அமரிக்க இராணுவம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நேரடியாகவும் மத்திய கிழக்கு நாடுகளில் துணைக்குழுக்கள் ஊடாகவும் தனது ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அங்கெல்லாம் ஒடுக்கப்படும் மக்கள் தமது விடுதலைக்காக உலகின் பலம் மிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடுகின்றனர். 2012 ஆம் ஆண்டு அமரிக்க இராணுவத்தின் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. 2012 இல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட அமரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை 303 ஆகும் எனக் கணிப்பிடுகிறார்கள். ஏகபோக வியாபார நிறுவனங்களுக்காகவும் அவற்றின் சுரண்டலுக்கும் பாதுகாப்பிற்காகவும் நடத்தப்படும் அமரிக்கப் போரின் கோரம் தற்கொலைக்கான அடிப்படைக் காரணமாகும் எனக் கூறப்படுகிறது. 2012 இல் தற்கொலை செய்துகொண்ட இராணுவத்தின் தொகை போரில் இறந்தவர்களின் தொகையிலும் அதிகமாகும்.








