28 வது பெண்கள் சந்திப்பு 2009
புலம்பெயர் வாழ் பெண்களின் 28வது பெண்கள் சந்திப்பானது எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி சனிக்கிழமை சுவிஸில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
கலந்து கொள்ள விரும்புவர்கள்:
தொடர்புகட்கு,
00 41 55 2801778 , 0041 79 3306168
will it be another “pillayan – kanuna” show?
சுகந்தி,
நீங்கள் சொல்வது மிகச்சரி. இந்த முறை மகிந்த கருணா டக்ளஸ் பிள்ளையான் ஷோ ஒன்று தான் நடக்கும். அத்தோடு சில தன்னார்வ நிறுவனங்கள் வந்து பெப்பே காட்டிவிட்டுப் போகும்.
அன்பான றஞ்சிக்கு
மேலே காணப்படும் இரு பின்னூட்டங்களும் உங்களுக்கு மனவருத்தத்தை தரக்கூடும். பெண்கள் சந்திப்பு பற்றிய யதார்த்தம் இவ்வாறான பார்வையைத்தான் பலரிடம் கொண்டிருக்கிறது. ஆளுமையும் செயல்திறனும் கொண்ட நீங்கள் இம்முறை நடைபெற இருக்கும் பெண்கள் சந்திப்பை வன்முறை ஆராதிப்பாளர்களிடமிருந்தும் இவர்களுக்கு நியாயம் கற்பிப்பவர்களிடம் இருந்தும் ஏன் காப்பாற்ற முயலக்கூடாது.? இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சந்திப்புபோன்ற களங்களின் தேவையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த ஆக்க பூர்வமான செயற்பாடுகளும் அவசியம் என்பதில் யாருக்கும் எந்தவித கருத்து முரண்பாடுகளும் இருக்கமுடியாது. ஆனால் பெண்கள் சந்திப்பை தனிப்பட்ட நலன்களுக்காகவும் இருப்புக்களுக்காகவும் தவறான சக்திகளால் ஆளப்படுவதாக எண்ணத்தோன்றுகிறது. இதனால் நீங்கள் முன்னெடுக்கின்ற செயல்பாடுகள் அர்த்தமற்றதாக மாறக்கூடிய சூழல் உருவாகிவிடுகிறது. ஆளுமை மிக்க நீங்கள் ஏன் இவற்றின் மீதான கவனத்தை செலுத்தமுடியாமல் போகின்றது?
இக் கருத்துக்கள் ஆண்வயப்பட்ட துடைப்பானின் கருத்தாக எண்ணாமல் தோழமையான கருத்தாக எண்ண முயன்றால் சந்தோசம்.
தோழமையோடு
துடைப்பான்
பெண்கள் சந்திப்பு சரி இலக்கியச்சந்திப்ப சரி எல்லாம் ஒரே வகைப்பட்டவைதான். ஒரு சிலருடைய தனிப்பட்ட ஆளமைகளே இவை நடைபெறக்காரணம்.
இச்சந்திப்புகளை நடத்துபவா;கள் ஜனநாயக எல்லைக்குள் இவற்றைநடத்தினாலே போதும். வன்முறையற்ற நடத்தல் இவற்றின் பராட்டப்படஅம்சம். கருத்துள்ளவா;கள் கருத்துக்களால் மோதிப்பார்கட்டடும். மற்றவா;கள் வெளியே நின்று ஒன்றும் ஆகப்போவதில்லை.
இதில் கலந்து கொள்பவா;கள் சரத்nhபன்சாகாவாக இருந்தால் என்ன? டக்ளஸ் பிள்ளையான் ராஜேஸ்அக்காவாக இருந்தாலென்ன? அவா;களை நேரில் கருத்துரீதியாக சந்திக்கவேண்டியதுதானே!
திரு. துடைப்பான் போன்றவா;கள் வன்முறைஎதிர்ப்பாளா;களிடம் இருந்து இதுபோன்ற சந்திப்புகளை காப்பாற்ற ஏன் ஆளுமைமிக்க ரங்சி போன்றவா;களுக்கு உதவக்கூடாது.
எல்லை பிரித்து கன்னைபிரித்து கிளித்தட்டு விளையாட்டு வேண்டாம். பரந்தவெளி திறந்தவிவாதம் அதுவே இன்றையதேவை.
நன்றி துடைப்பான் உங்கள் அன்பான கருத்துக்கு உங்கள் கருத்துக்களை நிச்சயமாக நான் கருத்தில் எடுத்துக் கொள்கிறேன் அவற்றை பரிசீலிக்கவும் கவனம் செலுத்தவும் முனைகின்றேன். உண்மையில் இப்பின்னூட்டம் இடுபவர்கள் தமது சொந்தப் பெயரில் வந்து கருத்துக்களை எழுதும் போது இருக்கின்ற கருத்து வலிமை அவர்களின் பார்வையை நாம் பரிசீலிக்கலாம் அவர்களுக்கு பதில் அளிக்கவோ அல்லது என்னை என் நிலைப்பாட்டை என் வேலைத்திட்டத்தை அல்லது என் மீதான விமர்சனங்கங்களை எதிர் கொள்ளலாம். ஆனால் என் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியினால் அல்லது பொறாமையினால் பலர் வந்து புனைபெயர்களில் வேலையில்லாமல் எழுதிக் கொண்டிருக்கும் போது இவர்களின் கருத்துக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என தோன்றுகிறது துடைப்பான். என் நேரத்தை இவர்களுக்கு பதில் சொல்வதிலோ அல்லது நான் மனம் வருத்தப்படுவதையோ தவிர்த்து அந்த நேரத்தில் இந்த சமூகத்திற்கு என்னால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்யவே விரும்புகிறேன். இன்று வடக்கு, கிழக்கில் 400000 மக்கள் அகதிகளாக தவிக்கும் இந் நேரத்தில் அதைப்பற்றிய விவாதங்கள் எமது தேசியம் பற்றிய விவாதங்கள் விமர்சனங்கள் என்பன இன்று அவசியம் எமது முரண்பாடுகளை களைந்து குறைந்த பட்டசத்தில் ஒன்றுபடும் அரசியல் வேலைத்திட்டங்கள் உட்பட பல விடயங்களை நாம் விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் பெண்கள் சந்திப்பும் அதற்கு விதிவிலக்கல்ல இம்முறை நிச்சயமாக மக்கள் சார்ந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கும் என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து என் மீதான உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள் அப்பொழுது தான் நாம் விடும் தவறுகள் எமக்கு தெரியும் அதை சுய விமர்சனம் செய்யவும் என்னை எம்மை நாம் வளர்த்துக்கொள்ளவும் முடியும். என நம்புகிறேன். மிக்க நன்றி துடைப்பான் உங்கள் கருத்துக்கு
நட்புடன் நண்பர்களுக்கு.
இன்றைய தேவை வாழ்வின் மீது நம்பிக்கையிழந்து போயிருக்கின்ற மனிதர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வேலைத்திட்டங்களை முன்வைப்பதே…குறிப்பாக இனிவரும் காலங்களில் பெண்ணிய பார்வை கொண்ட மனிதர்களின் தலைமைத்துவமே சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தேவையானது எள்றால் மிகையல்ல….இதை நிகழ்கால பிரச்சனைகளுக்கு தலைமை கொடுப்பதிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும்…ஆனால் அவ்வாறான ஒரு நம்பிக்கையை கனடாவில நடந்த பெண்கள் சந்திப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் தரவில்லை….கடந்த ஆண்டு ஈழத்தில் போர் அதன் ஊச்சக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததை நாம் அணைவரும் அறிவோம். ஆனால் ஆண்களும் அனுமதிக்கப்பட்ட இறுதி நாள் பெண்கள் சந்திப்பு பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்களை முன்வைத்தாலும் நிகழ்கால நிகழ்வுக்கு தமது பங்களிப்பு என்ன என்பது தொடர்பாக மெளனமே நிலவியது…அன்று அது தொடர்பாக சிந்தித்து கலந்துரையாடியிருந்தால் அதன் பின்நாட்களில் நடைபெற்ற எழுந்தமானமான உணர்ச்சிபூர்வமான போராட்டங்களுக்கு பிரக்ஞையான உணர்வுபூர்வமான தலைமையொன்றை பெண்கள் சந்திப்பு வழங்கியிருந்திருக்கலாம்….ஆனால் தவறவிட்டுவிட்டனா;..இது தொடர்பாக ஒரு குறிப்பு ஒன்றும் எழுது; அனுப்பியிருந்தென்…மேலும் பெண்கள் சந்திப்புக்கு முன்பே ஒருவருடன் சமாதானம் போர்நிறுத்தம் தொடா;பாக நாம் சில ;செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கூறியபொழுது நம்பிக்கையினமான பதிலே வந்தது…
மேலும் அந்த நாள் புலி எதிர்ப்பு சார்பு என்ற குழு நிலை கலந்துரையாடல் அல்லது முரண்பாடு அல்லது சண்டையாகவே இருந்தது…. அந்த நாளுக்கு முற்பட்ட மூன்று நாட்களும் என்ன நடந்தது என்பது ஆண் என்றபடியால் எனக்கு த் தெரியாது….இறுதியாக நிகழ்கால பிரச்சனைகளுக்கு பெண்கள் சந்திப்பு தலைமைத்துவம் கொடுக்க முயலுமாயின் அவா;களின் உழைப்பு வீண்போகாது என்பது எனது எண்ணம்…
நன்றி….
எனது குறிப்பை பார்வையிட யறயமநபெைெயறயசநநெளள.ழசப