கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் வருகிற திங்கள் கிழமை 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மளிகைக்கடைகள், பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், தபால் துறை தவிர்த்து ஏனையை அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும். உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதியளிக்கப்படும்.
கொரோனா ஒழிப்புப் பணியில் ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் களமிரக்கும் அரசு .15 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையை துவங்கியிருக்கி|றது. துரித கதியில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள்ன. மத்திய அரசிடம் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கேட்டுள்ள தமிழக அரசு அதை விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் அந்நாட்களில் அம்மா உணவகம் திறந்தே இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிமுக தலைவர்களுள் ஒருவரான ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.