இலங்கை இராணுவம் உலக அளவிலான பல்தேசிய நிறுவனங்களதும், மாபியா பாணியிலான பாதுகாப்பு நிறுவனங்களதும், ஏகாதிபத்திய நாடுகளதும் கூலிப் படையாகச் செயற்படுகின்றது என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் அடியாள் படைகள் போன்று செயற்படும் பல்வேறு பாதுகாப்புப் படைக் குழுக்கள் தோன்றியுள்ள்ன. தனியார் பாதுகாப்புப் படைகள் என்றால் குறி-சுடும் சிறிய ரக துப்பாக்கிகளையும், கத்தி பொல்லு போன்ற பாரம்பரிய ஆயுதங்களைம் கொண்ட கூலிக்கமர்த்தப்பட்ட சில தனி நபர்கள் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தரைப்படை, கடற்படை, விமானப்படை என்று பாரிய ஆயுதத்தளங்களையும், ஆயிரக்கணக்க்கான பயிற்சிபெற்ற இராணுவத்தினரையும் கொண்ட ஒரு அரசின் இராணுவப்படைக்கு ஒப்பானது.
இந்த இராணுவப் பாதுகாப்பு விவகாரத்தில் பிரபலமான நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதிலும் தெற்காசியாவில் பாதுகாப்பு வியாபாரத்தில் முன்னணி வகிக்கும் நாடு இலங்கை. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், இனப்படுகொலையைத் திட்டமிட்டவருமான கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலில் இரண்டு தனியார் நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன.
பிளக்வோட்டர்(Blackwater)
இவை அமெரிக்காவின் பிளக்வோட்டர் (Blackwater) என்ற தனியார் இராணுவ நிறுவனத்தை முன்மாதிரியாகக்கொண்டு அமைக்கப்பட்டது.
பிளக்வோட்டர் 1977 ஆம் ஆண்டு எரிக் பிரின்ஸ் மற்றும் அல் கிளார்க் ஆகியோரால் சிறிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் வட கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் தனியார் பல்தேசிய நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் அடியாள் படைகள் போன்று செயற்பட்டுவந்த்த பிளக்வோட்டர் 2002 ஆம் ஆண்டு இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர் இராட்சத நிறுவனமாக வளர்ச்சியடைந்தது.
இந்த நிறுவனத்தின் இன்றைய உப தலைவர் கோபர் பிளக், 2002 ஆம் ஆண்டில் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்ட போது அமரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இன் பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர். 9/11 இற்குப் பின்னர் பிளக்வோட்டர் சி.ஐ.ஏ உயர் அதிகாரிகளின் வீடு போன்று மாறிவிட்டது என்கிறார்.. சி.ஐ.ஏ இன் தூர கிழக்கு நாடுகளுக்கான உதவி நெறியாளர் கூட பிளக்வோட்டரில் பணியாளராக இணைந்துகொண்டார்.
கலிபோர்னியாவில் 7ஆயிரம் ஏக்கர் பரப்பில் தனது பயிற்சி முகாமை இத்தனியார் இராணுவ நிறுவனம் கொண்டுள்ளது. அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரங்கள், குளங்கள், ஏரிகள், உள் வெளி மையங்கள், உந்து பாதைகள் போன்றன காணப்படுகின்றன. அது உலகிலுள்ள மிகப்பெரிய இராணுவ தனியார் இராணுவப் பயிற்சி முகாம் என அந்த நிறுவனம் கூறுகிறது.
ஈராக்கை ஆக்கிரமித்த அமரிக்கா ஈராக்கில் தனது சிவில் நிர்வாக அதிகாரியான போல் பிரிமரின் பாதுகாப்பிற்காக 2003 ஆம் ஆண்டு பிளக்வோட்டருடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதுவே இந்த நிறுவனத்தின் முதலாவது மிகப்பெரும் ஒப்பந்தமாகும். 11 மாதங்கள் அவரைப் பாதுகாப்பதற்காக 23 மில்லியம் அமரிக்க டொலர்களை இந்த நிறுவனம் கூலியாகப் பெற்றுக்கொண்டது.
உலகின் மிகப்பெரிய அமரிக்க தூதரகமான ஈராக் தூதரகம் உட்பட பல்வேறு தூதரகங்களைப் பாதுகாப்பதற்காக பிளக்வோட்டருக்கு 320 மில்லியன் டொலர்கள் 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஈராக்கில் பிளக்வோட்டரைச் சேர்ந்த நான்கு ஒப்பந்தக்காரர்கள் இஸ்லாமியக் குழுக்களால் கொலைசெய்யப்பட் டு யூபிரதிஸ் பாலத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டனர். இக்கொலை தொடர்பான விசாரணைகளுக்கு பிளக்வோட்டர் இடையூறாகவும் தடையாகவும் இருந்தது என்று ஊடகங்கள் கூறின. பின்னதாக 2005 ஆம் ஆண்டில் பிளக்வோட்டரின் உலங்கு வானூர்தி ஒன்று சுட்டுவிழுத்தப்பட்டதில் ஈராகில் தலைநகருக்கு அருகாமையில் 8 ஒப்பந்தக்காரர்கள் கொலையுண்டனர்.
2009 ஆண்டு பிப்ரவரி மாதம் எக்ஸ் ஈ (XE) என்று பெயர் மாற்றம் செய்துகொண்ட பிளக்வோட்டர் 2010 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போலிஸ் படையை உருவாக்குவதற்கான ஒப்பந்ததத்தைப் பெற்றுக்கொண்டது. இதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தானில் பல்வேறு அளவில் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டுவந்ததது.
அரசுகளையும் அதன் பாதுகாப்பையும் மக்களின் வரிப்பணத்தில் கோரமான கொலைகார அமைப்புக்களுக்காகத் தனியார் மயப்படுத்தும் பிளக்வோட்டர் போன்ற நிறுவனங்களின் ஊற்றுமூலம் அமரிக்க அரச பயங்கரவாதத்திலிருந்தே தோன்றியது.
இனக்கொலை அரசின் தனியார் இராணுவத்திற்கு ஆயுதங்கள்…
கடந்த வருடம் (2012) இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் விற்பனைசெய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் 3மில்லியன் ஸ்ரேர்ளின் பவுண்ஸ் பெறுமானமுள்ள ஆயுதங்கள் இலங்கை அரசிற்கு விற்பனை செய்யப்பட்டன. பிரித்தானியாவில் எக்சிட்டர் பகுதியைத் தளமாகக்கொண்ட ஆயுத விற்பனை நிறுவனம் 1000 தாக்குதல் ஆயுதங்களை விற்பனை செய்ததாகப் பின்னர் கூறப்பட்டது.
அதே வேளை சோமாலிய கடற்கொள்ளையர்களை எதிர்கொள்வது என்ற அடிப்படையில் பிரித்தானியாவில் 100 மில்லியன் பவுண்ஸ் பெறுமானமுள்ள பல பாதுகாப்பு நிறுவனங்கள் காளன்கள் போல முளைவிடத் தொடங்கின.
இந்துசமுத்திரத்தில் இலங்கை உட்பட வெறும் நாடுகளில் இயங்கும் கடல்வழிப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இலங்கை கிரிமினல் இராணுவ அமைபு வரப்பிசதமாகும். “கப்பல் சொந்தக்காரர்கள் பிரித்தானியவைத் தளமாகக்கொண்ட பாதுகாப்பு நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் கடற்பரப்புக்களில் அவர்கள் பாதுகாப்பை உணர்கிறார்கள்” என்று கூறுகிறர் போல் ஜிப்சன். இவர் முன்னைனாள் பிரித்தானிய பாதுக்காப்பு அமைச்சின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் நெறியாளரும் இன்று கொம்பிளக்ஸ் என்வாயர்மென்D குறூப் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரியுமாவர்.
இலங்கைக்கு வழங்க்கப்பட்ட ஆயுதங்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் சேர்ந்தது தான் என்று தகவல்களை ஆதரம்காட்டி கார்டியன் நாழிதழ் செய்திவெளியிட்டது.
வழங்க்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தில், ஆயுதங்கள் கடற்கொள்ளையைத் தடுப்பதற்காகவும் என்று அடிக்குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்த நாழிதழ் குறிப்பிடுகிறது.
ஆயுத விற்பனைக்கு எதிரான பிரச்சாரம் என்ற தன்னார்வ நிறுவனத்தின் பேச்சாளர், கடற்கொள்ளைக்கு எதிரானது என்ற அடிப்படையில் விற்பனை செய்யபடும் ஆயுதங்கள் இலங்கையின் உள்ளேயும் பயன்படுத்தப்படலாம் என்று துயர்படுகிறார். கிரிமினல்களை கடற்பாதுகாப்பிற்கு நியமித்துவிட்டு உள்ளூரில் பயன்படுத்துவது பற்றி மட்டுமே கவலைகொள்ளும் இத்தன்னார்வ நிறுவனத்தின் நிதி வழங்குனர்களும் பல்தேசிய நிறுவனங்கள் என்பதை மறந்துவிடலாகாது.
ரக்ணா லங்கா ..
கடற்கொள்ளைக்கு எதிரான கூலிப்படையாகவும் வியாபார நிறுவனங்களின் அடியாள் அமைப்பாகவும் பிரித்தானியா உட்பட ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் அங்கீகாரத்துடன் இலங்கை அரசாங்கம் வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறது. ரக்ணா அரக்ஷாக லங்கா என்ற பெயரைக்கொண்ட ரக்ணா லங்கா என்று அழைக்கப்படும் நிறுவமே இதுவாகும்.
ரக்ணா லங்கா சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக 200 படையினரைப் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பர்னாண்டோ பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.
உலகில் அதிக அளவிலான கடல் மார்ஷல்கள் தம்மிடம் பதிவுசெய்துள்ளதாக கோத்தாவின் ரக்ணா லங்கா இணையம் கூறுகிறது. ஆயுத விற்பனை, ஆயுதக்களைப் பாதுகாத்தல், கடற்படைப் பயிற்சி, தனியார் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் இந்த நிறுவனம் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டலில் இயங்கிவருகிறது என்கிறது அந்த நிறுவனம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் என ரக்ணா லங்கா இணையத்தின் மேல் மூலையை விளம்பரம் அலங்கரிக்கிறது. எந்த நிபந்தனையுமின்றி பணதிற்காக கொலைகாரர்களை அனுப்பிவைப்பது தான் லக்ணா லங்காவின் முதன்மையான நோக்கம். அது சோமாலியாவில் பிரித்தானிய நிறுவனங்களுடன் இணைந்த செயற்பாடாகவோ, ஆப்கானிஸ்தானில் நேட்டோபடைகளின் கூலியாட்களாகவோ இருக்கலாம்.
Avant Garde Maritime Services (Pvt) Ltd
இலங்கை அரச நிறுவனமான ரக்ணா லங்காவின் இணை நிறுவனமாகச் செயற்படுவது Avant Garde Maritime Services (Pvt) Ltd என்ற தனியார் நிறுவனமாகும். கோத்தாபாயவின் பினாமிகளாக் நடத்தப்படும் இந்த நிறுவம் தமக்குரிய தாக்குதல் ஆயுதங்களை இலங்கை அரசாங்கமே தருகிறது என்கின்றனர். ஆக, பிரித்தானியாவிலிருந்து வழங்க்கப்பட்ட ஆயுதங்கல் இலங்கை அரசினூடாக தனியார் கொலைப்படையின் கைகளில் சேர்ந்துள்ளது. இவை பிரித்தானிய அரசிற்கும் டேவிட் கமரனுக்கும் தெரியாமல் நடந்தவை அல்ல,
இலங்கை, மோரிஷியஸ், தென்சூடான், கென்யா, துபாய், தன்சானியா, ஷேசெல்ஸ் ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டியங்கும் இந்த நிறுவனம், தனியார் இராணுவ நிறுவனங்களின் ஆயுதங்களை இலங்கையில் பாதுகாப்பதற்கும், இலங்கைக்கு எடுத்துவருவதற்கும், இலங்கையிலிருந்து வெளியே எடுத்துச் செல்வதற்கு தம்மை அமர்த்திக்கொள்ளலாம் என்கிறது இந்த நிறுவனம். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு தமக்கு முழு அனுமதியும் வழங்கியிருப்பதாக நிறுவனம் கூறுகிறது.
“காலி உரையாடல்” “Galle Dialogue” என்ற தலையங்கத்தில் 2013 நவம்பர் மாதம் இலங்கை இனக்கொலை அரசின் பாதுகாப்பு அமச்சு நடத்திய சர்வதேச கடல்பரப்பு என்ற கருத்தரங்கில் 15 இற்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன.
இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பல உலகின் ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார வர்க்கம் துயரடையவில்லை. மாறாக தமக்கான கொலைகாரர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று மகிழ்ச்சியடைந்தது. இலங்கை அரசின் இரண்டு தனியார் கொலை நிறுவனங்களின் உயர் பதவிகளிலிருப்பவர்கள் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள். இலங்கை இராணுவத்தைத் தண்டியுங்கள் என்று ‘சர்வதேசம்’ இலங்கை அரசைக் கோருகிறது. இலங்கை அரசோ ‘சர்வதேசத்திற்கு’ கொலைப்படைகளை விற்பனை செய்கிறது. தமிழ் அரசியல் தலைமைகளின் கேடுகெட்ட ராசதந்திரமோ ‘சர்வதேசத்தை’ நம்புங்கள் என்று மக்களைக் கோருகிறது. ராசதந்திரப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று பிழைப்பு நடத்தும் ஐந்தம்படைகளுக்கு இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட கொலைகாரர்களின் தங்குமடமாக மாறுவது தெரிந்தும் தெரியாததுபோல நாடகமாடுகின்றனர்.
அமரிக்கப் பிரசா உரிமைபெற்ற கோத்தாபய ராஜபக்ச டிசம்பர் மாதம் 2013 இல் நியூயோர்க் விமான நிலையத்தில் சுதந்திரமாக சென்றிறங்கி அமரிக்க மற்றும் ஐ.நா அதிகாரிகளுடன் பேரம்பேசிய அவமானத்தைக் யாரும் மறந்துவிடவில்லை. இலங்கை இராணுவத் தளபதி அமரிக்க ஐ.நா இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து இரண்டு மாதங்கள் கடந்துவிடவில்லை,. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொலையாளிகளான ராஜபக்ச குடும்பம் உலகின் கொலைகார இராணுவ மையத்தை இலங்கையில் நிறுவிக்கொண்டிருக்கிறது.
இலங்கையின் வடக்குக் கிழக்கு இந்தக் கொலைகார இராணுவத்தின் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டுகொண்டிருக்கின்றது. வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் இராணுவத்திற்குச் சேவையாற்றும் குடிமக்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இலங்கை முழுவதும் உழைக்கும் மக்களும் ஏழைகளும் ராஜபக்ச குடும்பத்திற்காகவும் அதனை பலப்படுத்தும் ஏகபோக அரசுகளுக்காகவும் சூறையாடப்படுகின்றனர். உலக மக்கள் மத்தியில் இத் தனியார் இராணுவக் கொலைஞர்கள் உருவாக்கப்படுவது குறித்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சூறையாடப்படும் சிங்கள மக்கள மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையான உண்மைகள் நிராகரிக்கபடும் நிலையில் ராஜபக்ச கிரிமினல் இராணுவத்தால் வடக்கும் கிழக்கும் சிங்கள பௌத்த மயமாவதைத் தவிர்க்க முடியாது.
ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு கொலைகார்களை வழங்க கோதாபய, ரொபேர் ஓ பிளேக் பேச்சு
இலங்கை இராணுவம் சர்வதேசக் கூலிப்படையாக…
அமெரிக்காவும் பிரிதானியாவும் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டன : PPT
http://avantmaritime.com/about_us
http://www.rakna.lk/about-us.html
General Rohan Daluwatte got the Four Stars of Sarath Fonseka, He is now Vice Chancellor of Kotalawela Defence University. I saw a Mr. Sukumar sitting there at the podiun at KDU. Mr. Gothapaya Rajapakse is also a professional soldier. Still a Colonel as of 1987. He is also born in 1950 and not in December 1950 as many of us. The choice of Armed Forces or the University in 1970. My experience is that do not make the same mistake in life. Sri Lanks is really progressing in all sectors. .