அமெரிக்கா முதலாளி வாரன் ஆண்டர்சனின் லாபவெறிக்குப் பலியான போபால் மக்கள் 20,000 பேருக்கும் இந்திய் ஆளும் வர்க்கங்கள் இணைந்து செய்த துரோகங்கள் முடிந்து ஆண்டுகள் 26 ஆகிவிட்டன. போபால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைக் கொலை செய்த ஆளும் வர்க்கங்கள் இப்போது மக்களை ஏமாற்ற நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது போபால் விஷ வாயு கசிவு சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் அறிவித்துள்ளார். பேரவையில் எதிர்க்கட்சி (காங்கிரஸ்) எம்.எல்.ஏ. அரிஃப் அகீல் திங்கள்கிழமை கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது பதிலளிக்கையில் அவர் இதைத் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதையும், பாதிக்கப்பட்டவர்கள் உரிய நிவாரணம் பெறுவதையும் உறுதி செய்யவே இந்த கமிஷன் அமைக்கப்படுகிறது என்றார் அவர்.