இளைஞர்கள் வேலையின்மையால் சிக்கித் தவிக்கும் வரலாறுகாணாத நெருக்கடி பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ளது. நாட்டின் 21 வீதமான இளைஞர்கள் வேலையற்றவர்களாகக் காணப்படுகின்றனர் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. 1992 ஆம் ஆண்டின் பின்னதாக முதல் தடவையாக இவ்வளவு பெருந்தொகையான இளைஞர்கள் வேலையற்றவர்களாகியுள்ளனர். தாராளவாட்த மற்றும் பழமைவாதக் கட்சிகளின் கூட்டாட்சி பிரித்தானியாவில் ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்ற தலையங்கத்தில் பொதுத்துறை வேலைகளை குறைத்து வருகிறது. பட்டதாரிகளின் பிரதான வேலைவாய்ப்புத் தளமாகவிருந்த பொதுத்துறையில் புதிய ஆட்சேர்ப்புகள் அருகியுள்ளன. அதே வேளை சமூக உதவித்தொகைகளை அழித்துவரும் பிரித்தானிய அரசு இளைஞர்கள் மத்தியில் அவலம் மிக்க சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பல்தேசிய நிறுவனங்களின் பணச் சூறையாடலுக்குத் துணைபோகும் அரசு புதிய வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் கூட்டத்தை உருவாக்கி வருகிறது.