அமெரிக்க அரசு நைஜீரியாவிற்கு இராணுவத்தையும் பாதுகாப்பு ஆலோசகர்களையும் அனுப்பிவைத்துள்ளது. பிரித்தானிய அரசும் அமெரிக்காவைப் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளை அனுப்பிவைத்துவிட்டு தாம் வாஷிங்டனுடன் இணைந்து வேலைசெய்வோம் என்கிறது. உலகம் முழுவதும் மக்களைக் கொத்துகொத்தாகச் சாகடிக்கும் இருபெரும் பயங்கரவாத அரசுகள் தமது படைகளை நைஜீரிய மக்கள் மீது அக்கறை கொண்டு அனுப்பிவைத்திருக்ககின்றன. தவிர, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஹூசைன் ஒபாமாவின் மனைவி கண்ணீர் மல்க கடத்தப்பட்ட பெண்களை விடுதலை செய்யுமாறு கோரும் வீடியோ ஒன்று இன்டர்னெட் ஊடகங்களில் பரபப்பாகப் உலாவருகிறது. கோப்ரட் தொலைக்காட்சிகள் நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிகூட மாணவிகளுக்காக இரத்தக்கண்ணீர் வடிக்கின்றன.
சாதாரண செய்திகளின் உள்ளே பொதிந்திருக்கும் நூற்றுக்கணக்கான சிக்கல்களை தெரிந்துகொள்ளாமல் மக்கள் உணர்ச்சிக்கு அடிமையாகிப் போகிறார்கள். மக்களின் உணர்ச்சி வியாபார ஊடக்ங்களுக்குப் பரபபரப்பாகவும் அதேவேளை கொலைகளின் சூத்திரதாரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பாகவும் முடிவுறுகிறது.
மக்களைத் தேசியம், தேசியத் தலைவர், தமிழினம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுத்தி அதனைப் பணமாக்கிக் கொள்ளும் பாதகர்கள் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் அதனை கற்றுக்கொடுத்தவர்களே ஏகாதிபத்திய நிறுவனங்கள் தானே?
வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராம் -Boko Haram- என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு இயங்கிவருகிறது. ஜிகாதி அமைப்பான போக்கோ ஹராம், பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பேர்போனது. சிரியாவில் அந்த நாட்டின் அதிபர் ஆசாத்திற்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் இஸ்லாமிய வெறியூட்டப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதே இந்த அமைப்பும்!
நவீன ஆயுதங்களை வைத்திருக்கும் இந்த அமைப்பிற்கு தாராளமாக ஆயுதங்கள் கிடைக்கின்றன. ஷரியா சட்டங்களின் அடிப்படையில் நைஜீரியாவில் ஆட்சியை அமைக்க வேண்டும் எனக் கூறும் இந்த அடிப்படைவாத அமைப்பு கிறீஸ்தவர்களைக் கொலைசெய்து வருகிறது.
வடக்கு நைஜீரியாவில் 300 இற்கு மேற்பட்ட பள்ளிச் சிறுமிகளைக் கடந்தவாரம் கடத்திய செய்தி உலகைக் குலுக்கியது. கடத்தப்பட்ட இளம் பெண்களை தாம் விற்பனை செய்யப்ப்போவதாக போக்கோ ஹராம் அச்சுறுத்தியது.
வழமை போல மனித நேயம் முற்றிப் பழுத்த மேற்கு நாடுகள் முழித்துக்கொண்டன. தலைவர்களின் அனுதாபச் செய்திகள் உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரப்பட்டன,.
இந்த நிலையில் போக்கோ ஹராம் அமைப்பை வளர்த்தன் பின்புலத்தில் யார் செயற்பட்டார்கள் என்பது பிரதானமான கேள்வி.
அந்த அமைப்பிற்கு ஆயுதம் மற்றும் பண உதவிகளை சவூதி அரேபியாவிலுள்ள பல இஸ்லாமிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சிரியாவில் அசாத்தின் சர்வாதிகார அரசிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துவரும் அமெரிக்க ஆதரவு இஸ்லாமியப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் இதே சவூது அரேபியக் குழுக்கள் தான் உதவி செய்து வருகின்றன. அமெரிக்காவின் நெருங்கிய பங்காளி நாடான சவூதி அரேபியா, மத்திய கிழக்கில் அமெரிக்க சார்பு அரசுகளுக்கு இராணுவ உதவியும், அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கும் பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஹில்லாரி கிளிங்டன் பதவியிலிருந்த வேளையில் போக்கோ ஹராம் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக தரப்படுத்துவதற்கு மறுப்பு வெளியிட்டார். அதனை பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யுமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதனை மிகவும் தீவிரமாக அவர் மறுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க எண்ணிய போது மட்டுமே அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
ஆக, போக்கோ ஹராம் அமைப்பின் வளர்ச்சியை அமெரிக்க அரசு விரும்பியிருக்கிறது என்பதும், தனது அடிமைப் பங்காளியான சவூதி அரேபியாவின் ஊடாக பண உதவியை வழங்கியிருக்கிறது என்பதும் தெளிவாகிறது.
அதே வேளை சீனாவின் எண்ணை மற்றும் கனிம வளங்களை வழங்கும் நாடுகளில் நைஜீரியா பிரதான நாடுகளில் ஒன்றாக விளங்கியது, அமெரிக்க அரசு ஆபிரிக்காவை இராணுவ மயப்படுத்தி அழிப்பதன் ஊடாகவே அங்கு சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை எதிர்கொள்ள இயலும் என திட்டமிட்டது. அதற்காகவே போக்கோ ஹராம் அமைப்பைத் தீனிபோட்டு வளர்த்தது.
இப்போது பள்ளிப் பெண்கள் கடத்தப்பட்ட மறு கணமே அவர்களை விடுவிக்கவும், நைஜீரிய அரசுத் தலைவர் குட்லக் ஜொனதனுக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்கவும் இராணுவத்தை அனுப்பி வைப்பதாகக் அமெரிக்க அரசு கூறுகிறது.
ஒபாமாவின் மனைவியின் அழுகுரலின் பின்னால் கேட்கும் அகோர ஒலி இதுதான்.
புஷ் இனால் ஆபிரிக்காவை ஆக்கிரமிக்கவும் அதன் வளங்களைச் சுரண்டவும் இராணுவ மயப்படுத்தவும் உருவாக்கப்பட்ட திட்டமான அபிரிகொம்(AFFRICOM), ஒபாமா அரச நிர்வாகத்தின் கீழ் மிகத் தந்திரமாகத் திட்டமிடப்பட்டடு நைஜீரியா என்ற எண்ணை வள நாட்டை ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது.
ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஆசியா பைவோட் என்ற திட்டத்தை அமெரிக்க உருவாக்கியுள்ளது. அதன் ஒருபகுதியாகவே கோத்தாபயவின் கொலை இராணுவம் உலகமயப்படுத்தப்படுகின்றது. புலிப் பூச்சாண்டி காட்டப்ப்படுகின்றது. இதன் அடுத்தகட்டமாக இலங்கை அரசிற்கு ஆலோசனையும் பாதுகாப்பும் வழங்க அமெரிக்க இராணுவம் இலங்கையில் குடியேறினாலும் வியப்படைவதற்கில்லை,
இலங்கையில் ஈழப் போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கிய இந்திய இராணுவத்தின் திட்டத்திற்கு சமாந்தரமான பலவற்றை பல்லாயிரம் மைல்கள் தொலைவிலும் அமெரிக்க அரசு மேற்கொள்கிறது. நைஜீரியர்கள் அமெரிக்காவை நம்பியிராமல் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராக ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகளுடன் இணைந்து போராடியிருந்தால் இன்று அமெரிக்கப் பயங்கரவாதத்திலிருந்து தம்மைப் பாதுகாத்திருக்க முடியும்.
கடத்தப்பட்ட பெண்களைக் காண்பிக்கும் வீடியோ:
ஒரு வேளை கடிப்பதற்கு ஒரு பாண் துண்டிற்கு அல்லல்படும் சாதாரண ஆபிாிக்க ஏளையின் கையில் எத்தனையோ ஆயிரம் பெறுமதிமிக்க துப்பாக்கி வந்தது எப்படி என்று நாம் கேட்கத்தொடங்கினால் அவா்களை நாம் ஒருபோதும் திட்டமாட்டோம்.
ஆபிாிக்காவிலிருந்து சீனாவை கலைக்கவேண்டியே இந்த நிகழ்வுகள் இன்னும் நிறைய வரும்.
Ok, where are they getting these weapons…?
Are these weapons made in Nigeria…?
Or made in China….?
Where are they getting fund to purchase this…?