சுயாதீன கலை, திரைப்பட கழகம்-
ரொறொன்ரோ.
2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமையுடன் அறியத்தருகிறது.
சுயாதீன கலை, திரைப்பட கழகம் வருடா வருடம் மாற்று ஊடகத்திற்காக தங்களது பங்களிப்பை செய்தவர்களை “ஃ விருது” என்னும் விருதை அளித்து கௌரவிப்பது வழமை. கடந்த ஆண்டுகளில் நாடகர் பாலேந்திரா, ஊடகவியலாளர், நாடகர் பி.விக்னேஸ்வரன், கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் போன்றோருக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” பெறும் திரு. டொமினிக் ஜீவா, கடந்த 45 வருடங்களாக மல்லிகை என்னும் இலக்கிய சஞ்சிகையை இலங்கையில் இருந்து வெளியிட்டு வருகின்றார். இச் சஞ்சிகையில் இன்றைய முண்ணனி எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளனர். கால் நடையாகவும், மிதிவண்டியிலும் ஊர் ஊராக சென்று இப் பத்திரிகையை இவர் விநியோகித்துள்ளார் என்பது எத்தகைய இடைஞ்சல்களுக்கிடையில் இவர் தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்துள்ளார் என்பதற்கு சான்று பகர்கின்றது.
1927 ஜூன் 27ல் பிறந்த இவர் 1966ல் மல்லிகையின் முதலாவது இதழை வெளியிட்டார். தமிழிலக்கியத்தின் முக்கியமான சஞ்சிகைகளில் மல்லிகையின் இடம் முக்கியமானது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ் மக்கள் அனைவருக்கும் சார்பாக குரல் கொடுத்த இவர், சாதியம் போன்ற சமூகத்தின் மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் உரத்து குரல் பதித்தவர். திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு ‘ஃ விருதை” அளிப்பதில் சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமிதப்படுகின்றது.
அமைப்பின் சார்பாக
திரு. ராம் சிவதாசன்
416-804-3443
இவரது நூல்கள்:
சிறுகதைத் தொகுப்புக்கள்
* தண்ணீரும் கண்ணீரும் (சிறுகதைகள், 1960)
* பாதுகை (சிறுகதைகள், 1962)
* சாலையின் திருப்பம் (சிறுகதைகள், 1967)
* வாழ்வின் தரிசனங்கள் (சிறுகதைகள்)
* டொமினிக் ஜீவா சிறுகதைகள் (சிறுகதைகள்)
கட்டுரைத் தொகுப்புக்கள்:
* அனுபவ முத்திரைகள்
* எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
* அச்சுத்தாளினூடாக ஒர் அனுபவ பயணம்
* நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
* முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
மொழிபெயர்ப்பு நூல்
* UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு:கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)
ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்:
* டொமினிக் ஜீவா – கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
* மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
* பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
முதலில் வாழ்த்துக்கள்.
கேள்வி 1. மாற்று ஊடகத்திற்காhக இவர் என்ன செய்துள்ளார்?
கேள்வி2. அரஜாகத்திற்கு எதிராக தனது குரல்களை இவர் ஏன் பதிக்கவில்லை?
கருத்து அவர்களின் கேள்வி சரியானது. திரு. டொமினிக் ஜீவா ஈழத்தில் நடந்த வன்முறைகளுக்கு முக்கிய சூத்திரதாரிகளான புலிகள் இ இலங்கை அரசு பற்றி இதுவரை எந்தவித அபிப்பிராயங்களையும் சொன்னதாக நான் அறியவில்லை. கொழும்பில் இலங்கை அரசாங்கத்தின் விசுவாசியாகவே காலங்களை கழித்துக் கொண்டிருக்கிறார். கருத்துவின் கேள்விகளுக்கு எனது கருத்துக்களுக்கு டொமினிக் ஜீவா அபிமானிகள் அல்லது இந்த விருதை கொடுக்கும் அமைப்பு பதில் கூறுமா? என்ன இருந்தாலும் டொமினிக் ஜீவா மதிக்கப்டவேண்டிய கெளரவிக்கப்டவேண்டிய படைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒருபுறத்தில் நான் அவரின் அபிமானியும்கூட. ஆனால் ஈழத்தில் நடந்த கொலைகளை கொடுமைகளை கண்டும் காணாமல் எப்படி இவரால் இருக்க முடிந்தது. இதுதான் எனது கவலை.
உங்கள் இருவரது கருத்தும் வரவேற்கத்தக்கது. சாதியைக் காட்டி டொமினிக்கை பலர் ஓரங்கட்டியுள்ளனா;. பிராமணருக்கும் மேலாதிக்கத்தினருக்கும் விருதுகளை குவிக்கும் லண்டன் வாழ் பத்மநாபனும் ஜக்கிய நாடுகள் முத்துலிங்கமும் அவரது சகாக்களும் டொமினிக்கை கண்டு கொள்ளவேயில்லை. அவரது முயற்சியையும் இலக்கிய பங்களிப்பையும் இவரகள் நிராகரித்துள்ளார்கள். இத் தருணத்தில் இவ் விருது டொமினிக்கைப் பற்றிய ஒரு விமர்சன ஆய்வுக்கு வித்திட்டுள்ளது. அதை இனியொரு தொடர்வது நல்லது. அவரது நல்ல பக்கங்களையும் அவர் கவனிக்காத அல்லது குரல் கொடுக்காத பக்கங்களும் சுட்டிக் காட்டப்படவேண்டும்.
முன்னால் புலிகள் அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுத்ததாக காட்ப்பட்வர்கள் இன்று தலையாட்டி பொம்மைகளாக உள்ளார்கள் பலரை காட்டிக் கொடுக்கின்றார்கள். பல இளம் போராளிகள் எதிரியிடம் பிடிபடக் கூடாது என கயனைட் அடிக்க இவர்கள் பணம் பெற்று வாழ்கின்றரர்கள். டொமினிக் இவ் வைகையில்லையெனறாலும் அநீதிக்கு எதிராக மெளனமாக இருந்துள்ளார்; என்பது வருந்தத்தக்கது-விமாசனத்துக்குரியது