1
2009 மே மாதம் 18 ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக, நோர்வேயில் வாழும் இருபத்தி ஐந்து வயது ஈழத்தமிழ் இளைஞரான தமிழியம் சுபாஷ் இயக்கி வெளியிட்டிருக்கும் பத்து நிமிடக் குறும்படம் ‘வன்னி எலிகள்’. இருபத்தி நான்கு வயதை எட்டியிருக்கும் சுபாஷ் தனது பதிமூன்றாம் வயதில் வன்னியிலிருந்து நோர்வே நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். சுபாஷின் பிறிதொரு குறும்படம் ‘நான் ஒரு கனவு காணலாமா?’ எனும் எட்டு நிமிடத் திரைப்படம். வன்னி எலிகள் வங்காள தேசத் தலைநகர் தாக்காவில் பதினோறு நாட்கள் நடைபெற்ற குறும்படம் மற்றும் சுயாதீனத் திரைப்படங்களுக்கான உலகத் திரைப்படவிழாவில் சிறந்த குறும்படக் கதைக்கான விருதைப் பெற்றிருக்கிறது. உலகத் திரைப்பட விழாவொன்றில் விருதுபெற்ற முதல் ஈழத் திரைப்படம் என நிச்சயமாக நாம் வன்னி எலிகள் குறும்படத்தைக் குறிப்பிடலாம்.
வன்னி எலிகள் குறும்படம் இலங்கையின் மானிக்பார்ம் முகாமின் இருளிலிருந்து அம்மக்களின் சித்திரவதையின் இடையிலான துயரவாழ்வைச் சொல்ல, நான் ஒரு கனவு காணலாமா? எனும் குறும்படம் யுத்தங்களால் உலகெங்கிலும் அவயவங்களை இழந்து வாழும் இலட்சோப இலட்சக் கணக்கிலான குழந்தைகளின் சோகவாழ்வைச் சொல்கிறது.
முள்ளிவாய்கால் பேரழிவின் போது ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஈழத்தமிழ் பொதுமக்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பில் செயல்பட்ட அதனது ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எந்தவிதமான விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல், கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகள் நேருக்கு நேர் இலங்கை அரச படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதான ஒளிப்பதிவுகளும் வெளியாகி, அதனது நிஜத்தன்மையும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. டப்ளின் மனித உரிமை விசாரணைகள் இலங்கை அரசின் மனித உரிமை உரிமை மீறலையும் போர்க்குற்றங்களையும் பட்டியல் இட்டிருக்கிறது.
ஈழத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதான ஊடகச் செய்திகளும் பதியப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பள்ளிச் சிறுமியொருவர் இலங்கை அரச படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் படையினர் மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வன்னி நிலப்பரப்பில் முகாமிலுள்ள இலங்கை அரசபடையினருக்கும் அகதிகளுக்கும் இடையிலான மோதலில் இலங்கை ராணுவத்தினர் அகதிகளைத் தாக்குதலுக்குட்படுத்திய சம்பவமும் நடந்திருக்கிறது. பத்திரிக்கையாளர் லசந்த கொல்லப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறது. கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பதனை இலங்கையின் சிங்களத்தரப்பு இடதுசாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஓரு புறம் இலங்கையில் நடந்து வருகிற பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் கொண்ட தேர்தல்கள் அரசியல் யதார்த்தமெனில், மறுபுறம் அதே அரசினது மனித உரிமை மீறல்களும், சிறுபான்மையின அழிப்பும், மாற்றுக் கருத்தாளர்கள் அழிப்பும் பிறிதொரு அரசியல் யதார்த்தமாக இருக்கிறது. இந்தப் பிறிதொரு அரசியல் யதார்த்தத்தில் வேர்கொண்ட குறும்படம்தான் வன்னி எலிகள் எனும் திரைப்படம்.
2
நோர்வே நாட்டிலுள்ள ஒரு நகரத்தின் அடிக்குமாடிக் குடியிருப்பில் அமர்ந்தபடி, பனிவெளியில் விளையாடும் குழந்தைகளை ஜன்னலினூடே நோட்டமிட்டபடி, தனது தமிழ் அப்பியாசப் புத்தகத்தில் தமிழ் சொற்களை உருவாக்கி எழுதிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி. சதுரமான இரும்புக் கம்பிகளை இணைக்கும் கயிறுகளில் தொங்கியபடி ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். அப்பியாசப் புத்தகத்தில் எழுதிமுடித்த சிறுமி புத்தகத்தின் வலது கீழ்க்கோடியில் கோட்டுருவத்தில் இரண்டு நீள் சடைகள் கொண்ட சிறுமியைக் கீறுகிறாள். வீட்டின் மீது ஆகாயவிமானம் பறக்கிற அல்லது திடுக்கிடும்படியான ஓசையைக் கேட்டு வீட்டுக் கூரையை நோக்கி முகம் உயர்த்துகிறாள் சிறுமி. வானத்தில் இரண்டு காகங்கள் கரைந்தபடி வானத்தின் குறுக்கே பறந்து போகிறது. இப்போது படத்தின் வெண்திரை வெற்றுக் காகிதமாகப் பிரதியீடாகிறது.
திரையின் வலது கீழ் மூலையில் நீள் சடை கொண்ட சிறுமியின் உருவம் உயிர்பெறுவதற்கு முன்னால், இரண்டு வீடுகளின் கூரைகள் மட்டும் தோன்றுகிறது. கூரைகளுக்கு மேலாக வலப்புறத்தில் வரையப்பெறும் சூரியன் அழிக்கப்பட்டு திரையின் இடது மூலையில் வீடுகளுக்கு மேலாகச் சூரியன் தோன்றுகிறது. திரையின் வலது மூலையில் அசையும் சிறுமியின் கோட்டுச் சித்திரத்தைத் தொடர்ந்து ஒரு சிறுவனும் அவர்களது தந்தையும் கோட்டுச் சித்திரமாகத் தோன்றுகிறார்கள். திரையில் விளையாடக் கட்டம் வரைகிறார்கள். தந்தை தெல்லு விளையாட கல்லைத் தேடி எடுத்து வருகிறார். சிறுவனும் சிறுமியும் மாற்றி மாற்றி நொண்டிக் கொண்டு கட்டங்களைத் தாண்டுகிறார்கள். விளையாட்டின் போக்கில் ஒரு கட்டத்தை நோக்கி கல் எழும்போது தலைக்கு மேல் பறந்துபோகும் ஆகாய விமானத்திலிருந்து வீழும் வெடிகுண்டு மண்ணில் விழுந்து வெடிக்க சிறுவனும் தந்தையும் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து போகிறார்கள். கோட்டுச் சித்திரச் சிறுமி ஒற்றைக் கால் இழந்து சரிகிறாள்.
ஆகாய விமானமும் குண்டுவீச்சும் ஈழக் குழந்தைகளின் கிலியும், இந்தியக் குழந்தைகளின் குதூகலமும் குறித்து ஒப்பீட்டு ரீதியில் பேசிய தமிழக இயக்குனரான சகாதேவனின் சிலோன் குறும்படம் ஞாபகத்தில் வந்துபோகிறது.
இப்போது சிறுமியின் அப்பியாசப் புத்தகத்தின் வலது கீழ் மூலைகளிலெங்கும் எல்லாப் பக்கங்களிலும் கால் இழந்த சிறுமியின் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது. சிறுமியின் முகம் குளோசப்பில் வருகிறது. தொடர்ந்து தாயின் முகம் குளோசப்பில் வருகிறது. அடுத்த காட்சியில் முழு வீடும் காட்சியினுள் வரும்போது மேஜையின் முன் அமர்ந்திருக்கும்; சிறுமி சக்கரநாற்கலியில் அமர்ந்திருப்பது நமக்குத் தெரிகிறது. இப்போது ஜன்னலில் பிற குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்த சிறுமி, வெளியில் கை கால்களை வீசி ஏறி இறங்கி விளையாடும் குழந்தைகள் என விஸ்தீரணமாக வந்த காட்சிகளின் அர்த்தம் நமக்குப் புதிதாகத் தெரிகிறது. ‘நடந்தான்’ எனச் சிறுமி எழுதிய சொல்லுக்குப் பிறிதொரு அர்த்தம் இப்போது விரிகிறது.
தாய் சிறுமியின் சக்கரநற்காலியின் கீழ் அமரும்போது இலட்சோப இலட்சம் குழந்தைகள் உலகெங்கிலும் நடக்கிற போர்களில் அவயவங்களை இழக்கிறார்கள் எனும் செய்தியும், அவர்களது தொகை நோர்வே மக்கள் தொகையைப் போல ஆறுமடங்கு அதிகமானது என்கிற செய்தியும் எழுத்துக்களாக எழுகிறது. இது ஈழக் குழந்தைகளின் அவலம் என்பதையும் தாண்டிய, முழு மனுக்குலம் தழுவிய துயரமாக ஒரு பிரபஞ்ச மயமான குறியீடாக ஆகிறது. மார்டின் லூதர் கிங்குக்கு இருந்த கனவு கறுப்பு வெள்ளையாக இருக்க, சிறுமியின் கனவு ஏழு நிறங்களில் மலரும் வானவில்லின் வடிவத்தை ஒத்ததாக இருக்கிறது. இந்தக் கனவின் வடிவம்தான் நான் ஒரு கனவு காணலாமா? எனும் குறும்படம்.
3
ஓரு ஜோடி எலிகள் ஒன்றையொன்று தொடர்ந்தபடி, சில வேளைகளில் தொடரமுடியாது இருளில் தொலைந்தபடி, வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்ம் முகாமின் கூடாரங்களுக்கு வெளியில் அலைந்து திரிகிறது. முள்கம்பி வேலிகளில் பட்டுத்தெறித்து வறண்ட சருகுகளுக்குள் நுழைந்து துளாவி, எலிகள் ஒன்றையொன்று தமது இணையைத் தேடி அலைந்தபடி இருக்கின்றன.
கூடாரங்களை எலிகள் தாண்டிச் செல்லும்போது மானிக்பார்ம் முகாமில் வதியுறும் அகதிமக்களின் வாழ்வு அவர்களது கூக்குரலாக, அழுகுரலாக, வீறிடலாக இருளிலிருந்து சாவின் ஓலமென எம்மை எட்டுகிறது. தனது தாயிடம் தனது பசியை வெளியிடும் சிறுமி, மாதாவிடம் இறைஞ்சும் கடவுள் பக்தி கொண்ட சிறுமி, அடிமைப்பட்ட மனிதரின் மீட்சிக்கென மனுஷகுமாரனிடம் முறையிடும் மனிதன் என அன்றாட வாழ்வின் அழுகுரல்களை எலிகள் கடந்து போகின்றன.
நாய்கள் தூரத்தில் குரைக்கின்றன. முகாமின் மங்கிய வெளிச்சத்தில் மனித உடல்கள் கிடையாகப் படுத்திருப்பது தெரிகிறது. தொடரும் அழுகுரல் இப்போது ஓலமெனக் கேட்கத் துவங்குகிறது. ‘கொட்டியா, கொட்டியா’ எனச் சொன்னபடி இலங்கைப் படையினர் முகாமிலுள்ள இளைஞர்களை சித்திரவதை செய்கிறார்கள். அலையும் சப்பாத்துக் கால்களும் ஆற்றாமையில் துடிக்கும் கைகால்களும் நிழல்களாகி மறைகின்றன. அடுத்த கூடாரத்தில் தன்னை விட்டுவிட மன்றாடும் பெண்ணின் தீனக்கதறல் உரத்து ஒலிக்க ஒலிக்க, படையினரின் உடல்கள் கும்பலாக பெண் உடலின் மீது வெறிகொண்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுகின்றன.
தனது கைத்துப்பாக்கியால் பெண்ணின் குரலை நிரந்தரமாக முடித்துவைக்கிறான் ஒரு படையினன்.
எலிகள் எல்லாவற்றினதும் சாட்சியாக இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது. அன்று நாள் 2009 ஆம் ஆண்டு ஜூலை மதம் 03 ஆம் திகதி. நேரம் இரவு 10.29 மணி எனும் செய்தி முகாமின் கூடாரங்களின் மீது விழுகிறது.
முகாமுக்கு மனிதர்கள் பதியப்படும்போது அவர்களின் பெயர்களின் மீதான அரச முத்திரை பதிவது போலவே, வன்னி எலிகள் என திரைத் தலைப்பு போடப்படும்போதும் அரச முத்திரை பதிகிறது. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள். எலிகளுக்கும் மனிதர்களுக்ளும் இடையிலான நிரந்தர யுத்தத்தில் எலிகள் போலவே மனிதர்களும் சில வேளைகளில் வேட்டையாடி அழிக்கப்படலாம். எலிகளை அழிக்க நினைப்போருக்கும் எலிக்குமான பகைமை என்பது அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. எலிகள் ஒழிந்த உலகம் என்பது சத்தியமேயில்லை.
அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘எலிப்பத்தாயம்’ திரைப்படமும், உம வரதராஜனின் ‘எலியம்’ சிறுகதையும் மனிதனுக்கு எலிகள் எலுப்பும் கிலி வன்னி எலிகளைப் பார்க்க ஞாபகம் வந்து போகிறது.
4
சுபாஷின் இரண்டு குறும்படங்களும் மிகுந்த தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் எடுக்கப்பட்ட குறும்படங்கள். பெரும்பாலுமான ஈழக் குறும்படங்களில் பொதுவாகத் தவறுகிற இசைக்காலமும் ( மியூசிக் டைம்) கால உணர்வும் (டைம் சென்ஸ்) குறித்த புரிதலுடன் எடுக்கப்பட்ட குறும்படங்கள் இவை. கதைக் கருவுக்கு இயைந்த வகையிலான கதைசொல்லும் லயமிக்க நெறி இந்தக் குறும்படங்களில் இருக்கிறது.
ஒரு குழந்தையின் மனோ நிலையுடன், அவர்தம் அலைவுறும் மனதின் கற்பனையாற்றலுடன் நான் ஒரு கனவு காண முடியுமா? குறும்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் தலைப்பை ஒரு குழந்தைதான் கீறுகிறது. நிற நிறமான பென்சில்களில், ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ (ஐ ஹேவ் எ ட்ரீம்) என ஆங்கிலத்தில் தொடங்கும் தலைப்பு, பிற்பாடாக ‘முடியுமா?’ (கேன்) என அர்த்தம் தரும் சொல்லுடன் புதிய வாக்கியம் அல்லது கேள்வியுடன் (கேன் ஐ ஹேவ் எ ட்ரீம்?) முடிகிறது.
சொற்களை உருவாக்குவதிலுள்ள இந்த நிச்சயமின்மையும் கற்பனையும் குழந்தைகளுக்கு மட்டுமே உரியது. இந்த நிச்சயமின்மையும், நிச்சயங்களை நோக்கிய குழந்தையின் ஏக்கமும் படமெங்கிலும் நிறைந்து கிடக்கிறது. படத்தின் கரு வேறு வேறு விதங்களில் பல்வேறு தமிழக மற்றும் ஈழக் குறும்படங்களில் முன்பே பாவிக்கப்பட்டிருப்பினும், சுபாஷின் இக்குறும்படத்தை மிகச் சிறந்த திரையனுபவமாக மாற்றுவது படத்தின் கச்சிதமான மற்றும் பொருத்தமான குழந்தை மனம் தோய்ந்த கதை சொல்லல் தான்.
வால்ட் டிஸ்னியின் டோம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்களில் மனதைப் பறிகெடுக்காத மனிதர்களே இருக்கமுடியாது. குழந்தைகளின் களங்கமற்ற குறும்புகளையும் வன்முறையையும் நாச வேலைகளையும் அழிவையும் குரூர அழகுடன் செல்லும் படங்கள் பூனையும் எலியும் குறித்த அப்படங்கள். பூனைக்கும் எலிக்கும் மட்டுமல்ல, எலிக்கும் மனிதனுக்குமான போராட்டம் அல்லது யுத்தம் கூட காலம் கடந்து நிகழ்வது, அனாதி காலம் தொட்டு இனியும் தொடர்ந்து செல்வது.
மனிதனும் எலிகளும் எதிர்கொண்டே தீர வேண்டிய ஒரு இருத்தலியல் நெருக்கடி இது. ஹாலிவுட் படமான ‘மௌஸ் ஹன்ட்’ அல்லது எலி வேட்டை இதனால்தான் என்றும் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. எலிக்கும் மனிதனுக்குமான சிறைவாழ்வுப் பதட்டம் பற்றிய அடூர் கோபாலகிருஷ்ணனின் சாகாவரம் பெற்ற ‘எலிப்பத்தாயம்’ இதனால்தான் உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. எலிகள் ஒரே சமயத்தில் எம்மிடம் குதூகலத்தையும், அறுவறுப்பையும், கிலியையும் உண்டாக்குகிறது. குறைந்தபட்சம் தமது அறைக்குள்ளாவது எலிவேட்டையை நடத்தியிருப்பவர்கள் இந்த மனநிலையைத் உணர முடியும்.
எலிகள் குறித்த இந்தச் சுவாரஷ்யம் சுபாஷிடம் முற்றிலும் வேறுவிதமான அனுபவத்துக்கு மடைமாற்றப் பட்டிருக்கிறது.
படம் துவங்கும்போது திரைமுழுக்கவும் தெரியும் இரும்பு முள்வேலியின் பின்புறம் சருகுகளும், பிளாஸ்டிக் பைகளும் மரக்கொப்புகளும் இரைந்துகிடக்கும் அகதிமக்களின் கூடாரங்களுக்கு வெளியில் குறுகுறுவென நம்மை ஈரக்கும் எலிகள், இறுதியில் பயங்கரமான நினைவுகளை, கையறுநிலையிலான மனநிலையை நம்மிடம் விட்டுவிட்டுப் போய்விடுகிறது…
சுபாஷின் இந்த இரண்டு குறும்படங்களும் குறிப்பாக புகலிட தமிழ் சினிமா வரலாற்றிலும், பொதுவாக ஈழச் சினிமா வரலாற்றிலும் பல்வேறு விதங்களில் முக்கியமான குறும்படங்களாக இருக்கின்றன. 2009 மே 18 பேரழிவின் பின் வந்திருக்கும் குறும்படங்கள் மட்டுமல்ல, இரு படங்களில் ஒன்றான வன்னி எலிகள் குறும்படம் மே 18 பேரழிவுக்குப் பின்னான ஈழத் தமிழர் பாடுகளை முதன்முதலாகப் பதிவு செய்திருக்கிறது.
ஈழத் தமிழர்கள் பல்வேறு உலகக் குறும்பட விழாக்களை லண்டனிலும் கனடாவிலும் நடத்தி வந்தபோதிலும், ஈழத் தமிழர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்கா உலகத் திரைப்பட விழாவில் இப்படம் விருது பெற்றிருப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகவே பதிவுபெறத்தக்கது.
அருந்ததி, ஜீவன், புதியவன் போன்ற புகலிட தமிழ் சினிமா முன்னோடிகளுடனும், காலஞ்சென்ற ஈழ இயக்குனர் ஞானரதன் போன்ற மண்சார்ந்தவர்களுடனும் ஒப்பிடும் போது, சுபாஷ் இவர்களது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி எனச் சொல்லவேண்டும். ஈழத் தமிழர் பாடுகளையும் அடையாளத்தையும் ஞாபகம் கொள்ளும் வகையிலான அடுத்த தலைமுறைப் படைப்பாளி வரிசை, சுபாஷின் வழி, எதிர்கால ஈழத் தமிழர் திரைப்பட வெளியில் படைப்பு சார்ந்த நம்பிக்கை தரும் ஒரு சமிக்ஞையாகத் தோன்றியிருக்கிறது.
Based on a true story, IN THE NAME OF BUDDHA takes the audience to the scene of one of the worst genocides the world has witnessed at the end of the 20th century – Sri Lanka during the 1980s. The film recently won the Audience Award for Best Foreign Film at the Newport Beach Film Festival California 2003.
Two armed parties clash with each other’s ethnicity and political ideals at the expense of the very people that live there. The freedom fighters struggle against the Lankan army, and the Indian Peace Keeping Force (IPKF) sent in to resolve the conflict arrive only to deliver even more brutal violence to the innocent.
Yet Buddha and Christ look on in silence.
Caught amidst the violence is Siva, an aspiring doctor, with his family and close friends, who become both witnesses and victims of kidnapping, murder and rape inflicted by the Lankan army and the IPKF. His ideals of peace and common sense and his growing turmoil of thirst for revenge torture his mind and his heart alike. He flees the country in the hope to start a safer life England. His story begins here, as he is telling it to an English Immigration Officer.
Taking nine years in its creative making, the producers K Shanmughathas and Sai George use writer/director Rajesh Touchriver’s debut feature film to introduce the West to the tragedies taking place in what was turned from a prosperous island into a terror-zone.
IN THE NAME OF BUDDHA forces the viewer’s mind to try and work out a solution to the conflict. The answer is complex, but the message is clear: Violence begets violence.
ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும்.
மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுவிடினம் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிரியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.
போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தரி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓரிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்.
பார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அரிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்
Mr.John Praderic,the mame is xeroxing me,that is why I make a difference!.You must accept the “UNIVERSAL” application of Mr.Subash’s “VANNI RATS” and “CAN I DREAM?”.”IN THE NAME OF BUDDHA” gave “ASYLUM APPLICATION” to western “IMMIGRATION OFFICER” pressurizing the application results in favour of them,not any political content,in the name of “IPKF(anti Indian sentiments?)” and Buddha!.That is why West lost interest to make any political backing or at least,recogonizing it!.I think Mr.Yamuna Rajendran try to express some “political content”,which is necessary at this movement of our writings!.”THE THERAVADA BUDDHISM?” in which the “DRAVIDIAN MOVEMENT FOUNDER”, “Mr.AYOTHITHASAN” was converted into,has taken a monsterous shape for the past 30 years as a, military reality!.It is having the capacity to create another Mulliyavaikal among Tamils!.So Tamils must prepare to counte it by preparing to give nearly 2 to 3 crores of lives and blood bath,may be more than Ruwanda!.Iam only writing about the military machine and its mind-set!.
வன்னி எலி அது ஒரு அருமையான ஒளிச்சித்திரம்.
ஜேம்ஸ்! இதில் என்ன தவறு இருக்கிறது? யமுனா மாட்டைப்பற்றி? தெரிந்துவைத்து எழுதியிருக்கிறார் ஜோன் தென்னை மரத்தப்பற்றி? தெரிந்து வைத்து எழுதுகிறார். தென்னயும்? மாடும்? மனிதனுக்கு பயன் தருபவை தானே.மாட்டை தென்னமரத்தில் கட்டிப்போட்டு தெனனமரத்தப்பற்றி எழுதினால் தான் தவறு.
cat eyes தானா Vanni Mouse?
படைப்புகளைப் பார்த்து மலைப்பு அடைபவன் நான். அன்று பொழுது போகாமல்
தொலைக்காட்சியைப் பார்க்கப் போய் அது என்னை
cat eyes பார்க்க வைத்தது. இந்தக் cat eyes பலவருடங்களின் முன்பு பார்த்ததை
சில மாற்றங்களுடன் இன்றைய வன்னி Vanni Mouse பார்கிறதா என்கின்ற கேள்வி
எனக்கு இயற்கையாகவே எழுகின்றது. அந்தக் cat eyes நீயோர்க் நகரத்தில் பார்த்ததிற்கும்
இந்த எலிகள் வன்னியில் பார்பதற்கும் அதிக வித்தியாசம் எதுவும் இல்லை.
Misery – Stephen King (novel) என்கின்ற ஆங்கிலப் படத்தை Julie Ganapthy
ஆக்கிய பாலுமகேந்திராவின் கலைத்துவ திருட்டுத் தனத்தைக் கண்டு
சுருண்டு போனவர்கள் நாங்கள். பாலுமகேந்திராவின் மற்றைய படைப்புகள் பற்றி
பின்பு ஒருவித நம்பிக்கையினமே பலருக்கும் பிறந்திருக்கும். கலைத்துவ திருட்டுக்கள்
ஒன்றும் புதுமையானவைகள் அல்ல. என்றாலும் அவை அருவெருக்கத் தக்கவை.
சரி Vanni Mouse ற்கும் cat eyes ற்கும் தொடர்பு இல்லை என்பதை எப்படி நிருபிக்கப்
போகின்றார் Tamiliam Subas? இதை அவர் செய்ய வேண்டியது அவரின் வருங்கால
கலையிருப்பை காக்கும் என நம்புவோம். அத்தோடு இலங்கைத் தமிழரும் கலைத்துவ
திருட்டுக்களில் சம்பந்தம் இருக்கா இல்லையா என்கின்ற
விவாதத்தை நிறுத்துவதாகவும் இருக்கும் என நம்புவோம்.
இது ஒரு இளம் கலைஞன் மேல் நான் வைக்கும் குற்றச்சாட்டு அல்ல.
அவரிடம் கேட்கும் விளக்கம் மட்டுமே? எனது கருத்தில் பிழை யிருப்பின்
அதற்கான தகுந்த விளக்கத்தை நான் நிட்சயமாக ஏற்றுக் கொள்வேன்.
cat eyes
From the macabre imagination of Stephen King
comes this trio of terrifying tales. In the first
episode, a New York man has trouble giving up cigarettes.
He turns to a shady self-help operation whose hotheaded
owner outlines a litany of incrementally harsh penalties
for those who cannot resist having another puff.
The second story centers on Cressner, a mobster who
works Atlantic City. His wife has been having an affair
with a tennis pro, so Cressner forces the athlete to walk
the ledge around his apartment high-rise. If the athlete
can complete one lap along the overhang, he gets to be with
Cressner’s wife forever. A young girl, in the closing narrative,
has difficulty sleeping. Though her parents suspect the family cat
of wrongdoing, the girl knows better — especially after she spots
a foot-high troll coming out of her bedroom wall..
Misery
Julie Ganapthy is a remake of Stephen King’s
“Misery” which fetched the female …
From: TRUE TAMILPRIDE
Sent: Sun, 13 June, 2010 21:18:09
Subject: முதல் கோணம் முற்றும் கோணம்!!
ஈழத்தமிழர் தமிழியம் சுபாஸ் அவர்களின் படைப்பான “வன்னி எலி” பற்றி ஒருவர் பேஸ்புக்கில் இணைத்த படத்தினை இணைத்திருக்கிறேன்.
அவர் அதில் எழுதி உள்ளதுபோலவே நானும் சுபாஸ் அவர்களை அவமதிக்க இதனை எழுதவில்லை. பெரிதாக சுபாஸ் ஒரு பிழையும் விடவில்லை எனினும் CAT’S EYE என்னும் ஆங்கிலப்படத்தைக் கொப்பி அடித்திருக்கிறார் என்று அவர் குற்றச்சாட்டி இருக்கிறார். இப்படியான ஒரு சிக்கல் வருகிறபோது அதற்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை கலைஞன் என்ற ரீதியில் சுபாஸ் அவர்களுக்கு உண்டு.
கிட்டத்தட்ட ஈழத்தமிழ் சினிமா என்ற ஒன்று மறுபடி இவரின் “வன்னி மெளவுஸ்” மூலம் முளைத் தெளுகிறது என்ற படத்தினைக் எம்மவர்கள் காட்டிவிட்டார்கள்.
ஆகவே சுபாஸ் அமைதியாக இருந்தால் எமக்கு அது நல்லதல்ல… ஆகவே சுபாஸ் அவர்களைத் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
முதல் கோணம் முற்றும் கோணம்!!??!
Hi True Tamilpride
I know Subas very well. I also saw the film Cat’s Eye. I do not see any relevance with Vanni Mouse other than that a cat acts in that and two mice act in Subas’ Vanni Mouse. Of course there are two or three scenes in cat’s Eye in the view point of the said cat. That does not mean Subas copied Cat’s Eye. Cat’s Eye telling a story but Subas’ Vanni Mouse shows an important truth which was deliberatly hidden to the public eyes. I do not think what the critic of Vanni Mouse said has any serious point in it as what he tried to say is not there in Vanni Mouse. I wonder whether it is a sort of propaganda to discourage the thinking of our lads and their determination to bring forward the Eelam Cinema. We better stop this argument if not we may be providing him a platform for him to make fame by negetive propaganda of his. Subas has nothing to worry about this. “Pottuvar Pottaddum, puluthi vaari marnmal thoottuvar thoottaddum. Aeatta thoru katuththai emm urllam aeattidin eduththuraippom nillom anjom” Thank you – Sel Job Joseph – President Eelavar Cinearts Council.
நக்கீரன் பொய் .
http://www.facebook.com/profile.php?id=100000391452103
ஒரு இலங்கைத் த்மிழ் இளைஞன் தயாரித்த இரண்டு படங்கள் பார்த்தேன் , வன்னி எலி (Vஅன்னி மொஉசெ)என்ற் ஒரு படம் மற்றது “Cஅன் ஈ கவெ அ ட்ரெஅம்” இரன்டும் அருமை. இது பல சர்வதேச பரிசுகளையும் பெற்ரிருக்கிறது.நல்லவ்ர்கள் எல்லோரும் இதற்குப் பாராட்டி உள்ளார்கள். யமுனா ராஜேந்திரன் போன்றவர்களின் சிறந்த விமர்சனமும் வந்துள்ளது…
ஆனால் இதைப் பொறுக்க முடியாத சிலர் எலி என்ற பெயர் வந்ததற்காக இதை அதன் மறு கதை என்றவாறு பொறாமையில் பிதற்றுகிறார்.
பாலு மஹேந்திராவால் வரிக்கு வரி காட்சிக்குக் காட்சி பிரதி செய்யப் பட்ட ஜுலி கணபதியுடன் ஒப்பிடுகிறார்
நக்கீரன் அவர்களே உங்களது இந்தப் பொய்க் குற்றச்சாட்டை சர்வதேச திரைப்பட ஒப்பீட்டாளர் ஒருவரின் முன் நிரூபித்தால் நான் உம்மிடம் எல்லோர் முன்னிலையில் மன்னிப்புக் கேட்பது மல்லாமல் எழுதுவதையும் விடுகிறேன். சுபாஸ் படம் தயாரிப்பதை நிறுத்தும் படியும் கோரிக்கை விடுகிறேன்.
அந்த இளம் வயதில் சுபாஸ் பெற்ற விருதுகளைப் பார்த்து மகிழ்ச்சியடையும் நக்கீரனே. உப்படியாக பொறாமைப்படும் உம்மிடம் யார் நெற்றிக்கண் திறப்பார்கள்..
. ஜமுனா ரஜேந்திரனதும் விமர்சங்களைப் பாருங்கள் இங்கே , நக்கீரனுன் பொறாமையின் அளவை அளக்க முடியுமாயின் அளவுங்கள்
my face book Note comment
http://www.facebook.com/note.php?saved&¬e_id=123436047714745#!/notes/pathmanathan-nalliah/nakkiran-elutuvatu-poy-/123436047714745
காலம் காலமாய் நீ விலங்கிடப்பட்டு வேற்றூ மனிதர் உன்னை ஆண்டும் உன் பிறவிக் குணமான முட்டையில் மயிர் பிடுங்கும் குணம் மாறவில்லையே?
ஐயா நக்கீரன் பொய் சொல்லாலம் அனால் உன் அம்மாவை கொல்லும் பொய் அல்லா
http://www.facebook.com/note.php?saved&¬e_id=123436047714745#!/profile.php?id=100000391452103