70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.
மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.
இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:
1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.
2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.
3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.
4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
நாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.
எமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு நியாயமாகத் தெரிந்தவை தான் இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.
அரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.
அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.
கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.
இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.
எங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.
இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.
துரையப்பா கொலை நிகழ்ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.
துரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான் தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.
அவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.
எம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.
எமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.
இதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.
இந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம் கண்டு நான் வியப்படந்திருக்கிறேன்.பலர் அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.
என்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.
20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.
இவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை உருவாக்கப்படுகிறது. இந்தப் பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.
காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.
இந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.
இதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.
இதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.
இவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.
இப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.
இதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.
மைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.
துணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி முகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.
அதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.
அவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத்தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.
இதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.
மைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.
அப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை. எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.
அந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.
தொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின் ஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம்……
(மூன்றாம் பதிவு சில நாட்களில்..)
குறிப்பு : இதனை இனொயொருவில் இருந்து ஏனைய இணையங்களில் மீள் பதிவிடுபவர்கள் கட்டுரைக்கான பின்னூடங்களில் பொறுப்புணர்வுடன் கட்டுரையை மேலும் முழுமையான ஆவணமாகச் செழுமைப்படுத்துமாறும், ஆக்கபூர்வமற்ற, மன உழைச்சலைத் தூண்டும் கருத்துக்களைத் தவிர்ர்குமாறும் வேண்டுகிறோம்.
(இன்னும் வரும்…)
very good imagine
துரோகிகளின் கற்பனையை தாங்கிப்பிடிக்கும் ஆயுதமாக இனிஒரு மாறி வருகிறதோ ஜெயமோகன் இப்படித்தான் முதலில் எதிர்த்து பின்பு தூக்கிவிட்டார்கள்.. இப்போ பிரபாகரனை தூக்கிவிட்டு இப்போது கீழே வீச ஜெகத்கஸ்பர் வழியில் செல்கிறது இனிஒரு
‘காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. ‘
திருநாவுக்கரசு எப்போ காங்கேசன்துறைதொகுதி எம்பியாக இருந்தார். அவர் வட்டுக்கோட்டைத்தொகுதி எம்பி. அதுவும் 1977 ன் பின்னர்தான்
‘காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. ‘
திருநாவுக்கரசு எப்போ காங்கேசன்துறைதொகுதி எம்பியாக இருந்தார். அவர் வட்டுக்கோட்டைத்தொகுதி எம்பி. அதுவும் 1977 ன் பின்னர்தான்
ஐயர் பற்றிய மேலதிக தகவல்கள் தேவை. அவசியமானதும் கூட. விடுதலைப்புலிகளையோ பிரபாகரனையோ பற்றி சாட்சிசொல்வதற்கு ஆரம்பகாலத்தில் இயக்கத்திலிருந்தார் என்ற சாட்சி மட்டும் போதாது. அவா; முள்ளிவாய்க்கால் வரை தமிழழீழப்போராட்டத்தில் என்ன பங்கு வகித்துக்கொண்டிருந்தார் என்பது முக்கியம். இல்லாவிடில் வெறும் நக்கீரன் விளையாட்டாய் போய்விடும். துப்பறியும் நாவல் படிக்க எமக்கிப்போ நாட்டமில்லை.
ஐயர் அவர்கள் 80களிலேயே தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வேறொரு நாட்டில் வாழ்கிறார்.
நக்கீரன் , மத(ம்) போதகர் ஜெகத் கஸ்பார் ஆகியோர் வரிசையில் ஐயரும் எழுத ஆரம்பித்திருக்கிறார். காற்றுள்ள போதே தூற்றுக் கொள்ள முயல்வது மட்டும் புரிகிறது. பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் லண்டனில் இன்னொரு கொலை விழுந்திருக்கும். .
// நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன//
இவை கோரமா இல்லையா என்பது இன்றைய நிலையில் வைத்து ஆராயப்பட வேண்டி விடயமல்ல. இது தொடர்பாக ஏற்கனவே வழங்கியிருந்த பின்னூட்டத்தில் தெரியப்படுத்தியிருந்தேன். உங்கள் முதலாவது பதிவிற்கும் இரண்டாவது பதிவிற்கும் இடையில் சில முரண்பாடுகள் உள்ளன. இது ஒருவரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் வண்ணம் தொடரப்படும் முயற்சியாகத் தெரிகின்றது.
1976 மே மாதத்திற்குப் பின்னர் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு இல்லை என்பதும் சில மாற்றங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருப் பெற்றதும் வரலாறு.
உங்களின் இப் பதிவிற்குப் பின்னர் நீங்கள் குறிப்பாக அக்காலகட்டம் தொடர்பாக வெளிவந்த புத்தகங்கள் சிலவற்றைப் படித்துப் பார்த்து அதன் பின்னர் எழுதுவது சிறந்தது. அவ்வாறு இல்லாதுவிடில் புனையப்பட முயற்சிக்கும் விடயங்கள் சரியாகப் பொருந்தாது போகும்…
வணக்கம் ஐயா,
புலிகளில் இருந்த போதும், பின்னர் குமணன் உடன் சேர்ந்து புளட்டை உருவாகிய போதும், நேர்மையானவர் எனப் பெயர் பெற்றவர் நீங்கள். உண்மையாகவே தகவல்களை சொல்வீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வளவும் நாளும் எத்தனை பேர் கேட்டும் எழுதாமல் இருந்த நீங்கள் எழுத வந்திருப்பது என் போன்றவர்களுக்கு ம்கிழ்ச்சியாக இருக்கிறது. லண்டனில் இருக்கும் ராகவன், சுவிசில் இருக்கும் லோகன், பிரான்சில் வசிக்கும் கிருபா போன்றோர் தொடர்பாக அடிக்கடி குறிப்பிடுகிரீர்கள். ஏன் அவர்கள் உங்களுடன் சேர்ந்து இந்த எழுத்தை மெருகூட்ட வரவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. மற்றப்படி, புதியவர்கள் உங்களை லண்டன் பத்மனாப ஐயரோடு சேர்த்து குழப்பி விடுகிறார்கள்.
புலிகளின் ஆவணங்களிலும் நீங்கள் ஐயர் என்றே குறிப்பிடப் பட்டிருப்பது பலருக்குத் தெரியாத விடயம். இனியொரு காரர்களாவது இவ்வாறான சிறு குறிப்புக்களைக் கொடுக்கலாமே?
தாங்கள் VOTE திவாகரனா?
இன்னும் ஒரு கேள்வி: பேபி சுப்ரமணியம்> நந்தன், குமரப்பா போன்றோர் பற்றி ஏன் சொல்லவில்லை?
ஜகத் கஸ்பரின் எழுத்துகளைப்போல் துரோகம் என்பதை மெதுவான விசமாக ஏற்றும் பணியில் அய்யரும் இனிஒரு.காம் கூட்டோ… விவாதம் எதையும் தாங்கும் மனம் உள்ளது துரோகம் தாங்கும் மனம் இல்லை… அய்யரைத்தொடர்ந்து கையாலாகா துரோகிகள் எத்தனை பேரின் உரையை உண்மை சாட்சி என் இனிஒரு வெளியிட உள்ளதோ.. பாவப்பட்ட தமிழினத்தின் மீது இன்னும் எத்தனை துரோக கணைகளோ?
இங்கு பின்னூட்டமிடுபவர்கள் அனேகமானோர் பொறுப்புணர்வு இல்லாத 1976க்கு பின்னர் பிறந்தவர்களும் போராட்ட வரலாற்றினை முன் பின் அறியாதவர்களும் பிரபாகரனின் உண்மை வரலாற்றினை அறியவிரும்பாத புலிகளின் தீவிர அபிமானிகளுமே பொறுப்புணர்வு அற்றவகையில் மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள்.
இங்கு ஜயர் எந்தவித ஓளிவு மறைவுமின்றி கடந்தகாலத்தை வெளிப்படுத்த முனைகிறார்.
மேலும் ஜயரின் பதிவில் சற்குணம், பற்குணம் என இரு வேறு குழப்பமான பெயர்கள் வருகிறது. இரு பெயரிலும் ஆரம்பகாலத்தில் செயற்பட்டுள்ளனர். இதனை சரியாக கவனிக்க இனியொரு.
அதேபோல் இதில் சொல்லப்படும் ஆரம்ப போராட்ட முன்னோடிகளின் பிற்காலம் எப்படி போராட்டத்தை விட்டு வெளியேறினர், இப்போது எங்கிருக்கிறார்கள் என்பதையும் முடிந்தவரை பதிவுக்கு கொண்டுவரவும்.
அடுத்து மட்டக்களப்பு பா.சி (சின்னத்துரை) பின்னர் புலிகளின் நீதி நிர்வாக பிரிவில் செயற்பட்ட யோகன் பாதர் எப்படி புலிகளில் ஆரம்பத்தில் இணைந்துகொண்டார் மைக்கலுக்கு பின்னர் என்பதையும் ஜயரிடம் கேட்டு பதியவும்.
சிஜடி பஸ்தியாம்பிள்ளை கொல்லப்பட்ட பண்ணைக்கு யோகன் தான் பொறுப்பாக இருந்தவர்.
ஐயர் பற்றிய மேலதிக தகவல்கள் தேவை
ஐயர் எழுதிக் கொண்டு செல்லும் தொனியைப் பார்க்கும் போது மைக்கலை சுட்டது சரி என்பதான மாயையை ஏற்படுத்துகிறது. ஆனால் அப்படுகொலை நடந்த போது மத்திய குழு அமைக்கப்பட்டிருந்தது. மத்திய குழுவில் விவாதிக்கப்பட்டு அந்த முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கு ஐயரும் உடைந்தையாக இருந்தார் . இந்த படுகொலையுடனேயே விடுதலைப் போராட்டத்தின் அராஜகப் போக்கு துளிர் விட தொடங்குகிறது.ஆகவே அப்படுகொலையைப் பார்த்து கொண்டிருந்த ஐயர் முதலில் சமூகத்திடம் மன்னிப்பு கோரவேண்டும்.
//70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச்சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.//
இவ்வளவும் போதும்.ஒரு வரலாற்றுக் கட்டத்தின் சமூக உளவியலைப் புரிந்துகொள்ள.சிறுபான்மை இனங்கள்மீது அத்துமீறிய அடக்குமுறையைக்கட்டவிழ்த்துவிட்ட அரச வன்முறையை இதைவிடப் புரிய எதுவும் தேவை இல்லை.
ஜயர் எழுத புறப்பட்டிருப்பது பிரபாகரனின் போராட்ட வரலாற்றில் முன்பக்க சரித்திரம். அச்சரித்திரத்தை இன்றும் வாழும் போராட்ட முன்னோடிகளிடம் கேட்டு உறுதிப்படுத்துவது
நல்லது பதினாறு வயதில் பஸ் எரிக்க புறப்பட்ட போது வயது முதிர்ந்த போராட்ட தோழர்கள்
அவரை தனியே விட்டு ஓடிய போதும் உறுதி தளராது தன்னந்தனியே காரியத்தை முடித்தான் அந்த உறுதியும் துணிவுமே முள்ளிவாய்க்கால் வரை அவர் கூடவே வந்தது இந்த இடைப்பட்ட
காலத்தில் இந்த மாபெரும் இயக்கத்தை கட்டியெழுப்ப என்ன பாடுபட்டான் என்பது இறுதிவரை
கூட இருந்தவர்களுக்கு தெரியும். சூழ்ச்சிகளும் துரோகங்களும் நிறையவே கண்டான் கண்டிக்க வேண்டியவர்களை கண்டித்து தண்டிக்க வேண்டியவர்களை தண்டித்தான் இவற்றின் பெயர்
தன்னாதிக்கம் உட்படுகொலை .வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் தலைவன் மடியில் உயிர்
விடும் போதுகூட தாய் தந்தையரை நினைக்காது தம்பி தம்பி என்று அழைத்தபடி மாண்டு
போனானே சங்கர் அவனை மறக்கவா ஆயிரமாயிரமாய் தலைவன் பின்னே சென்று தாய் தந்தையரை மறந்து கட்டியமனைவியை மறந்து பெற்ற பிள்ளைகளை மறந்து இறுதி வரை
களமாடி தங்கள் உடல்களையே வெடிகுண்டுகளாக்கி சிதறினரே எங்கள் தோழர்கள் அவர்கள் பதிவை யார் எழுதுவது நீங்கள் எழுதுவதை எழுதுங்கள் உண்மையை எழுதுங்கள் தன்பிள்ளைகளையும் தாய் மண்ணுக்கு தாரைவார்த்த தலைவன் மீதும் மாவீர செல்வங்கள்
மீதும் மாசு கற்பிக்காமல் எழுதுங்கள் அடையாளம் காட்டிய கருணாவாக இல்லாமல்
தோழனுக்காக இருசொட்டு கண்ணீர் விடும் சக தோழனாக எழுதுங்கள்
http://www.youtube.com/watch?v=f4ZZ5x_SKeA&feature=related
nanri Aiya
நாங்கல் செய்யவும் மாட்டம் செய்பவர்கலை குட்ரம் கண்டு புடிப்பொம் இதுநமது குணம்.அய்யர் தனது காலத்தை எலுதல் இன்ரய தெவை.அவரை பிடுங்காமல் அவதானிப்பொம்.வரலாரு பதியபாடுகிரது.
இப் பதிவுகள் வேறொரு இணையத் தளத்தில் வரலாற்றைப் பதிவதாகக் கூறி உயிரோடிருந்த முன்னாட் தோழர்களைக் காட்டி க்கொடுக்கும் விதமாகத் “தகவல்கள்” தரப்பட்டிருந்தது போல அமையாமல் தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் பலர் இன்னமும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழுகின்றனர்.
நமக்குத் தேவை ஒரு தலைமையும் ஒரு இயக்கமும் எவ்வாறு செயற்பட்டுத் தம்மை அழிவுக்குள் தள்ள நேர்ந்தது என்பது மட்டுமே.
சரி பிழைகளை எல்லாம் தனி மனிதர் மீது சுமத்துகிற போக்கு இது வரை இல்லாமை நல்லது.
சரியோ பிழையோ, சுய முன்னேற்றத்துக்காகவன்றி மக்களின் விடுதலைக்காக என்று தங்களை அர்ப்பணித்த இளையோரை இயக்க வேறுபாடின்றி நாம் மதிக்க வேண்டும். தவறுகளை விமர்சிப்பது வேறு விடயம் .அது தனிமனிதர்கள் மீதான குற்றங் கூறலாக அமையாது கொள்கையும் நடைமுறையும் சார்ந்து அமைவது சிறப்பு.
சரியாக சொன்னீர்கள், “சரியோ பிழையோ, சுய முன்னேற்றத்துக்காகவன்றி மக்களின் விடுதலைக்காக என்று தங்களை அர்ப்பணித்த இளையோரை இயக்க வேறுபாடின்றி நாம் மதிக்க வேண்டும். தவறுகளை விமர்சிப்பது வேறு விடயம் .அது தனிமனிதர்கள் மீதான குற்றங் கூறலாக அமையாது கொள்கையும் நடைமுறையும் சார்ந்து அமைவது சிறப்பு.”
வரலாறுகளும் அனுபவங்களும் பாடமாகட்டும்!
எல்லாவற்றிகும் மனித நேயம் வேண்டும்!
84 இல் மாத்தையா அண்ணன் மீசை என்ற ஒரு போராளிக்குப் போராட்ட வரலாற்றைச் சொல்லும் போது புன்னாலைக் கட்டுவன் ஐயரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நேர்மையான போராளி என்று சொல்லுவார். ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை நடத்தியவரும், தலைவரின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவரும் ஐயர் தான் என்று கேல்விப் பட்டுள்ளேன். ஐயர் அவர்களுக்கும் இனியொருவுக்கும் எனது மனமார்ந்த நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக.
சுதந்திரம் என்றால் என்ன? ஆரோக்கியமான நல்ல விடயங்களை பேசுவதற்கும் எழுதுவதற்கும் அறிவதற்கும் மானிட விரும்பும் வாழ்க்கையை யாருடைய அச்சுறுத்தல் குறுக்கீடு இல்லாமலும் யாருக்கும் அடிமை இல்லாமலும் வாழ விரும்புவதே ‘சுதந்திரம்’ ஆகும் என மானுட உணர்வுகளை மதிப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
மானுட சுதந்திரத்திற்காகவும், விடுதலைக்காகவும், சமத்துவத்துக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் பல்வேறு மார்க்கங்களில் உலகத்தலைவர்கள், தேசத்தலைவர்கள், சமூகத் தலைவர்கள் ஆன்மீகத் தலைவர்கள் போராடினாலும் அகிம்சை வடிவிலான போராட்டமே நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும் என்றைக்கும் தேவையாக இருப்பதாக மானிடம் உணர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் வகுப்புவாத அடிப்படைவாத ஈனத்தனமான பிற்போக்குவாத கருத்துக்களை வெளிப்படுத்துவோரும், சமூகங்களுக்கிடையே தேசங்களுக்கிடையே பதற்றத்தை உருவாக்குபவர்களும் இனவாதத்தை கக்குபவர்களும் மனித சுதந்திரத்திற்காக போராடுவதாகக் கூறுகிறார்கள்.
இந்த அடிப்படைவாதிகள் மனித குலத்தில் இலகுவாக எடுபடக்கூடிய விடயங்களான மண், மதம், மொழி, தனித்தேசம், இனவாத குறுந்தேசியம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடிய கருப்பொருட்களை பிரச்சாரசாதனங்களில் கையாண்டு, இளைய தலைமுறையை மூளைச் சலவைக்கு உட்படுத்தி இனவாத சகதிக்குள் தள்ளிவிட்டுட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக மண், மொழி தேசம், பண்பாடு காப்பதற்காக அல்லது பெறுவதற்காக மனித உயிர்களை தியாகம் செய்யும்படி கோரப்படுகிறார்கள், நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
இங்கே மானுட உணர்வுகளை புறம்தள்ளி மனித இருப்பை எதிர்காலத்தை முக்கியமற்றதாக்கி மொழி, மதம், தேசம் புனிதமாக்கப்படுகின்றன. இவ்வடிப்படைவாத காரணிகளுக்காக போராடுவது வாழ்வின் புனிதமான கடமைகளை வலியுறுத்தப்படுகிறது.
மானிடத்திலும் சமாதானத்திலும் மனித நேயத்திலும் நம்பிக்கை உள்ளோர் போராட்டப்பாதைகளையும், அணுகுமுறைகளையும் வகுப்புவாதங்களையும் விமர்சனத்துக்கு கேள்விக்கு உள்ளாக்கும்போது துரோகிகள் ஆக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், துவேஷ வார்த்தைகளால் தூற்றப்படுகிறார்கள். இதனைத்தான் நமது போராட்டம் பதிவு செய்திருக்கிறது.
கடந்த மூன்று சகாப்பதத்துக்கு மேலாக தமிழர்களே தமிழர்களை அதிகமாக கொன்றார்கள், சிறுமைப்படுத்தினார்கள், அவமானப்படுத்தினார்கள், அகதிகளாக்கினார்கள், பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்தார்கள், சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். இவை அனைத்தும் ‘சுதந்திரம்’ ‘தேசிய விடுதலை’ என்ற பெயரிலேயே நடைபெற்றது.
இச்சந்தர்ப்பத்தில் பல கேள்விகள் எழுகின்றன. சுதந்திரத்திற்காக மனிதனா? மனிதனுக்காக சுதந்திரமா? மண்ணுக்காக மனிதர்களா? மனிதர்களுக்காக மண்ணா? மொழிக்காக மனிதர்களா? மனிதனுக்காக மொழியா? அமீபா செல்லில் இருந்து மனிதன் உருவாகியதிலிருந்து இன்றுவரை இதற்கான கேள்வி தொடர்கிறது.
சுதந்திரத்தின் விலை என்ன? அதன் பெறுமதி என்ன? என்பதை மெனிக் முகாமில் முட்க்கம்பி வேலிகளுக்குள், திறந்தவெளிக் கூடாராத்திற்குள் அகப்பட்ட மக்களிடமும், இனப்பிரச்சினை காரணமாக எந்தவித விசாரணைகள் இன்றி வருடக்கணக்காக சிறையில்வாடும் கைதிகளிடமும் கேட்கவேண்டும்.
எலி வளையானாலும் தனி வளைவேணும் என தனிநாட்டுப் போராட்டமானது தனி வளைக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் போராட்டத்தின் முடிவு, வந்தோரையெல்லாம் வாழவைத்த வன்னிமக்களை, தனிநாட்டுப் போராட்டம் எலி வளைகூட இல்லாமல் செய்துவிட்டது. இதற்கு யார் பொறுப்பு? தமிழர்களுக்கு சுதந்திரம், விடுதலை வாங்கித்தருகிறோம் என்று கூறிப் போராடப் புறப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அமைப்புக்களுமே இதற்கு பதில் கூறவேண்டும், பிராயசித்தம் தேடவேண்டும்.
வாழ்வு என்பது எதுவரை? வாழ்வில் இருந்து மரணம் வரையா? சிக்கலான கேள்விதான். வீரம் என்றால் என்ன? சகமனிதனை கொல்வதா? மாற்று சிந்தனையை அடக்குவதா? அல்லது ‘துரோகி’ என்று அறிவிப்பதா? மெத்தப் படித்த சமூகம் என்று உலகின் மூலை முடுக்கெல்லம் பிதற்றித் திரிந்த யாழ்ப்பாணத் தமிழனுக்கு கடந்த முப்பது வருடமாக புத்தி சித்தசுவாதினமானது ஏன்?
ஒர் இனத்துக்கு மொழி என்பது சுவாசம் போன்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் நம் சமூகத்தினரோ அரசியல் ஆயுதமாகவும் வகுப்புவாத தளத்திலுமே மொழியை பிரயோகித்து வந்துள்ளார்கள். இந்நிலையை உருவாக்கியவர்கள் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமை, அதன் வழி உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகள், பிற்போக்கு ஊடகவாதிகள், கடும்போக்குவாதிகள்.
தமிழ் குறுந்தேசியவாதம் எப்படி அபத்தமாக மொழியை அரசியல் ஆயுதமாகவும் பண்டமாற்றாகவும் உபயோகித்ததோ, அதேபோலவே சிங்கள பெருந்தேசிய கடும்போக்குவாதமும் பௌத்த பேரினவாதமும் சிங்கள மொழியை குறுகிய அரசியல் நலன்களுக்காக பாவித்தன.
நமது இலங்கையில் பெரும்பான்மையான மக்களோ தமது அநேகமான வாழ்வியல்த் தேவைகளுக்கு உலக நாடுகளையும் அயல் தேசங்களையும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மதத்தையும் இனவாத தேசிய அடையாளங்களையும், மொழியையும் தூக்கிப் பிடித்ததன் விளைவாக கடந்த அறுபது வருடத்தின் துன்பியல் வரலாறை சுமக்க நேரிட்டது.
உலக வரலாற்றில் நடைபெற்ற அநேகமான யுத்தங்கள் ஏதோ ஒரு வகையில் சகதேசத்தை, சகசமூகத்தை, சக மனிதனை அடக்குவதாகவும் சுதந்திரத்தை பறிப்பதாகவும் இறையாண்மையை மீறுவதாகவும் அழிந்து ஒழிப்பதாகவுமே இருந்து வந்துள்ளது. ஒரு சில சமத்துவத்துக்கான புரட்சிகள் விதிவிலக்காக காணப்படுகின்றது.
மேலும் தெற்காசியாவில் நீண்ட நெடிய செழுமையான ஜனநாயகப் பாரம்பரியம் எனப்பெயர் எடுத்த இலங்கையில் தொடர் வன்முறையாலும் மனிதச் சிதைவுகளாலும் இனக் குழுமக்குரோதங்களாலும் ஒட்டு மொத்த தேசமுமே நார்நாராக கிழிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பிற்பட்ட 61 வருட வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது பல்லினங்களுக்கிடையில் இனமுரண்பாடுகளையும் துவேசிப்புக்களையும் வெறுப்புக்களையும் அதற்கான சூழ்நிலையும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இதனை அரசியல் அதிகாரப் பிரிவினரே உருவாக்கி மக்களை தவாறக வழிநாடாத்துகிறார்கள்.
இத்தனை அக்கிரமங்களையும் ஜனநாயகம், விடுதலை, சுதந்திரம் என்ற அடைமொழிகளால் தேசியக் கட்சியான யூ.என்.பியும் இனமத, மொழி அடையாளங்களைப் பேணும் பிராந்தியக் கட்சிகளாலும் மக்கள் மீது துன்பங்களையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையுமே விதைத்து வந்தன.
ஈழப்போராட்டம் தீவிரம் அடையமுன் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வு ஆதாரமானது குறிப்பிடத்தகுந்த வகையில் கொண்டாட்டத்துக்கு உரியதாகவே இருந்தது. உதாரணத்துக்கு ஒர் இயற்கையான இறப்பிலும்கூட சந்தோஷத்தைக் கண்டார்கள். குறிப்பாக ஒரு மனிதர் இயற்க்கையாக மரணம் எய்திவிட்டால் முதல் 8 நாட்கள் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் ஊரவர்கள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். அதன்பின்பு 31ம் நாள் உற்றார் உறவினர்கள் மரபு ரீதியான சம்பிராதயங்களை நிறைவேற்றுவதன் வாயிலாக, வாழ்வு கொண்டாட்டத்துக்குரியது என்பதை மானிடத்துக்கு வெளிப்படுத்தி வந்துள்ளார்கள்.
துர்ப்பாக்கியமாக துப்பாக்கி கலாசாரமும் வன்முறைக் கலாசாரமும் என்று வடக்கு கிழக்கில் தலை தூக்கியதோ, அன்றிலிருந்து வாழ்வு என்பது மகிழ்ச்சிக்குரியது அல்ல, துயரத்துக்குரியது, அவமானத்துக்கு உரியது, ஏமாற்றத்துக்கு உரியது, வெறுமைக்கு உரியது, இழப்புக்கு உரியது என்பதை ஆயுதம் தரித்த அத்தனை ஈழவிடுதலை இயக்கங்களும் மக்கள் மீது ஓர் எழுதாத விதிபோல விதித்திருந்தார்கள். விதியை நொந்தபடி வாழ்வதற்கு மக்கள், ஆயுதக்கலாசார சூழலுக்கு தம்மை பழக்கப்படுத்திக்கொண்டார்கள்.
தமிழர்களுடைய போராட்டம் 50க்கு 50 என்றும் சமஷ்டி என்றும் தனிநாடு என்றும் இறுதியாக தாயகம், தன்னாட்சி, தேசியம், சுயநிர்ணயம், உள்ளக சுயநிர்ணயம் என்று கூறிக்கொண்டு சுதந்திர தமிழ் ஈழத்துக்கு எந்தக் குறைவான தீர்வையும் பரிசீலித்து பார்க்காது, வந்த அருமையான வாய்ப்புக்களையும் தவறவிட்டதுடன், ஒட்டு மொத்த சமூகத்தையும் ‘மனநோய்க்கு’க்கு உள்படுத்தியதுடன், அவமான குற்ற உணர்வுடன் வாழும் நிலைக்குத்தள்ளியது.
அடிப்படையிலேயே எதிரிகள் உருவமாகத் தோற்றுவிக்கப்பட்டு, விலை மதிப்பற்ற தமிழ் சமூகத்தின் சிந்தனைத் திறன் பாரம்பரியம் அழிக்கப்பட்டது. இங்கு ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதாவது புலிகளது சுதந்திர தாக போராட்டமானது பல இலட்சம் மக்களது நலனையும் சுதந்திரத்தையும் இருப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியதுடன், சக சமூகத்தினது சகமனிதனது வாழ்வின் சுதந்திரத்தையும் அடித்து நொறுக்கியதுடன் சுவடுகளே இல்லாம் செய்துவிட்டது.
இலங்கையிலும், சமூகவளங்களுக்கிடையில் உள்ள பாகுபாடுகளால், சமத்துவமின்மையால், தேச வளங்கள் நேர்த்தியாக பகிர்ந்து கொள்ளாததினால், வகுப்பு வாதங்களும் தீவிரவாதங்களும் தலை தூக்கின்றன. இவ்விடையங்களையும் கடந்து வந்த வரலாற்றையும் கவனத்தில் எடுத்து, இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப நேர்மையுடன் சாதுரியமிக்க நெறிமிக்க ஓர் கூட்டுத் தலைமை உருவாகுமாயின் நாளை நமதே.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி ! தொடருங்கள் !
தரமற் ற ஒருபக்க விமர்சனங்களால் தல்ர்ந்த்துவிடவேண்டாம்
அப்பொழுது நான் சிறுவனாகவே இருந்திருக்கின்றேன். பூநகரியிலிருந்து மன்னார்
செல்லும் பிரதான வீதி ‘செம்பன் குன்று என்ற இடத்திற்கும் மண்டைக்கலாறு என்ற
இடத்திற்குமிடையே வீதியோரமாக இருந்த புதர்காட்டின் நடுவே இருந்த ஓர் பெரிய
பாலைமரத்தில் ஒருவர் தூக்கி கொலைசெய்யப்பட்டிருந்தார். அந்தக் கொலைக்கு
முன்பாக அந்தக் கொலையிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் கொல்லப்பட்ட
நபர் ஈடுபட்டிருந்திருக்கின்றர் என்பதும் அவர் அடித்து துன்புறுத்தியே
கொலைசெய்யபட்டார் என்பதனையும் அந்த நபர் பலை மரத்தில் தொங்கிக்
கொண்டிருக்கும்போதே அப்பகுதியால் பிரயாணம் செய்த பலர் நேரடியாகப்
பார்த்து பேசிக் கொண்டதை கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்தக் கொலையினை
-செட்டிதான்- செய்தார் என்பதனை அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டார்கள்.
(செட்டிக்கும் பூநகரிக்கும் குடும்பரீதியான நெருங்கிய உறவுகள் இருக்கின்றன.)
எனினும் அது ஒரு கொள்ளை முயற்கிக்காவே அக்கொலை இடம்பெற்றது
என்பதுதான் அப்பிரதேச மக்களின் வியூகமாக இன்றுவரையிலும் இருக்கின்றது.
கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால் அனுராதபுரம்
சிறைச்சாலையிலிருந்து செட்டியுடன் தப்பி வந்த -கண்ணாடி பத்மனாதன்- என்பவரே
கருத்து முரண்பாடுகளால் கொலை செய்யப்பட்டார் என்ற மர்மம் பூநகரி
மக்களுக்கு இப்பொழுதுதான் துலங்கியுள்ளது. நன்றி ஐயரே! சிறுவனாக இருக்கும்
போது அடிக்கடி அந்தப்பாதையால் சைக்கிளில் சென்று வந்திருக்கின்றேன்.
குறிப்பிட்ட இடமும் அந்த மரமும் வரும்போது இப்பவும் என்மனம் திக்..திக்..திக்..
என்றே இருக்கும். காரணம் தூக்கிலடப்பட்ட மனிதன் எவ்வாறு
தூங்க்கொண்டிருந்தான் என்பது இன்றும் என் கண்முன்னேநிழலாடுகின்றது. அதனை
நேரடியாகப் பார்த்தவர்களில் நானும் ஒருவன். மனிதர்கள் பலர்
மரணித்துவிட்டார்கள் (அனியாயமாக) ஆனால் கண்ணாடி பத்மநாதனை
தூக்கிலிட்ட பாலைமரம் இன்னும் அதேயிடத்தில் விகாரமாய் வளர்ந்து நிக்கின்றது.
நீங்களும் இனியொருவும் செய்யும் இந்த விடயத்தை கிளிநொச்சியில் தாக்குதல் ஆரம்பிக்க முதலே செய்திருந்தால். பழைய உறுப்பினர்கள் சேர்ந்து கொலைகளைத் தடுத்திருக்கலாம். தலைக்கு மேல் வெள்ளம் போய் வடிந்தும் விட்டது. எனி என்ன செய்து பயன்?
ஆயுத கலாச்சாரத்துக்கு அடிபணிந்து பயந்து போன இலங்கை தமிழ் சமூகத்தின் பிரதான,மையசிந்தனையோட்டமே முப்பது வருடமாக ‘வெளிநாட்டுக்குப்போதல் ‘ஆகிவிட்டது, மூன்று தசாப்தமாக இலங்கை தமிழ் சமூகத்தின் அசைவியக்கமும் அதுதான்.
இப்போதுதான் பயங்கரவாதம் மற்றும் தினசரி திடீர் மரணங்கள் நின்று போய் மெல்ல மெல்ல நமது நாடு நமது மண் என்று நம் மக்களுக்கு ஒரு மாற்றம் வந்திருக்கிறது. புத்தாண்டில் இவர்கள் வாழ்வு முன்னேற நாடு முன்னேற எம்மால் முடிந்ததை செய்வோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இனவாத அடிப்படையில் போராடி தீர்வு கண்டுவிட முடியாது. தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் தலைமைதாங்கி இனவாத அடிப்படையில் போராடிய பிற்போக்கு சக்திகளின் தலைமை தூக்கி எறியப்பட வேண்டும். நாட்டின் நீதியை விரும்பும் அனைத்து மக்களையும், சர்வதேச முற்போக்கு சக்திகளின் ஆதரவையும் வென்றெடுக்கக் கூடிய ஒரு முற்போக்குத் தன்மைவாய்ந்த சரியான தலைமை வேண்டும்.
2009 ஆண்டு என்பது, இலங்கை மக்களுக்கு ஒரு வரலாற்றுத் திருப்பு முனையாக அமைந்த ஆண்டாகும். இலங்கையின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் புலிகள் தடையாக இருந்து வந்துள்ளதை வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டி நிற்கிறது. எனவே புலிகளுக்கு எதிரான வெற்றியானது தமிழ் மக்களின் வெற்றியுமாகும்.
தோல்வியடைந்த பிற்போக்கு சக்திகள் தமது அதிகாரத்தை மீள அமைப்பதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துவர். நேற்றுவரை ஏகாதிபத்தியத்திற்கு பிடிக்காமல் இருந்து வந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, தற்போதைய தேசபக்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் ஏகாதிபத்திய சக்திகளால் களமிறக்கிவிடப்பட்டுள்ளார். நேற்றுவரை எதிரும் புதிருமான அரசியல் செய்துவந்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் சரத் பொன்சேகாவை ஆதரித்து நிற்கின்றன. அதுமட்டுமின்றி, தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரத் பொன்சேகாவை தமிழ் பிற்போக்கு சக்திகளும் (புலி ஆதரவாளர்கள் அடங்கலாக) ஆதரிக்க முனைகின்றன.
இவையெல்லாம் எதை எடுத்துக் காட்டுகின்றன? இனம், மொழி, மதம், நிறம் என்பதெல்லாம் பிற்போக்கு அரசியல்வாதிகளால் தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக கிளறி விடப்படுபவையே. தமது நலன்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தவுடன் இச்சக்திகள் தமது வேஷங்களைக் கலைத்துவிட்டு ஒன்று சேரத் தயங்கமாட்டார்கள் என்பதையே, இந்த சக்திகள் எல்லாம் ஒன்றுபட்டு சரத் பொன்சேகாவை ஆதரித்து நிற்பதன் மூலம் நிரூபித்து நிற்கின்றன. எனவே தமிழ் – சிங்கள – முஸ்லீம் முற்போக்கு சக்திகளும் தமது இன்றைய காலகட்ட கடமையை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்படுவது அவசர அவசியமானது.
2010ம் ஆண்டு தமிழ் – சிங்கள – முஸ்லீம் முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும்.
வணக்கம் ஐயா,
/அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்./
எ
ன்று குறிப்பிட்டிருந்தீர்கள் முதல் அத்தியாயதில் ஆனால் புஸ்பராசா தனது பதிவில் ராகவனின் சொந்தக்காரமூதாட்டியின் புன்னாலைக்கட்டுவன் வீட்டிலேயே பலகாலம் பிரபாகரன் தங்கியிருந்தார் என குறிப்பிட்டிருக்கின்றார்.
புன்னாலைகட்டுவன் ஐயரின் அனுபவங்கள் எமது எதிர்கால சந்ததிக்கு போராட்டத்திற்கு முக்கியமானவை. ஐயரைப்பற்றி தமிழ்ஈழ விடுதலைப்போராட்டத்தோடு இயக்கங்களோடு தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு தெரிந்த அளவுக்கு வெளியுலகுக்கு தெரிந்திருக்கவில்லை. காலங் கடந்தாவது ஐயர் தனது அனுபவங்களை சொல்லுவதற்கு முன்வந்ததிற்கு நாங்கள் எல்லோரும் அவருக்கு நன்றி பாராட்டவேண்டும். இவரின் அனுபவத் தொடரில் தவறுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. காலமறதி காரணமாக இருக்கலாம் எனவே ஐயரின் சமகாலத்தவர்கள் இத் தொடரை பூரணமாக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வேண்டுகிறேன். தமிழ் ஈழப்போராட்டத்தில் வரலாறு தெரிந்த பலரை இழந்துவிட்டோம் மிஞ்சியிரப்பவர்கள் கொஞ்சப் பேரே. இவர்களும் வரலாறு சொல்லாவிட்டால் எமது இனத்தின் போராட்டவரலாறு அழிந்துவிடும். எனவே இத் தொடரை இனியொரு மிகுந்த பொறுப்புணாச்சியோடு முன்னெடுக்க வேண்டும். பரமசோதி
பிரபாகரன் நாமம் வாழ்க
பிரபாகரன் விதைத்த வித்துக்கள் முளைவிட ஆரம்பித்துள்ளன.
கீழ்வானம் வெளுப்பேற
கிளர்கின்ற செவ்வானம் தோய்கிறது ரத்தத்தில் தோயட்டும் தோயட்டும்…விடுதலை நிஜமென்று குயிலே குயிலே ….விரைந்து நீ போய்க்கூறு குயிலே குயிலே…– கவிக்குயில் ஆனைவாரி ஆனந்தன்-
மீண்டும் தலைபில் பிரபா புராணம் பாடி பகுதி 2ம் வந்துவிட்டது. இதை விமர்சிபர்கள் புலிகளின் ஆதவாளர் என்று கத்தும் அன்பருக்கு இதுமட்டும் உறைக்கவில்லையோ…
பிரபாகரனை விட முள்ளிவாய்காலுக்க அல்ல மற்றய இயக்ங்களில இருந்த அமைதியாய் மரணித்த உயா;ந்த போராளிகள் அநேகர். முடிந்தால் அவா;களைப்பற்றி யாராவது எழுதுங்கள். போரட்டத்தின் தோல்வி பற்றி எழுதுங்கள் விவாதியுங்கள். நேரத்pதை வீணாக்கதீர்கள் ப்ளீஸ்
ஐயா, நீங்கள் குறிப்பிட்டவர்களில் பலர் தற்போது உயிருடன் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன்.பட்டண்ணா சித்த சுவாதீனமற்று இருப்பதாகவும்.நிர்மலன் போதைவஸ்திற்கு அடிமையாகி தற்போது திருந்தி கூர்க்கா வேலைபார்ப்பதாகவும் ராகவனும் ,குலமும்,கலாபதியும், கிருபாகரனும் ஐரோப்பியநாடுகளில் . வசிப்பதாகவும் அறிந்துள்ளேன்.எனவே அவர்களின் துணை கொண்டு உங்கள் பதிவை எழுதினால் இன்னும் நன்றாகவிருக்கும்.
வரலாருக்கு எனது வால்துக்கால் . மானிதானை நெசிக்கும் மனித தன்மை. அன்ரும் இன்ரும் . என்ரும் இருகவென்டும் .அவந்தான் மனிதன் .அதைதொலைக்காமல் தொடரு..க..
இங்கே கட்டுரையாளர் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாக நடந்தவற்றை சொல்லுதல்,
முடிந்தவரை உண்மையை வெளிக் கொணருதல்.
பின்னாடல்கரரின் கேள்விச் செவிக்கருத்துகளுக்கு பதில் தருதல்.
எத்தனை ஆரம்ப உறுப்பினர்கள்,அவர்கள் எவ்வாறு உள்வாங்கப் பட்டார்கள்,அதில் எத்தனை மத்திய குழுவினர்,அவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்,அவர்களின் ராணுவ,அரசியல் சிந்தனை எத்தகையது,யாருடைய ஆதிக்கத்தில் இருந்தார்கள்,பெரியாரிசமோ, நக்ஸலைடிசமோ,அண்ணாயிசமோ சிவப்புயிசமோ எப்படி புலிகளை ஆட்கொண்டது,வங்கிகளை கொள்ளை அடிப்பதும்,கூட்டணியினருக்கு எதிரானவர்களை கொல்வது என்கிற செயற் திட்டங்களை வரித்துக் கொண்டது எப்படி,கொள்ளை அடிக்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டது,முழு நேர உறுப்பினரின்
சம்பளம்,அவர்கள் செயற்பாட்டின் எதிபார்ப்பு என்ன,யாராவது மேற்பார்வை செய்வதுண்டா,மத்திய குழு எப்போதாவது கூடி ஏகமனதாக தீர்மானம் எடுத்ததுண்டா,முரண்பட்ட கருத்துகளை விவாதம் செய்கிற சூழல் இருந்ததா,புலி சின்னா பின்னப்பட்டது எப்படி போன்ற இன்னோரன்ன விடயங்களையும் உள்ளடக்கினால் நன்றாகவிருக்கும்.
உங்கள் 1ம்இ 2ம் கட்ரைகள் வாசித்தென்.இக் காலகட்டத்தில் உண்மையான கட்டுரைகள் ஆயின் வரவேற்கத்தக்கது. ஆனால் இவ்வளவுகாலமும் எங்கெய் போய் இருந்திர்கள்???. புலிகலை நம்பி ஏமாந்த எம் போன்ற மக்களூககு இக்கட்டுரைகள் உண்மையான புலிகலின் வரலாரை இனிவரும் பதிப்புகலிள் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம். நன்றி
எலலாம் உ ண்மை
பண்டாறவன்னியன், சங்கிலியனை நம்பிப் போன மக்கழை………….கடசியில்..அவெர்கழ் ……எங்கு கொண்டுபோய்…………விட்டார்கழ் தெரியுமா…அன்பரே……….ஆங்கிலேயரிடம் ! என்ன அது மறந்து ….போச்சா..? கட்டெபொம்மனை……நம்பிப் போன மக்கழ் என்ன ஆனார்கழ் ..தெரியுமா…?..உ.மக்கு தலைவர் பிரபாகரனை நம்பிப் போன மக்கழ் தான் கண்ணூக்கு தெரியுதோ……இனி மேல் என்ன பேசுறேன் என்பதை யோசிச்சு பேசும்….சங்கிலியன்…..பண்டாரவன்னியன்….கட்டெபொம்மன்..எல்லாம் வீரர்கழ் என்டால்…பிரபாகரனும்……..மகா..வீரன் தான்!
நீங்கள் எல்லாம் பிரபாகரன் புகழ்பாடுவதாக எழுதுகின்றீர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்ப தலைவராக இருந்த உமாமகேஸ்வரனனது பங்களிப்பு அவாரால் குழுநிலை போராட்டமாக இருந்த தாக்குதல்கள் விடுதலை வடிவமாக மாற்றப்பட்டது எவ்வாறு என்ற விபரங்களையோ அல்லது பலஸ்தீன பயிற்சிக்கு சென்ற சமயம் பிரபாகரனுடன் இணைந்து நாகராஜாவாத்த. ஜயா; போன்றவா;கள் பிரபாகரனுடன் இணைந்து உமாமகேஸ்வரனுக்கு எதிராக போட்டி சதி திட்டங்கள் பற்றியொருவரும் எழுதாமல் எதோ ஜயா; கூறும் ஒருபக்கசார்பு கருத்துக்கள் ஏற்கமுடியாதவை.
விடுதலை புலிகளின் ஆரம்பகா;த்தவான உமாமகேஸ்வரனின் பங்கு அளப்பரியது.
ராசா!
ஆம்! உமாமகேஸ்வரன் பற்றி இனிமேல்தான் தனது கதையில் சேர்த்துக்கொள்வார். நசிந்து அளியும் ஒரு மக்கள் கூட்டம் தமது சொந்த நாட்டில் இருப்பதை மறந்துவிட்டு> இவர்கள் pதிரிபுபடுத்திய> உணர்ச்சிகரமான வரலாற்றை எழுதி புத்தகமாக வெளியிட்டு லாபமும் பிரபலமும் தேடிக்கொள்ளட்டும். புலிக் கலாசாரத்திற்கு புத்துயிரூட்டிக் கொள்ள இனியொரு துணை போகிறதா? அல்லது இனியொரு தனது வியாபாரத்திற்கு ஐயரைத் தேடிப் பிடித்திருக்கிறதா?
தாங்கள் புன்னாலைக்கட்டுவன் ச** தம்பி தானே?? குலம்இ ராகவன் என்போரும் இன்னமும் உயிருடன் தானெ உள்ளனர்? ராகவன் அண்மையில் யாழ் வந்தார்.
முதலில் ஐயரை எல்லாவட்ரயும் பதிய விடுங்கல். பிரகு விமர்சனம் செய்யலாம்