இலங்கையில் வட கிழக்குத் தமிழர்களுக்கு எதிராக 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவியேற்ற சில நாட்களுக்குள் பேரினவாத வன்முறையைத் தூண்டினார். இலங்கையில் அரச அதிகாரத்தை நிறுவனமயப்பட்ட பாசிசமாக உருவாக்கிய ஜே.ஆர்.ஜெயவர்தன பிறப்பில் கிறீஸ்தவரும் தமிழ்ப் பூர்வீகத்தைக் கொண்டவருமாவர். ஆட்சிகுத் தெரிவான மறு நாளே இலங்கை சிங்கள பௌத்த நாடு என அறிவித்தார். ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியில் 1983 ஆம் ஜூலை மாதம் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் நினைவாக ஜூலை மாதம் கறுப்பு ஜூலை என அழைக்கப்படுகிறது.
1983 ஆம் ஆண்டைப்போன்ற கறுப்பு ஜூலை தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த வருடமும் இடம்பெற வாய்ப்பு உண்டு என களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கல்கந்த தம்மாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு வளர்க்கப்படும் பொதுபல சேனா என்ற என்ற நாஸி அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதக் கருத்துக்களை விதைத்து வருகிறது. ராஜபக்ச பாசிசத்தின் தேவைகளில் ஒன்றான பேரினவாத வன்முறையைத் தோற்றுவிக்கும் நோக்குடனேயே பொதுபல சேனா வளர்க்கப்படுகிறது என்ற கருத்து இலங்கையில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலிருந்து வெளியிடப்படுகிறது.
இலங்கையின் கடைந்தெடுத்த பிழைப்பு வாதிகளும் பேரினவாதிகளுமான முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற அமைப்புக்கள் பொதுபல சேனாவிற்கு எதிரான குறைந்த பட்சக் கருத்துக்களைக் கூட வெளியிடுவதில்லை. தவிர, புலம்பெயர் நாடுகளிலிருந்து ராஜபகச அரசுக்கு எதிராகச் செயற்படுவதாக வேடமிடும் புலிசார் அமைப்புக்கள் தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதில்லை. இலங்கை அரசின் அனுசரணையுடனோ அன்றி சர்வதேச பயங்கரவாத உளவு நிறுவனங்களுடனோ இணைந்து செயற்படும் இந்த அமைப்புக்கள் ராஜபக்ச அரசிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவுவளிக்கின்றன. இவர்களின் தலைமை நீக்கப்பட்டு மக்கள் அரசியல் முன்வைக்கப்படும் வரை ராஜபக்ச போன்ற அரசுகளின் இருப்பு தவிர்க்க முடியாததாகும்.
மிக சரியான கனிபூ. எல்லாம் ஒரு வகையில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தான் செயல் படுகின்றது. இதுக்கிள்ள வேற ஈழ சாசனம்