2013 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் உற்பத்தி சாதனை படைத்துள்ளது.2012 ஆம் ஆண்டிடுடன் ஒப்பிடும் போது போதைப் பொருள் பயிர்ச்செய்கை 50 வீதம் அதிகரித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு அமரிக்க இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு முன்னர் ஹெரோயின் போதைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொப்பி பயிர்ச்செய்கை முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. Pittsburgh Post-Gazette என்ற நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் பொப்பி பயிர்ச் செய்கை புறக்கணிக்கத் தக்கதாகவே இருந்தது. தலிபான்கள் பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தனர். ஒரு பகுதி தலிபான்கள் சி.ஐ.ஏ இன் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்கிவந்தனர்.
உள்ளூர் தலிபான்கள் பொப்பி பயிர்ச் செய்கையை முற்றாக தடை செய்திருந்தனர்; இதனால் போதைப் பொருள் வர்த்தகம் தடைப்பட்டுப் போயிருந்தது.
பொப்பி பயிர்ச்செய்கையின் மறு பிறப்பிற்கு அமரிக்க இராணுவம் வசதியேற்படுத்திப் பாதுகாப்பு வழங்கியது. 2001 ஆம் ஆண்டில் அமரிக்க ஆக்கிரமிப்பு நடைபெற்று ஒருவருடங்களுக்கு உள்ளாகவே பொப்பி பயிர்ச்செய்கை 657 வீதத்தால் அதிகரித்து.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் அமரிக்கா விளக்குப் பிடித்துத் தேடிக்கொண்டிருந்த தலிபான்கள் பொப்பி பயிர்ச்செய்கையைத் தேடித்தேடி அழித்துக்கொண்டிருக்க அவற்றிற்கு அமரிக்க இராணுவம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தது.
இன்றையை ஆப்கானின் ஜனாதிபதி ஹமிட் கார்சாயின் சகோதரர் அகமட் வலி கார்சாய் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல உலகின் மிகப்பெரும் போதைப்பொருள் தரகராகக் கருதப்படுபவர். ஆப்கானிஸ்தானில் ஒபியம் போதைப் பொருளின் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்பவர்.
அமெரிக்க அரச ஜனநாயககத்தில் உருவான ஆப்கான் அரச அமைச்சர் ஒருவர் மாற்றுத் தொழில் ஒன்று கிடைக்கும் வரை ஓபியம் உற்பத்தியை நிறுத்த முடியாது என்றார்.