1998ஆம் ஆண்டில் போக்ரானில் நடத்திய ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை குறித்த சர்ச்சை தேவையற்றது என்று கூறிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், 200 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தும் அணு குண்டை தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.
மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அனில் ககோட்கர், “1998ஆம் ஆண்டு நாம் நடத்திய சோதனைகள் முழுமையான வெற்றி என்பதை மீண்டும் நான் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தச் சோதனையின் இலக்கை நாம் முழுமையாக எட்டியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
“அந்தச் சோதனைகளின் மூலம் அணு குண்டையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் மிகக் குறைந்த அளவில் இருந்து 200 கிலோ டன் சக்தி கொண்டது வரை தயாரிக்கும் வல்லமையைப் பெற்றுள்ளோம்” என்று கூறியுள்ள அனில் ககோட்கர், அச்சோதனை தொடர்பான சர்ச்சைகள் தேவையற்றது என்று கூறியுள்ளார்.
1998ஆம் ஆண்டு போக்ரானில் நடந்த சோதனையின் போது பாபா அணு சக்தி ஆய்வு மய்யத்தின் இயக்குனார இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.