by air, water & land…
Here it’s like well planed slow process killing this Chunnakam Power plant issue,..
Anyone who are involved in this care about this…?
It’s not a over night issue like a Tsunami, Earth quAke, flood or cyclone…
It started 7yrs before…
Now who is going to take the responsibility…?
TNA…? Douglus…? Chandrasiri…? Sambikka or Rambikka…? CEO…?
No one…
Only the affected people are the ordinary people…
சக்தி அமைச்சர் சம்ாிக்க ரணவக்க Northern Power company இடமிருந்து மின் சக்தியை கொள்வனவு செய்யவேண்டாம் என்ற கட்டளையை இலங்கையின் மின்சார சபைக்கு இடும் அதிகாரத்தைத்தான் கொண்“டவர். அதை அவர் செய்துள்ளார். மின்சாரத்தை அந்தக் கொம்பியிடமிருந்து மின்சார சபை கொள்வனவு செய்யாவிட்டாவ், அந்தாக் கொம்பனியின் மின்பிறப்பாக்கிகள் செயற்றதாக்கப்படும் . அந்தக் கொம்பனியின் மின்பிறப்பாக்கிகளை நீக்கக் கூறும் முடிவை National Environmental Authority தான் செய்யவேண்டும். வருடத்திற்கு 200 – 300 மில்லியன் டூபாய்கள் அலாபத்தைப் பெற்று, முதலீட்டாளர்களை அதிகரித்து வந்த கொம்பனிக்கு சம்பிக்கவின் கட்டளை பிரச்சினையைக் கொடுக்கிறது. அடுத் கிழரம அனுப்பப்படும் நிபுணர் குழு ஆய்வுகளைச் செய்தபின்னர்தான் அந்தக் கொம்பனியின் மின் பிறப்பாக்கிகள் நிரந்தரமாக செயற்படுத்தப்படாது நீக்கப்படுவது தொடர்பாக டிவு எடுக்கப்படமுடியும். முதலீ்டாளர்கள் பங்குப் பணத்தைக் கோராது தடுக்க கொம்பனி ஒருவித திசை திருப்பல் பிரசாரத்தைச் செய்தவண்ணம்தான் இருக்கும். யாழ் மக்களதும், அரசியல்வாதிகளதும் செயற்பாடுகளை் இனித்தான் முக்கியமாகிறது!!
குளத்தில் நிரம்பிகுயிருந்த கழிவு எண்ணெய்க்கு என்ன நடந்தது.
Pழளவநன ழுn துயரெயசல 24வா 2015 டீல ஆசிரியர். ருனெநச செய்திகள்இ நன்றி: பிபிசி .
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துவருகின்றமைக்கும் அப்பகுதியில் அமைந்துள்ள நொதேர்ன் பவர் கம்பனியின் செயற்பாட்டுக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ். மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர் குழுவொன்றை அரசாங்கம் நியமித்திருப்பதை நொதேர்ன் பவர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லால் பெரேரா வரவேற்றுள்ளார்.
தமது நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு எண்ணெய் நிலத்தில் சேர்வதில்லை என்றும் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தாங்கிகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மூன்றாம் தரப்பினரால் வெளியில் கொண்டு செல்லபபடுவதாகவும் கழிவு எண்ணெய் எரி உலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதனால்இ அதனை தமது நிறுவனம் வர்த்தக ரீதியாக நல்ல விலைக்கு விற்று வருவதாகவும் லால் பெரேரா கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமது நிறுவனம் யுத்தச் சூழலில் யாழ்ப்பாணத்திற்குத் தரைவழிப் போக்குவரத்து இல்லாத காலத்தில் அங்குள்ள மக்களுக்கு மின்சாரம் வழங்கி சேவையாற்றி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய மின்விநியோக கட்டமைப்பில் யாழ்ப்பாணம் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும்இ மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற நேரத்தில் சில மணித்தியாலங்கள் மாத்திரமே தமது நிறுவனம் மின்சாரத்தை உற்பத்தி செய்து அந்த கட்டமைப்புக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிதளவு நேரமே செயற்படும் தமது நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் 2இ 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணறுகளுக்குச் சென்று கலப்பது சாத்தியமற்ற விடயம் என்றும் லால் பெரெரா கூறினார்.
தமது நிறுவனம் சுன்னாகத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர்இ அங்கு கழிவு எண்ணெய் நிரம்பிய ஒரு குளம் இருந்ததாகவும்இ 2012 ஆம் ஆண்டு அதனை மண் போட்டு நிரப்பி அந்த இடத்தில் துணை-மின்நிலையம் ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும்இ ஆனால் எவரும் அந்த எண்ணெய்க் குளத்தில் நிரம்பிகுயிருந்த கழிவு எண்ணெய்க்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராயவில்லை என்றும் நொதேர்ன் பவர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். Eprlfnet
மீண்டும் எரிசக்தி அமைச்சனாகியிருக்கும் சம்பிக்க ரணவக்க-இன் நெடுங்கால சகாவான இன்னொரு அதிதுவேசவாதி மலிந்த செனவிரட்ன நடாத்தும் நேஷன் பத்திரிக்கை ஐந்து நாட்களுக்கு முன்னரான எம்.டி.டீ வோக்கர்ஸ்-இன் நிராகரிப்பை இன்னும் குறைத்து வெளியிட்டிருப்பது கவனிக்கப்படவேண்டியது. இருவரும் தமது துவேச அரசியலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற சாட்டோடு (ஜனதா மித்துரோ எனும் அமைப்பாக) தொடங்கியதையும் ‘உதுரு ஜனனி’ எனும் ஒரே மின்சாரசபை வளாகத்தில் 2013 இல் அவசர அவசரமாக அமைக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையம் மீது பழி போடப்பட்டதையும் கவனிக்க வேண்டும். நேஷன் பத்திரிக்கை ஆதாரங்களில்லாத குற்றச்சாட்டு என்று தத்தளிக்கும் தமிழ் ஆர்வலர்களில் பிழைகளை பிடிக்கும் விதத்தில் இன்றைய ஞாயிறு பதிப்பில் எழுதப்பட்டுள்ளது -“அடிப்படை ஆதாரங்களில்லா குற்றச்சாட்டு” என நேஷன் பத்திரிக்கையின் ஒரு விளம்பரம் போல் கதையை மாற்றுகிறது.
http://www.nation.lk/edition/news-online/item/37737-mtd-walkers-refutes-allegation.html
ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் ஒரு எண்ணெய்க்குளம் இருந்ததாகவும் அது நிரப்பட்டு அதன் மேலேயே புதிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டதாகவும் லால் பெரேரா எனும் நொதர்ன் பவர் கொம்பனியின் பலவருட தலைமை உத்தியோகத்தனும் இப்போ அதன் தாய் நிறுவனமான எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவனத்துக்காக குரல் கொடுக்கும் லால் பெரேரா கூறினான்.
“However, we wish to highlight that a large oil lake (Oil kulam) existed within the previous State-run power plant premises before Northern Power commenced operations. This ‘lake’ contained a large amount of oil as indicated even in the Google maps taken over a period of time and has been presented to Courts as well. Subsequently in and around 2012 the area was filled with earth and compacted and a new substation was built by the Government on this premises. Unfortunately, to date no one has questioned or researched in to finding out what happened to this large quantity of oil that was contained in this ‘oil lake’.”
மேலும் தற்போதைய பாவனை எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஏதோ தானே தலைம தாங்கிய மின்னுற்பத்தி நிலையம் அமைந்த வளாகத்தில் இருந்ததாகக்கூறப்படும் ‘கழிவு எண்ணெய்க் குளம்’ பற்றி தனக்கு ஒரு பொறுப்பும் இல்லை என்ற தொனியில் உளறியது கவனிக்கப்பட வேண்டியது. அதுவும் கூகிள் சட்டலைட் படங்களை ஆதாரமாக பாவிக்கவும் துணிகிறான்.
இந்த லால் பெரேரா (O D N L Lal Perera) -இன் பொறியியல் வரலாறை ஆராய்வதும் நல்லது.
இவன் இராணுவமயமான பொறியியயாளனா என்பது ஆராயப்பட வேண்டும்.
ஒரு கட்டத்திலும் ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) எனும் ஏற்கனவே கழிவான எண்ணையே சுன்னாகத்தில் இயங்கும் இருமின்னுற்பத்தி நிலையங்களிலும் பாவிக்கப்படுவதை வெளியிடாததுவும் கவனிக்கப்பட வேண்டியது. பிரச்சனையைத் தீர்க்க ஒருவிதத்திலும் உதவாமல் திட்டமிட்டு பழைய கைவிடப்பட்ட டீசல் மின்னிலையத்தைப் பற்றி உளறி எவ்வளவையோ மறைக்க முயல்கிறான்.
இணைக்க மறந்த இரண்டாவது இணைப்பு
http://colombogazette.com/2015/01/20/jaffna-power-plant-rejects-claims/
சுன்னாகம் பகுதி அணல் மின் நிலைய கழிவு ஒயில் விடயத்திற்கு தற்போதைய அரசாங்கம் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : சிறீரெலோ
Saturday, January 24th, 2015 at 12:08
யாழ்ப்பாணம்,சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அணல் மின் நிலைய கழிவு ஒயில் அப்பகுதியில் உள்ள கிணறுகளில் கலக்கும் விடயத்திற்கு இன்றைய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என சிறீரெலோ இயக்கத்தின் யாழ்.மாவட்ட பொறுப்பாளர் எஸ்.செந்தூரன் கோரிக்கை விடுத்துள்ளார். சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் அதனை அண்மித்த கிணறுகளில் பரவி, தற்போது உடுவில்.தாவடி, வரை வந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது.இப்பிரச்சனையானது குடாநாட்டில் உள்ள சகல மக்களிற்கும்; பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.கடந்த கால யுத்தவடுக்களிலிருந்து எமது மக்கள் மீண்டுவரும் இச்சூழ்நிலையில் உருவெடுத்துள்ள இப்பிரச்சனையானது மக்கள் மத்தியில் ஓர் அச்சஉணர்வினை ஏற்படுத்தியுள்ளதனை காணமுடிகின்றது.
இவ்மனிதாபிமான பிரச்சனைக்கு உரியதீர்வு கிடைக்குவேண்டுமென கோரி அப்பகுதிமக்களினால் போராட்டங்கள் நடாத்தப்பட்டபோதும் இதுவரை உரியதீர்வு வழங்கப்படவில்லை.எனினும் அவ் அனல்மின்நிலையத்தின் செயற்பாட்டினை உடன்நிறுத்துமாறு தற்போது மின்சக்தி,எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொவித்துள்ளபோதும் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும் எனவும்குறிப்பிட்டுள்ளதுடன்,
கடந்த காலயுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தினை இழந்துள்ள அம்மக்கள் இன்று குடிநீரிற்கு அலைந்துதிரியும் நிலைஏற்பட்டுள்ளதுடன் குடிநீரை பணம்செலுத்தி வாங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அம் மக்களிற்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்க இன்றைய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
077-1242732 ஊடகப்பிரிவு
சிறீரெலோ
யாழ்.மாவட்டம்
தண்ணீர் வாங்க காசு இல்லாதவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் வந்து பங்கீட்டு அடிப்படையில் தண்ணீரை பிச்சையாக தருவார்கள்.