01.09.2008
இலங்கையில் சுமார் 30 வீதமான சிறுவர் சிறுமியர் குறைபோஷாக்கினால் அல்லலுறுவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக் காட்டியுள்ளது. |
இடம்பெயர்ந்து வாழும் குழந்தைகளே பெருமளவில் குறைபோஷாக்கினால் பீடிக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் ஐந்து வயதுக்குக் குறைந்த பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் எடை குறைந்து காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தப் பிரதேசங்களில் உள்ள சிசுக்களின் இரத்தத்தில் இரும்புச் சத்து மிகக் குறைந்தளவில் காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது. |