சிறீலங்காவின் இன்றைய சீத்துவக்கேடுகள் என்ன… சீரழிந்து போன தமிழர்கள் எப்படி சீர் பெறலாம்.. சிறீலங்கா இனவாத அரசு – இந்தியா – புலிகள் – புலம் பெயர் தமிழர் விட்ட தவறுகள் என்ன..சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் நேற்று சனி 13.11.2010 அன்று டென்மார்க் வந்திருந்தார். வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் கூறிய கருத்துக்களில் முக்கியமானவை இங்கு தரப்படுகின்றன.
நீண்ட காலமாகவே தூரப்பார்வையற்ற தமிழர் கூட்டணியினர், பிந்தய கூட்டமைப்பினர் போன்ற மேட்டுக்குடி அரசியல் வாதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் போராடி வரும் இவர் சிறுப்பிட்டியை சேர்ந்தவர் என்று ஆரம்ப உரையில் டென்மார்க்கின் அரசியல் சமுதாய பணிகளில் ஈடுபட்டுவரும் தர்மா தர்மகுலசிங்கம் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளை குறித்த நேரத்திற்கு அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்தும் வைத்தார். அத்தோடு எம்.சி.லோகநாதனின் உரையும் கூட்டத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் சுமார் ஒன்றரை மணி நேரம் சி. கா. செந்திவேல் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
பின் இரவு 21.00 மணியளவில் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.கூட்டத்தில் கேட்ட கருத்துக்களில் முக்கியமானவை.
01. நடந்துவிட்ட எல்லாத் தவறுகளையும் பிரபாகரனின் தலையில் போட்டுவிட்டு நாம் ஏதுமறிய பேதைகள் போல வேடமணியக்கூடாது. முழுத் தமிழினமும் அந்தத் தவறுகளுக்கான பங்காளிகளே. ஒரு தலைவன் வருவான் எம்மைக் காப்பாற்றுவான் என்று எண்ணும் தமிழினத்தின் மனமே ஆயுதமேந்திய புலிகளும், அதே பாணியிலான மற்றய இயக்கங்களுமாகும்.
02. இன்று இலங்கையின் அரசியலை முன்னெடுக்க வந்துள்ள கூட்டமைப்பு, வரதராஜப் பெருமாள், டக்ளஸ், பிள்ளையான் உட்பட அனைவருடைய கரங்களும் இரத்தத்தால் தோய்ந்த கரங்களே. இவர்கள் எப்படி மீண்டுமொரு சரியான அரசியலை தமது இரத்தம் காய்ந்த கரங்களால் சரியாக முன்னெடுக்க முடியும் ?
03. சிறீலங்கா இனவாத அரசு ஒரு ஜனநாயக நாடோ அல்லது சோசலிச நாடோ கிடையாது. அது மற்றவர்கள் உற்பத்தி செய்ததை விற்பனை செய்யும் மோசமான சந்தைப் பொருளாதார நாடு. அரசியல் அதிகாரப் பகிர்வோ, பரவலாக்கலோ எதற்குமே தயாரில்லாத ஓர் ஆட்சியே மகிந்த ராஜபக்ஷ நடாத்தும் ஆட்சியாகும். 80.000 சிங்கள இளைஞர்களையே கொன்று வீசிய சிங்கள இனவாதம், தமிழர்களை என்ன செய்யும் என்பதை நாம் தூரப்பார்வையுடன் உணர்ந்திருக்க வேண்டும்.
04. கிளிநொச்சி வீழ்ந்த கையோடு ஆயுதங்களை மௌனிக்க வைக்கிறோம் என்று புலிகள் அறிவித்து, மக்களையும் விடுவித்திருந்தால் சுமார் 40.000 அப்பாவி மக்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம். புலிகளின் மோசமான பிடிவாதமான, தூரப்பார்வையற்ற செயலால் இத்தனைபேர் வீண் மரணத்தை சந்தித்தார்கள்.
05. இத்தனை அவலங்கள் நடந்த பின்னரும், அதற்குக் காரணமான இந்தியா மறைந்திருந்து என்ன செய்தது என்பது தெரிந்த பின்னரும் இந்தியாவை தம் தொப்புள்கொடி உறவென்று சொல்லும் தமிழனை என்ன செய்வது..
06. சிங்கள இனவாத அரசுடன் உறவு கொள்ள புலிகளின் ஒரு பிரிவினர் இன்று கொழும்புக்கு ஓடுகிறார்கள். இன்னொரு பிரிவினர் இந்தியாவுக்கு ஓடுகிறார்கள். இது என்ன அரசியல்.. இதைவிட கேடுகெட்ட அரசியல் என்று ஓர் அரசியல் இருக்க முடியுமா ?
07. நாடுகடந்த அரசு என்று வெளிநாடுகளில் அமைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். இப்படியொரு அரசு இருக்கிறது என்பதைக் காட்டி இலங்கையிலும் ஓர் தமிழ் அரசு அமைய வழி செய்யலாம் என்று கனடாவில் கூறினார்கள். இதை யாரிடம் மகிந்த ராஜபக்ஷவிடமா காட்டியா ஈழம் அமைக்கப் போகிறீர்கள் என்று அங்கிருந்த பெண்மணி மறுபடியும் அவரிடம் கேட்டார். புலிகள் என்ற பெரிய இயக்கம் போராடியே சிங்கள இனவாத அரசு எதையுமே கொடுக்க முன் வரவில்லை நாடுகடந்த அரசைக்காட்டியா உரிமை பெற முடியும் ?
08. ஆனால் நாடுகடந்த அரசென்பது சிங்கள இனவாதம், இந்திய வல்லாதிக்கம் ஆகிய இரண்டுக்கும் உள்ளத்தில் பெரு மகிழ்ச்சியையே கொடுக்கும். புலிகளின் தனிநாட்டு கோரிக்கை இன்னமும் முடியவில்லை என்பதற்கு இவர்களையே உதாரணமும் காட்டும். அவசரகால சட்ட நீடிப்பு, கைதுகள், கொலைகள் போன்ற நித்திய கருமங்களை மாற்றமில்லாமல் சிங்கள அரசு செய்ய நாடுகடந்த அரசையே உதாரணம் காட்டும். நாட்டில் உள்ள அப்பாவிகள் தொடர்ந்தும் துன்பம் அனுபவிக்கவே இவர்களுடைய செயல் காரணமாக அமையும். புலிகள் மீதான தடையை நீடித்து தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்க இந்தியாவுக்கும் ஒரு பிடிமானமாக இவர்களுடைய முயற்சி அமையும்.
09. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது புலிகள் செய்த மிகப்பெரும் தவறாகும். இன்று அகதிகளாக வாழும் முஸ்லீம்களின் அடுத்த தலைமுறை சுமார் 20 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே வாழ்கிறது. அவர்கள் புலம் பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறைபோல் யாழ்ப்பாணத்திற்கு பார்வையாளராகவே வருவார்கள். முஸ்லீம்கள் மறுபடியும் குடியேறுவதற்குக் கூட சிங்கள அரசு எதையுமே செய்யவில்லை.
10. சீனா – இந்தியா – ரஸ்யா – பாகிஸ்தான் – அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் இந்தப் போரில் முக்கிய பாத்திரம் வகித்தன. இவர்களுடைய நோக்கங்களுக்காக ஈழத் தமிழர்கள் அநியாயமாக பலியானார்கள். புலிகள் அமெரிக்க சார்புடையவர்கள் என்பதால் அவர்கள் இலங்கையில் இருக்கக் கூடாது என்று இந்தியா கணக்குப் போட்டது. 2001 ற்குப் பிறகு ஆயுதமேந்திய அமைப்புக்கள் இருக்கக் கூடாது என்று அமெரிக்கா கருதியது. இரு சக்திகளும் புலிகளுக்கு எதிரானபோது முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமென்று வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கேற்ப நடாத்தப்பட்ட போர் கடைசியில் மீண்டும் தொடங்க முடியாது ஒரு கட்டத்தில் நின்றும்போனது.
11. ஆனால் ஒடுக்கு முறைக்குள்ளான மக்கள் ஐந்தாண்டுகளோ பத்தாண்டுகளோ அல்லது இருபத்தைந்தாண்டுகளோ கழித்து மறுபடியும் எழலாம் ஆனால் அது புலிகள் போல தப்பான திசையில் எழுகிறதா அல்லது மக்கள் சக்தியாக எழுகிறதா என்பதைப் பொறுத்தே அதன் அழிவும் ஆக்கமும் தீர்மானமாகும்.
12. தமிழ் மக்கள் ஏறத்தாழ மந்தை நிலைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்று கேட்காமல் ஒன்றன் பின் மற்றயது கூட்டமாகப் போகும் குணம் கொண்டவை செம்மறிகள். வெள்ளாடுகள் தனித்தனியாக மேயும் அவற்றை மேய்ப்பது கடினம். ஆனால் செம்மறிகளை மேய்க்க ஒருவன் போதும். அதுதான் ஒரு தலைவன் வருவான் என்று பாடித்திரிகிறார்கள். ஆண்ட பரம்பரை மறுபடி ஆள நினைப்பதில் தவறென்ன என்ற காசியானந்தனின் வரிகளை பாருங்கள் எந்தக்காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மேட்டுக்குடிகளை தவிர தமிழரை ஆண்டவன் எவன்.. ? இவனா மறுபடியும் ஆளப்போகிறான் இப்படியான பிற்போக்குத் தனமான எண்ணங்களில் பின்னால் மந்தை நிலைப்பட்டது தவறு.
13. இவற்றையெல்லாம் அறிந்து காலத்தையும் சூழலையும் உணர்ந்து தமிழ் மக்கள் சரியான சக்தியாக மலர வேண்டும். தோல்வியடைந்த புலிகளை குத்திக்காட்டி பேசுவதில் யாதொரு பயனும் கிடையாது. இலங்கைவாழ் தமிழ் மக்களிடையே பெரும் அரசியல் வெற்றிடமும் விரக்தியுமே இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் 80 வீதமான மக்கள் வாக்களிக்கவே போகவில்லை. வெறும் ஒன்பதாயிரம் வாக்குகளை வைத்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்கிறது கூட்டமைப்பு. மறுபடியும் சேர் பொன் இராமநாதன் காலத்துக்குள் போய் குளிர்காய ஆசைப்படுகிறார் சம்மந்தர்.
14. கூட்டமைப்பை மன்மோகன் சிங் பாராட்டியதாக மாவை சேனாதிராஜா கூறுகிறார். அந்த வெட்டங்கெட்ட செயலை புரியாது கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளை தட்டுகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் இந்திய செய்ததையே மறந்த தமிழனுக்கு பழைய வரலாறா தெரியப்போகிறது.. என்றார்.
15. அதேவேளை இனப்பிரச்சனை என்ற விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அதைத் தீர்க்காமல் வேறு நியாயங்களை பேசுவது அர்த்தமற்றது என்றார்.
இது குறித்து தமது கட்சி முன் வைத்துள்ள நான்கு அம்சக் கோரிக்கைகளையும் அதன் உப பிரிவுகளையும் எடுத்துரைத்தார்.இதேவேளை செந்தில்வேலிடமும் பல கேள்விகள் கேட்டப்பட்டன.01. ஏன் சண்முகதாசனும் நீங்களும் பிரிந்தீர்கள் ? நீங்கள் எதற்கு தேர்தலில் போட்டியிட்டீர்கள் ? முதற்கேள்விக்கு உட்கட்சிப் பிரச்சனை என்று கூறிய அவர் இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்கவில்லை.02. சீனா, ரஸ்யா என்பன கம்யூனிச நாடுகள் என்கின்றன இவை எதற்காக ஆயுதங்களை வழங்கி தமிழரை அழிக்க துணை போயின.. இத்தகைய கம்யூனிசம் தேவையா ? இன்றைய சீனா – ரஸ்யா ஆகிய நாடுகளை நாம் கம்யூனிச நாடுகளாக கருதவில்லை. நாம் இலங்கைக் கம்யுனிஸ்டுக்கள் அவ்வளவுதான்.03. கம்யூனிசநாடான கியூபா எதற்காக ஐ.நா வாக்கெடுப்பில் சிறீலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்தது ? சிறீலங்கா போன்ற மூன்றாம் உலக நாட்டை யுத்த குற்றவாளியாக நிறுத்தினால் அதை முன்னுதாரணம் காட்டி அமெரிக்கா மற்றய மூன்றாம் உலக நாடுகளையும் நிறுத்தும் என்ற அச்சமே காரணம்.புலிகளிடமும், கூட்டமைப்பினரிடமும், நாடுகடந்த அரசிடமும் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை அவர் துணிச்சலோடு சுட்டிக்காட்டினார். ஆனால் அதே தவறுகளே கம்யூனிஸ்டுக்களிடமும் வேறொரு வடிவமாக இருப்பதை கேள்வி பதில் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பதில்களால் உணர முடிந்தது. எழுபதுகளில் கம்யூனிஸ்டுக்கள் பேசிய அதே இடத்திலேயே 2010 லும் நிற்கிறார்கள் என்ற உணர்வையும் கூட்டம் ஏற்படுத்தியது. எழுபதுகளில் சமுதாயம் இருந்தது போலவே இன்றும் மாற்றமில்லாமல் இருப்பதால் அதையே பேசுகிறார்களா இல்லை அவர்கள் தம்மை சித்தாந்தங்களுக்கு வெளியால் நவீனமயப்படுத்த முடியாமல் இருக்கிறார்களா என்ற இரு பெரும் ஆய்வுக்கான அவசியத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியதே இதன் மீதான இன்னொரு பார்வையாகும்.முள்ளிவாய்க்காலுக்குப் பின் மிகப்பெரிய வெற்றிடம் நிலவுகிறது.. அதை நிரப்ப கம்யூனிஸ்டுக்கள் உட்பட யாரையுமே அடையாளம் காட்டமுடியாமல் அந்த வெற்றிடம் நகர்வதாகவே நிகழ்வின் முடிவில் மனதில் உணர்வுகள் ஓடின… இலங்கையில் இருந்து ஒரு பேச்சாளரை அழைத்து, இலவசமாக நிகழ்ச்சி நடாத்தி, பணமே வேண்டாது விருந்தளித்து, உண்டியல் குலுக்காமல், துண்டு விரித்து நிதிக்கு வராமல் ஒரு நிகழ்ச்சியை வயன் இலக்கிய மன்றம் நடாத்தியது பாராட்டுக்குரிய பணி என்பதை மறுக்க முடியாது.
நல்ல கருத்துக்கள். ஆனால் இதனைச் சொல்வதற்கு நாட்டிலிருந்து அவர்தானா வரவேண்டும். இக்கருத்துக்களே இன்று 90வீதத்துக்கும் அதிகமானவர்களால் சொல்லப்படுகின்றன. ஆனால் என்ன பேச்சு மட்டுமே நடக்கிறது. செயற்பாடுகள்தான் ஆரம்பிக்கப்படவில்லை. பேசிக்கெட்ட இனம் என ஒன்று உலகில் இருக்குமானால் இது எம்ம்மினமாகத்தான் இருக்கும்.
அவர் இதைச் சொல்வதற்காகவே வயன் நகர் செல்லவில்லை. கனடா போய் மீளும் வழியில் பிரான்சிலும் டென்மார்க்கிலும் பேச அழைத்தார்கள். அவ்வளவு தான்.
அழைத்தவர்கள் எதைப்பற்றிப் பேசக் கேட்டார்களோ அதைப் பற்றியே பேசியிருப்பார் என்று நம்புகிறேன். (இக் குறிப்பு ஒருவரது தொகுப்பு மட்டுமே).
இன்று அவர் வேறெதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
பேசிக் கெட்ட இனம் என மட்டுமல்ல, வலிந்து சொட்டை சொல்லிக் கெட்ட இனம் என்றும் வைத்துக் கொள்வோமா? பேச உரிமை மறுக்கப்பட்டு யார்யாருக்கோ பின்னால் போய் அழிந்த இனமென்றும் வைத்துக் கொள்வோமா?
வலிந்து சொட்டை சொல்லி அழிந்த இனமும் நாம்தான் ஒத்தக் கொளஇகிறேன். அனக்குள்ள ஒருகேள்வி யாராவது பதில் சொல்வீர்களா? தமிழர்களில் பிழையைக் கண்டுபிடிக்கும் நாம் மறஇற இனத்தவரில் நிறையைக் கண்டபிடிக்கின்றோமே ஏன்?
அடிமைப்புத்தியா அல்லது பல்லாண்டகாலம் அன்னிய ஆட்சியின் கீழ் இருந்துவிட்ட பழக்கதோசமா?
தமிழரிடையேயும் குறைகளை விட்டு நிறைவை மட்டும் பார்க்கும் மனப்பான்மை எப்போது வளர்கிறதோ அப்போதுதான் எமக்குள் ஒற்றுமை வளரும். மாறுவோமா நாம்?
நான் சில வேளைகளில் மற்றய இனத்திலுள்ள நல்லதை உதாரணமாகக் காட்டியிருக்கிறேன். அதனைப் பார்த்து நாம் முன்னேறுவதற்காக. எமது நிறைவைப் பார்த்து என்னை நானே பாராட்டுவதை விட மற்றவர்கள் எனது நிறைவுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது அவா. மற்றப்படி வேறெந்த இனத்தையும் எமக்கு மேலானதாகவோ கீழானதாகவோ கருதி எனக்கும் பழக்கமில்லை.
நீங்கள் தான் தமிழரை ஏதோ குறை சொல்லத்தொடங்கினீர்கள். (சொட்டை சொல்லுதல் பற்றிய என் குறிப்புக்கான காரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும்).
நம்மில் தமிழரைத் திட்டிக் கொண்டிருப்போர் போலவே, நம்மில் ஒரு பகுதியினர் இன்னமும் நமது ஆண்ட பரம்பரை மேன்மைகளையும், பழமையின் உயர்வையும் பிறரை மிஞ்சிய அறிவாற்றலையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறர்கள்.
வேறெந்த இனத்தையும் எமக்கு மேலானதாகவோ கீழானதாகவோ கருதி எனக்குப் பழக்கமில்லை. எனவே உங்கள் கேள்விக்கான பதில் அங்கெங்கிருந்தாவது வரும் என எதிர்பார்க்கிறேன்.
Hi
the problem in tamil is they simply forgot the history
each and every tamil should study the brave and bold tamil history , Pura nanooru which talking about tamil culture is the veda to every tamil , then only tamil will get his own land ,
தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள் முதலில்! அதன்பின் புறநானூறு வீரம்பற்றி கதைக்கலாம்.
புறநானூறு வாசித்திருக்கிறீர்களா?
இந்தியா இலங்கைத் தமிழனுக்கு எதையும் செய்ய விடாது தடுத்தது நமது அறீயாமை அது மட்டுமல்லாது வைகோ, ஜனார்த்தனம் என்றூ அவர்களது தோள்ச் சால்வையை பிடித்து நின்றது அதை விடக் கொடுமை.அவர்களோ சால்வையை மாற்றீ கட்சி மாறூபவர்கள் எமக்காக எப்படி வருவார்கள்?கடைசிவரை கட்டிலை விட்டு இறங்காத காய்ச்சல்காரன் போல் புலிகள் மக்கள் தம்மோடு வைத்திருந்தார்கள் என்பது பேய்க்கதை.ஒநாயை நம்பி வெள்ளாடுகள் போக முடியுமா?தங்கள கயிறூ கட்டி இழுக்கிறார்கள் என தெரியாமலே மக்களூம்,புலிகளூம் ஒன்றாக மடிந்தார்கள்.மெளனங்கள் உடைகிற காலம் வரும்போது உண்மைகள் உடைப்பெடுக்கும் அதுவரை ,,,,,,,,தமிழ்மாறன்.
மார்க்சியம் + தேசியவாதம் = புரட்சிகர முன்னேறிய தேசியவாத மார்க்சியம் +/- delta – எனது (ஒரு) புலம்பல்!!!
கடந்த ஓக்டோபர் மாதம் 30 திகதி தேடகம் குழுவினர். “இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் எதிர்கொள்ளும் அரசியல் சவால்களும், செயலுக்கான கருத்துப்பகிர்வும், கலந்துரையாடலும்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ரொரன்டோவில் ஒழுங்கு செய்திருந்தனர். இதில் மூன்றுவிதமான அரசியல் கருத்துப் போக்குள்ளவர்களை அழைத்து ஒரே மேடையில் இருக்கச் செய்து தமது கருத்துக்களைக் கூறுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியிருந்தனர். …..செந்தில்வேல் அவர்களின் சொற்பொழிவு. இவர் எங்களைப் போல நாட்டை விட்டு வெளியேறாமல் தொடர்ந்தும் இலங்கையில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருப்பவர். அந்தவகையில் இவர் மதிப்புக்குரியவர். ஆதற்காக விமர்சனத்திற்கு அப்பாற்படடவர்கள் அல்ல. இவரின் சொற்பொழிவு, நாம் வழமையாக கேட்கின்ற மரபுவாத மார்க்சியவாதிகளினால்; மீள மீள சொல்லப்பட்டுவருகின்ற வரட்டு தத்துங்களும் கோட்பாடுகளுமே என்றால் மிகையல்ல. மேலும் இவரது சொற்பொழிவைப் போன்று அழகான அருத்துறுத்த உறுதியான நம்பிக்கையான சொற்பொழிவுகளை எனது குழந்தைப் பருவத்திலிருந்து அதாவது 70களிலிருந்து கேட்டு வந்திருக்கின்றேன். காலத்திற்கு காலம் சொற்பொழிவாற்றும் மனிதர்கள் மட்டுமே; வேறுபட்டுள்ளார்கள். ஆனால் சொற்பொழிவாற்றிய அனைவரது சொற்பொழிவுகளினதும் அடிநாதம் பொதுவாக ஒன்றாகவே இருந்தது. இன்றும் அதேமாதிரி இருந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரியதே.
…
to read th rest….
http://meerabharathy.wordpress.com/
நூற்றாண்டுகளகப் பூமி உருண்டை என்று தான் சொல்லுகிறர்கள்.
வித்தியாசமாகச் சொல்ல வேண்டிப் பூமி புடலங்காய் வடிவம் என்று சொல்லுவோமா?
குறிப்பான தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். கேட்கலாம்.
கேட்டு அலுப்புத் தட்டுவதால் உண்மை இல்லாமல் ஆகி விடாதே.
(‘ஓஷோ’வின் “பொன்மொழிகள்” அலுப்புத்தட்டாத நிரந்தர உண்மைகளா?)
கல் தோன்றி மண்தோன்றா காலம் முதல் பின்பற்றி இன்னும் விடிவு காணா மக்கள் விடுதலைபற்றி பொய்பேசி திரியும் உங்களுக்கு மக்கள் விடிவிற்காய் 70 பதுகள் துவங்கி இன்றும் மீண்டும் மீண்டும் கூறுவது திருந்துங்கள் என்று தானே செத்து மடியுங்கள் என்று அல்ல புதிதாக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அனைரையும் புத்த மதத்திற்கு மாறுங்கள் என்று கூறுவதையும் நாங்கள் எதிர்ப்பவர்கள் வரட்டு மார்சியம் என்று கூறும் அந்த வார்த்தைகளை 1970களில் செவி மடுத்திருந்தால் ஈழத்தமிழர்கள் பல லட்சம் பேர் உயிருடனாவது இருந்திருப்பார்கள் அல்லவா?
“இவர் எங்களைப் போல நாட்டை விட்டு வெளியேறாமல் தொடர்ந்தும் இலங்கையில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருப்பவர். அந்தவகையில் இவர் மதிப்புக்குரியவர்“ – இது கொஞ்சம் சுவார்சயமாகத்தான் இருக்கிறது. இதற்காக செந்தில் வேலையா பேச அழைக்க வேண்டும். ஊாில் இருப்பது தகுதியென்றால் உங்கள் முதல் தொிவு வடகிழக்கில் வாழுபவர்களாகத்தாக் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக வன்னியில் இருந்து ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாமல் இருப்பவர்களில் ஒருவரை தொிவு செய்திருக்கலாம். அவருக்குத்தான் இன்றைய நிலை குறித்து பேசுவதற்கு மற்றையவர்களைவிட தகுதியுண்டு. அதனைவிடுத்து எதற்கு இந்த “வேலை“ தேடகம் குழுவினர்கள் பேசக் கூப்பிட வேண்டும். உண்மையிலேயே தேடகத்திற்கு ஈழத்தில் இருக்கும் மக்கள் மீது அக்கறை இருப்பின் இப்படியான கற்பனைக் குதிரையில் பயணம் செய்பவுாகளை விடுத்து ஆக்க மூபுர்வமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் விமேசனத்திற்கு முன்னுாிமையளிப்பவாகளையும் அழைக்கலாம். புலிகள் மக்களை தடுத்து வைத்திருந்தது பொிய தவறுதான் அதனால்தான் அதிக மக்கள் யுத்தத்திற்குள் அகப்பட வேண்டி ஏற்பட்டது. அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் இதனை பேசுவதற்கு செந்தில் வேலுக்கு உண்மையிலேயே தகுதி இருக்கிறதா எனபதுதான் அடுத்த கேள்வி. தியன்மன் சதுக்கத்தில் நடந்த பாசிச சீனாவின் கொலையை நியாப்படுத்தி தனது சகா இமய வரம்பன் என்பவருடன் இணைந்து நியாப்படுத்திய வெகுஜனன்தான் இந்த செந்தில்வேல். இதனை அவராலும் மறுக்க முடியாது. அதற்கு இந்தப் பொிய அறிவாளிகள் இருவரும் கொடுத்த விளக்கம் அது சி.ஜ.ஏயின்ர சதியாம் அதனை அடக்கத்தான் டென்சியோ ஒபிக்கின் சீனா மாணவர்களை கொல்ல வேண்டி ஏற்பட்டதாம். சி.ஜ.ஏயின் சதி என்றால் மாணவாகளை கொல்லலாமா? அது நியாயமா? இதனை மறுபுறமாக மகிந்தவிற்கு போட்டுப் பார்ப்போம். மகிந்தவும் இதே கதையை சொல்லலாம். நாங்கள் பயங்கரவாதிகளை அழிக்க போாிட்டோம் அதன் போது மக்களும் சிலர் இறந்து விட்டார்கள் நாங்கள் என்ன செய்வது எல்லாம் பிரபாகரனால் வந்தது. இப்படித்தான் இன்று மகிந்த சொல்றார். தியன்மன் கொலைகளை சாி என்னும் செந்தில்வேலால் எப்படி 40000 வன்னிப் பொதுமக்கள் பற்றி பேச முடியும். எதனையும் குறிப்பிடுவதற்கு சில தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்வது அவசியம்.
சுத்த முட்டாப் பசங்களாக இருக்காங்களே!
என்ஜிஓ துட்டுலே மூணு வேளெ துன்னுப்புட்டு தப்பாமே தண்ணியும் அடிச்சிக்கிட்டு
வேளைக்கி ஒரு பேச்சிப் பேசிக்கிட்டு மின்ன புலி அப்பறம் ஓட்டுப்பொறுக்கிங்க அதுக்கப்பறம் இந்தியா கவுர்மென்ட்டுன்னு பின்னாலே போற பொறுக்கிப் பசங்களே உட்டுப்புட்டு
பொழக்கத் தெரியாத இந்த செவப்புக் கட்சி ஆளேயும் யாராச்சியும் கூப்புடுவங்களா?
“உண்டியல் குலுக்காமல், துண்டு விரித்து நிதிக்கு வராமல்” எண்ட பேராதங்கத்துடன் எழுதி முடிப்பதும்………….
எனக்கிண்டா ஒண்டும் வெளங்குதில்ல
“40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… !”
தலையங்கம் ஒரு அனுமானம்.
“இலங்கையில் இருந்து ஒரு பேச்சாளரை அழைத்து, இலவசமாக நிகழ்ச்சி நடாத்தி, பணமே வேண்டாது விருந்தளித்து, உண்டியல் குலுக்காமல், துண்டு விரித்து நிதிக்கு வராமல் ஒரு நிகழ்ச்சியை வயன் இலக்கிய மன்றம் நடாத்தியது பாராட்டுக்குரிய பணி என்பதை மறுக்க முடியாது.”
ஆனால் முடிவுரைதான் சிகரம்.
எழுதியவர் பெயரற்ற இட்டுரைக்கு,எழுதுவோர் கருத்தும் கருவழிப்பாவது இயற்கையின் நியதியோ?
எல்லோருக்கும் வணக்கம்!
ஒட்டுமொத்த வன்னி யுத்தத்தில் தமிழ் இன அழிப்பும் போர் குற்றமும் இரு தரப்பாலும்நடந்துள்ளது. இதில் அதிகமானோர் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
பலரும் பல்வேறு சந்தர்ப்பத்திலும் பல்வேறு எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டதாக சொல்லி உண்மையான இழப்பை பொய்யாக்க போகிறீர்கள்.
நீங்களாவது உண்மையான இழப்பை ஆதாரங்களுடன் சொல்லுங்களேன்.
வன்னியில் முழங்காவில்; மல்லாவி; உடையார்கட்டு;தேவிபுரம்; ஈறாக மாத்தளன் வரை இடம்பெயர்ந்த அரசாங்க வைத்தியர்களாகவும் புலிகளின் வைத்தியர்களாகவும் பணியாற்றிய 5 வெவ்வேறு வைத்தியர்களுடன் கதைக்கநேர்ந்தது. இவர்கள் எல்லோரும் அரசியல் அடைக்கலம் கோரியவர்களாகவும்; இடைத்தங்கல்நாடுகளிலும் இருப்பதால் அவர்களுடைய பெயர்களை இப்போதைக்கு கூறமுடியாது.
இவர்களின் தகவல்ப்படி 2006 தொடக்கம் 2009மே மாதம் வரையான முழுக்காலப்பகுதியிலும் கொல்லப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக்கூட எட்டாது எனக்கூறினர். அத்துடன் திருகோணமலைக்கு காயப்பட்டு அனுப்பபட்ட மக்களின் எண்ணிக்கை 15ஆயிரம் வரையானது என்றும் மிகவும் திட்டவட்டமாக கூறினர்.
சும்மா வாய்க்கு வந்தபடி 40ஆயிரம் என்றுவிட்டு கொல்லப்பட்ட 4ஆயிரம் மக்களின் பெயரையாவது இனங்காணாமல் உண்மையான கொல்லப்பட்ட மக்களுக்கும் பரிக்காரம் கிடைக்காமல் போவதற்கான தேடலையே செந்திவேல் போன்றவர்களும் வெளி நாடுகளுக்கு வந்து புலிகளைப்போல் உசுப்பேற்றப்பார்க்கிறார். இந்த செந்திவேல் மக்கள் கொல்லப்படும் போது சிறிலங்காவில் ஒரு வெகுஜன போராட்டத்தை நடத்தியிருக்கலாமே? அப்போது என்ன செய்தவர்?
நான் சொன்ன மருத்துவர்களில் ஒருவர் 1987இல் புலிகளின் தலைவர் மணலாற்று காட்டுக்கு அடைக்கலம் தேடியபோது புலிகளின் தலைவரின் தனிப்பட்ட மருத்துவராக கடமையாற்றியவர். பின்னரும் அவர் புலிகளின் மருத்துவராகவும் மருத்துவ பட்டப்படிப்பை முடித்த, அரசமருத்துவ தகுதியும் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் தகவல் சரியானது என்பதே எனது கருத்து.
இதேபோல் கிறைசஸ் குறூப் வெளியிட்ட தகவலிலும் இதேயளவான எண்னிக்கையே குறிப்பிடப்படிருந்தது.
அதேபோல் 1948 தொடக்கம் 2003 வரை கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் கூட எந்த ஆதாரமுமில்லாத வெறும் வாய்ப்பாட்டு எண்ணிகையாகவே உள்ளதும் கவனிக்கதக்கது.
போரின் முடிவிற்கு வாரங்கள் முன்பே எடுக்கப்பட்ட விமானப் புகைப்படங்களை வைத்து, எழுந்தமான முறையில் மக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், 20000 சாவுகள் என The Times மதிப்பிட்டது. அதை யாரும் தர்க்கரீதியாக மறுக்கவில்லை.
அவுஸ்திரேலியாவிற்கு மீன்ட ஒரு ஐ.நா. அலுவலர் 30,000 என மதிப்பிட்டார்.
(ஐ,நா. செயலாளருடைய மகனுக்கு இலங்கையில் வியாபார நலன்கள் உள்ளதை உலகம் அறிய முதலே, சாவுகளை அவர் மிகக் குறைத்து மதிப்பிட்டதாக ஐ.நா. மனித உரிமை அமைப்புக்குள்ளிருந்து விமர்சனம் வந்தது.)
உங்கள் 5 மருத்துவர்கள் மருத்துவ மனைகள் தவிர்ந்த பிற இடங்களுக்குப் போயும் தகவல் சேர்த்தார்களா? (அரசாங்கத்துகுப் பயந்து கதையை மாற்றிய 5 வைத்தியர்கள் பற்றி எல்லாருக்கும் தெரியும்).
அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் வாக்காளர் பதிவில் இருந்தோரின் தொகையையும் மே முடிவில் அகதி முகாங்களிலும் சிறைகளிலும் இருந்தோர் தொகைகளையும் வெளியிடுவது தானே.
ஏன் செய்யாது?
எத்தனை படையினர் இறந்தனர் என்று ஏன் சொல்லாது?
செந்திவேல் அவர்களின் கணிப்பு, போரால் இறந்தோரின் எண்ணிக்கை ( = நேரடியாகக் கொல்லப் பட்டோர் + காயங்கள், பட்டினி, மருத்துவமின்மை காணமாக இறந்தோர் + படையினர்). அது 40,000ஐ மீறவுங் கூடும்.
அவர் போன்றோருக்குச் சிங்கள உயிர்களும் உயிர்கள் தான், புலிப் போராளிகளின் உயிர்களும் உயிர்கள் தான்.
புலிகள் மக்களைப் பிடித்து வைத்திருந்ததால் இழப்புக்கள் அதிகமாகின என்பது உண்மையே ஆனால் அதையே முதன்மைப் படுத்தி அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் பிரச்சாரம் செய்து ராஜபக்ச கொம்பனியை போர்க் குற்றத்திலிருந்து தப்பவைக்கப் பயன்படுத்துகின்றன. எனவே இந்த விடயத்தைப் பேசுகின்|ற போது மிகவும் அவதானம் தேவை.
ராஜபக்சவுக்குப் பயந்து புலிகளைப் பாற்றிய உண்மைகளைத் தமிழ் மக்களிடம் பொத்திப் பொத்தி மறைக்கப் போகிறோமா?
ராஜபக்ச தரப்பும் தன் போர்க் குற்றங்களை மறைக்கப் புலி ஆதரவாளர்களைச் சுட்டிக் காட்டுகிறது.
உண்மை இரண்டுக்கும் நடுவே புதைந்து போக வேண்டுமா?
கரியவன் நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறதென்றால் தீக்கோழி தலையை புற்றினுள்ளே வைத்துவிட்டு தான் முற்றாக மறைந்துவிட்டேன் என்று எண்ணுவதுபோல் உள்ளது.
முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளை மேற்குலகம் நன்றாகவே அறிந்துவைந்திருக்கின்றது ஆதலால் நாம் அதையிட்டு அலட்டிக்கொள்ளத்தேவையில்லை, உண்மைகள் நமக்கு பாதகமான விளைவை தந்தாலும் நாம் உண்மைவழியில் சென்றாலே நமது எதிர்காலமும் சந்ததியும் வளம் பெறும் இல்லையேல் நாம் நிலைப்பது சந்தேகமே.
யாழ்ப்பாண மக்களை இடம்பெயர நிர்ப்பந்தித்ததன் விளைவின் பின்பாவது மக்களை இடம்பெயர வைப்பதை நிறுத்தியிருக்கவேண்டும் உலகம் சாதாரணமாக எண்ணியது என்னவென்றால் புலிகள் கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப்பின்பு காடுகளுக்குள் போய் கெரில்லா முறையில் தாக்கத்தொடங்குவார்கள் என்பதே அதுதான் போராட்ட இயக்கங்கள் செய்திருக்கவேண்டிய ஒன்று ஆனால் நடந்ததோ வேறு,என்னைப்பொறுத்தவரை முடிந்தவைகளை மீண்டும் அலட்டிக்கொள்வது தேவையற்றது.
தமிழர்கள் , இதுவரை சிங்களவரை எதிர்த்து போராடியிருக்காவிட்டால் 🙂 , கடந்த 60 வருட காலத்தில் 2 இலட்சம் தமிழர்களது உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். மெத்தப்படித்த மேதாவிகளே , இதை ஏன் சொல்லாமால் விட்டீர்கள்..அப்டியே ரீ-வைண்ட் பண்ணி பண்டாரவன்னியன் போராடாட்டி , சங்கிலியன் போராடாட்டி, எல்லாளன் போராடாட்டி……. சொல்லிட்டு போங்கோவன், இதை எல்லாம் ஏன் விட்டீர்கள்:
“தமிழர்கள் சிங்களவரை எதிர்த்துப் போராடுவது” என்ற கருத்தே குழறுபடியானது.
விடுதலைப் புலிகளின் தலைமையினர் கூட அவ்வாறான சொற்பிரயோகத்தைப் பெருமளவும் தவிர்த்துள்ளனர். (பிரசார ஏடுகளின் கதை வேறு).
போராடுவது என்பது மூர்க்கத்தனமான வன்முறையல்ல. அப்பாவி மக்களைக் கொல்லுவதும் ஊரைவிட்டு விரட்டுவதும் விடுதலைப் போராட்டமல்ல.
சங்கிலியனோ, பண்டார வன்னொயனோ சிங்களவருக்கு எதிராகப் போரிடவில்லை. அவர்களுடன் நட்பாகவே இருந்தனர்.
எல்லாளன் -கெமுனு போராட்டம் இரு குறுநில மன்னர்களிடையே நடந்த ஆதிக்கத்துகான போர். அதற்கு இன, மத அடையாளங்கள் பிற்காலத்தில் வலிந்து வழங்கப்பட்டவை.
அண்ணெ ,கராம்மசாலா அவெர்களெ..சங்கிலியனும், வன்னியனும் சிங்களவரை எதிர்த்துப் போராடவில்லை என்பது எல்லாருக்குமே தெரிந்தவிடயம்.நான் சொல்ல வந்தது என்ன என்றால்,சங்கிலியனும், வன்னியனும் வெள்ளையர்களை எதிர்க்காமலும். எல்லாளன் ,சிங்கள்வரிடன் போராடாடிட்டியும் . இப்படியே தமிழர் தங்கள் வரலாற்றில் யாரையும் எதிர்த்துப் போராடாமல் இருந்த்தால் ,நிறைய தமிழர் உயிரைக் காப்பாறி இருக்கலாம் என்று. அது என்ன தலைவரை மட்டும் இவெர்கள் குற்றம் சொல்வது என்பதற்காகவே அப்படிக் கேட்டு இருந்த்தேன். எதிர்ப்புசக்தி இல்லாத மனிதர்களை நோய் இலகுவில் தாக்கிப் விடுகிறது.தமிழ் இனம் இன்றுவரை இப் பூமிபந்த்தில் வாழ்கிறது என்றால் , அது இதுவரை எல்லா எதிர்ப்புகளையும், எதிர்த்து, சமாளித்து வந்ததினாலேயே. தலைவர் சிங்களவரை எதிர்த்ததால்தான் இவ்வளவு தமிழர் அழிந்தார்கள் என்று பார்ப்பதை விட இன்று இவ்வளவு தமிழராவது மீதியாக இருகிறார்களெயென்றாவது சந்தோசப் படுங்கள்.இன்று வெளினாடுகளில் 10 இலட்சம் தமிழர் பாதுகாப்பக உள்ளனர் என்றால் .அதற்கு இந்தப் போராட்டமும் ஒரு காரணம் தான். வெளினாட்டில் உள்ள இஸ்ரேலியர்களால் ஒருநாள் இஸ்ரவேல் உருவாக்கப்பட்டது போல், வெளினாடு வாழ் தமிழரால் . ஒருநாள் தமிழர் தாயகம் உருவாக்கப்படலாம் அல்ல வா. தமிழர் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க முதல். 1951 இல் இருந்து கிடத்தட்ட 80 துகள் வரை எதனை தமிழர் இனக் கலவரங்களில் இறந்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
எல்லாளன்-கெமுனு சண்டை தமிழ்-சிங்களச் சண்டை அல்ல.
பச்சை இனவாதம் தான் அவ்வாறு ஒரு சித்திரத்தை வரைந்தது.
தமிழ்-சிங்களச் சண்டை சென்ற நூற்றான்டில் உருவாக்கப்பட்டது.
கெமுனு எல்லாளனை மரியாதையுடன் நடத்தியதும் எல்லாளன் ஆட்சியில் பவுத்தம் மதிக்கப் பட்டது போல கெமுனுவின் கீழ் சைவம் மதிக்கப் பட்டதும் பதியப்பட்ட, ஏற்கப்பட்ட வரலாறு.
கெமுனுவின் கீழ் வடக்கு சிங்களமயமாக்கப் படவில்லை.
எந்த மன்னரும் மக்களுக்காகப் போரிட்டதாக வரலாறு கிடையாது.
இதற்குமேல், பயனுள்ளதாகச் சொல்ல எதுவுமில்லை.
உங்கள் இஸ்ரேலியக் கனவுகளுடன் நீங்கள் வழலாம். Sweet Dreams
நல்ல குறிப்பு. இப்படியே போனால் தற்போது சீரழிந்துபோயுள்ள சீனா – றஷ்யாவிற்காக
போராடி இரந்துபோன லட்ஷக்கனக்கான தோழர்கலின் மரனஙக்லையும தவிர்த்திருக்கலாம்தானே? அப்படியானால் எல்லாம் வீன்தானே!
கு. செல்வன்
குனேந்திகி செல்வன்
பாசிசத்தை எதிர்த்துப் போராடினவர்கள், முழு உலகுக்காகவும் போராடினவர்கள் பற்றிச் சொல்கிறீர்களா?
சிறிலங்காவில் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்று அதற்காக பிரச்சாரம் செய்கின்ற ஒரே ஒரு சிங்கள இடதுசாரிக் கட்சி விக்கிரம பாகுவின் நவ சம சமாஜ கட்சியே என்கின்ற முற்றுமுழுதான எண்ணக்கருவோடு கனடியத் தேடகத்தின் அமர்விற்குள் நுழைந்ததாகப் பதிவிடுகிற மீராபாரதி செந்திவேலின் அரசியல் பார்வையைக் கேள்விக்குள்ளாக்குவதாக இங்கு பதிவிடுகிறார்.செந்தியை போன்ற பலரின் பேச்சுக்களைக் கேட்டுகேட்டுச் சலிப்படைந்து போனதாகச் சொல்கிறவர் விக்கிரபாகு அதற்கு விதிவிலக்கென்கின்றாரா??? உண்மையில் சொற்பொழிவுகளில் நீங்கள் கோபம் கொள்ளத்தேவையில்லை உங்களின் விக்கிரமபாகுவும் பேச்சில் வல்லவர்தான்.தவறு தம்மிடம் இல்லை. மாறாக தமக்கு வெளியில் தான் உள்ளது என்ற போக்கு புலிக்குத்தான் என்று மட்டுமென்றில்லை இப்படியாகப்பதிவிடுவோருக்கும் இருக்கிறது.
//சீனா, ரஸ்யா கம்யூனிச நாடுகள் என்கின்றன இவை எதற்காக ஆயுதங்களை வழங்கி தமிழரை அழிக்க துணை போயின.. இத்தகைய கம்யூனிசம் தேவையா ? என்கின்ற கேள்விக்கு இன்றைய சீனா – ரஸ்யா ஆகிய நாடுகளை நாம் கம்யூனிச நாடுகளாக கருதவில்லை. நாம் இலங்கைக் கம்யுனிஸ்டுக்கள் அவ்வளவுதான்// என்கின்ற பதிலே செந்தி அவர்கள் மேற்கத்தைய கம்யூனிசத்தில் வைத்திருந்த நம்பிக்கையின் சிதைவைப் பறைசாற்றுகின்ற வாக்கியங்கள்
பொருளியல் மற்றும் மானிட அறிவியல்ச் சிந்தனைகள் மனித வரலாற்றில் அன்றுமுதல் இன்று வரை காலத்திற்கேற்ப மாறி வளர்ந்து வந்திருக்கிறது. தனி மனிதர்களாலோ ஒரு குழுவாலோ உருவாக்கப் படுகிற பொருண்மியத் திட்டங்களோ,அல்லது அறிவியலோ எந்த அளவிற்கு உலக மக்களிற்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பது முக்கியமான ஒரு கேள்வி. மனிதர்கள் சிந்திக்கும் திறனுக்கு ஓர் எல்லையுண்டு {லெனினுடைய சிந்தனைக்கும் தான்}. நீண்டு நிலைத்த பொருளாதாரக் கொள்கைகளை, வாழ்வியற்கொள்கைகளை அவர்களால் எதிர்காலத்தில் மாறும் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கிட முடியுமா? பழைய மொந்தையில் புதிய கள் தருகிறோம் என்று கர்ச்சித்தபடி ஏறத்தாள 80 ஆண்டுகளாக உலகைத் தனது கைப்பிடியில் வைத்திருந்த கம்யூனிசக்கொள்கைகளும்,கார்ல்மார்க்சின் பொருண்மியக்கோட்பாடுகளும் இன்று கேள்விக்குறியாகிவருவதை நீங்கள் கண்டும் காணாதவர்கள் போலப் பாசாங்கு செய்து கொள்ளலாம். . ஆங்கிலேயருக்கு வாழ்வளித்த ஆடம்சிமித் கோட்பாடுகள் அழிந்து போய்விட்டன. புதிய புதிய சிந்தனைகள் மனித சமூகத்தின் மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதித்துப் பார்க்கப்படுகின்றன என்பது வேதனையான உண்மை.
Mr Senthivels right hand man Tholar Thambiah supported boycot of the 2005 presidential election, stating that Rajapkase is a leftist, and he would offer just solution to the tamils, Mr Senthivel supported this in their Sembathagai news, now he changes the tune, destruction of tamils started with the boy cot of the election,
2005 தேர்தலை ச் சும்மா பகிஷ்கரிக்க அல்ல, வாக்குச் சீட்டுக்களை பழுதாக்கும் படி புதிய ஜனநாயகக் கட்சி சொன்னது.
யார் வென்றிருந்தாஸ்லும் பேரினவாதம் இன ஒழிப்புப் போரில் தனது முடிவை மாற்றியிராது. இந்தியாவினதுநோக்கமும் அதுவே. அமெரிக்காவினதும் அதுவே.
புலிகளின் தவறு அரசியற் காரணம் கூறாமல் பணத்தை வாங்கிக்கொண்டு பகிஷ்கரிக்கச் சொன்னது தான்.
புதிய ஜனநாயகக் கட்சியில் யாருமே ராஜபக்சவை அதரித்துப் பேசவிலை. ஆதாரம் இருந்தால் எந்தச் செம்பதாகைப் பிரதியில் எங்கே என்று சொல்லுங்கள்.
ராஜபக்ச சோஷலிஸ்ட் என்று எங்காவது சொல்லியிருந்தாலும் ஆதாரத்தைக் காட்டுங்கள்.
கூசாமல் பொய் சொல்லுவது ஆற்றாமையின் வெளிப்பாடு.
. இந்தியாவினதுநோக்கமும் அதுவே. அமெரிக்காவினதும் அதுவே,’
உமக்கு எப்படி தெரியும்,
எனது விளக்கங்களைத் தருகிறேன் .
உங்கள் கூற்றுக்களுக்கான ஆதாரங்களைச் சொல்லுவீர்களா?
இந்தியா அமைதிப் பேச்சுக்களை குழப்புவதற்கு எடுத்த முயற்சிகள் இப்போது பரகசியம்.
புலிகளை அழிக்க எடுத்த முயற்சிகள் பற்றிநான் மேலும் விளக்க வேண்டுமா?
அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைச் செலுத்தியதும் தென்னாசியப் பிரதேசத்துக்குப் பொறுப்பான அமெரிக்க அரச செயலர்களதும் இலங்கைக்கான தூதுவர்களதும் அறிக்கைகள் விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைகளின் போது பலவீனப் படுத்தும்நோக்குடையவையாக இருந்தமை அப்பொதே சுட்டிக் காட்டப் பட்டது.
புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்ற கருத்தும் அமெரிக்காவால் 2004க்குப் பின் பகிரங்கமாகவே கூறப்ப் பட்டது.
இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்போது,தயவு செய்து எந்தச் செம்பதாகை என்று சொல்லுவீர்களா?
ஸன் பேப்பரை மட்டுமே படித்து வைற்வான் சிந்தனையில் கிடக்கும் வேர்கிங் கிளாஸ் வெள்ளக்காரன் மாதிரி புலிகளூம் ஏ.கே யை மட்டும் பிடித்து எதையும் சிந்திக்காதும் அவர்களது தலைவர் பொன்னியின் செல்வன் படித்து தன்னை சோழனாக கனவு கண்டு கிடந்ததும் மக்கள முள்ளீவாய்க்கால் வரை இழுத்து வந்தது.
ஸன் பேப்பரை மட்டுமே படித்து வைற்வான் சிந்தனையில் கிடக்கும் வேர்கிங் கிளாஸ் வெள்ளக்காரன் மாதிரி புலிகளூம் ஏ.கே யை மட்டும் பிடித்து எதையும் சிந்திக்காதும் அவர்களது தலைவர் பொன்னியின் செல்வன் படித்து தன்னை சோழனாக கனவு கண்டு கிடந்ததும் மக்கள முள்ளீவாய்க்கால் வரை இழுத்து வந்தது.
what else one has to expect, can any one praise tigers, for their past action, while negotiating, they were killing civilians who oppose tigers, and smugling arms while going around on peace mission, So surly it had be condemned,
எந்தச் செம்பதாகை?
velu, இன்னமும் உங்களுக்குத் தகவல் கிடைக்கவில்லையா?
ஒரு பயனுள்ள தகவல்:
செம்பதாகை என்ற பத்திரிகை 1992 அளவில் முற்றாகவே நின்று விட்டது.
சென்ற ஆண்டு முதல் அது மும்மாத இணையத்தளப் பத்திரிகையாக வருகிறது.
அதில் தம்பையா எதையும் எழுதி நான் காணவில்லை.
இதனால் தான், வேலு,
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேன்டும் என்கிறார்களோ?
திரு கரம் மசாலா அந்த இணய தள முகவரியைத் இங்கு இணக்க முடியுமா ப்ளீஸ்.
http://www.ndpsl.org/
செம்பதாகை இலங்கையில் வெலிவர்ருகின்ரது
திரு கரம்மாசாலா குறிப்பிட்டதுபோல் செம்பதாகை இணையத்தள பத்திரிகையாக மட்டுமே வெளிவருகிறது. பார்க்க உங்கள் இடுகைக்கு மேலேயுள்ள இணையத்தள முகவரியை_ ஆனந்
Their regular monthly paper is Puthiyapoomi , which is available http://ndpsl.org/puthiyapoomi.php
வேலு சார்,
இலங்கையில் செம்பதாகை வருகின்றது என்றால் தம்பையாவின் நீங்கள் சொன்ன கூற்று எந்தச் செம்பதாகையில் வந்தது என்று தான் கேட்டேன்.
பதிலையே காணோமே!
இலங்கையில் தான் இருக்கிறீர்கள் என்றுநினைக்கிறேன்..
Another grave error was the boycotting of elections in 2005 that brought hardliners to government in Sri Lanka. As a general rule, people should never ever be asked to refrain from voting in an election under any circumstances. The benefits of election boycotts, such as refreshing community spirit and as gestures of dissatisfaction, are small and ephemeral. They are far outweighed by the dangers as well as the real and lasting costs of handing the power to a less amenable adversary.
வாக்களிப்பது எவ்வளவு தூரம் சனநாயக உரிமையோ, அதே அளவுக்கு மக்கள் முன் பெறுமதியான ஒரு தெரிவும் இல்லாத போது, தெரிவு இல்லாததைப் பகிரங்கமாகக் கூற ஒரு வழி பகிஷ்கரிப்பது.
அது ஒரு சனநாயக உரிமை. அந்த உரிமையை மக்கள் பலநாடுகளில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தி உள்ளனர். பங்ளாதேஷ் ஒரு அண்மைய உதாரணம்.
தொடர்ந்தும் வாக்குக்களைப் பெற்று வென்றோரால் ஏமாற்றப்படும் மக்களுடைய தெரிவுகளில் ஒன்று பகிஷ்கரிப்பு.
வாக்குச் சீட்டுக்கள் களவாடப்படுக்ற வாய்ப்பிருந்தால் வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கல் இன்னொரு வழி.
இன்னமும் முன்னேறிய நிலையில் வாக்குச் சீட்டுக்களை திட்டமிட்ட முறையில் அனைவரும் ஒரே விதமாகப் பழுதாக்கலாம்.
வாக்களிக்குமாறு கட்டாயப் படுத்தும் நாடுகள் உள்ளன. அவை சனநாயக நாடுகளல்ல.
It appeared in the sembathagai just before the election, but I dont remember the exact date,
அதே அளவுக்கு மக்கள் முன் பெறுமதியான ஒரு தெரிவும் இல்லாத போது, தெரிவு இல்லாததைப் பகிரங்கமாகக் கூற ஒரு வழி பகிஷ்கரிப்பது.
வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கல் இன்னொரு வழி.
whatever the idea , the result was the same, it brought Rajapkse to power,
They are far outweighed by the dangers as well as the real and lasting costs of handing the power to a less amenable adversary.
I admire tamil leaders, like Douglas and late Mr Prabakaran, and the leftist tamil and Sinhala parties, dispite their differences they were united in bringing Rajapakse to power, what a unity,
புதிய ஜனநாயகக் கட்சிக்கு இந்த இணையத்தளத்தில் சொட்டை சொல்லிவந்த ஒரு பட்டாளமே இருந்ததே. அவர்களாவது உங்களுக்கு உதவ மாட்டார்களா?
தன்னால் ஆதாரங்களைத் தர இயலாத போது தான் சொன்னது தவறாயிருக்கலாம் என்று நேர்மையான ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பார்.
உங்களிடம் நான் அவ்வாறு எதிர்பார்க்கவில்லை.
உங்கள் அரசியல் விருப்பங்களைப் பற்றி எனக்கு ஒரு விருப்பு வெறுப்புமில்லை. உங்கள் பொய்கள் தான் கவனத்துக்குரியன.
மீண்டும் உங்கள் தகவலுக்காக:
2005 தேர்தலுக்கு முதலாக ஒரு செம்பதாகையும் பிரசுரிக்கப் படவில்லை. (நீங்களே இரகசியமாகப் பிரசுரித்திருந்தாலொழிய).
செம்பதாகை 1992 அளவில் சஞ்சிகை வடிவில் இறுதியாக அச்சில் வந்தது. 2009 ஈற்றில் இணையத்தளத்தில் வந்தது.
whether you accept it or not, it was published, most probably to explain parties position during election , also leaflets were distributed in the same format as sembathagai, the truth is
Douglas and late Mr Prabakaran, and the leftist tamil and Sinhala parties, got united dispite their differences and brought Rajapakse to power, a less amneable enemy
WHAT A UNITY
velu sir we like to read that sem padagai please collect and keep that in your home or office we collect it soon as possible we red that notice and we are reading puthiya poomi wel as you try to find out that sem padagai segappu sattai pottathage koorikkondu suththi thiriyum anaivarum communisttugalum alle therudalai pagisgariththawargal mahindawin attkalum alla unp yil pottu ettawargal ellorum unp um ellai enbadu thangal ariyadada
வேலு சார் இது ஒன்றும் “whether you accept it or not” விஷயமல்ல.
புதிய ஜனநாயகக் கட்சி ராஜபக்சவைப்பற்றிச் சொன்ன அனைத்தும் பதிவில் உள்ளன. தேர்தல் பற்றிய நிலைப்பாடுகளும் பதிவில் உள்ளன.
நீங்கள் சொன்னது போல தம்பையாவும் சொல்லவில்லை அவரது கட்சியும் சொல்லவில்லை. மலையகத்தில் உள்ள எந்தக் கட்சித் தோழரும் சொல்லவில்லை.
உங்களை விட யாருமே நீங்கள் சொன்னதை ஏற்று ஆதாரம் எதையும் இன்னமும் தரவில்லை, தரவும் இயலாது. ஏனெனில் நீங்கள் சொன்னது கலப்படமற்ற பொய்.
செம்பதாகை அச்சில் வந்து 18 ஆண்டுகள் என்று பலரும் சொன்ன பின்பும் அது 2005இல் வந்தது என்று பிடிவாதம் பிடிக்க whether you accept it or not ஒரு கோயபெல்ஸுக் குஞ்சுக்குத் தான் முடியும்.
அறூபதுகளில் சாதியெதிர்ப்பு போராட்டங்களில் தலைமையேற்ற இவர்களால், பின்னர் உருவான தேசிய விடுதலைக்கு தலைமை தாங்கமுடியாமல் போனதற்கு காரணம், இவர்களின் அரசியல்நிலைபாட்டு பலவீனமே ஆகும்.
இது இவர்களின் தீவிர வரலாற்று பிழையாகும். இதை பற்றி இவர்களிடம் ஆழமான மீளாய்வு இன்று வரை இல்லை.
எனவேதான், இன்றும் தனிநாட்டுரிமை கோரிக்கையை கண்டு அலறுகிறார்கள்.ஈழவிடுதலைக்கான போராட்டம் இன்றுநசுக்கபட்டதை போன்று, அதன் மற்றொரு கூறான சிங்களபேரினவாதம் இல்லாமல் போய்விட்டதா? இல்லையே. உச்சாணி கொம்பில் அல்லவா இருக்கிறது. ஈழ தமிழர்களையும்,முஸ்லீம்களையும்,மலையக தமிழர்களையும் சிங்களபேரினவாதத்திற்குள் உட்செரித்துக் கொள்ளும் வேலையில் அல்லவா மும்முரமாக உள்ளது.
இலங்கையில் உள்ள சிறுபான்மையினரின் முன் இரண்டு வழிகளே உள்ளன. தங்கள் விடுதலைக்கு தொடர்ந்து போரட்டத்தை முன்னெடுப்பது அல்லது சிங்களபேரினத்திற்குள் கரைந்து விடுவது.
இன்றைய கட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் பெரும் ஆற்றலை பயனுள்ளதாக மாற்றுவது என்பதுதான். அது பொதுவாக்கெடுப்பு போன்ற அரசியல் கோரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும். சரியான அரசியல்,அமைப்பு முன்னெடுப்புகள் இல்லாதபொழுது, சந்தேகத்திற்கிடமான நாடுகடந்த அரசுகள் வரலாற்றில் தவிர்க்கமுடியாதது. சரியானதற்கான இருத்தலே தவறானதை இல்லாமல் செய்யும். ஈழ மார்க்சியர் இந்த வரலாற்று உண்மையை புரிந்து கொள்வது உடனடி தேவையாக உள்ளது.
அவர்கள் தான் பல்வீனர்கள். அவர்களிடம் தான் கொள்கை போதாது.
அவர்களை விடுங்கள்.
ஐயா, உங்களைப் போன்ற விடயம் தெரிந்தோர் வழி காட்டியிருக்கலாம் தானே!
எப்படி ஐயா எல்லாரும் போய் ஒரு முட்டுச்சந்தில்நின்றார்கள்?
முட்டுச்சந்தா அது? முள்ளிவாய்க்கால் இடுகாடல்லவா!
மாறிப் போன கூட்டம் எங்கே நிற்கிறது? கொலைகாரர்களோடல்லவா!
ஏனையா இன்னமும் தற்கொலைப் பாதையையே காட்டுகிறீர்கள்?
இவர்கள் அறூபதுகளில் சாதியெதிர்ப்பு போராட்டங்களில் தலைமையேற்று அந்தப் போராட்டத்தை வெற்றிக்கொள்ளக் கூடியதாக இருந்ததது
தனிநாட்டுரிமை கோரிக்கையை ஆயுதம் ஏந்தி உலக வல்லரசுகளின் ஆசியுடன் தோல்வி கண்ட புலிகள் மக்களை அநாதைகளாக்கி கொன்று குவித்ததை விட சாதித்ததென்ன?சித்தன் சாதிக்கப் போவது என்ன?
சாதிப் பிரிவினை தமிழர்களிடம் மட்டுமா இருந்தது?
சிங்களவர்களிடம் இருக்கவில்லையா?
ஆனால் வரலாற்றில் நடந்தது என்ன?
சிங்களவர்களால் போஷிக்கப்பட்ட பல்வேறு இடதுசாரிச் சிந்தனையாளர்கள், தமக்குள்ளிருக்கும் சாதீய பாகுபாட்டை ஆயுதப் போராட்டம் மூலம் தீர்வு காணவில்லை.
மாறாக அறுபதுகளில் சாதீய ஆயுதப் போராட்டத்தை, தமிழர்களிடம் கொடுத்து விட்டு,பின் எழுபதுகளில் பேரினவாத ஆயுதப் போராட்டத்தை தாம் எடுத்துக் கொண்டார்கள்.
இனவாத அரசியலிலும்,இடதுசாரி அரசியலிலும் தோற்றுப் போனவர்கள் தமிழர்கள்தான்.
இரவல் சிந்தனைகளும்,இடறிப் போன சிந்தனைகளுமாக நமது காலங்கள்.
மறு
படியும் செக்குமாட்டுச் சிந்தனைகளுடன்……..
நாடுகடந்த தமிழ் ஈழக்கனவும் செக்குமாட்டுச் சிந்தனைகளுடன்……..
;
தீண்டாமை போராட்டம் மக்களை பலி கொடுக்கவில்லை தமிழ் ஈழ போராட்டம் மக்களின் உயிருக்கு அல்லவா? வேட்டுவைத்தது
சாதி முறை தென்னாசியா முழுதிலும் உள்ளது. சாதி ஒரு சமூகப் பிரிவாகச் செயற்பட அகமண முறை முக்கிய காரணம்.
தமிழருள், உற்பத்தி சார்ந்த சுரண்டலாகவும் ஏற்றத்தாழ்வின் அடிப்படையிலான ஒடுக்குமுறையாகவும் தீண்டாமைக் கொடுமையாகவும் சாதியம் இருந்து வந்தது.
நாடோடிகளும் சமூக நீக்கம் பெற்ற றொடியாக்களும் சிங்களச் சமூகத்திற்குப் புறம்பானவர்களாக (ஆனால் சிங்களம் பேசுவோராக) உள்ளனர்.
ஒரு சிங்களக் கிராமத்திற்குள் தீண்டாமை என்று ஒன்று கிடையாது. சாதி அடிப்படையிலான உற்பத்தி அடிப்படை கிடையாது.
சில சேவைத் தொழில்கள் சில சாதியினருக்குரியனவாகத் தொடர்ந்தும் உள்ளன.
சிங்களவரிடையே சாதி ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. பாகுபாடுகள் உள்ளன.
சமூக உறவுகளில் அவற்றின் முக்கியத்துவம் குறைவு. சில சாதிகள் கொலனிய ஆட்சிக் காலங்களில் கண்ட எழுச்சி அதற்குப் பங்களித்தது.
தமிழரிடையே ஆதிக்கச் சாதியினர் பிற் சமூகங்களுக்கு அவ் வாய்ப்பை மறுக்க முடிந்தது. எனவே சாதியத்தின் கொடுமை தமிழரிடையே –முக்கியமாக வடக்கில்– அதிகமாகவே இருந்து வந்தது.
நாம் இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.
நமது பார்ப்பனிய மதம், வர்ணாசிரம அடிப்படையிலானது. கோவிலிலேயே சாதி தொடங்குகிற்து.
பெளத்தம் கொள்கை அளவில் சாதி ஏற்றத் தாழ்வை மறுப்பது.
சாதியத்துக்கு எதிரான் போராட்டம் எப்போதுமே ஒடுக்கப் பட்டோரதும் உயர் சாதியினர் எனப்பட்டோரில் முற்போக்கான (இடது சாரிகள் மட்டுமல்ல) பகுதியினராலும் முன்னெடுக்கப் பட்டு வந்தது.
தமிழ்த் தேசியவாதம் என்றுமே சாதியத்தை எதிர்த்துப் போராடவில்லை. எனவே தான் தீன்டாமை நடைமுறைகள் புலிகளின் கீழும் தொடர முடிந்தது. தாழ்த்தப்பட்டோர்களே போராளிகளாக வேண்டிய ஒரு நிலையில் (உயர் சாதியினரில் வசதியுள்ள பலரும் பிள்ளகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிய நிலையில்) தாழ்த்தப்பட்டோருக்குச் சில விட்டுக்கொடுப்புக்கள் இருந்தாலும். சாதி முறை அத்தனை இன்னல்கள் நடுவிலும் பாதுகாப்பாகவே இருந்தது.
சாதியத்துக் கெதிரான போராட்டத்தில் மக்களே போராட்டத்தை முன்னெடுத்தனர். கண்மூடித்தனமான கொலைகள் நடக்கவில்லை. அடக்குவோரின் வன்முறை அடக்கப் பட்டோரின் வன்முறையால் எதிர்கொள்ளப் பட்டதே ஒழிய மாற்றுக் கருத்துடைய எல்லார் மீதுமான வன்முறையாக அமையவில்லை.
ஒற்றுமை வேற்றுமைகளைக் கவனமாக ஆராயாவிடின் கயிறும் பாம்பும் ஒன்றாகவே தெரியும்.
தமிழர்கள் தமது குறுகிய இனவாத அரசியலில் மட்டுமே தோற்றுப் போனார்கள்.
ஒரு சமூகமாக அவர்கள் இடதுசாரி அரசியலை இன்னமும் முன்னெடுக்கவில்லை.
முற்போக்கான தேசியம் ஒன்றுக்கான இடைவெளி நிரப்பப்படாமல் உள்ளது. அதைப் பற்றி யோசிப்போமா?
தொழில்பிரிவு என்பது ஆட்சிமுறை சம்பந்தப்பட்டதும்,தீண்டாமை என்பது ஆட்சி முறையின் அங்கமான மதம் தொடர்பானதும் ஆகும்.
இது உலகெங்கினும் இன்றும் பல்வேறு வகையில் ஒடுக்குமுறைக்கு உதவியாகவே இருக்கிறது.
இலங்கை இடதுசாரியம் சிங்களபேரினவாத வளர்ச்சிக்கு மகுடம் சூட்டியது மட்டுமல்ல,அவர்களின் உள்முரண்பாடுகளைக் களையவும்,தமிழர்களைப் பிரித்தாளவும், தமிழினப்படுகொலைக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது.
கசப்பான வரலாற்றைத் தந்த இடதுசாரியம் இனியும் தமிழ் மக்களிடம் எடுபடாது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டமும்,அதன் தேசிய வளர்ச்சியும், ‘நிறுவனமயப்பட்ட புதிய மதம் ஒன்றை உருவாக்குதலிலே எம்மின ஒற்றுமையும்,
சிங்கள பவுத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளலும் நிகழலாம்.
இருக்கின்ற இடதுசாரியம் எம்முள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது என் அனுபவ சிற்றறிவு.
சிந்தனையாளர்களான செந்தில்வேல் முதல் கரம்மசாலா,மாயாவியின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
இப்போதைக்கு உங்களை உங்களின் சிற்றறிவுடனேயே விட்டு விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
முதலாளித்துவத்திட்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டி ,அதநுடாக பாட்டாளிமக்க்களின் ஆட்சி அதிகாரத்தை கொண்டுவருவதே சோ
சலிசப்புரட்சியாகும்.உலகநாடுகளின் சந்தையாக இலங்கை மாறிவரும் இக்காலப்பகுதியில்,அங்குள்ள தமிழ் சிங்கள தொழிலாளர்களை
அணிதிரட்டி சொசலிசப்புரட்சி செய்வதா?அல்லது கூர்மை அடைந்துள்ள இனமுரன்பாட்டை கையிலெடுத்து தேசிய விடுதலைபோராட்டம் செய்வதா?இதில் எது
போராட்டத்திற்கு உகந்தவளி .இன்றைய உலக ஒழுங்கில் கருத்து அரசியலை வழிநடத்தவில்லை .மாறாக நலங்களே அரசியலை வழிநடத்துகிறன.
வர்க்கப்போராட்டத்தில் இனச்சாயத்தையும் கொஞ்சம் கலந்து விட்டால் தான் புலம்பெயர்
தமிழருக்கு கொஞ்சம் இங்கிதமாக இருக்கும்.அதைத்தான் தோழர் செந்தில்வேல் விளங்கிக்
கொண்டாரோ! தெரியவில்லை.
தோழர் செந்தில்வேல் இன்றைக்கு நேற்று முளைத்த மனிதன் அல்ல.நாற்பது வருடங்களுக்கு மேலாக பாட்டாளிவர்க்க அதிகாரத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்த
பெரும்தகை.கடந்து போன உள்நாட்டுயுத்தம் எல்லோருக்கும் ஒரு குழப்பமான முடிவுக்கு
வர நிர்ப்பந்திருக்கிறது.கம்யூனிஸ்டுகள் தம்மை விமர்சனம் செய்யத்தயங்காதவர்கள்.அந்த
வகையில் அவர்கள் மீணடெழுந்து வந்து “இலங்கைதொழிலாளர்கட்சி”யை உருவாக்குவதற்கோ-துணைநிற்பகோ முன்வருவார்கள் என்று நம்புவோம்.
ஒரு சிறு திருத்தம்: கடந்துபோன பாரிய தமிழர் படுகொலை பலரை ஒரு குழப்பமான முடிவுக்கு கொண்டுவந்துள்ளது உங்களைத் தவிர. உள்நாட்டுயுத்தம் யார் யாருக்கு எதிராக நடந்தது? இதுவரை நீங்கள் எழுதியதெல்லாம் பயங்கரவாததைப் பற்றியே இருந்ததே! இப்போதென்ன புதிதாக உள்நாட்டுயுத்தம்?
இது கூடாத் தெரியாமல் தெளிவில்லாமலா கருத்துச்
சொல்லக் கொண்டிருக்கிறீர்கள் சூரியா!
இவ்வளவு காலம் நடந்த உள்நாட்டுயுத்தம் தமிழ்-சிங்கள இனவெறியுடன் இலங்கை உழைப்பாளர்களுக்கு மேல் நடத்தப் பட்டது.அதன்
செலவுதொகை கணக்குகளும் அவர்களுக்கு மேல் தான் சுமத்தப்பட்டிருக்கிறது.
இதை புரிந்து கொண்டால் மட்டுமே ஏதாவது ஆக்கமான காரியங்களில் ஈடுபடமுடியும்.இல்லையேல்..வட்டுகொட்டை. முள்ளிவாய்கால் அமெரிக்ககப்பல் ஐரோப்பிய கப்பல் நாடோடித்தமிழ்ழீழம் என்று தான் காலம் கடத்தமுடியும்.இதை முதல் மூளையில் பதிய வையுங்கள்.
உங்கள் மகிந்த தனது சொந்தச் செலவில் உலகிலேயே மிகப்பெரிய கிரிபத் உருவாக்கி பெரும் சாதனை படைத்துள்ளார். இப்படி ஏழை மக்களுக்கு தன் பாட்டன் சொத்தையே வீணாக்கும் மோடருக்கு உங்கள் அறிவுரை பிரயோசனமாக இருக்கும்.
இருந்தும் நீங்கள் சொல்வதில் ஏதும் நலமானதை பிரித்தெடுத்து என் மூளையில் பதியவைக்க முயற்சித்தேன், ஆனால் என் மூளை சொல்கிறது, ஏய் குப்பைகளை பதியவைக்க இங்கே இடமில்லையெனெ.
Soorya,
ஏனோ தெரியவில்லை எப்போதோ பார்த்த சில கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. நீங்கள் என்னநினைக்கிறீர்கள்?
அவனை
ஒரு கலந்துரையாடலின் போது சந்தித்தேன்
…
ஆணாதிக்கம் வர்க்கச் சுரண்டல் ஒடுக்குமுறை
போராட்டம் புரட்சி சோஷலிசம்…
பொதுவுடைமைப் புதுவுலகம் பற்றியும் பேசினான்
பெண்களின் பிரச்சனைகள் …
தொடர்பாகப் பேசப் பெண்கள் வாய் திறந்த போது
அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்றான்
…
புரட்சி வந்தவுடன் எல்லாமே சரியாகிவிடும் என்று
மேசையிலே ஓங்கி அடித்து உரக்கக் கூவினான்
…
அவன் சொல்லும் புரட்சி வந்தபின் எல்லாமே சரியாகிவிடும்.
மாத்விடாயும் பிரசவ வலியுங் கூட இல்லாது போய்விடும்
ஏனென்றால்
அவன்
எல்லாம் தெரிந்தவன்.
சரியான நேரத்தில் பொருத்தமான கவிதை!
சிலர் தான் சொல்வதுதான் சரி, மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருகணம் பொறுக்கமுடியாதவர்கள் மேசைமேல் ஏறிநின்று குரல்கிழியக் கத்துகிறார்கள், தன்னைச் சுற்றியிருப்போர் எள்ளிநகையாடுகின்றதையும் கவனியாது.