இலங்கை முழுவதும் வரலாறு காணாத சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் நுளைந்துகொண்டிருக்கிறது. பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பிள்ளையானைப் போன்றே போதைப் பொருள் கடத்தலில் கைதான கருணாவின் சகபாடி இனியபாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக லஞ்சம் வழங்கிய லலித் வீரதுங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
20A ஆம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி உட்பட அரச அதிகாரிகளை நியமிக்கும் உரிமை இலங்கையின் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சு, தொழில் நுட்பத் துறை அமைச்சு, தொழில்துறை மற்றும் திறன் மேம்படுத்தல் அமைச்சு, வர்த்தக அமைச்சு போன்றன ஒரு தனிமனிதனின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.
20A திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்த மறு நாளே அதன் நடைமுறைகளை அரசு ஆரம்பித்துவிட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசு அதிகாரம் இன ஒடுக்குமுறையைப் பயன்படுத்தியே சர்வாதிகார அரச கட்டமைப்பாக மாற்றம்பெற்றது. இலங்கையில் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான முழக்கத்தை முன்வைக்காத எந்த அரசும் அரசியல் இயக்கமும் குறைந்தபட்ச சனநாயகத்தைக்கூட மீளமைக்க முடியாது என்பது மட்டுமன்றி, ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியை மிக நீண்ட காலத்திற்கு அழிக்க முடியது.