Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கறுப்புத் துண்டு யூதாஸ் : காமராஜ்

இனியொரு... by இனியொரு...
10/13/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
14
Home பிரதான பதிவுகள் | Principle posts

தென் மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 14 வருடங்களுக்குப் பின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் தீர்ப்பளித்தது,இப்பொழுது நிறைய ‘பரிசுத்தவான்’கள் அத்தீர்ப்புக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.அதில் ஒரு பரிசுத்தவானைப் பற்றிய சிறு பதிவு இது.

தென் மாவட்ட மக்களின் உயிருக்கே உலைவைக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  துவக்கமான 1996 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடியை மையப்படுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றன.பல்வேறு சிறு சிறு அமைப்புகள், இணைந்து நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் இதில் மூழு வீச்சில் இயங்கியது.அனைவரும் அப்பழுக்கற்று உண்மையான அக்கறையுடன் களத்தில் இறங்கினர்.

முற்றுகை, கப்பல் சிறைபிடிப்பு என்று பல கட்டப் போராட்டங்களை இந்த இயக்கம் நடத்தியது.ஆனால் இதில் எதிலும் இணையாமல் தனியாக ஆலைக்கு எதிராய் ஆவர்த்தனம் நடத்தியவர் இந்த பரிசுத்தவான்.அப்பொழுது தான் இவர் தனது தாய்க்கழகத்தில் இருந்து தனிக்கட்சி தொடங்கி மக்கள் வணிகம் ஆரம்பித்த நேரம் அது.பரிசுத்தவான் வெற்று அறிக்கைகளும் கண்துடைப்பு போராட்டங்களும் நடத்தினார்.அப்பொழுது இவருக்கு தென்மாவட்டத்தில் இருந்த அரசியல் செல்வாக்கினாலும், வல்லமை மிக்க பேச்சினாலும், ஊடக பலத்தினாலும் இவரது எதிர்ப்பு மட்டுமே ஆலைக்கு எதிரான போராட்டமாய் பொதுவெளியில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

மக்கள் திரள் போராட்டமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் உண்மையான போராட்டங்கள் எதிலும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஊடகங்களிலும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்றால் இவர் மட்டுமே  கதாநாயகன் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கடந்தன. 1996 இல் ஆலைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் இவர் இல்லை.ஆனால் 1997 இல் தன்னையும்  வாதியாய் இணைத்துக் கொண்டார்.

கொஞ்ச கால கட்டத்திற்குப் பிறகு,’கேளுங்கள் தரப்படும்’ என்பதன் படி ஸ்டெர்லைட் ஆலையிடம் கேட்டார்,நிறையக் கிடைத்தது.அதன்பின்பு கீழ்ப்படிதலே பாக்கியவான் என்பதன் படி ஆலைக்குக் கீழ்ப்படிந்தார்.(இவரது இரண்டு சகோதரிகளும் இவரது மனைவியும்,மகளும் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் உலக வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர் அல்லது மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர் என்பதாலும் பைபிள் வசனம் இவருக்கு அத்துப்படி)அதுபோக தனது தம்பியின் பெயரில் ஆலையில் மிக முக்கிய காண்ட்ராக்டுகள் பலவற்றை வாங்கிக் கொண்டார்.

அதன் பின் நாளடைவில் போராட்டத்தை படிப்படியாக நீர்த்துப் போகச்செய்தார்.ஆலைக்கு எதிரான வழக்கிலும் ஒருமுறைக்கு மேல் இவர் ஆஜர் ஆகவில்லை.அங்கும் கழுத்தறுப்பு வேலை செய்தார்.தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பில் ‘மனுதாக்கல் செய்த வைகோவோ அல்லது அவரது சார்பாக வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை’’ என்று தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்த நிலையில் தான் ஆலையை உடனடியாக மூடச் சொல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் இதில் நல்ல விலைக்குப் போனாலும் அவர்கள் வாங்கியதை வாங்கிக் கொண்டு ‘நேர்மையாக’அமைதியாகி விட்டனர்.தீர்ப்புக் குறித்து எந்தக்கருத்தும் கூறவில்லை.ஆனால் என்ன கொடுமை பாருங்கள்,பரிசுத்தவான் இதில் வரிந்து கட்டிக் கருத்துக் கூறியுள்ளார்.சென்னையில் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து கொண்டே எந்தக் கள நிலவரமும் தெரியாத துப்பறியும் புலனாய்வுப்புலிகள் இவரிடம் தொலைபேசியில் கருத்தைக் கேட்டு வெளியிட்டுள்ளனர்.இந்த வெற்றிக்கு தான் தான் முழுப்பொறுப்பு என்பதைப்போலவும் அப்பழுக்கற்றவர் போலவும் பரிசுத்தவானும் அனைத்து ஊடகங்களிலும் கருத்துக் கூறியுள்ளார்.

என்ன கொடுமை பாருங்கள்.ஸ்டெர்லைட் பிரச்சனையில் பரிசுத்தவானின்  கபட நாடகம் தென்மாவட்டத்து மக்களிடம் அம்பலப்பட்டுப் போனாலும் தீர்ப்பு வந்தவுடன் தன்னை முன்னிலைப்படுத்தி அதிலும் வெற்றியும் கண்டுவிட்டார்.இதில் இன்னொரு கொடுமையும் உள்ளது.ஸ்டெர்லைட்டில் எதும் மிகப்பெரிய பெரு உயிரிழப்பும் விபத்தும் நடந்தால் அதில் பாதிக்கப் படப் போவது இவரது சொந்த ஊரும் ஆகும்.இதில் இப்பொழுதும் அவரது தாய் வசித்து வருகிறார்.

என்ன கொடுமை பாருங்கள்!

 

அன்று 30 வெள்ளிக் காசுகளுக்காக கர்த்தரை சிலுவையில் அறையக் காட்டிக் கொடுத்தான் யூதாஸ்.ஆனால் சிலுவையில் அறையப்பட்ட மறு நாளே செய்த செயலின் குற்ற உணர்ச்சி தாங்காமல் நாண்டுக்கிட்டு செத்தான் யூதாஸ் .ஆனால் இங்கோ காட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இன்று மக்களைக் காப்பாற்றியதாகத் தம்பட்டமும் அடிக்கிறார் கறுப்புத்துண்டு யூதாஸ்.

 (யூதாஸிடம் இருந்த நேர்மை கருப்புத்துண்டிடம் இல்லை.அதனால் தலைப்பு முரணான ஒன்று தான்.யூதாஸே என்னை மன்னித்து விடு.)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யாழ்.பளையில் வெள்ளைவானில் வந்தோரால் இரு மாணவிகள் கடத்தல்

Comments 14

  1. Dr. V. Pandian says:
    15 years ago

    ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமம் கொடுத்தவர் செயலலிதா தான்.

    வைகோவை பொடாவில் தள்ளியவரும் செயலலிதா தான்.

    இவரது தற்போதய உடன்பிறவா சகோதரியும் செயலலிதா தான்.

    ஒரு பருவ இதழில் புகைப்டம் பார்த்த நினைவு. ஒரு கிருத்துவ மதக்கூட்டத்தில் மேடையில் இவர் தரையில் அமர, பாதிரிமார்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

    மதமற்ற பகுத்தறிவாளியான இந்த சுயமறியாதைச் சிங்கம், தன்னைத்தானே சிறுமைப்படுத்திக் கொண்டது.

    இவர்களெல்லாம் வெடிக்காத பட்டாசுகள்.

    • THAMILMARAN says:
      15 years ago

      தன்னைத் தாழ்த்துபவன் எவனோ அவன் உயர்த்தப்படுவான் என்பது பைபிள் வாசகம்,படித்தவர்கள் நிறகுடங்களப் போன்றோர் அதுதான் கல்வியின் சிறப்பு.எப்போதும் தன்னை மதிப்போரே பிறரை மதிக்கின்றனர்.தெரு நாய்க்கும்,வீட்டு நாய்க்கும் வித்தியாசமே இதுதான்.இந்தக் கட்டுரை ரத்னபாலா சிறூவர் இதழில் வரும் துப்பறீயும் சாம்பு(ரத்னபாலா நின்றூ பல தசாப்தங்கள் நான் சிறூவனாக இருந்த போது படித்தது)கதை போல இருக்கிறது.புரியவில்லை.வைகோ வையா சொல்கிறது கட்டுரை?கட்டபொம்முவுக்கு சிலை வைக்க காரணமானவர்,கட்டபொம்முவுக்கு விழா நடக்க காரணமானவர் வைகோ என்பதால் அவர் மீது மரியாதை எனக்கு எப்போதும் உண்டு, ஏனென்றால் தன்னை தமிழான உணரும் அதே நேரம் தன் இனத்தையும் விட்டுக் கொடுக்காத நேர்மை வைகோவிடம் உண்டு.

    • Garammasala says:
      15 years ago

      கட்டபொம்மு ஒரு தெலுங்கர் என்றும் அவர் வழிபட்ட ஜக்கம்மா தேவி ஒரு தெலுங்குத் தெய்வம் என்றும் சொல்லித், தமிழ்வாணன் என்ற புலுடா மன்னன் புலித்தேவனைத் தூக்கிப் பிடித்தார், எடுபடவில்லை.
      வேறு சிலர் மருது பாண்டியர்களை மெச்சுவர். (அவர்களுடைய போராட்டம் பெறுமதியானதென அறிகிறேன்.)

      கட்டபொம்மன் தெலுங்கர் என்பது நம்பத்தக்கது.
      இப்போது தெலுங்கர்களை இழித்துரைக்கும் நம் “பச்சைத் தமிழர்கள்” கட்டபொம்மனை வை.கோ. மெச்சுவதற்கும் நோக்கம் கண்டுபிடிப்பார்களா?

      • thamilmaran says:
        15 years ago

        தெலுங்கராய் வைகோ இருந்தாலும் ஜமுனா ராஜெந்திரன் போல படைப்பாளீ,சுந்தர ராமசாமி மலையாளீயாய் இருந்தாலும் அவரை நாம் சொந்தம் கொண்டாடவில்லையா? தமிழ்வாணன் புலுடா மன்னனா? சங்கர்லால் துப்பறீயும் கதைகள் படித்ததில்லையா நீங்கள்,பழைய கல்கண்டில் அவரது கேள்வி பதில் படிக்கச் சுவையானது.அவர் ஒரு மான் ஒவ் எவிரிதிங்க்.

  2. bala says:
    15 years ago

    எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் கேனத்தனமாக எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை. ”கறுப்புத் துண்டு யூதாஸ் : காமராஜ்” -இப்படி தலைப்பு வைத்தால் என்ன அர்த்தம் என்றுகூட கட்டுரையாளருக்கும், ஆசிரியர் குழுவுக்கும் தெரியவில்லை. 

    இந்த மாதிரியான வெற்றுக் கூச்சல்களை ’இனியொரு’ நிறுத்திக்கொள்வது நல்லது.

    • Garammasala says:
      15 years ago

      கட்டுரையின் அடை மொழிகளை நானும் விரும்பவில்லை.
      கேனத்தனம், வெற்றுக் கூச்சல் என்பனவும் அவ்வளவு சிறப்பான பதங்களல்லவே.

      தயவு செய்து தரப்பட்ட எத் தகவல் பொய்யானது என்று பொறுமையாகச் சுட்டிக் காட்டுங்கள். அதுவே பயனுள்ள செயல்.

      “கறுப்புத் துண்டு யூதாஸ் — காமராஜ்” என்பது (மொழி அளவில்) கூடப் பொருந்தியிருக்கும்.

    • rukku says:
      15 years ago

      bala அவர்களுடைய இந்தக்கருத்திற்கு 100% நானும் உடன்படுகின்றேன் வைக்கோவின் படத்தை மட்டும் போட்டு புரியாத புதிராக கட்டுரை கட்டுக்கதைபோல் புனையப்பட்டுள்ளது,Dr. V. பாண்டியன் போல் யாராவது தமிழ்நாட்டுக்காரர் பொழிப்புரை எழுதினால்த்தான் , சிலராவது புரிந்துகொள்ள முடியும், காமராஜ் என்பது கர்மவீரர் காமராஜரா, நக்கீரன் பத்திரிகையிலும் ஒரு புலுடா காமராஜ் இருப்பதாக அறியப்படுகிறது அவர் கபோதி கருணாநிதியின் அல்லக்கை ,எனவே இது கட்டுரையல்ல தமிழ்மாறன் குறிப்பிட்டதுபோல் “ரத்னபாலா” அல்லது அம்புலிமாமாக்கதை போன்றதே,

  3. muruganandam says:
    15 years ago

    ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமர்க அறியப்படவேண்டியவர் மிக அமைதியாக தமிழகத்தின் மையத்தில் வசிக்கிறார். வைகோவின் கள்ளத்தனத்தை அவர் பிறந்த மண்ணில் கேட்டுப்பார்க்கவும். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சுட்டில் பலியானவர்களைப் பற்றி ஏன் கள்ள மவுனம் சாதிக்கின்றனர்? அரசு என்பவரைப் பற்றி யாருக்காவது தெரியுமா?

  4. Mahendra says:
    15 years ago

    தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

    ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்து பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் அதைக்குறித்து தன் நெஞ்சமே தன்னை வருத்தும் – வள்ளுவர்.

  5. rukku says:
    15 years ago

    தாமதிக்கப் பட்டாலும் மறுக்கப் படாத நீதி ..

    நீண்ட தாமதத்திற்குப் பிறகு, மறுக்கப் படாமல் நீதி கிடைத்திருக்கிறது. ராமன் வனவாசம் சென்ற 14 ஆண்டுகள் போல 14 ஆண்டுகள் கழித்து அந்த நீதி கிடைத்திருக்கிறது.

    கிடைத்த இந்த நீதி, சாதாரணமானது அல்ல, மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக ஏழை மக்களின் வாழ்வில் விளக்கேற்றவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் கிடைத்திருக்கக் கூடிய நீதி.

    ஆம் தோழர்களே, இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனத்தின், துணை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி ஆலையை மூட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தை வந்தடைந்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.

    முதலில், குஜராத் மாநிலத்தில் இந்த நிறுவனம் ஆலையை தொடங்க விண்ணப்பிக்கிறது. அங்கே பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, கோவா வுக்கு செல்கிறது. அங்கேயும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினார்கள். அடுத்து மகாராஷ்ட்ரா செல்கிறது. அங்கே ஆலை தொடங்க அனுமதி வழங்கப் பட்டு, ஆலை கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்களின் தொடர்ந்த போராட்டங்களினால், ஆலை தொடங்க வழங்கப் பட்ட அனுமதி ரத்து செய்யப் படுகிறது.

    எந்த ஊரில் இளிச்ச வாயன்கள் நிறைய இருக்கிறார்கள் என்று பார்த்த வேதாந்தா நிறுவனம், தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்கிறது. 1991-96 காலகட்டத்தில் ஆணவத்தின் உச்சியில் இருந்த செல்வி.ஜெயலலிதா, அவரே நேரடியாக தூத்துக்குடி சென்று, இந்த ஆலை தொடங்க அடிக்கல் நாட்டுகிறார். அந்தக் காலகட்டத்தில் தான், யார் எதிர்ப்பு தெரிவித்தாலும், தடா என்ற கொடிய சட்டம் பாயுமே. வீட்டுக்கு ஆட்டோ வருமே … பொது மக்களின் எதிர்ப்பு கடுமையான போராட்டங்களால் அடக்கப் பட்டது.

    ஆலை கட்ட அனுமதி வழங்கப் பட்ட 4 மாதங்களிலேயே, ஆண்டுக்கு 1,40,000 டன் காப்பர் தயாரிக்க அனுமதி வழங்குகிறது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம். அனுமதி வழங்கும் போது, சுற்றுச் சுழல் பாதுகாக்கப் பட்ட பகுதிகள் அமைந்திருக்கும் 25 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு அப்பால் அந்த ஆலை அமைய வேண்டும் என்ற கட்டுப் பாடு விதிக்கப் படுகிறது.

    ஆனால் ஸ்டெர்லைட் 16 கிலோமீட்டர்களுக்குள்ளாகவே ஆலையையும் உற்பத்தியையும் தொடங்குகிறது. இந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப் பாட்டு வாரியம், இந்நிறுவனத்திற்கு மேலும் மற்றொரு வகையான Blister Copper என்பதை ஆண்டுக்கு 40,000 டன்கள் தயாரிக்க அனுமதி வழங்கியது.

    இந்தச் சூழலில் தான், 1996ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, சுற்றுச் சூழலுக்கான மையம் ஒரு வழக்கை தொடர்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட வழக்குகள், ஸ்டெர்லைட்டின் தூத்துக்குடி ஆலைக்கு வழங்கப் பட்ட அனுமதியை எதிர்த்து தொடரப்படுகின்றன.

    இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, 1997 ஜுலை மாதத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருந்த ரமேஷ் பிளவர்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியான சல்பர் டையாக்சைட் என்ற வாயுவை சுவாசித்து மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகின்றனர். இந்தத் தகவலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுகிறது.

    இந்தச் சூழலில், ஸ்டெர்லைட் நிறுவனம், ஒரு தந்திரமான காரியத்தைச் செய்கிறது. சசிகுமார் என்ற ஒருவரை, இந்த வழக்கில் தொழிலாளர்கள் சார்பாக உள்ளே நுழைக்கிறது. அந்த சசிக்குமார், ஸ்டெர்லைட் நிறுவனத்தால் வேலை பெற்ற தொழிலாளர்கள் சார்பாக வருகிறார். அவர் நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் ஒரு சிறந்த தொழிற்சாலை என்றும், நிறைய பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது என்றும், சுற்றுச் சூழலை நன்கு பாதுகாக்கிறது என்றும் சமர்ப்பிக்கிறார்.

    1998ம் ஆண்டு, National Environmental Engineering Research Institute தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் என்ற நிறுவனத்தை, ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. அந்த மத்திய அரசு நிறுவனம், இத்தொழிற்சாலைக்கு சுற்றுச் சூழல் தடையில்லா சான்று வழங்கியது தவறு என்று அறிக்கை சமர்ப்பிக்கிறது.

    ஒரு பன்னாட்டு நிறுவனம், எப்படி அரசுகளையும், அதிகாரிகளையும் விலைக்கு வாங்க முடியும் என்பதற்கு சான்று, நீதிமன்றத்தில், மத்திய அரசு நிறுவனம் அளித்த அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆகிய மூன்றும் ஒன்று கூடி எதிர்த்தது தான். ஆனால், இந்நிறுவனத்தில் ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்த சென்னை உயர்நீதிமன்றம் 23.11.1998 அன்று, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த மேல் முறையீடு, தள்ளுபடி செய்யப் பட்டது.

    மீண்டும் இந்த மனு 23.12.1998 அன்று விசாரணைக்கு வந்த போது, 26.12.1998 முதல் 28.02.1999 வரை பிரிசோதனை அடிப்படையில் இத்தொழிற்சாலை மீண்டும் இயங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் அணுகி, முழுவதும் இயங்க அனுமதி கேட்ட போது, நீதிமன்றம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், இந்நிறுவனத்தை ஆராய்ந்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தபின் இயங்க அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டது.

    ஆனால், அதற்குப் பிறகு ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு இறங்கு முகமே இல்லை. 2007-2008ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் லாபம் 1000 கோடி ரூபாய்கள்.

    ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு கொடுத்த ஆணையில், சுற்றுச் சூழல் பாதுகாக்கப் பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப் பட்ட 25 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்துக்குள் ஸ்டெர்லைட் நிறுவனம் எந்த கட்டுமான உற்பத்தி பணியையும் மேற்கோள்ளக் கூடாது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

    ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து, வந்தீவு, கசுவார், கரைச்சள்ளி மற்றும் விலாங்குச்சள்ளி ஆகிய நான்கு பாதுகாக்கப்பட்ட தீவுகள் 25 கிலோ மீட்டர்களுக்குள் உள்ளன. இத்தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது அல்ல என்ற நிலையில், 25 கிலோ மீட்டர்களுக்குள்ளாக இந்த தொழிற்சாலையை ஸ்டெர்லைட் நிறுவனம் அமைத்திருக்கிறதென்றால், அது ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அகந்தையை மட்டுமே காட்டுகிறது.

    மேலும் சுற்றுச் சூழல் பாதிப்புக்குள்ளாக்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் இடத்தில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பிறகே அனுமதி வழங்க வேண்டும் என்ற அடிப்படை விதியும் காற்றில் பறக்க விடப் பட்டு, இத்தொழிற்சாலைக்கு, தான்தோன்றித் தனமாக அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், “பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்த சூழலிலும், மராட்டிய மாநிலத்தில், 200 கோடி ரூபாய் செலவழித்து கட்டுமானப் பணிகளை தொடங்கிய பின் அனுமதி ரத்து செய்யப் பட்ட ஒரு திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி கொடுக்கப் படும் முன்னர், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல முறை யோசித்திருக்க வேண்டும். ஆனால் பொது கருத்துக் கேட்புக் கூட்டம் கூட நடத்தப் படவில்லை. பொது கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினால், பொது மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான், அவசியமான இந்தக் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது தவிர்க்கப் பட்டுள்ளது என்று எண்ண வேண்டியுள்ளது.

    “சுத்தமான, சுகாதாரமான மனிதர்கள் வாழுவதற்கு ஏற்ற ஒரு சூழலில் வாழ வேண்டும் என்ற உரிமை, வாழும் உரிமையின் ஒரு பகுதியே ஆகும். இதை உத்தரவாதப் படுத்த, ஒரு அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சுற்றுச் சூழலுக்கும், சுகாதாரமான சூழலுக்கும் ஏற்ற ஒரு கொள்கையை வடித்தெடுக்க வேண்டும்.“

    “ஒவ்வொரு குடிமகனுக்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதப் படுத்தியுள்ள தரமான வாழும் உரிமை, அடிப்படை உரிமையாகும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த உரிமையை பறிக்கும் எந்த ஒரு நபரின் நடவடிக்கையையும் செயலையும், கடுமையாகவே பார்க்க வேண்டும். “

    “அரசின் எந்த ஒரு பிரிவானாலும், நல்ல விஷயங்களையும், பொது மக்களின் நலமையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். அரசின் அதிகார மையத்தில் அமர்ந்திருக்கும், அதிகாரம் படைத்த அத்த அதிகாரிகளும், அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம், பொது மக்களுக்கு நன்மை செய்வதற்காக மட்டுமே என்பதை உணர வேண்டும்“

    “காற்றையும், நீரையும் மாசு படுத்தும் விவகாரங்களை நீதிமன்றங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எங்கள் முன் வைக்கப் பட்டுள்ள ஆவணங்களைப் பார்க்கையில், ஸ்டெர்லைட் நிறுவனம், அத்தொழிற்சாலை வெளிப்படுத்தும் மாசுப் புகையினால், காற்றை மாசுப் படுத்துவதால், அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் மீது கடும் விளைவுகளை ஏற்படுத்துவதை காண முடிகிறது. தொடர்ந்து, கட்டுப் பாடற்ற முறையில், காற்றை மாசுபடுத்தி, இயற்கை அன்னையின் மீது தாரைப் பூசும் இந்நிறுவனத்தை, இந்த ரிட் மனுக்களை அனுமதிப்பதன் மூலமாகவாவது, இப்போதாவது நிறுத்தத் தான் வேண்டும். “

    “ஸ்டெர்லைட் நேர்வை எடுத்துக் கொள்ளும் போது, அந்நிறுவனம் காற்றையும் நிலத்தையும் மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், அத்தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் உடல்நலத்துக்கும், பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தாக உள்ளது. உண்மை தான். இத்தொழிற்சாலையின் அனுமதியை ரத்து செய்தால், இந்தத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் தான். ஆனால், இத்தொழிற்சாலை தொடர்ந்து நடைபெறுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை எங்கள் முன் உள்ள ஆவணங்கள் தெளிவாக உணர்த்துவதால் நாங்கள் இந்த முடிவை எடுத்தே ஆக வேண்டும்.”

    என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றே கருதுகிறது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் எலிப்பி தர்மா ராவ் மற்றும் பால் வசந்தகுமார் ஆகிய இருவருக்கும், வணக்கங்களும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.

    லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை மட்டும் நீங்கள் உங்கள் தீர்ப்பின் மூலமாக காப்பாற்ற வில்லை. இன்னும் வரப்போகிற சந்ததிகளுக்கு இந்தப் பூமியை பத்திரமாக விட்டுச் செல்லும் ஒரு அரிய பணியை ஆற்றியிருக்கிறீர்கள்.

    ஏன் இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால், இந்த வேதாந்தாவின் இயக்குநர் குழுவில் இயக்குநராக இருந்தது யார் தெரியுமா ? இன்று வேதாந்தாவுக்கு எதிராக போராடும் ஆதிவாசிகளை வேட்டையாடும் பொறுப்பில் இருக்கும் ப.சிதம்பரம் தான் அது.
    அது மட்டுமின்றி, இந்தியாவின் தலைமை நீதிபதி கபாடியா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறார் என்பதும், அந்நிறுவனத்திற்கு சாதகமாக அவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்ற விஷயமும் தெரிந்தும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்க அசாத்திய துணிச்சலும், நீதியுணர்வும் வேண்டும்.

    மாண்புமிகு உள்துறை அமைச்சருக்கு நெருக்கமானதும், பல அரசாங்கங்களை ஆக்கவும் அழிக்கவும் வல்ல வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக வழங்கப் பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதே…

    இந்த தேசத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க உத்தரவிட்ட எலிப்பி தர்மாராவும், பால் வசந்த குமாரும் நீதிமான்களா ? ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்துக் கொண்டு, அந்நிறுவனத்துக்கு சாதகமாகவும், பழங்குடி மக்களுக்கு எதிராகவும் தீர்ப்பி வழங்கிய இந்திய தலைமை நீதிபதி கபாடியா நீதிமானா ?

    எலிப்பி தர்மாராவ் மற்றும் பால் வசந்த குமார் அவர்களே… இந்த தேசம் என்றென்றும் உங்களுக்கு கடமைப் பட்டுள்ளது.

    • thamilmaran says:
      15 years ago

      ஊழல் எனும் பலகீனத்தைப் பயன்படுத்தி உள்ளே வரும் வேதாந்தாக்கள் ஏழைக்கு இந்தியாவில் மரியாதை இல்லை என்பதை அறீந்து எப்படி எல்லாம் விளயாடுகிறது.ருக்குவின் தகவலுக்கு நன்றீ.

    • முருகு says:
      15 years ago

      நல்ல கட்டுரை. அதிக தரவுகள். பாராட்டுக்கள். ஒரே ஒரு தகவல். ஸ்டெர்லைட் எனும் ஆளைக்குடிக்கும் ஆலை எல்லா அதிகார பீடங்களையும் கவனித்த பிறகு தூத்துக்குடி மண்ணில் கால்வைத்த காலம் அது..பாதிப்புக்கு உள்ளாகும் மக்களைத் திரட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி என்ற புரட்சிகர அமைப்பின் வழிகாட்டலில் தீவிர எதிர்ப்பியக்கம் மக்கள்மயப்படுத்தப்பட்டது. இப்போது உள்ளதைப்போல மீடியாவை வைத்து பலன் பார்க்கும் கலையை கட்சிகள் கைக்கொள்ளாத காலம்..எதிர்ப்பியக்கத்தின் வீச்சைக் கண்டு பயந்தது, வேதாந்தா நிறுவனம். இயக்கத்தின் தலைவராக இருந்த பி.பி. தமிழ்மாந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர் மசியவில்லை. விளைவு, குடியிருந்த வீட்டின் அருகில் நள்ளிரவில் அவர் கடத்தப்பட்டார். தகவல் காட்டுத்தீ போலப் பரவி, மக்கள் தெருவுக்கு வரவும் கடத்தப்பட்டவர் பத்திரமாகக் கொண்டுவந்து விடப்பட்டார். இன்றைக்கும் அந்த மனிதர் உயிருடந்தான் இருக்கிறார். வைகோ யூதாசா இல்லையா என்பதை அவரிடம் கேளுங்கள். புட்டுபுட்டு வைப்பார். ஊரே சிரிக்கிறது போங்கள்!

  6. Mahendra says:
    15 years ago

    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஆலையைப்பற்றிய விபரங்களை ஆதாரத்தோடும் துணிவோடும் அறியத்தந்த ருக்கு அவர்களுக்கு மிக்கநன்றிகள்.

    “லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை மட்டும் நீங்கள் உங்கள் தீர்ப்பின் மூலமாக காப்பாற்ற வில்லை. இன்னும் வரப்போகிற சந்ததிகளுக்கு இந்தப் பூமியை பத்திரமாக விட்டுச் செல்லும் ஒரு அரிய பணியை ஆற்றியிருக்கிறீர்கள்“. இந்த வரிகள் இன்றைய உலக அரசியல் என்னும் பாறாங்கல்லில் ஓடும் சிறிய அருவியே ஆனாலும், இத்தகய பல அருவிகள் ஒன்றுசேரும்போது அந்தப்பாறை புரட்டப்படும் என்ற நம்பிக்கையை தருகிறது.

  7. indran says:
    15 years ago

    கட்டுரையெழுதியவரின் நோக்கம் என்னவோ தெரியாது. ஆனால் ருக்குவின் தகவல்கள் எங்களுக்மகு நல்லதெளிவு. எல்லாவற்றிற்கும் மூலமான செல்வியா ஜெயலலிதா இருக்க ஏன் வை கோவை வைகிறீர்கள். அந்தாள் மூன்றாவது அணிதொடங்கி கூத்தாடிகளிடமிருந்து தமிழகத்தையும் தமிழீழத்தையும் காப்பாற்றும் என்று நம்பியேகெட்டுப்பழகிய நாய்த்தமிழரான தமிழீழத்தமிழர் இன்னும் நம்புகிறார்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...