25 பே‌ர் பாதுகா‌ப்பாக ‌நீ‌‌ந்‌தி கரை சே‌ர்‌ந்தன‌ர்: மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் நட‌த்‌திய தாக்குதல்

மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ன்போது ஆ‌ந்‌திரா- ஒ‌ரிசா எ‌ல்லை‌யி‌ல் உ‌ள்ள ‌நீ‌ர்‌த் தே‌க்க‌த்‌தி‌ல் க‌வி‌‌ழ்‌ந்த பட‌கி‌ல் இரு‌ந்த ந‌க்சலை‌ட் எ‌தி‌ர்‌‌ப்பு‌ப் படை‌யின‌ர் 36 பேரைத் தேடு‌ம் ப‌ணி‌யி‌ல் கட‌ற்படை‌யின‌ர் ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஒ‌ரிசா மா‌நில‌ம் ம‌ல்கா‌ங்‌கி‌ரி மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் உ‌ள்ள மலை‌ப் பகு‌‌தி‌யி‌ல் நே‌ற்று மாவோ‌யி‌ஸ்டுகளு‌க்கு‌ம் பாதுகா‌ப்பு‌ப் ப‌டை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் நட‌ந்தது. இ‌ம்மோத‌லி‌ல் ‌நீ‌ர்‌த்தே‌க்க‌ம் ஒ‌ன்‌றி‌ல் 64 ஆ‌ந்‌‌திர அ‌திரடி‌ப் படை‌யின‌ருட‌ன் இரு‌ந்த படகு க‌வி‌ழ்‌ந்தது.

இ‌தி‌ல் 25 பே‌ர் பாதுகா‌ப்பாக ‌நீ‌‌ந்‌தி நே‌ற்று கரை சே‌ர்‌ந்தன‌ர். இ‌ன்று மே‌லு‌ம் 3 பே‌‌ர் படுகாய‌த்துட‌ன் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு ‌விமான‌ம் மூல‌ம் புவனே‌ஷ்வ‌ர் அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று காவ‌ல் அ‌திகா‌ரிக‌‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

‌மீதமு‌ள்ள 36 பேரை‌த் தேடு‌ம் ப‌ணி‌யி‌ல் கட‌ற்படை‌யின‌ர் ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.