இந்து கடவுகள்களுக்கு தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் உயிர்பலியின் தொடர்ச்சியாக நேபாளத்தில் 2 இலட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்பட்டன.
நேபாளில் உள்ள பரியாபூர் என்ற கிராமத்தில் உள்ள கதிமாய் கோயில் நடைபெற்ற திருவிழாவின் போது எருமைகள், ஆடுகள், புறாக்கள், சேவல்கள் என சுமார் 2 இலட்சம் விலங்குகள் பலியிடப்பட்டதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
சுமார் 20 ஆயிரம் காளைகள், 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலான ஆடுகள், கணக்கிலடங்கா சேவல் மற்றும் புறாக்கள் திருவிழாவின் 7ஆம் நாளான செவ்வாய்க் கிழமையன்று பலியிடப்பட்டதாக கோயிலின் பூசாரி மகேஷ் ஜா என்பவர் கூறினார்.
நான் படித்தவள்தான். ஆனால் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு நடைமுறைகளில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எங்கள் கடவுள் எங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து நாங்கள் அவளுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று விலங்குகளைப் பலி கொடுத்தவர்களில் ஒருவரான சம்பா தேவி கூறினார்.