“புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பணம் இன்னும் அவர்களின் கைகளிலேயே உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள புலம்பெயர் நாடுகளில் வாழும் புலி ஆதரவுத் தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளவும், புலிகளை மறுபடி பலம் பெறச் செய்யவும் சாத்தியங்கள் உள்ளன. இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைத்துவம் அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரமான அந்த இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அவர்களின் வலைப்பின்னல் குறித்து நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.” என்று இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்தியப் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்த்திருந்தார்.
2009 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற இந்த மாநாடு நடைபெற்ற சில வாரங்களில் எம்.கே.நாராயணன் இதே கருத்தை எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் இற்கு வழங்கிய செவ்வியிலும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். இவரது கூற்று இந்தியாவின் “சிந்தனைச் சிற்பிகளின்” மூளையில் திட்டம் வகுக்கப்பட்டுவிட்டதற்கான முன்னறிவிப்பு.
நாராயணன் கரிசனை எழுவதற்கு சரியாக ஒரு மாதங்களின் முன்னதாக மலேசியத் தலை நகரில் கே.பி என்ற குமரன்பத்மநாதன் “கைது செய்யப்பட்டு” இலங்கை கொண்டு செல்லப்படுகிறார். கே.பி “கைதுசெய்யப்படுவதற்கு” சில நாட்களின் முன்னர் அவுஸ்திரேலிய வானொலியொன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகளே காரணம் என்று இந்தியாவின் பங்கை மறைத்துக் கருத்துத் தெரிவிக்கிறார். தவிர, இந்தியாவுடன் அரசியல் தொடர்புகளைப் பேணிவருவதாகக் செவ்வியில் கூறிய கே.பி இந்திய அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் நலன்களை உறுதிபடுத்தப் போவதாகக் குறிப்பிடுகிறார்.
இப்போது புலி ஆதரவுப் புலம்பெயர் குழு ஒன்று கே.பி ஊடான “இனப்படுகொலை” இலங்கை அரசுடனான சமரச்த்திற்காக இலங்கை சென்று திரும்பியுள்ளது.
கே.பியை கோதாபாய ராஜபக்ச 2006ம் ஆண்டே சந்தித்திருப்பதாக கோதாபாய கே.பியின் முன்னிலையில் தம்மிடம் கூறியதாக மருத்துவக் கலாநிதி அருட்குமார் தமிழ்நெட்டிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடுகிறார்.
அருட்குமாரின் “மனச்சாட்சியுள்ள” கருத்துக்களின் அடிப்படையில் அவர் சொல்லவருவதெல்லாம் இது தான்:
1. கே.பி என்பவர் இலங்கை அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறார்.
2. இலங்கை அரசின் முதலாவது நோக்கம் புலிகளின் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவருவது.
3. புலம் பெயர் நாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் குறித்த அழுத்தங்களத் தவிர்த்துக் கொள்ளல்.
4. தமிழ் நாட்டிற்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முரண்பாடுகளை உருவாக்குதல்.
ஏற்கனவே புலியெதிர்ப்பு முகாமிலிருந்த புலம் பெயர் அரசியல் பிரமுகர்கள் பலரை இலங்கை அரசு இலகுவாகவே உள்வாங்கிக் கொண்டது. அவர்களில் பலர் திறந்த வெளி முகாம்களில் மக்கள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த முகாம்கள் “சர்வதேச தரத்தில்” அமைந்திருப்பதாகக் கருத்து வெளியிட்டவர்கள்.
இவர்கள் இலங்கை அரசின் தொங்குதசைகளாக மாறி நாளாகிவிட்டது. இப்போது புலி ஆதரவாளர்களின் சுற்று.
அருட்குமாருடன் இந்தக் குழுவுவில் சென்ற என்ற முன்னை நாள் ரெலோ உறுப்பினரும் பின்னதாக புலி ஆதரவாளருமான சார்ள்ஸ் அன்டனிதாஸ் பி.பி.சி தமிழ்ச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அருட்குமாருக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசுடன் இணைந்து கே.பி ஊடாக தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதென்பது இன்றைய கடமை என்ற கருத்துப்பட கூறுகிறார் சார்ள்ஸ் அன்டனிதாஸ்.
இந்தக் குழுவில் சென்ற ஏனையோர் புலிகளிடம் கற்றுக்கொண்ட இரகசியம் பேணும் முறைமையக் கையாள்கின்றனர்.
எது எவ்வாறாயினும் இலங்கை இந்திய அரசுகளால் திட்டமிடப்பட்ட சதிவலைக்குள் கே.பியும் அவரின் ஊடாக சாள்ஸ் போன்ற புலம் பெயர் புலிகளின் இன்னொரு பகுதியும் சிக்குண்டுள்ளனர். நாராயணனின் திட்டம் இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
புலிகள் போராட்டம் என்ற பெயரில் வளர்த்தெடுத்த சிந்தனை முறை அபாயகரமானது. அதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு காய் நகர்த்தும் தந்திரோபாயம் தான் அவர்களின் அடிப்படை.
இந்த வகையில் நெடுமாறன், வை.கோ என்று ஆரம்பித்து ஐரோப்பிய அரசியல் கட்சிகள் வரை இவர்களின் நண்பர்களாயினர். இறுதியில் இந்தச் சந்தர்ப்பவாதிகள் கைகழுவி விட்டதும், புலிகள் பலமிழந்து அழிந்து போயினர். அதே சிந்தனை முறையின் மறுபக்கம் தான் இன்று ஐம்பதாயிம் அப்பாவிகளை ஓலமிட ஒலமிடக் கொன்று குவித்த கோதாபயவுடன் கைகோர்த்துக்கொள்ள வைத்திருக்கிறது.
இன்று புலம் பெயர் புலிகளின் வலைப் பின்னல் இரண்டு பிரதான பிரிவுகளாப் பிளவுபடுகின்றது.. ஒன்று இந்திய இலங்கை அரச உளவு வலையத்துக்கு உட்பட்டது. மற்றையது ஐரோப்பிய உளவு நிறுவனங்களோடு தொடர்பானது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி கனடாவிலிருந்து தேடகம் குழு விடுத்திருந்த அறிக்கை இங்கு குறித்துக்காட்டத்தக்கது. “இந்தியாவும், மேற்குலகும் தங்கள் மேலாதிக்கப் போக்கை நிலை நிறுத்துவதற்கு பிரயத்தனங்களை எடுத்த வண்ணமே உள்ளன.
மேற்கில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமதுநலன்களுக்காக பயன்படுத்துவதில் மேற்குலகம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் புலம்பெயர்ந்த சமூகத்தின் ஊடாக ஒரு பொது அரசியல் போக்கை இலங்கைத்தமிழர்கள் மத்தியில் உருவாக்குவதில் மேற்குலகு அக்கறை கொண்டுள்ளது.” என்று தேடகம் தனது அவதானிப்பை வெளியிட்டது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை மறுக்கப்ப்பட்டதற்கான காரணம் என இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் ஹகலிய ரம்புவக்கல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதிகார வர்க்கமும், புலனாய்வு நிறுவனங்களையும் நம்பியிருக்கும் அரசியல் இறுதியாக இரத்தம் தோய்ந்த கோதபாயவின் காலடியில் புலிகளின் ஒரு பகுதியை மண்டியிட வைத்துள்ளது. இஸ்ரேல் பலஸ்தீனத்தில் குண்டுமழை பொழியும் வேளைகளிலெல்லாம் மேற்கில் போராடும் சக்திகளால் அந்த நாட்டு அரசுகளுக்குப் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் தான் அவற்றைத் தணித்துள்ளது.
புலிகளின் அதிகார வர்க்க அரசியல் போராடும் சக்திகளைக் கண்டுகொண்டதில்லை. இந்தியாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி அவர்களின் அரசியல் அவர்களின் அதிகாரவர்க்கக் கூட்டு என்பதுதே. அதுதான் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்துச் சிதைத்துச் சீரழித்துள்ளது.
மக்கள் பற்றுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் தோற்றுப் போன, அதிகாரப் போட்டிக்குள் சிக்குண்ட அரசியல் வழிமுறைகளை நிராகரித்து, இங்குள்ள போராடும் முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் போராடங்களை முன்னெடுப்பதன் ஊடாகவே இலங்கையில் ஒரு சிறிய ஜனநாயக இடைவெளியையாவது ஏற்படுத்த முடியும். அந்த இடைவெளி இலங்கையில் எதிர்காலத்தில் உருவாகவல்ல மக்கள் போராட்டத்தை உறுதிபெறச் செய்யும்.
தொடர்புடைய பதிவுகள் :
கே.பி இன் இந்தியச் சார்பு நிலையும் இந்தியாவின் இஸ்ரேலும் – -07.07.2009
கண்ணீலே விழுந்த தூசி போகட்டும் என்றூ விடடதால் பார்வைப் பழுதாகி விடடது.கண்ணீல் இப்போது இருக்கின்ற கண்ணீர் அழுவதனால் அல்ல.துரோகங்களாலும் காட்டிக் கொடுப்புக்களாலும் தெருவில் விடப்பட்ட தமிழர்களீன் ஏமாற்றத்தின் சோகம். இந்தியாவால்தான் இன்னும் எரிகிறது இலங்கை அவ்வப்போது தீயை அனைப்பதாய் வந்து எரியும் நெருப்பில் எண்னெய் தூவும் இந்தியாவின் முகம் போலிச் சுவாமியின் சிரிப்பு. அரசியல் செய்யும் உலகம் இரத்தத்தில் இலக்கியம் செய்கிறது. தமிழ்ர் இனியாவது புத்தகங்கள தேடி எடுத்து படிக்க வேண்டும்.காசு கொடுத்து போரிட பொடியள் இல்லை ஊரில்.
First of all,British Tamil Forum is,”SHOWING HEAD TO THE SNAKE and TAIL TO FISH”.
Forgetting the past,and diverting on “ECONOMIC” development,has been accepted by “srilankan Tamils”,also by Indian Tamils like me.
Iam this,”ஒரு “நியாய பூர்வமான அணுகுமுறைகள் போல்” “முள்ளியவாய்க்கால்கள் முகத்தில் அறையப்படுகின்றன”!. காலனித்துவ காலத்தில் இத்தகைய போக்குகளை ஆதரித்தவர்களே, இதற்கு இயல்பாக, ”உடல் மொழி ரீதியில்” ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்!”.
சென்ற 2009 ஆண்டு முள்ளிய வாய்க்காலுக்கு பிறகு,இந்திய பதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன் அவர்கள்,சென்னை வந்தபோது கவிஞர்.மு.க.கனிமொழியை ஆரத்தழுவியவாறு புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் உலா வந்ததே,பிறகு கொழும்பு சென்று திரு.ராஜ பக்ஷே அவர்களை சந்தித்த படங்கள் வெளி வந்ததே,இதெல்லாம்,கனிமொழி,கலூரியில் படித்தகாலத்தில்,சிறீ சபாரத்தினம் கலைஞர் வீட்டுக்கு விஜயம் செய்கிற போது,டேலோ இயக்கத்தின் மீது ஏற்ப்பட்ட அனுதாபத்தினாலா?,அல்லது,கே.பி. போல் உளவு நிறுவனங்களது(அதிகாரவர்கங்களது?),நிகழ்ச்சி நிரல்களில் சிக்கப்பட்டுள்ளனரா?.
So,Whoever educated in European-American old libraries(against south Asian native PEDANTRY?),based on “German created(1785),genetical(or caste based)based,COMPARATIVE STUDIES METHODOLOGIES(ஒப்பிலக்கணம்)”, were liable to their body language,they express by this body language, wrong signals to the south Asian societies!.SOME PEOPLE WERE CROWNED and SOME WERE DISCRIMINATED AGAINST NATIVE PEDANTRY(?)!.So we cannot discuss avoiding caste system,despite BTF pretending untouchablity to it!.
தலைப்பை பார்த்ததும் ஏதோ KGB இன் கிம்பில்பியின் கதை போன்ற சுவாரசியம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை. வழமையான உழுந்துதான் கேபி என்ற தோசைக்கும் அரைத்துள்ளார் அஜித்.
சரியாக சொன்னீர்கள். பரபரப்பு ரீல்களாக சுத்தியுள்ளர்.
தேடகம் அறிக்கையை ஏதொ பாண்கி மூனின் அறிக்கையை போல் சாட்சிக்கு எடுத்ததிலிருந்து சுய சிந்தனை வெறுமை பளிச்சிடுகின்றது.
proffessor
Kim Philbyக்குக் கொள்கை இருந்தது. அவர் பணத்துகாக யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.
தகவல்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க விரும்பாவிடின் அவை பற்றியும் பேசலாமே. சுய சிந்தனை என்று கற்பனைச் சரக்கை எதிர்பார்க்கிறாரா ராஜ்?
K.P.’இனது கடந்த காலத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் உண்மையில் ஒருவரிடமுமே இல்லை. ஸ்ரீ லங்கா கூறும் பேச்சுக்களை வைத்தே மாத்திரம் நாம் K.P.’யைப்பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து விட முடியாது.
கேபி காணாத பணமல்ல அவர் சிறிலங்கா அரசுக்கு காட்டிக்கொடுக்க; கேபியிடம் பணமும் எங்கு இருக்கிறது என்று தெரிந்திருக்குமானால் கேபி இன்னும் இருபது வருடத்துக்கு குறைந்தது மறைந்து வாழ அந்த பணமே போதுமானது எனக்கருதுகிறேன். கடந்த 30 வருடத்துக்கு மேலாக தண்ணிக்காட்டிய கேபிக்கு இந்த சொய்சும் இருந்திருக்கும். ஆனால் அவரிடம் தனது அன்றாட செலவுக்கே இறுதிகாலத்தில் கஸ்ரப்பட்டவர் என்பதை பலர் அவரை சந்தித்தபோது கண்டறிந்துள்ளனர். அண்மையில் கேபியை சந்திக்க சென்ற குழுவில் சென்ற இன்பம் மாஸ்ரர் கேபியை மலேசியாவில் சந்திக்க சென்றபோது இன்பம் மாஸ்ரரின் சேட் பொக்கற்றில் இருந்து கேபி பணத்தை பறித்தெடுத்த கதை கூட உள்ளது. இப்படி கேபி தனித்துவிடப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்த பலர் கேபியை ஆதரிக்கின்றனர்; அதனால் கேபியின் பேரிலான அனுதாபம் கூட கேபியை சந்திக்க சென்றகுழுவில் இடம்பெற்றுள்ளனர். KGB தனது நாட்டுக்காக உளவு பார்த்த கிம்பில்பியை மதிக்குது என்றால் கடந்த 30 வருடமாக புலிகள் இயக்கத்தை தக்க வைத்த கேபி செய்த பணியும் ஓர் பிரசித்தி பெற்ற ஒரு விடுதலைக்காக போராடும் சிறுபான்மை சமூகத்தின் உளவு செயற்பாடாகவே பதியப்படவேண்டும்.
இன்று கேபியின் அதே நிலைப்பாட்டை இன்னும் பலர் எடுக்கவே இது போன்ற ஆதாரமற்ற எதிர்வு கூறல்கள் அமையபோகிறது.
“சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டை காரன் காலில் விழுவதே
மேல் என்கிற நிலையே இன்று மேலோங்கியுள்ளது”
proffessor,
KP பற்றி இலங்கை அரசாங்கம் சொல்லியா தெரிய வேண்டும்? நேரில் தெரிந்தவர்கள் பலர் உள்ளனரே.
நிகழ் காலமே நிறையச் சொல்லுகிறதே! அண்மையில் புலத்திலிருந்து விருந்தாளிகள் வந்து பார்த்துப் போயிருக்கிறார்கள். அதுவும் பொய்யா?
அவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் இலங்கை அரசாங்கத்தின் திரிப்புக்களா?
இக் கட்டுரை நீங்கள் தொடும் புனைவுகள் பற்றியதல்லவே.
2006ல் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரண கே பி யைச் சந்தித்தாக அருட்குமார் குறிப்பிட்டடுள்ளமை பற்றி சார்ள்ஸிடம் கேட்ட போது ‘அந்த உரையாடல் இடம்பெற்ற போது அருட்குமார் அங்கிருக்கவில்லை’ என்றும் ‘விமலதாஸ் அருட்குமாருக்கு கூறிய விடயத்தையே அருட்குமார் தவறாகப் புரிந்துகொண்டார்’ எனவும் சார்ள்ஸ் தெரிவித்தார்.
‘2006ல் தாய்லாந்தில் கபில ஹத்துரசிங்க பணியில் இருந்தபோது கே பியை தேடித் திரிந்தது பற்றிய விடயமே நகைச்சுவையாகப் பரிமாறப்பட்டது’ எனவும் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார். தேசம்
கே.பி யை விடுங்கள். அவர் சிங்கள தேசத்தின் ராணுவ தளபதிபோல மாறி எத்தனையோ காலம் ஆகிவிட்டது. அவர் கடந்த காலங்களில் தாய்லாந்திலும், சுவிசிலும், நோர்வேயிலும், கனடாவிலும் இருந்துகொண்டு செய்த காட்டிக்கொடுப்புகளை இப்போது கொழும்பில் இருந்து செய்கிறார். சங்கதி
இந்த செய்திகளில் இருந்து என்ன புரிகிறது? கேபி விடுதலை புலிகளில் இருந்த சதா காலமும் பிரபாகரனும் விடுதலை புலிகளின் பலமான புலனாய்வு அமைப்பு இருந்த காலத்திலும் புலிக்குள் ஒரு இரட்டை உளவாளியாக இருந்துள்ளார் என்று கொள்வோமா? SO கிம்பில்பி என்ன கிம்பில்பி? கிம்பில்பியா கேபி கொக்கா?
XXX உங்களை அறியாமலே புலிகள் தான் எல்லோரையும் விழுங்கும் அளவுக்கு துரோகிகளாகவும்; உளவாளிகளாகவும் செயற்பட்டுள்ளனர். செயற்படுகின்றனர் என்பதை நிறுவ முனைகின்றீர்கள். நன்றி அறிதலுடன் புரொபசர்
நன்றிக்கு நன்றி.
என்றலும், நான் என்னை அறிந்தே (அறியாமலும் தான்) பிரதான தமிழ் விடுதலை இயக்கங்கள் அனைத்துமே ஜனநாயகமற்ற சுத்த ராணுவக் கண்ணோட்டமுடையவையாய் இருந்தன என்று தான் சொல்லி வருகிறேன். எனவே புலிகள் விலக்கல்ல.
Doctor V. Arudkumar Interview in YouTube!
http://www.athirady.info/2010/06/30/91299
இந்தத் துரோகிகளும் விரைவில் பாடம் படிப்பர். துரோகிகள் கருணா டக்ளசு போன்றவர்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அவமானங்கள் தான் இந்த கே.பிக்கும். சிங்களம் இந்த துரோகிகளை தமிழரின் அழிவுக்கு கருவியாக்கிக் கொண்டு கடைசியில் கருவேப்பிலை போன்று தூக்கி எறியப்படப் போகின்றார்கள். தமிழனின் சாபக் கேடுகள் இந்த இனத் தூரோகிகள். யாழ்.
நாளை உருத்திரகுமாரன் கொம்பனியின் கதையும் பிற பண மூட்டைப் பாதுகாவலர்களின் கதையும் இப்படியே அமையாதா? அதனால் தான் சொல்லுகிறேன்:
“விடுதலை பற்றிக் கதைக்க முன்னே
கணக்கைக் காட்டுங்கள் — பழைய
கணக்கைக் காட்டுங்கள் — இன்றேல்
ஒதுங்கி நில்லுங்கள் — மெல்லப்
பதுங்கி ஓடுங்கள்”.
இங்கு கேபி நல்லவரா கெட்டவரா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை
ஆனால் இன்று புலிகளை நம்பிய கூட்டமும் தாயக கனவுடன் சாவினை
தழுவியவர்களின் உறவுகளும் வந்தோர்களைஎல்லாம் வாழவைத்த
வன்னிமக்களும் ஒரு நேர சோத்துக்கு கை ஏந்தி நிக்கிறார்கள்.இவற்றிற்கு
மேலாக புலிகள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை
இருபத்தையாயிரத்தில் இருந்து பத்தாயிரம் என்ற அறிவிப்பில் வந்து நிக்கிறது.
கைது செய்யப்பட்ட எவர்களது பெயரும் வெளியிடபடவும் இல்லை நீதி விசாரணையும்
கிடையாது. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டை காரன் காலில் விழுவதே
மேல் என்கிற நிலையே இன்று மேலோங்கியுள்ளது .கேபியை அரச புலணாய்வாளர்கள்
தான் வழிநடத்துகிறார்கள் என்பதை அறிவதற்கு இவ்வளவு நாட்கள் தேவையில்லை
அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை அவர்களுடன் தான் இருக்கிறார்.
முடிந்தால் டக்லஸ் ,கருணா வரிசையில் கேபியும் அரசியல் செய்யட்டும் .மக்கள் போராட்டத்தை
கட்டி எழுப்புவோம் என்கிறீர்கள் போராட வெளிக்கிட்டவர்களின் பிள்ளைகள் இன்று
அனாதைகளாக்கப்பட்டு தெருவில் நிக்கிறார்கள். பட்டவனுக்குத்தான் தெரியும் அதன் வலியும்
வேதனையும். இன்னுமோர் போராட்டத்திற்கு மக்கள் இப்போதைக்கு தயார் இல்லை இந்தியா
வழிநடத்துகிறது,இலங்கை வழிநடத்துகிறது,உலக நாடுகள் வழிநடத்துகின்றன என்பதையெல்லாம்
விட்டுவிட்டு எந்த நாய்களும் எந்த நாயை வேணுமென்றாலும் வழிநடத்தி விட்டு போகட்டும்
தோழனே! சகோதரனே! உன் உறவுகள் யாருமில்லாது நாதியற்று நிற்கிறார்கள் வா தோளோடு
தோள் கொடு அவர்களது அடுத்தகட்ட வாழ்க்கைக்கு வழி அமைப்போம்
அவரவர் அவரவருக்கு விளங்கியபடி எதையோ சொல்லுகிறார்கள், செய்கிறர்கள். எல்லாரும் முட்டாள்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும்
நீங்கள் காட்டும் வழி என்ன?
முன்னால் வந்து எதையாவது செய்யுங்கள்.
முடியாவிட்டால் ஆக்கமான ஆலோசனைகள் சிலவற்றை முன்வையுங்கள்.
உங்கள் பின்னால் வருவோர் அணி திரளும் போது மற்றச் சிந்தனைகளெல்லாம் காற்றில் அள்ளுண்டு போகாவா?
//நாளை உருத்திரகுமாரன் கொம்பனியின் கதையும் பிற பண மூட்டைப் பாதுகாவலர்களின் கதையும் இப்படியே அமையாதா? அதனால் தான் சொல்லுகிறேன்:
“விடுதலை பற்றிக் கதைக்க முன்னே
கணக்கைக் காட்டுங்கள் — பழைய
கணக்கைக் காட்டுங்கள் — இன்றேல்
ஒதுங்கி நில்லுங்கள் — மெல்லப்
பதுங்கி ஓடுங்கள்.
//
ரியாகச் சொன்னீர்கள் புலிகளில் இருந்து மற்ற இயக்கக் காரர்களும் பணம் மில்லியன் கனக்கில் வைத்துள்ளார்கள். இவர்கள் மக்கள் பணத்துக்குக் கணக்குக் காட்டாமல் இருக்கிறார்கள். அவர்களை வெளியே வந்து கணக்கு காட்ட சொல்லவும். புலி எதிர்ப்பு காரர்கள் காசுக்கு கணக்க்குக் காட்டாலமல் புலிகளை கேட்பது முன் உதாரணம் இல்லையே. 25 வரிடங்களின் பின்னாவது அதைச் செய்யட்டும்.
நன்றி.
எல்லாரும் தான் காட்ட வேன்டும்.
ஒருவரைக் காட்டி மற்றவர் பின்னிற்க இடமளிக்கக் கூடாது.
கண்கெட்டபின் சூரிய….
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்”
இயற்கையை இன்னும் எவ்வளவு காலம் வணங்கிகொண்டிருக்க போகிறோம்.
எங்கள் இறைவர்களின் நிலை கேளீர்
http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/07/100704_battschooldrop?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1