16.08.2008.
இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை காரணமாக வரவு செலவுத்திட்டத்தில் 30 வீதமான நிதி, யுத்தr; செலவீனம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிரபல பொருளியல் சஞ்சிகை “தி எகனோமிஸ்ட்” தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்தம் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளதாக அந்தச் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை, ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் கிடைக்கப் பெறாவிட்டால் அது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பணவீக்கம் மிகவும் உயர்வடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிதியியல் கொள்கைகளின் காரணமாக எதிர்காலத்தில் பொருளாதாரம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என அந்தச் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.