இலங்கையில் இரண்டு மாதங்களின் பின்னர் பல தரப்புக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழகத்தில் 20 வீதமான மாணவர்களே சமூகமளித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஆரம்பமான பல்கலைக்கழகம் யாழ்ப்பாண மாவடத்திற்கு வெளியிலிருந்து மாணவர்கள் இன்னும் வந்து சேராமையினாலேயே வரவு குறைவாகக் காணப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாக மட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசால் காரணமின்றிக் கைதான மாணவர்கள் இன்னும் இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.