இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக செஞ்சிலுவைச் சங்கம் பிரித்தானியாவில் உணவு உதவி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற காலத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்ட உணவும் பஞ்சம் காரணமாக செஞ்சிலுவைச் சங்கம் யுத்தத்தின் பின்னர் பல சில வருடங்கள் உணவு உதவிகளை ஏழைகளுக்கு வழங்கி வந்ததது. இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவுத்திட்டம் மக்கள் மீது பல்தேசிய வியாபார நிறுவனங்கள் நடத்தும் போரின் காரணமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் பல்பொருள் அங்காடிகளான டெஸ்கோஸ், சென்ஸ்பரிச்ஸ் பெரிஸ் போன்ற நிறுவனங்களுக்குச் சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தினர் தமது உணவுத் திட்டத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
பல்தேசியக் நிறுவனங்களின் பகற் கொள்ளையால் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் 43 மில்லியன் ஏழைகளும் உழைக்கும் மக்களும் உணவுப் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஐம்பது வருடங்களில் மிக மோசமான மனிதாபிமானப் பிரச்சனை என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் பாதிப்படையும் போது அவர்களைப் போராடாமல் தடுத்து தற்காலிகமாக உற்க்க நிலையில் வைத்திருப்பதற்காக தன்னார்வ நிறுவனங்கள் முயற்சிப்பது வழமை. உணவற்ற பிரித்தானியர்களுக்கு எலும்புத்துண்டை வீசும் செஞ்சிலுவைச் சங்கம் பிரித்தானியாவை நாளாந்தம் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் குறித்து துயரடைவதில்லை.
120 மில்லியன் ஐரோப்பியர்கள் மத்தியில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்ட தன்னார்வ நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத முதலாளித்துவ அமைப்பியல் நெருக்கடிக்குள் அமிழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் சில குறுகிய வருடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.