பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலத்துறை பிரதேசத்திலிருந்து அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர்க் குண்டுகளை படையினர் இன்று மீட்டுள்ளனர்.
படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அப்பகுதியைச் சுற்றிவளைத்து திடீர் தேடுதல் நடத்தியபோதே, பாலத்துறை லூக்காஸ் வீதியிலுள்ள கராஜ் ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலே மேற்படி கிளேமோர் குண்டுகள் மீட்கப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புத் தரப்பினர், சந்தேகத்தின் பேரில் பலரைக் கைதுசெய்துள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்