இந்திய உளவுப்பிரிவை (“றோ’) சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.தற்போது பாராளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் தமிழ்க் கட்சியின் தலைவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை இந்த முகவர் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மூர்த்தி என்ற பெயரை உடைய பெண் ஒருவரே இவ்வாறு ஊடுருவியிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.