28 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தின் க்யூ காவல்துறையினர் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்.படகு மூலம் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளனர். குறித்த படகையும், படகில் பயணித்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கூடலூர் கடற்பகுதியின் ஊடாக இவர்கள் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முயற்சித்துள்ளனர்.
படகுப் பயணிகளிலிடமிருந்து தலா ஒரு லட்ச ரூபா கட்டணமாக அறவீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் தஞ்சம் கோரிச் சென்ற அகதிகள் விலங்குகளைப் போன்று நடத்தப்படும் நிலையில், அவர்கள் அங்கிருந்த்து தப்பிச்செலும் முயற்சியின் ஒருபகுதியாகவே இது கருதப்படுகின்றது. மேலும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் மேற்குநாடுகள் தவறான விம்பம் இன்னும் ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து அழியவில்லை.
ஐயோ சாமி.. நீங்களெல்லாம் ஓடிப்போனா நாங்கெல்லாம் எப்படி பொழைப்பு நடத்துறது…?
That is good news. Prosperous like Singapore. Where worlds meet. Getting benefits from anybody and everybody. Great place to live and raise a family.