2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பிரித்தானிய மாகாராணியின் ஜூப்ளி நிகழ்வுகளில் கலந்துகொள்ள மகிந்த ராஜபக்ச வந்திருந்தார். மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அவர் செல்லுமிடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புலம் பெயர் தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியிருந்தனர். அப்பொழுது இன்னொரு நிகழ்வும் காதோடு காதுவைத்தது போல இரகசியமாக நடைபெற்றது. பொது நலவாய நாடுகளின் பொருளாதாரக் கூட்டம். அந்த நிகழ்வில் இரண்டு முக்கிய ‘உலகத் தலைவர்கள்’ கலந்து கொண்டு பிரதான உரையாற்றினர். ஒருவர் ஸம்பியா நாட்டின் ஜனாதிபதி மைக்கல் சாட்டா. மற்றையவர் இலங்கையின் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச. அன்றைய இரவு உணவு City of London Corporation இனால் வழங்கப்பட்டது. லண்டனில் பல்தேசிய வர்த்த நிறுவனங்களின் தங்குமடமான இந்த அமைப்பின் பெரும் நிதிவளத்தைக் கொண்டுள்ளது
இந்த இரண்டு தலைவர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குமான பொதுவான ஆர்வம் ஒன்று இருந்தது. அதுதான் வேதாந்தா நிறுவனம். பிரித்தானிய நிறுவனமான வேதாந்தா ஸம்பியாவில் செப்புத் தாது அகழ்வை மேற்கொண்டு அந்த நாட்டின் வளங்களைச் சிதைத்துச் சின்னாபின்னம்மாகியுள்ளது. இலங்கையில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை அகழ்வை மேற்கொண்டுள்ளது. இத் தகவல்களை என்ற நிறுவனம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஸம்பியாவிற்குச் சென்று வேதாந்தாவினால் சிதைக்கப்பட்ட தேசம் தொடர்பான ஆய்வறிகையின் ஒரு பகுதியிலேயே இத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிக்கையின் முழுமை: