சேர, சோழ, பாண்டிய, பராக்கிரம, பல்லவ மன்னர்களின் அவைகளில் ஜால்ரா அடித்து, பாட்டுப்பாடி, பல்லக்குத்தூக்கி பொற்கிளியும் பரில்களையும் வாங்கிச் சென்று வயிறு வளர்த்தது அந்தக் கால புலவர் கூட்டம். அதாவது தமிழறிஞர் கூட்டம். மக்களின் வரிப்பணத்தை எடுத்து தன்னைப் புகழ்கிற அல்லக்கைகளுக்கு வாரி வழங்கியது போக உழைப்பிற்கும் நிலத்திற்கும் தொடர்பே இல்லாத பார்ப்பனர், பார்ப்பனரல்லாத முற்போக்கு சாதிகளுக்கு வாரி வழங்கியதும் இந்த தமிழ் மன்னர்கள் செய்த வேலை.. உழைக்கும் மக்கள் நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஆண்டைகளின் வயல்களில் கூலிகளாக கைகட்டி நின்ற வரலாறு இந்த மன்னர்களிடமிருந்தே துவங்கியிருக்க வேண்டும்… 1948 –ல் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலந்து விட்டதாக காங்கிரஸ் காரன் காட்டிய படத்தில் இப்போதோ மன்னர்களுக்கெல்லாம் மன்னர்களான மக்கள் தலைவர்கள் உருவாகி விட்டார்கள். கொடநாடு, தைலாபுரம், கோபாலபுரம், பெங்களூர் பண்ணை வீடு என இந்த மக்கள் தலைவர்களுக்கு அந்தப்புரங்களும் உண்டு……… அரியாசன மண்டபங்களும் உண்டு…… நாற்காலிகள் மட்டுமே மாறியிருக்கிறது. ஜால்ரா சத்தங்கள் மட்டும் ஓயவில்லை. அன்றைக்குப் புலவர்கள் இன்றைக்கு கவிஞர்கள்……ஜாலரா சத்தங்கள் ஓயவில்லை. பரிசில்களாக அரசு நிலத்தையும் அரசு விருதுகளையும் எடுத்து இந்த எலும்புத் துண்டுகளாகப் போடுகிறார்கள் மக்களாட்சி மன்னர்கள்.. ஒருவர் குறைப்பதைப் போல இன்னொருவன் குறைக்க முடியாது.வைரமுத்துவைப் போல எப்படி வாலி குறைக்க முடியும். முத்துக்குமாரைப் போல எப்படி விவேகா குறைக்க முடியும்………ஆக வித்தியாசமாக குறைக்க வேண்டும்…..இந்த வித்தியாசம் கூடக் கூட பரிசில்களும் வேறுபடும்……இப்படி சில உபயோகமான வெளிநாட்டு தமிழறிஞர்களைத் தவிற நான்கு நாட்களாக போட்டி போட்டு வயது வித்தியாசம் இல்லாமல் குறைத்து ஓய்ந்திருக்கிறார்கள்…………..கவிஞர்களும், தமிழறிஞர்களும்….ஆய்வாளர்களும்……மாநாட்டுச் செய்திகளை கேள்விப்படும் போது குறைத்தல் என்ற சொல் மட்டுமே இவர்களுக்குப் பொறுத்தமாக இருக்கும் என்பதால் அச்சொல்லை இங்கு பயன்படுத்துவதை முழுக்க சரியென்ற நினைக்கிறேன்.
கருணாநிதியின் குடும்ப மாநாடு
வா.மு.சேதுராமன் என்ற தமிழறிஞர். இவர் தமிழறிஞரா? என்று தெரியவில்லை.. பட்டுச் சேலை சலசலக்க, தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி, மகன், மகள், பேரன், பேத்தி,கொள்ளுப்பேரன், பேத்தி என சுமார் 100 கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அரங்கை ஆக்ரமித்துக் கொண்டதாக எல்லா நண்பர்களும் சொன்னார்கள். இந்த உறுப்பினர்கள் வரும் போதும் போகும் போதும் கரைவேட்டிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்த அதுவே தமிழறிஞர்களுக்கு முகச் சுழிப்பாக இருந்ததாம். அது போல மேடையைப் பகிருந்து கொள்வதிலும் கருணாநிதி குடும்பத்தினரிடையே கடும் போட்டியாம். அழகிரிக்கும் ஸ்டானிக்கும் இடையே சேர் பிடிப்பதில் கூட போட்டி என்றால் ஒரு நல்ல விருந்துக்காக நாம் காத்திருக்கலாம். அது எப்போது நடக்கும் என்றுதான் தெரியவில்லை. கவிஞர்களும், தமிழறிஞர்களும் கருணாநிதியைக் கடந்து இந்த குடும்ப உறுப்பினர்களை கவர் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார்கள். ஆமாம் நாளை தங்களுக்கில்லா விட்டாலும் தங்களின் பிள்ளைகளுக்கு இந்த வாரிசுகள்தானே வாரி வழங்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம்… மகன் அழகிரி மாநாட்டின் மையம், அழகிரி ஸ்டால் திறப்பாளர், கனிமொழிக்குப் பொறுப்பு, பேத்தியின் வீணை இசை, என மக்கள் வரிப்பணத்தில் நடத்திய செம்மொழி மாநாட்டிலும் குடும்ப ஆதிக்கம்தான்.
ஜால்ரா சத்தம்
அரசியல் வாடையற்ற செம்மொழி மாநாடு என்று மாநாடு முடிந்த பின் கருணாநிதி சொன்னார். ஆனால் மேடையில் பேசிய அல்லக்கைகள் அனைவருமே ஜெயலலிதாவையும் ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் தாக்கிப் பேசினார்கள். தமிழுக்காக போராடி சிறை சென்ற வழக்கறிஞர்களைக் கொச்சைப்படுத்திப் பேசினார் கி.வீரமணி. பசையுள்ள இடத்தில் ஒட்டுக் கொள்ளும் இவர்தான் முன்னர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதிகாத்த வீரங்கனை பட்டம் கொடுத்தவர் என்பது நமக்கு மறந்தாலும் கருணாநிதிக்கு மறக்காது என்று நம்புவோம். ஆனால் அரசியல்வாதிகளின் ஜால்ராக்களையே மிஞ்சி விட்டார்கள் கவிஞர்கள்…….கவிஞர் இளம்பிறை செம்மொழி மாநாட்டைக் கண்டித்து ஒரு கவிதை எழுதியிருந்தார். ஆனால் அதே இளம்பிறை செம்மொழி மாநாட்டில் வாய்ப்புக் கிடைத்த உடன் ஓடிப்போய் கவிதை வாசித்தார். ஈழப் படுகொலைகளின் போது கருணாநிதி நடந்து கொண்ட விதத்தைச் சுட்டிக்காட்டி பல பெண் கவிஞர்கள் செம்மொழி மாநாட்க்கு வரமாட்டோம் என்று தெரிவிக்க காலியான அந்த இடத்தை வைகைச் செல்வி போன்ற கனிமொழியின் ஜால்ராக்களும், ப்ரசன்னா ராமசாமி, ரோகிணி, போன்ற பார்ப்பனர்களும் பிடித்துக் கொண்டார்கள். முற்போக்கு நாடகவியளாராக கருதப்படும் மங்கை, அவரின் நாடக குழுவில் உள்ள முன்னாள் புரட்சிக் கவிஞரான இன்குலாப் கூட செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் பெற்றுக் கொண்ட பணத்திற்காக ஓடோடிச் சென்றார்கள். ஆக புறக்கணிக்கிற இடங்களை கைப்பற்றுகிற தந்திரங்களை இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஈழப் படுகொலைகளின் போது கருணாநிதியைக் கண்டித்து தமிழக அரசின் கலைமாமணி விருதை திருப்பி அளித்த இன்குலாப்பிற்கு அதே கைமாறை கருணாநிதி மீண்டும் செய்யக்கூடும்.
ஒரு கவிஞர் பிராந்தி பாட்டிலை மட்டுமே தெரிந்த எங்களுக்கு பிரதீபா பாட்டீலை காட்டியவன் நீ என்று புகழ ஒரு கட்டத்தில் ஒருவர் புகழ்வதை விட எப்படி சிறப்பாய் புகழ முடியும் என்பதில் போட்டி செம்ம்மொழித் தங்கமே, சிங்கமே, மனக்குகையே என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த புக்ழ் ஒலிகளைக் கேட்டு அய்யயோ நாம் “இவனுங்களே இப்படி எல்லாம் புழந்து விட்டால் நாம் எப்படித்தான் புகழ்றது. இதை எல்லாம் மிஞ்சுகிற வகையில் புகழ்ந்தால் தானே வஃக்பு வாரியப் பதவி பறி போகாமல் இருக்கும்” என்ற பதட்டத்தில் யோசித்து யோசித்து மாய்ந்ததில் அப்துல்ரகுமானுக்கு நெஞ்சுவலியே வந்து விட்டது. அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சுயநலனுக்காக நக்கிப் பிழைக்கும் இவர்கள் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதை கவிஞர்கள் பழநிபாரதி, முத்துக்குமார், நெல்லை ஜெயந்தா, வாலி, வைரமுத்து எல்லோரும் நிகழ்த்திக்காட்டினார்கள். நாளையே இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் வேண்டாம் தரையில் மண்ணைக் கொட்டுகிறேன் அதை உங்களால் நக்கித் துடையுங்கள் ஆனால் அப்படி நக்குகிறவர்களுக்கு விருதும் பரிசு உண்டு. சிறப்பாக நக்குகிறவர்களுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் கொடுப்பேன் என்று கருணாநிதி அறிவித்தா என்று வையுங்கள். அப்போதும் கூச்ச நாச்சமின்றி நக்கிப் பிழைப்பார்கள் இவர்கள்.
மாநாட்டுத் தீர்மானங்கள்
நான் அறிந்த நவீன தமிழறிஞர்களளும் நவீன வரலாற்று ஆய்வாளர்களும்மான தொ,பரமசிவன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன், வெங்கடசலபதி ஆகியோர் இநத மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லையாம். அது போல திராவிட இயக்க அரசியல் விமர்சகளுக்குக் கூட அழைப்பில்லை. கருணாநிதியை விட தமிழுக்கு அதிகமாகத் தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளாரை நினைவில் கூட இல்லாமல் அழிக்கும் முயர்ச்சிகளும் நடந்திருக்கிறது. சிவத்தம்பியைக் கூட தமிழறிஞர் என்பதால் அழைக்கவில்லை. இனக்கொலை தேசத்தில் இருந்து வந்து அவர் கொடுக்கப் போகும் சான்றிதழுக்குத்தான் மரியாதையே தவிற சிவத்தம்பிக்கில்லை. ஆக மொத்தம் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட ஈழப் படுகொலை நினைவுகளை அழித்து தமிழர்கள் தலை நிமிருந்து நிற்பது போன்ற தோற்றத்தை 300 கோடி ரூபாயில் உருவாக்க முயன்றிருக்கிறார் கருணாநிதி. ஆனால் 300 கோடி அல்ல 3000 கோடி ரூபாய் செலவு செய்தாலும் ஈழத்தமிழர்கள் தொடர்பாக கருணாநிதி நிகழ்த்திய தூரோக நாடகங்களை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கவும் போவதில்லை, மன்னிக்கவும் போவதில்லை. விலை கொடுப்பதல்ல பிரச்சனை உங்களை வீழ்த்துவதே….உலகத் தமிழர்களின் ஒப்பற்ற துரோகி யார் எனக் கேட்டால் முள்ளிவாய்க்கால் நினைவிருக்கும் வரைச் சொல்வோம் கருணாநிதி என்று.
ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மறைத்து……சாகப்போகிற காலத்தில் உலகத் தமிழர்களின் தலைவன் என்ற பட்டத்தை தட்டிச் செல்லலாம் என்ற கனவுக்கு விழுந்த செருப்படி……………. “உலகத் தமிழர்களின் ஒப்பற்ற துரோகி யார் எனக் கேட்டால் முள்ளிவாய்க்கால் நினைவிருக்கும் வரைச் சொல்வோம் கருணாநிதி என்று. ” சூப்பர்……..
I do not understand why we quickly accuse Karunanithi for mullivaikal? Isn’t It that we do not want to see the real cause of mullivaikal? First we have to blame rajabaksa & co and Prabaharan & co for this genocide. Mullivaikal is very well programmed by the rajapakses ….naturally with the help of china India.Pakistan and some other countries..At the time of the war Prabaharan was not in in a position to wage a war,he had no strategy,orno plans,or appropriate weaponry. What he id was He desperately tried to recruited people forcefully..nothing worked………..Yes India could have stoped the genocide. we all hoped karunanithy would help us…but he decided not to press the government that much…reason we do not know… He is a power politician…Prabaharan had betrayed all of us,,,he is the main cause…yes i accept karunanithi did not try much to stop the Genocid.
தண்ணீரில் மூழ்குபவனுக்குப் பக்கத்தில் வசதியாக கரையில் நின்று கொண்டிருந்தும், கைக்கெட்டிய தூரத்தில் காப்பாற்று என்று தவித்தவன் கை நீட்டிய போதும் கை கொடுக்காமலிருப்பவனை என்னவென்று சொல்வீர்கள் ? அப்படி நின்றவர்கள் தான் நம் தமிழ்நாட்டுத் தமிழர்களும் அவர்களின் இனமானத் தலைவனாக பீற்றிக்கொள்பவரும்.
i understand the pain and feeling of powerlessness.why there was nobody to stop this massacre?.Although the Politic is not so easy business,i think karunanithi must have tried his best.. why didn’t he do it? why why why kalainyar?
இந்தியாவில் ஆளப்படும் மக்களீல் ஒருவரே தமிழ்க மக்கள்.மாநில அரசுக்கு படை அனுப்பும் அதிகாரம் இல்லை,எதற்கெடுத்தாலும் அவர்களயே கை காட்டிக் கொண்டு இருக்காதீர்கள்.புலிகள் காலத்தை தவற விட்டதால் இந்த நிலமை ஏற்பட்டது.புலிகளூம் புலத்தில் உள்ள புலிகளூமே மக்கள் பலியாகக் காரணம்.
The LTTE seriously erred in not letting the people go when the risk of genocide was over the horizon. But the TNA too endorsed the LTTE’s position.
Placing that error on the same footing as the perpeteration of mass killings (30-40,000 +?) maiming (20,000+) displacement disappearances and incarceration (around 300,000) is twisted logic.
Don’t make me laugh by saying India could have stopped it. India was hand in glove with Rajapakse in the crime: India instigated the crime, supported it, and participated in it.
Karunanithi knew all along what was going on. He decieved the people of Tamilnadu and defused the anger of the people against Delhi. I need not explain the motives.
His lies and dishonesty were appalling. His actions were none short of breach of trust and betrayal.
Sadly, the tidal wave of anger against the genocidal war came a year too late and was cunningly deflected by a scoundral who had swindled the masses of hundreds of crores to enrich his clan.
But that is Tamilnadu politics. There are no sensible options in the electoral politics of Tamilnadu.
முள்ளீவாய்க்காலிலேயே முடங்கிக் கிடந்தால் ஒரு தமிழ் ஓபாமா உருவாகாமலே போய் விடும்.இங்கிலாந்தில் பெட்டிக்கடை ஆரம்பித்த தமிழரில் சிலர் இன்றூ மில்லியனர்.அய்ந்து முறயாக திரு போல் சத்தியநேசன் கவுன்சிலர்.தமிழ் இந்தியத் தமிழருக்கும் இல்ங்கைத் தமிழ்ர் எனும் அடக்கலம் கொடுக்கிறது.கலைஜரின் அயராத உழைப்பே தமிழை செம்மொழியாக்கி உள்ளது இது தமிழன் என்ற பெருமைக்கான பெருமை.
மாநாடு முடிந்தவுடன் கணக்கு காட்டினாரே கவனித்தீர்களா ? 400 கோடியில் மாநாட்டுச் செலவு 60 கோடியாம். மீதி 340 கோடி கோவை மாநகரை மேம்படுத்த செலவிடப்பட்டுவிட்டதாம். எப்படி இருக்கிறது கதை ?
கோவை மாநகர மக்கள் வழக்கமான கட்டணத்தில் விடும் பஸ்களை விடாமல் சிறப்பு பஸ்கள் விட்டு கொள்ளையடிக்கிறது அரசு நிர்வாகம் என்று ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்க இவர் கோவையில் என்னத்தை மேம்படுத்தினார் என்பது நமக்குத் தெரியவில்லை. முந்தைய உலகத்தமிழ் மாநாடுகளில் கண்துடைப்பு கணக்குக்காக தெருமுனைகளில் கக்கூஸ்கள் கட்டினார்கள்.இந்த மாநாட்டில் அது கூட இல்லை. ஆகமொத்தம் செம்மொழி பிஸினஸ்ஸில் 300 கோடி ரூபாய் கல்லா கட்டியிருக்கிறார் கலைஞர். வாழ்க அவர் தமிழச் சேவை !
வைரமுத்து தன் மகனின் பெயரில் எந்திரால் என்ற பெயரில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.தமிழக அரசு வெளியிடும் விளம்பரங்களில் 90சதவிகிதம் விளம்பரங்கள் இந்த விளம்பர நிறுவனம் மூலமே வெளியிடப்படுகின்றன .உதாரணமாக செம்மொழி மாநாட்டின் போது இந்த நிறுவனம் மூலம் சுமார் 19 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்மூலம் நம் கவிப்பேரரசுக்கு கிடைத்த கமிஷன் தொகை மட்டும் சுமார் ரூபாய் 2 கோடியே 85 லட்சம்.
அரசு விளம்பரங்கள் இம்மாதிரியான தனியார் ஏஜன்சிகள் மூலமே வழங்கப்படும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது.பொதுவாக ஏஜன்சிகள் விளம்பரங்களை செய்தித் தாள்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் கொடுத்துவிட்டு அதற் குரிய பணத்தை தங்கள் கையிலிருந்தோ அல்லது பின்னர் குறிப்பிட்ட நாளில் தருவதாகவோ ஓப்பந்தம் செய்துகொண்டு விளம்பரங்களை வெளியிடுகின்றன.
அரசிடம் இருந்து விளம்பரம் வெளியான 45நாட்கள் கழித்தே பணம் வரும்.இந்த சேவைக்காக இந்த விளம்பர ஏஜன்சிகளுக்க மொத்த விளம்பரத்தொகையில்15 சதவிகிதம் கமிஷனாக வழங்கப்படும்.
கோடிகள் புறளும் இந்த விளம்பரங்கள் அரசுக்கு வேண்டியவர்களுக்கும் அமைச்சர் மற்றும் முதலமைச்சர் குடும்பத்தினருக்கு கமிஷனில் பங்கு தருபவர்களுக்கு மட்டுமே இந்த விளம்பரங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
வைரமுத்துவைப்பொறுத்த வரையில் அவர் யாருக்கும் கமிஷனில் பங்கு தருவதில்லை.இவரால் மற்ற ஏஜன்சிகள் மனம் நொந்து போயிருக்கிறார்கள். வாலியை வாலிபக்கவிஞரென்றாலும்,ஆர்வக் கோளாறு விஜயை வித்தகக்கவிஞரென்றாலும்,
வெகுமானம் என்ன என்று கேட்டால் ரகுமானைக் கேட்பேன் என்று மற்ற கவிகளை கருணாநிதி புகழ்ந்தாலும் சொரணையை கோஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு கவிப்பேர ரசு கோபாலபுரத்து தெருவை நக்கித் துடைப்பதற்கு இதுவே காரணம்.
ராகவன் போன்றோர் மேற்கு நாட்டில் இருந்து கல்கி படிப்போராய் இருக்க வேண்டும் அவர் எதைப் படிக்கிறார் என்பதை அவர் கருத்தே காட்டி நிற்கிறது.தவளக் கறீயே லண்டனில் கிடைக்கிறது இன்னும் கிணற்றீல் கிடப்போர் பற்றீ நான் என்ன பேசுவது.இங்கிலாந்து வந்தும் சாம்பார் தின்னும் கூட்டத்திடம் நான் சலாட்டு பற்றீயோ வெஜிரபில் பேகர் பற்றீயோ பேச முடியுமா?ஏனய்யா இப்படி இருக்கிறீர்கள்?
ஐயா தமிழ்மாறனும் மேற்கு நாட்டில் இருந்து கல்கி படிப்போராய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்கியில் வருகிற மாதிரியே ராகவன் போன்றோர் எழுதுவதாக அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது?
வெள்ளைக்காரன் மசாலா சோனில் போய் தோசையும் சாம்பாரும் கேட்டு வாங்கி சாப்பிடுகிறானே! வெஜிடபிள் பேகர் ஏன்? நன்றாக roast beef & Yorkshire pudding; fish & chips; boiled cbbage & mashed potato சாப்பிடலாமே! வெள்ளையன் கூட மறந்து போன தீன் அவை.
எதுவாக இருந்தாலும் அப்பம் போல் ஒரு சுவையில்லை xxxx.பலகாரம் சாப்பிடுவது போல் இனிமையில்லை.எதுவாக இருந்தாலும் தாய் நாட்டில் நான் வாழ்ந்த நாட் கள் போலில்லை.வைரமுத்துவின் தமிழில் கலைஜர் தரும் தமிழில்,ரகுமான்,தமிழன்பன் கவிதைகளீல் மிதந்து நனைகின்றோம்.குமுதம் நமக்கு கோயில் மாதிரி,கல்கி அங்குள்ள விளக்கு திண்ணயாய் ராணீ,புதிய பார்வை,துக்ளக்.
தமிழ்மாறன் உங்களுக்கு சாம்பார் பிடிக்குமோ? சாம்பாரில் எல்லாம் கலந்திருக்கும், சில வேளையில் உருசியாக இருக்காது, குமட்டும்.
வைரமுத்துக்குவுக்கு அது மட்டுமல்ல தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் புகைப்படங்கள், எடுக்கும் மிகப்பெரிய காண்டிராக்டும் வழங்கப்பட்டிருகிற்து. அது மட்டுமல்லாமல் தமிழக எழுதுபொருள் அச்சு இயக்கத்துரையில் பிரிண்டிங் ஆர்டர்களை கோடிக்கணக்கில் வருமானம் வரும் இந்த வேலைகளை எடுத்து செய்கிறார். ஆனால் இந்த வைரமுத்து வேலை செய்கிறவர்களுக்கு ஒருங்காக பணம் கொடுக்க மாட்டார். ஈழத் தமிழர்களின் பாக்கெட்டுகளில் வைத்து பதம் பர்ப்பதும். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து விருந்து கொடுப்பது கருணாநிதிக்காக பிரச்சாரம் செய்வதும் இப்போது நடக்கப்போகிறது.
கண்ணதாசன் என்ற மாகா கவிஞன் எவனுக்கும் கூஜாதூக்காமல் தன்மனம்போல் வாழ்ந்தான்,மறைந்தான் ஆனால் இன்றும் வாழ்கின்றான்,
பணம் பொருளுக்காக கருணாநிதியின் காலை நக்கி பிழைக்கும் வைரமுத்து வாழும்போதே மரணித்துப்போனவர்.இது போன்ற பூனைகள் அரசு பணத்தை எவ்வாறெல்லாம் களவாடுகின்றன.மக்களின் வரிப்பணம் இம்மாதிரியான தமிழ் பிழைப்பு வாதிகளால் எப்படிசுரண்டப்படுகிறது என்பன போன்ற விஷயங்களை யாராவது ஆதாரங்களோடு எழுதினால் நன்றாக இருக்கும்.
நல்ல கட்டுரை இனியொரு பணி சிறக்க வாழ்த்துக்கள். வைரமுத்து குறித்து இன்னும் பல தகவல்களை சேகரித்து ஒரு தனி கட்டுரையே போடலாம். கவிஞர்கள் மட்டுமல்ல் கருத்தரங்க பேச்சாளர்கள் பேச்சுக்கள் உலக மகா ஜால்ரா
கவிஞர்களை விடுங்கள் நேர்மையான அதிகாரி என அழைக்கப்பட்ட இறையன்பு
ஏன் இப்படி கருணாநிதியின் பின்னால் அலைகிறார்.இதுதான் நேர்மையின் அழகா?
கலைஞர் டிவி பட்டி மன்றங்களில் முழங்கும் இவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும்.?மிழக அரசில் இருக்கும் நேர்மையான தலித் அதிகாரி உமாசங்கர் போன்று நேர்மையாக நெஞ்சுரத்தோடு போராடும் தன்மையின்றி ஆளும் கட்சிக்கும் அதன் அடிவருடிகளுக்கும் ஜால்ரா அடிக்கும் இறையன்பு போன்றவர்களை என்ன சொல்வது..?
இறையன்பை நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது.?நேர்மை இருந்தால் அவர் இப்படி நல்ல பதவியில் ஒட்டிக் கொண்டு பட்டிமன்றங்களில் ஜோக்அடித்துக்கொண்டு (அதுவும் ஆளும்கட்சி டிவிக்களில்..)திரியமுடியுமா.இளையபாரதி மாதிரி இவரும் ஒரு கருணாநிதி குடும்பத்து அடிவருடி.,மீடியாக்களை அனுசரித்து பிழைப்பு நடத்தும் இவர் ஒரு காரியவாதி
புலம் பெயர் நாட்டில் இருந்து இதனைக் காண பெரும் கூட்டமே சென்றுள்ளது. இவர்களை என்ன சொல்லி அழைப்பது. அராஜகத்தக்கு துணை போகும் இந்தக் கூட்டம் தங்களை எழுத்தாளர்கள் என சொல்லி கெளரவப்படுத்துகின்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட புலம் பெயர் போராளிகள் யார் என்பதை வெளி உலகிற்கு தெரியப்படுத்தினால் நல்லது. கனடா காலம் செல்வம் தலைமையில் ஒரு குழு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தவும்
First I would like to clarify that I am not a DMK/Kalaignar sympathiser. But, I feel that at this time people of TN do not have any other viable option apart from him. The only option of JJ is also not any better or in someways worse.
Coming to the point. My parents happen to be in Coimbatore. They informed me that Kalaignar had visited the city almost a month ago to check on the progress made on the preparations for the World Tamil Meet. When he saw a large number of DMK flags and symbols, he had asked the organisers to remove them and told them that this conference is NOT a party conference, but a conference for Tamil laguage and ALL are welcome.
Whatever may be his political vices, Kalaignar is really a great contemporary literary figure. He is well known from his extempore. I have heard from the people of my parents’ generation that he would compose and recite a poem instantly on a stage. So, we should not judge his literary credentials by his political actions. Also, I clarified from people who have watched the conference that they have not heard anyone praising any of Kalaignar’s family members. If people praise Kalaignar for his literary credentials, I don’t think that should be termed as Jalra.
To say that MK is agreat literary figure is a fallacy.
The DMK tradition in the movies was, despite some positive features that it inherited from Periyar, was the source of bad taste and obscenity in Tamil cinema.
What has mostly been passing for poetry in Tamilnadu as been cheap gimmickery full of cliche and titillatory nonsense. A few good poets once wrote for the movies, but not the lot acclaimed by the DMK tradition.
If TN has no choice but MK, that is a miserable situation. What about persuading the people to boycott the polls for lack of meaningful choice than to choose between evils?
Hi “xxx”,
Your statement “To say that MK is agreat literary figure is a fallacy.” without any strong reasoning is difficult to accept. Movies is just one of the medium to showcase ones talents. There are many other medium. Btw, I have not put my argument in favour of DMK. I have no sympathy for either the party DMK nor the leader MK (apart from the respect for his grasp of Tamil language and literature without much formal education).
Do you think there is an alternative to MK in TN in politics? I certainly don’t. I too see this as a miserable situation. Infact, this statement holds good in many states and also at the Centre. Today’s politics in India has no strong leader is my belief.
400/ கோடி ரூபாய் பணம் தண்டச்செலவாகிவிட்டது என்று கூறவந்தால் ,கருணாநிதி சிறந்த தமிழ் அறிஞர், ஆஆ,ஊஊ என்று புகழ்கிறர்களே !!என்னத்தைச்சொல்ல?நீங்கள் எல்லோரும் கண்ணதாசனின் “”வனவாசம்”” படித்து இருக்கிறீர்களா ? கருணானிதியின் காமக்களியாட்டங்களையும், வஞ்சகசெயல்களையும்,பக்கம் பக்கமாக எழுதியுள்ளாரே!! இந்த கருணாநிதி ஒழிந்தால்தான் தமிழ் உறுப்படும், தமிழ்நாடும் உறுப்படும்!! ஜல்லர, ஜல்லர என்று குருவாயூர் கோவில் ஜால்ராக்களை அடிப்பதை நிறுத்துங்கள் !!!
நாதன் உங்கள் ஆழமானதும் அறீவானதுமான வனவாசம் படித்தோம் அதில் தமிழ் செம்மொழியாகும் என்றூ கனவே காணப்படவில்லை.வாழத்தெரியாமல் வாழ்ந்து உங்களயும் குழப்பிக் கலகம் செய்யும் மனவாசமும் படியுங்கள்.கருணாநிதி காலத்தில் வாழ்ந்தொம் எனும் பெருமையை விட்டு பிதற்றூவதைக் குறயுங்கள்.
எதைப் பற்றிப் பெருமைப் படுவது என்பது ஒவ்வொருவரதும் தரத்தின் அளவுகோல்.
நாட்டைக் கொள்ளயடித்துச் சுருட்டிச் செல்வந்தனாகி, மிரட்டல் வன்முறை லஞ்சம் மூலம் ஆட்சியில் தொடர்ந்து, இந்திய அரசின் படுகொலைப் போருக்கு உதவ நயவஞ்சகம் செய்த ஒருவனின் காலத்தில் வாழ்ந்தது பற்றி ஒரு மண் புழு கூடப் பெருமைப் படாது — ஆனால் சில மனிதப் பிறவிகள்!!!
I have read quite a bit of MK’s non-movie writings including “குறளோவியம்” and “பொன்னர் சங்கர்”. The former trivilaised a serious text. The latter showed poor appriciation of history. (His glamorisation perhaps comes from the roots in cinema — the bane of Tamilnadu).
The DMK tradition of glittery language devoid of substance has had a strong effect on creative writing in Tamil in the nationalist tradition for a long while. It still lingers on — like the odour of an empty bottle of asofoetida– among a generation with rather stunted literary groeth. I was attracted to CNA — years ago– but disenchanted not long after. In fairness, despite the weaknesses of his texts, they had substance unlike MK’s.
Much of the popularity on MK’s non-movie writing is subsequent to his meteoric rise within the DMK. (I know and perhaps you know how he managed that and made his wealth afterwards).
You are making a choice between two evils on offer. I prescribe opting out.
Dear Sharath
Can you please give me examples of outstanding literarary quality in MK’s writings.
I simply said: “If TN has no choice but MK, that is a miserable situation”.
You do not much disagree with me, as you only prescribe a choice out of desperation.
தமிழ் மாறன் அவர்களே! 1952ல் இருந்தே கருணாநிதியுடனும், கண்ணதாசனுடனும் தொடர்பு கொண்டவன் என்ற முறையில்தான் எனது கருத்தை கூறினேன்.முக்கூடல் பொதுக்கூடத்திற்கு வந்த கருணாநிதியிடம் “”ஏன் உங்களின் முரசொலி ஏட்டில் கண்ணதாசனை மறைமுகமாக திட்டி எழுதுகிறீர்கள்”” என்றுகேட்டதற்கு, “””தம்பி, இவையெல்லாம் வியாபார தந்திரங்கள் “””என்றாறே பார்க்கலாம்!!! அண்ணா இறந்தபின் தான் முதல்வராக வ்ருவதற்கு சி.பா.ஆதித்தனாருடன் இவர் செய்த தில்லுமுல்லுகள், எல்லாம் தெரிந்துதான் எழுதியுள்ளேன்! இவரின் குறளோவியத்தில் 500 பிழைகள் உள்ளன என்று தமிழ் அறிவாளர்கள் கூறியுள்ளது தெரியுமா?இவரது காலத்தில் வாழ்வதுநாம் செய்த பாவம்! தமிழறிவில், கண்ணதாசனுக்கு கால் தூசு பெற மாட்டார் இந்த கருணாநிதி!!!!!!!
இடத்திற்கு ஏற்ப தடம் மாறூதும் -மாறூவதும் ஏசுவதுமாக வாழ்ந்த கண்ணதாசனும், மந்திரி பதவி என்றதும் மடங்கிய ஆதித்தனராரும் ஒப்பீட்டளவில் கலைஜருக்கு ஈடாகமாட்டார்கள்.குறளோவியத்தில் தவறூ என்போரை இன்ங்காட்டுங்கள்? மறந்த சுஜாதா குறளோவியத்தை விதந்துரைத்துள்ளார் பகுத்தறீவாளன் பார்வையை நீங்கள் குறளோவியத்தில் காணலாம்.இன்னும் அவரது கவிதைகளயும் தான் கவிதை இல்லை என்றார்கள்.எம்.ஆர்.ராதாவே கருணாநிதியை கலைஜர் ஆக்கியவர்.கலைஜரால்தான் வள்ளூவர் கோட்டமும், நிமிர்ந்து நிற்கும் வள்ளூவர் சிலயும் வாய்த்த்து,கருணாநிதி எழுந்த சூரியன் தமிழின் கதிரவன்.
தமிழ்மாறன் ஒரு அறுமையான மனிதர்,அவருக்கு சென்னையில்,மயிலை மாந்தோப்பில் நடக்கும் பாராட்டுவிழாவில் பொன்னாடை போர்த்தி,வீரவாள் பரிசு வழங்கப்படும்,அனைவரும் அலைகடலெனெ திரண்டு வாரீர்!.
கலைஞர் வாழ்க!,தமிழ் வாழ்க!.
கருணாநிதி ஒரு களவாணிப் பயல். பச்சை அயோக்கியன். இதற்கும் சான்று வேன்டுமா?
ஜால்ராக்கள் எப்போதும் ஜால்ராக்களே.
தமிழையும் குறளையும் நன்கு தெரிந்த எவராவது, குறளை சினிமச் சில்லறைத்தப் பாணியில் தந்த ‘குறளோவியத்தை” மெச்சியிருந்தால் சொல்லப் பெறும்.
ஒரு தமிழ்னுக்கு, தமிழக முதல்வனுக்கு ஜால்ராவாக இருப்பதும் சுகமே.பகவான் மீது காட்டும் அன்பை பக்தி என்பதில்லையா அது போலவே இதுவும்.
இப்போ மு. க. (முழுக் கள்ளன்) கடவுளாகி விட்டார்! பிறகென்ன? தமிழ்நாடு உருப்பட்டாற் போலத்தான்!