2012 இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் நடைபெற்ற நாடுகளின் பட்டியல் விரிவடந்துள்ளது. இப் படுகொலைகளை நடத்தும் உள்ளூர் அரசுகளின் பின்புலத்தில் பல்தேசிய நலன்கள் உள்ளடங்கியிருப்பதைக் காணலாம். பொதுவாக ஐரோப்பிய அமரிக்க பல்தேசிய நிறுவனங்கள் இனச் சுத்திகரிப்பினதும் இனப்படுகொலையினதும் பின்புலத்தில் செயற்படுகின்றன.
பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்கான அரசுகள் இனப்படுகொலையை நடத்தும் அதே வேளை இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களையும் அவர்களே கையகப்படுத்திக்கொண்டனர்.எதிப்புப் போராட்டங்களை அவர்களே இறுதியில் வலுவற்றதாக மாற்றிவிட்டனர்.
இலங்கையில் தமிழர்கள், மியான்மாரில் முஸ்லீம்கள், எதியோப்பியாவில் ஒராமோ, ஒகாடெனி, அனுயக் இனக் குழுக்கள், துருக்கியில் குர்தீஷ் இன மக்கள் 2012 இல் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட பிரதான இனக்குழுக்களாகக் கருதப்படுகின்றன. தவிர, ஐரோப்பாவில் ரோமா நாடோடி இனக்குழுக்கள் மீதான இனப்படுகொலையும் பேசப்படத்தக்கவகையில் அமைந்தது.
தென்னாபிரிக்காவில் போரெஸ் இனக்குழுவும், கஷ்மீரிலும், நாகாலாந்திலும், இந்தியாவில் பழங்குடி மக்களும் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.
இங்கெல்லாம் பொதுவான் சில பண்புகளைக் காணலாம்:
1. இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டவர்களின் நிறுவனங்களே இனப்படுகொலைக்கு எதிரான மனித உரிமை குறித்துப் பேசினர்.
2. இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் இனக் குழுக்கள் இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் பிழைப்பு வாதத் தலைமைகளல் கையாளப்பட்டனர்
3. இனப்படுகொலை அரசுகளோடு அழிந்து போகும் குழுக்களின் தலைவர்கள் ஒட்டிக்கொண்டனர்
4. இனப்படுகொலைக்கான மூல கானணங்களை விடுத்து குறிகிய அடையாளங்களை முன்நிறுத்தி அழித்தவர்களுடனேயே இணைந்துகொள்ளல்.
இந்தப் படுகொலைகளுக்கு எதிரான உறுதியான எதிர்ப்புப் போராட்டங்கள் இந்திய பழங்குடி மக்கள் மத்தியிலும், நாகாலாந்திலும், கஷ்மீரிகள் மத்தியிலிருந்துமே நடத்தப்பட்டன.
குர்தீஷ் தொழிலாளர் கட்சி அரசைப் பயமுறுத்தும் அளவிற்கு பலமடைந்துள்ளதால் இனப்படுகொலையின் கோரம் தணிந்திருந்தது.
பலஸ்தீனியர்களின் மீதான இனப்படுகொலை எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் தீவிரமடைந்தது.
எத்தியோப்பியாவிலும், தென்னாபிரிக்காவிலும் எதிப்புப் போராட்டங்கள் வலுவிழந்து போயின. இலங்கையிலும் பர்மாவிலும் எதிர்புக்கள் எதுவும் இன்றி இனப்படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டன.
இந்த அனைத்து நாடுகளிலும் அரசியல் சூழலை திட்டமிட்டுக் கையாள்வதன் ஊடாக 2013 இலும் இனப்படுகொலை தடையின்றித் தொடரும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2013 ஆம் ஆண்டில் இனப்படுகொலை கிழக்கு கொங்கோவிலும், ருவாண்டாவிலும், பிரேசிலின் அமசோன் நதிப்படுக்கைப் பகுதியிலும் எதிர்ப்புகள் இன்றி ஆரம்பிக்கபடும் என எதிர்வு கூறப்படுகின்றது.
தெற்காசியாவில் போரின் கோரத்தில் சிக்குண்டு சுரண்டப்படாமல் காணப்பட்ட இலங்கையில் வளங்கள் சுரண்டப்படுவதற்கு இனப்படுகொலை வழிவிடுக்கொடுத்திருக்கிறது.
கலாச்சார உலகமயமாக்கலின் தெற்காசிய முகமாகத் திகழும் இலங்கையை ஐரோப்பிய நாடுகளதும், இந்திய நுகரும் மேட்டுக்குடி வர்க்கப்பகுதியினரதும் சுற்றுலா மையமாக்குவதற்கான முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கையைச் சிறந்த சுற்றுலா மையமாக அறிவித்துள்ளது. பிரஞ்சுத் தொலைக்காட்சி இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி என்றும் அங்கு சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு போராளிகளுக்குப் புனர்வாழ்வு கொடுக்கப்படுகிறது என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்கின்ற அளவிற்கு விரிவடைந்துள்ளது.
மில்லியன்களை முதலீடு செய்திருக்கும் பல்தேசிய நிறுவனங்களின் தேவைக்கேற்ப இந்தப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னும் சில வருடங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் அடையாளம் அழிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மறு புறத்தில் தெற்காசியாவின் பாங்கொக் போன்ற சுற்றுலா மையமாக இலங்கை மாற்றமடையும் நிலை உருவாகிகொண்டிருக்கிறது. இதற்காகவே பெண்களைப் பாலியல் அடிமைகளாக மாற்றும் வேலைத்திட்டங்களை உள்ளூர் அரசு மேற்கொள்கிறது.
தமிழீழ புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்ட இந்த முதலீடுகள், இன்று வெளிப்படையாக பல்தேசிய நிறுவனங்களுக்குப் பலன் வழங்க ஆரம்பித்துள்ளன.
பல்தேசிய நிறுவனனங்களின் திட்டங்களுக்கு உடனடி எதிர்ப்பாக அமையவல்ல இனக் குழுக்களையும் தேசிய இனங்களையும் பலவீனப்படுத்துவதும், சில வேளைகளில் அவற்றை முற்றாக அழிப்பதும் உள்ளூர் மற்றும் ஏகபோக அரசுகளின் தேவையாகின்றது.
பொதுவாக அழிக்கப்படும் எல்லா நாடுகளிலும் ஒரே வகயான வகை மாதிரியே பின்பற்றப்படுகின்றது. பெரும்பான்மை அடையாளத்திற்கு எதிரான தேசியக் குழுக்கள் அழிக்கப்படுகின்றன.
பல் தேசிய நிறுவனங்களுக்கு வியாபாரச் சேவை செய்யும் அனைத்து உள்ளூர் அரசுகளுக்கும் அவற்றின் கொள்கைவகுப்பாளர்களுக்கும், முழுமையாகத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன.
இந்தியாவில் பல்தேசிய நிறுவனங்களின் இந்தத் திட்டத்தை அறிந்து வைத்திருந்த மாவோயிஸ்டுக்கள் அரசிற்கு எதிராகத் உறுதியான போராட்டத்தை நடத்துகின்றனர். இலங்கையில் தவறக வழிநடத்தப்பட்ட போராட்டம் மிகப்பெரும் அழிவை விட்டுச் சென்றிருக்கின்றது. இன்று சுயநிர்ணய உரிமை என்பதே இனவாதம் என்ற கருத்து சாதரண மக்கள் வரை பரப்பபடுகிறது. அதற்குரிய அரசியல் இயக்கங்கள் அதன் ஆரம்ப நிலை உறுப்பினர்களுக்கே தெரியாமல்ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது.
இவ்வாறான புறச் சூழல் ஒன்றில் தேசிய இன அடையாளம் அழிக்கப்பட்டு தெற்காசியாவின் பாங்கொக்காக இலங்கையை மாற்றும் பல்தேசிய சதியை எதிர்கொள்ளும் அரசியல் திட்டம் இன்னும் முன்வைக்கப்ப்டவில்லை. ஆங்காங்கு முன்வைக்கப்பட்ட சில குறிப்பான நடவடிக்கைகள் கூட திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டன.
2013 இல் பின்வரும் நிகழ்வுகள் அதிக சாத்தியமானவையாகத் தென்படுகின்றன:
1.நேட்டோ நாடுகள் வளங்களைச் சுரண்டுவதற்கா ஈரான், சிரியா போன்ற நாடுகள் மீதான இராணுவத் தாக்குதல்களைத் தொடுக்கும். மத்திய கிழக்கில் நேட்டோ மேலும் அதிகமாகப் போர் நடவடிக்கைகளைக் கட்ட்விழ்த்துவிடும்.
2.எத்தியோப்பியாவில் இன மோதல்களை அதிகரிக்க ஆயுதங்களை வழங்கும்.
3. பலஸ்தீனத்தில் இனப்படுகொலை அதி வேகத்தில் நடைபெறும்.
4. ரோமா இனத்தவர் மீதான இனச் சுத்திகரிப்பைக் கணக்கில் கொள்ளாத ஐரோப்பிய நாடுகள் திருப்பியனுப்பும் படலத்தைத் தொடரும்.
5. புதிய தொழில் நுட்பத்தேவைக்கான கனிமங்களைச் சுரண்டுவதற்காக கொங்கோவில் இனப்படுகொலையையும் இன மோதல்களையும் அமரிக்க ஐரோப்பிய நாடுகள் அதிகரிக்கும்.
6.கஷ்மீரில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள்.
7. மத்திய இந்தியாவிலும் தண்டக்காரண்யா காடுகளிலும் மக்களின் போராட்டம் மாவோயிஸ்டுக்கள் தலைமையில் வலுப்பெறும்.
9. இலங்கையில் தமிழர்களின் ஒத்துழைப்போடு பேரினவாத அரசாங்கம் பல்தேசிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும். ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு அழித்துவரும் இனக் குழுக்கள் வரிசையில் தமிழர்கள் பிரதானமானவர்களாக இருப்பார்கள்.
கீழ் வரும் இனக்குழுக்கள் அழிவுகளைச் சந்திக்கும்:
1. ஏகாதிபத்திய அரசுகளோடு சமரசம் செய்து கொண்டு பேரம் பேச முனைபவர்கள்.
2. போராடும் குழுக்களோடு தம்மை இணைத்துக்கொள்ள முயலாதவர்கள்.
3. தயவு தாட்சண்யமற்ற விமர்சனம் சுய விமர்சனம் அடிப்படையில் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.
4. போராடும் வர்க்கங்களை இனம்கண்டு பலப்படுத்தாதவர்கள்.
5. வர்க்கம் சார் அரசியல் இயக்கத்தை நிராகரிப்பவர்கள்
பரிதாபகரமான இந்த சூழலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளத் தயாரற்ற நிலையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தை அதன் சந்தர்ப்பவாதத் தலைமைகள் வழி நடத்திக்கொண்டிருக்கின்றன.
“Please support the genocidal Sri Lanka’s regime change.—Sinnathurai Srivas ” என்ற மின் அஞ்சல் நேற்று பார்த்தேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் ஸுமந்திரன் கும்மல் மேற்குல வியாபார நலன் பேணும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் இருத்த ஓடித்திரிவது இந்த மின் அஞ்சல் மூலம் அம்பலமாகி உள்ளது .
ஐக்கிய தேசியக் கட்சியும் மேற்குலகமும் இணைந்து சர்வதேச வலைப் பின்னல் ஊடாக எமது விடுதலைப் போரை அழிக்க போட்ட் திட்டம் தான் ரணிலின் பேச்சு வார்த்தை நாடகத்தின் ஆரம்பம் . வியாபார நலன்களுக்காக போடப்பட்ட இந்த திட்டத்தை சரியாக அடையாளம் கண்ட தலைவர் தனது மாவீரர் உரையில் அதை தெளிவு படுத்தியும் இருந்தார். இந்த வியாபாரிகளின் திட்டதை முறியடித்து அவர்களையே அவர்கள் விரித்த வலையில் சிக்க வைக்க எடுத்த நகர்வு தான் ரஜபக்சேயை பதவிக்கு கொண்டுவந்த நகர்வு .
மேற்குலகின் வியாபார நலன் நிறைவேறாத நிலையில் சிறீலங்காவில் நடக்கும் இனப்படுகொலை வடிவங்களை அம்பலப்படுத்தி எதிர்க்க வேண்டிய நிலைக்கு மொத்த வியாபாரிகள் தள்ளப்பட்டனர் . இது தமிழர்களுக்கு ஓரளவு சாதகமாக அமைந்துள்ளது.
மேற்குலகின் நட்பு சக்தியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்குலகம் எமக்கு ஒருபொழுதும் ஆதரவுக் குரல் எழுப்பப் போவதில்லை என்பதை நாம் உனர்ந்து கொள்ளவேண்டும் .
மேற்குலகுக்கு ஆதரவான கட்சி என்று ஆட்சிக்கு வருகின்றதோ அன்று எமக்கான ஆதரவுக் குரலை மேற்குலகம் நிறுத்தும் அத்துடன் இன அழிப்பு தடை இன்றி தொடரும் என்பதை உணராத சுமந்திரன் சம்பந்த கும்பல் ஆட்சி மாற்ற பொறிக்குள் விழுந்து இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகத் தவறான அரசியல் தெரிவு .
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒரே நாட்டில் சம உரிமையுடன் வாழலாம் என்ற கனவின் வடிவம் தான் சம்பந்தனின் பேச்சும் சுமந்திரனின் அணமைக்கால அறிக்கைகளும்.
ஐக்கிய தேசியக் கட்சி தலமையில் இனவாத்தை ஒழித்து ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்பலாம் என ஏமாற்ற வியாபாரிகள் முனைகின்றார்கள்.
இனவாத கொக்கு ஒற்றைக் காலில் கண்னை மூடிக் கொண்டு நிண்டாலும் அது இனவாதத்தை மறக்கப் போவதில்லை இன்றுள்ள மேற்குலக- சிறீலங்கா முரண்பாடு என்ற அரசியல் புறச் சூழலை சரியாக பயன்படுத்தி எமது உரிமைப் போரை வெற்றியடைய செய்யவெண்டுமே அன்றி மொக்குத்தனமாக தமிழாராச்சி சிறீவாஸ் போன்ற் அரசியல் அறிவிலிகளும் , சம்பந்தன் , சுமந்திரன் போன்ற் வியாபாரிகளும் முன்வைக்கும் ஒன்றுபட்ட இலங்கை தீர்வும் ஆட்சி மாற்ற கதையும் , கொக்கு பிடிக்க கொக்கின் தலையில் வெண்ணெய் வைக்க திட்டமிட்ட முட்டாளின் கதை போலாகும்.
இது தான் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கு பிடிக்க புறப்பட்ட முட்டாளின் கதை.
கொக்கிறைச்சி (தீர்வை எட்ட ) சாப்பிட ஒரு மூடன் ஆசைப்பாட்டானாம் . அந்த மூடனுக்கு சில மூடர்கள் ஐடியா கொடுத்தார்களாம் . அந்த ஐடியா என்ன தெரியுமா ? கொக்கு கண்ணை மூடி ஒற்றைக்காலில் தண்ணீரில் நிற்கும் பொழுது மெல்லமாக பொய் கொக்கின் தலையில் வெண்ணைக் கட்டியை வைத்துவிட்டு வந்துவிடவேண்டும் . சூரிய வெப்பத்தில் என்னை உருகும் . கொக்கின் கண்களினுள் போகும் . அப்பொழுது லபக்கென்று பொய் பிடித்து கரியாக்கி விடலாம் என்றானாம் . புத்தி சொன்ன முட்டாள் . அதையும் நம்பி ஒற்றைகாலில் நின்ற கொக்குக்கு தலையில் வெண்ணை வைக்க போனானாம் அந்த முட்டாள் . நடந்தது கொக்கு பறந்துவிட்டதாம் . கொக்கு ஒற்றைக்காலில் கண்ணை மூடி நின்றாலும் அவ்வளவு இலகுவாக கொக்கை பிடிக்க முடியாது என்பதை புரிந்துதான் கொக்கை வேட்டையாட வேண்டிய நிலைக்கு மற்றவர்கள் தள்ளப்பட்டார்கள் என்ற உண்மை சொல்லுற முட்டாளுக்கும் புரியவில்லை கேக்கிற முட்டாளுக்கும் புரியவில்லை .
இந்த கொக்கு பிடிக்கிற வேலையைத்தான் சம்பந்தர் ஐயா பாராளுமன்றத்தில் செய்திருக்கின்றார் . சிங்கள கொக்கை அறியாதவர்கள் சிலர் தேசிய அடையாளங்களை நிராகரியுங்கள். கொக்கின் கண்ணில் எண்ணெய் போய்விடும் உரிமையை வென்றுவிடலாம் என்கின்றார்கள்.
சிங்கள மக்களின் பொதுப்புத்தி நிலையை புரிந்து கொண்டால் ஆட்சி மாற்றதின் ஊடாக தீர்வு என்ற எண்ணம் வராது . எங்கடை ஆரியபாலா யதீந்திரா சிங்கள மக்களின் பொதுப் புத்தி பற்றி எழுதிய கட்டுரையை அப்படியே கீழே பதிகின்றேன். மிக நல்ல கட்டுரை . இப்ப அவர் விலை போயிட்டார் அது வேறை விசயம் .
சிங்கள மக்களின் பொதுப் புத்தி நிலை என்ன ?–ஆரியபாலா யதீந்திரா
http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/12/blog-post_863.html
Homourable R. Sampanthan said it right on radio yesterday. They are developing themselves also when they are talking about development all the time. Prime Candidate Mr. Vigneswaran also can speak fluent Sinhala it looks like it. He said, thang thiyana thaththey annuwa……
Mr Sinnathurai Srivas and other TNA coloborators , why regime change? who are your partners? why do you beleive they will not continue the Genocide? please come to a public debate.
It is Apples and Oranges. Sri Lanka is unique. The pacification process is not yet over. President Mahinda Rajapakse seems comfortable among Bodu Bala Sena. I do not feel uncomfortable about that. This morning paper says that Leader Ranil Wickremasinghe is going to mobilize the youth. The Sama Wadi Shishya Sangamaya of the United National Party had got organised by the time I left Peradeniya Campus in 1978. I also prepared myself for the change and journey up north for the first time to the University of Jaffna, Sri Lanka.
இனப்படுகொலைகளின் கிரக நிலை பற்றிய சுதர்சன் அவர்களின் இடுகையும், அதற்கான சி.சந்திரமெளலிசன் அவர்களின் பின்னூட்டமும் பல உண்மைகளை வெளிப்படுத்தினாலும் இன்றைய ஈழத் தமிழினம் அதனைப் புரிந்துகொள்ளப் போவதில்லை. ஆனால் சிங்களம் அதனைப்புரிந்து மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ளும். சிங்கள மக்களின் பொதுப் புத்தி நிலை என்ன? தமிழ் மக்களின் பொதுப் புத்தி நிலை என்ன? இரண்டும் ஒன்றுதான்!. சிங்களவரை விடவும் நாங்கள் மேலானவர்கள் என்பது தமிழ் மக்களின் பொதுப் புத்தி. தமிழரை விடவும் நாங்கள் மேலானவர்கள் என்பது சிங்கள மக்களின் பொதுப் புத்தி. ஆனால் முடியாட்சி கொண்ட மன்னர் காலத்திலிருந்தே சிங்களர் பொதுப் புத்திக்கு ஒரு நிலையான சிங்களம் என்ற தலைமை இருந்துவருகின்றது. தமிழருக்கு அது இல்லை. தமிழரையும், சிங்களரையும் தமிழரே ஆண்ட வரலாறுகள் இருந்தாலும் அது சேர, சோழ, பாண்டியர், பல்லவர் முதலாக இன்று பிபாகரன் வரையில் மாறுபட்ட இனத் தலைமைகளே தமிழினத்திற்கு வந்துபோயுள்ளன. நிலையான தலைமை என்று ஒன்று தமிழருக்கு இருந்ததில்லை. மாறாக ஒவ்வொரு தமிழனுமே இன்று தன்னைத்தானே தலைவனாக வரித்துக் கொள்ளும் நிலையில் உள்ளான். இந்தத் தன்மை மாறாது இருப்பதற்கு ஆரியக் கடவுள்களும், வர்ணாச்சிரம நெறிமுறைகளும் பக்கபலமாக பேருதவி புரிகின்றன. இன்று பிரபாகரன் பெயரில் போராட முற்படுபவர்களும் இத்தன்மையிலிருந்து மீளமுடியாத நிலையிலிருந்து செயல்படுவதையே காணமுடிகிறது.
இப்போ விக்கி ஐயா, மகிந்தனோடு மோதி எல்லாத்தையும் வென்று தருவார் எண்டு ஜால்ரா அடிக்கும் அமெரிக்க ஆதரவாளர்கள், தங்கள் முன்பு போட்ட பதிவுகளை திரும்பவும் பார்க்க வேண்டுகிறேன்.
“We will fight, but sometimes we come together. The next door neighbour must not come and say ‘you must divorce’… That is not your business”
Tamil Nadu politicians use the Sri Lankan Tamils’ issue for their own gains, much to the detriment of the Tamils in Sri Lanka, said Justice C.V. Wigneswaran, the chief ministerial candidate of the Tamil National Alliance (TNA) in the upcoming Northern Provincial Council elections.
Speaking to The Hindu in the midst of his campaign here, Mr. Wigneswaran said: “In Tamil Nadu, our problems have been taken to be the ball to be played in the tennis court between the two or three parties. They [Tamil Nadu politicians] start hitting the ball from one side to the other and it is we who get hit by that.”
When politicians in Tamil Nadu say separation is the only solution, the Sinhalese masses – many sections of which fear that Tamils would collaborate with India and form a separate State – get very annoyed.
“We get affected by what is being said there,” said Justice Wigneswaran, a former Supreme Court judge, emphasising that the emotional rhetoric only made Tamils here more vulnerable.
Comparing the Sri Lankan situation to a home where the husband and wife are having a fight, he said: “We will fight, but sometimes we come together. The next door neighbour must not come and say ‘you must divorce, you must divorce’. That is not your business.”
Tamil Nadu’s efforts, he said, must be to see that there was greater responsiveness on the part of different communities in Sri Lanka rather than promoting antipathy towards each other.
He was quick to add that the TNA was very impressed with the support and sympathy of those in Tamil Nadu, but added “the solution is really in our hands”.
The TNA, an amalgam of five parties, has fielded Mr. Wigneswaran despite some internal differences over the choice of the candidate. The alliance, which has done well in elections in recent years, is a front-runner in the September 21 poll.
http://www.thehindu.com/news/international/south-asia/tn-politicians-exploiting-lankan-tamils-issue-cv-wigneswaran/article5121012.ece
கொழும்பில் குடியிருக்கும் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தியது ஏன்…???
தமிழ் அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டதன் விளைவே இது…
30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் பூரண அமைதி நிலவும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை வடமாகாணத்து மக்கள் சரியாகப் பயன்படுத்தி தாங்கள் வாழும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்ளும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.
வடமாகாணசபைத் தேர்தல் நடத்துவதை அரசு தனக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாக கருதுகிறது. இந்தத் தேர்தலில் என்ன முடிவை மக்கள் எடுப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் உங்களுக்கு இப்போது சொல்லமாட்டேன். நான் அதனை இப்போது தெரிவித்தால் நீங்கள் அதைப்பற்றி எழுதி எனக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவீர்கள் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எனக்கு ஒரு விடயத்தை சரியாக கூற முடியும். கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட இந்த வடமாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கூடுதலான வாக்குகள் கிடைக்குமென்பதை தம்மால் உறுதியாக கூற முடியுமென்று சொன்னார்.
“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டது. அது உண்மை. ஆனால், எமது போராட்டம் ஆயுதப்போராட்டம் போன்று முடிவடைய முடியாது. எமது போராட்டம் ஒரு நீதியான போராட்டம். நீங்களும் உங்கள் பேரப்பிள்ளைகளும் இந்த மண்ணில் வாழ வேண்டுமென்றால் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்க செயற்பாடுகளில் ஈடுபடும் போது நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்” என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வடபகுதியில் தேர்தல் கூட்டமொன்றில் பேசியிருப்பது குறித்து இந்த சந்திப்பின் போது ஒரு பத்திரிகை ஆசிரியர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தேர்தல் பிரசாரங்களில் எவரும் எதையும் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை அதிகரிப்பதற்கு எத்தனிப்பார்கள். அதைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுபோன்ற பாரதூரமான கருத்துக்களை தெரிவித்திருந்தால் அது தவறு. ஆனால், சம்பந்தன் போன்ற பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதி இவ்விதம் கருத்துக்களை தெரிவிப்பது தவறு என்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் இல்லையா? இளைப்பாறிய நீதியரசர்கள் இல்லையா? சட்டத்தரணிகள் இல்லையா? கல்விமான்கள் இல்லையா? அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் இல்லையா? அவ்விதம் இருக்கும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் குடியிருக்கும் விக்னேஸ்வரனை தங்களின் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்தது ஏன் என்று கேட்க விரும்புவதாக ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் வடபகுதியின் 82 அரசியல்வாதிகள், 52 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், நீலன் திருச்செல்வம் போன்ற 24 கல்விமான்களை படுகொலை செய்தனர். எல்.ரி.ரி.ஈ. இந்தக் குற்றங்களை செய்திருக்காவிட்டால் வடபகுதியில் பிறந்து, வடக்கில் நிரந்தரமாக வாழும் ஒருவரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது பிரதம வேட்பாளராக தெரிவு செய்திருக்க முடியுமென்றும் ஜனாதிபதி சொன்னார்.
பொதுவாக ஒரு முதலமைச்சர், தான் அதிகாரத்தில் வீற்றிருக்கும் பிரதேசத்திலேயே நிரந்தரமாக வாழ வேண்டும். இவ்வமைப்பின் தற்போதைய முதலமைச்சர் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் வடபகுதியில் நிரந்தரமாக வாழ்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறதென்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, எனது அரசாங்கம் இன்று பாதைகளை அமைத்துவிட்டதனால் அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று அதன் நிர்வாகத்தை கவனிப்பதற்கான வாய்ப்பையும் நாம் செய்து கொடுத்துள்ளோம் என்று கூறினார்.
கடந்த காலத்தில் அரசாங்கம் வடபகுதியில் அனைத்து அபிவிருத்தி பணிகளையும் முழுமையாக நிறைவேற்றியது. அங்கு கழிவறைகளைக் கூட நாம் இராணுவத்தினரைப் பயன்படுத்தி நிர்மாணித்துக் கொடுத்தோம். வடக்குக்கு வசந்தம் இருக்கிறது.
ஆனால், தென்னிலங்கைக்கு வசந்தம் இல்லையே, ஹம்பாந்தோட்டைக்கு வசந்தம் இல்லையே. இவ்விதம் தான் எனது அரசாங்கம் சாதி, மத, பிரதேச பேதமின்றி வடபகுதியின் அபிவிருத்திக்கு முழுமையாக உதவியது என்று கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனின் மகள்மார் இரண்டு சிங்கள அரசியல்வாதிகளின் புதல்வர்களை மணந்திருக்கிறார்கள். ஒரு மகள் இந்த திருமணத்தின் மூலம் எனக்கு உறவுக்காரியாகிவிட்டார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறாரே என்று ஓர் ஆசிரியர் கேட்டதற்கு அப்படியான கடிதமொன்று எனக்கு கிடைக்கவில்லையே என்று தெரிவித்த ஜனாதிபதி, பொதுவாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தவுடன் சம்பந்தன் எனக்கு அதுபற்றி தொலைபேசியில் அறிவிப்பார். இந்தக் கடிதத்தைப் பற்றி அறிவிக்கவில்லை. ஆகவே தமது உரையை கேட்டுக் &8!qநிஸிs> ஆதரவாளர்களை மகிழ்விக்க இவ்விதமாக கூறியிருக்கலாம் என்று ஜனாதிபதி கூறினார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இரயில் பாதையை அமைக்க வேண்டுமானால் அப்பாதையின் இரு மருங்கிலும் 500 மீற்றர் தொலைவில் உள்ள கண்ணி வெடிகளை அகற்ற வேண்டுமென்று இந்திய அரசாங்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவித்தனர். அவ்விதம் செய்வதற்கு 10 முதல் 15 வருடகாலம் எடுக்குமென்று மதிப்பீடு செய்த போது இலங்கை இராணுவம் முன்வந்து கண்ணிவெடிகளை மிக விரைவில் அகற்றிவிட்டது.
அவ்விதம் சேவை செய்த இராணுவத்தை வடபகுதியில் இருந்து வெளியேற்றுங்கள் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் கேட்கிறார்கள் என்றும் ஜனதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
(தினகரன்)