தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பன்னிரண்டு வயதே ஆன சிறுவன் பாலசந்திரன், சிங்கள இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற உண்மை இன்று உலகின் மனசாட்சியின் முன் பட்டவர்த்தனமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து சர்வதேசமும், இந்திய நாட்டின் அரசியல் தலைமைகளும் ஒரு உண்மையை தெளிவாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்ல, அங்கு நடந்தது போர்க் குற்றங்களும் அல்ல, மாறாக, அது தமிழினத்தை அழிக்க நடந்த திட்டமிட்ட இனப் படுகொலைப் போர்தான் என்பதை பாலசந்திரன் படுகொலை வெளிப்படுத்தும் உண்மையாகும். சிங்கள அரசையும், அதன் இனவெறி ஏற்றப்ட்ட இராணுவத்தைப் பொறுத்த மட்டில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்றால், தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் கூட உயிருடன் இருக்கக் கூடாது என்பதாலேயே, பாலசந்திரன் கொல்லப்பட்டுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு கொடூரமான இனவெறியைத்தான் அன்று இசைப் பிரியா மீது சிங்கள இனவெறி இராணுவம் காட்டியது. அதே கோர, சிங்கள இனவெறிதான் பாலசந்திரன் படுகொலையிலும் வெளிப்பட்டுள்ளது. இதற்கு மேலும் இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும், தலைமைகளும் அங்கு நடந்தது போர்க் குற்றம் அல்ல, அந்த போரே குற்றம் என்பதையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கை அரசு மேற்கொண்டு திட்டமிட்ட தமிழின அழிப்பே என்பதையும் தெளிவாக புரிந்துகொண்டு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள பெளத்த இனவாத அரசிற்கு இந்திய மத்திய காங்கிரஸ் அரசு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கி
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளாக இருந்து செயல்படும் அரசியல் தலைமைகளும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஒற்றை குரலில் நாடாளுமன்றத்தில் இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இதனை மற்ற மாநில அரசுகளும், கட்சிகளும் தமிழருக்கு ஆதரவான இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், அவைகள் தமிழர்களிடமிருந்து அந்நியபடும் நிலை ஏற்படும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
வீழ்ந்து கிடந்தாலும் உன் விழிகளின் வழியே
ஆவணப்படங்களை உருவாக்கி இருக்கிறாய்,
மாய்ந்து கிடந்தாலும் உலகின் மனசாட்சியை
உலுக்கி உலுக்கி ஓலமிட வைத்திருக்கிறாய்…
என்றெல்லாம் எழுதி கிழித்து நிமிர்கையில்
ரொட்டித் துண்டுகளை கையில் ஏந்தியபடி
அப்பா என்றழைக்கிறாள் அன்புக் குழந்தை….
மொழியும், கவிதைகளும் அழிந்து ஐயகோ
காலத்தின் இறுகிய வெளியெங்கும் பரவிக்
கொடுந்தீயாய் வழிகிறது இனத்தின் ஓலம்…
மலத்தில் நெளியும் புழுவாய், மரணத்தின்
பிச்சையாய் ஒடுங்கி உள்வாங்குகிறது உயிர்.
மன்னித்து விடு மகனே, நாங்கள் உனைக்
கொன்றவனை விடவும் கொடும்பாவிகள்….
– முகநூல் –
It is good to know that his name is Balachandran. Indian television media also have covered this event.