இலங்கை மெதடிஸ்த்த திருச்சபையும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பிரிவும் சர்வமத இளைஞர் பேரவையும் தேசிய கலை இலக்கியப் பேரவை நூரளைக் கிளையின் ஏற்பாட்டில் கந்தப்பளை சனசமூக நிலையத்தில் சர்வதேச தேயிலை தினம் “மலையகம் எம் தாயகம் மண் உரிமையே எம் கௌரவம்;” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு பேரணியுடன்; தொடங்கியதோடு பேரணியில் “தனி வீடும் காணியுமே எம் சுதந்திரம்” “மலையகம் தனி தேசியம்;” “காணி உரிமையுடன் கூடிய வீட்டுதிட்டம் எமக்கு உடன் வேண்டும்” “கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்போம்” எனும் வாசகங்கள் அடங்கிய சுலோகங்களுடனான வீதி ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய பிதா தேவதாசன், கவிஞர் மணிசேகரம், சட்டத்தரணி ளு. மோகனராஜன் சமயத்தலைவர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டதோடு சிறப்புரை ஆற்றினர்.
கலை நிகழ்சிகளும் இவ்வாண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
That is right, WE tend to forget the services of the Methodist Mission in Sri Lanka. Methodist Arasady School id now Mahajana College Batticaloa. Methodist Central College is now a full fledged school with Agvanced Level in Batticaloa.