01.05.2009
யாழ்ப்பாணம் புத்தூரில் நடைபெற்ற புதிய ஜனநாயகக் கட்சியின் மே தினக் கூட்டத்;தில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்,வட பிரதேசச் செயலாளர் கா.கதிர்காமநாதன், அரசியல் குழு உறுப்பினர் க.தணிகாசலம்,கட்சியின் வாலிபர் இயக்க வடபிரதேச செயலாளர் பொ.முருகேசு, தொழிற்சங்க செயலாளர் கா.பஞ்சலிங்கம், தொழிற் சங்கவாதி இ.தவராசா ஆகியோர் உரையாற்றுவதையும் கூட்டத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
இன்றைய சூழலில் புகலிடத்தில் புலிகள் அரசு மற்றும் அரசுடன் இயங்கும் அரசு சார்பு குழுக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு கூட்டத்தை ஒரு ஊர்வலத்தை சுதந்நிரமாக செய்யமுடியாமல் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் புலிகள் அரச இராணுவம் ஆயுதக் குழுக்களின் அட்டகாசமும் கொலையும் மலிந்த சூழலில் துணிவோடு தொழிலாளர் உழைக்கும் மக்களுக்காக போராடும் புதிய ஜனநாயகக் கட்சியின் சேவைகளை நாங்கள் பாராட்டியே தீரவேண்டும். தோழர்களே உங்களுக்கு எனது செவ்வணக்கம்.
இனறைய வடக்கின் அரசியல் சூழ்நிலையில்> புதிய ஐனநாயகக் கட்சியின் புரட்சிகர மேதின நிகழ்வு பத்துணர்ச்சியைத் தருகின்றது! இப் புத்தூர் மேதின நிகழ்வை> கடந்தவாரம் தன்சிந்தனையை நிறுத்தியேவிட்ட> இடதுசாரி சிந்தனைச் செயறபாட்டாளர் சிவத்திறகு (தேடகம்) சமர்ப்பணம் செய்கின்றேன்! நீ பாடசாலை மாணவனாக இருநதபொழுதே வரித்துக்கொண்ட சிந்தனைத் செயற்பாட்டை இல்லாதொழிக்க முடியாது! தமிழ்த தேசிய இனத்தின் சுயநிர்னய உரிமைப்போர் மூன்றாவது பாதையின ஊடாக புதிய ஐனநாயகப் புரட்சியை நோக்ககிச் செல்லும்! இதுவே இம் மேதினத்தின் ஊடாக நாம் உமக்குச் செய்யும் இறுதி அஞ்சலி!
எல்லாம் சிவப்பாயிருக்கு…
லைற் என்ன நிறம்?
Dear Comrades , It is not a revolutionary /puradchikara May Day but a pro LTTE reactionary day .They are the agents
of the LTTE. I dont know nothing about you and your position. Pro LTTE means pro Imperialism. Thats all.