கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளியரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரலை| மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,
1980ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து சர்வதேசத்திலும், ஏன் நரகத்திற்கு சென்று குரல்கொடுக்கவும் தயாரென்றார்.இதனைப் போன்று இன்று நாட்டில் இடம்பெறும்
மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும் ஊடக அடுக்குமுறை தொடர்பாக சர்வதேச ரீதியில் நானும் முறைப்பாடுகளை செய்திருந்தால் இன்று இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருக்காது.
நாட்டுக்கு எதிராக நான் எதனையும் செய்யவில்லை. ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை வழங்க வேண்டாமெனக் கூறியதாக என் மீது அபாண்டமான குற்றம்
சுமத்தப்படுகிறது. இதுதொடர்பாக ஆதாரபுர்வமாக வெளிப்படுத்த வேண்டுமென நாடாளுமன்றத்திலும், வெளியேயும் அரச தரப்பினருக்கு சாவல் விடுத்தேன்.
ஆனால் இதுவரையில் இதற்கு எவரும் பதிலளிக்கவில்லை.
ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை வழங்குவது தொடர்பில்27வது சரத்தில் ஊழலுக்கு எதிரான சாசனம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்து ஊழல் மோசடிகளுக்கு எதிரான சாசனத்தை நடைமுறைப்படுத்தினால் வரிச் சலுகை தானாக கிடைக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது.யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் பாதுகாப்பு வரி நீக்கப்படவில்லை. தேசத்தைக் கட்டியெழுப்பும்
வரிகள்3வீதமாகஅதிகரிக்கப்பட்டுள்ளன.இவ்வாறுசேகரிக்கப்படும்பெருந்தொகையான பணத்திற்கு என்ன நடந்தது? யார் திருடினார்கள்? சர்வதேச
நாணய நிதியத்திடம் கடன் பெறப்படுகிறது. 13,000 கோடி ரூபா பிணை முறிப்புக் கடனை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. இவை அபிவிருத்திக்குச்
செலவு செய்யப்பட்டதா? அல்லது இப்பணத்திற்கு என்ன நடந்தது என அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.
இன்று நாட்டிலுள்ள மக்களுக்கு வாழ்வதற்கு வீடுகள் இல்லை. ஆனால் ஜனாதிபதிக்கு நாடு முழுவதும் 7 மாளிகைகள் அமைக்கப்படுகின்றன. பிரிட்டிஸ்
மகாராணியாருக்கும் இந்தளவுக்கு மாளிகைகள் இல்லை. நாட்டின் தங்கத்தை திருடி டுபாய் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அரசாங்கம் முனைந்தது. இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினேன். ஆரம்பத்தில் பொய்யென மழுப்பியவர்கள் இன்று இக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு முடியாமல் நாடாளுமன்றத்திற்கும் வருவதில்லை. விடுதலைப் புலிகளிடமிருந்து எவ்வளவு தொகை தங்கம் கிடைத்தது என்பதையும் வெளியிடவேண்டும்.
வெளிநாட்டிலுள்ள டெம்பல்டென் வங்கிக் கணக்குகளில் கோடிக் கணக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இவ்வாறு சேமித்த இலங்கையர் யாரென்பதை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும். உண்மைகளை ஊடகங்களில் எழுத முடியாது. அந்தளவுக்கு அடக்குமுறை தலைதூக்கியுள்ளது. மக்களால் உண்மையை பேசமுடியவில்லை. அச்சமின்றி சுதந்திரமாக நடமாட முடியவில்லை. புலிகளின் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள அப்பாவி மக்களுக்கு நடமாடவும் சுதந்திரமில்லை.
ஊழல் மோசடிகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. இவ்வாறான அரசாங்கத்தின் தவறுகளை வெளிப்படுத்தி விமர்சிப்பதால் தேசத்துரோகி முத்திரை குத்தப்படுகிறது. நாட்டுக்கு நன்மையையும், மக்களுக்கு உரிமையையும் பெற்றுக்கொடுப்பது எப்படித் தேசத்துரோகமாகும். எனவே தேசத் துரோகம், தேசப்பற்று எதுவென மக்கள் சிந்தித்து புரிந்துகொள்ள வேண்டும்.
படையினர் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழித்தனர். ஆனால் இன்று அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. எனவே மக்கள் பேரலை மாநாட்டை நடதம்தி மாவட்ட ரீதியாக செயலாளர்களை நியமித்துள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவோம். அதற்கான திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளோம் என ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் மக்கள் பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி உள்ளிட்ட அரசியல்தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
வணக்கம்
உங்கள் செய்திக்கு நன்றி.
ஆயினும் செய்தி வெளியிடும் போது அதன் கருத்து எதனை முக்கியத்துவப் படுத்துகிறது என்பதே முக்கியம். உங்கள் தரவு ரணில் சொன்ன விடயங்களை முக்கியப் படுத்துவதை விட தயாமாஸ்ரர் ஜோஜ்மாஸ்ரர் அவர்களைச் சாடுவதாகவே உள்ளது. இது இடைத்தங்கல் முகாமில் இருப்பவர்களை எந்த வகையிலும் நன்மை பெற வைப்பதாக அமையாது. உங்களுக்கு வேண்டியது புலிகளைப் பழிவாங்குவதாக இருந்தால் தயாமாஸ்ரர் புலி அல்ல. அவர் புலிகள் அமைப்பில்இருந்து பல வருடங்களுக்கு முன்பே விலத்தப்பட்டவர். ஜேர்ஜ் மாஸ்ரரும் புலிஅல்ல அவர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர். தமிழ்ச்செல்வன் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பில் இருந்து புலிகளுக்குள் தந்திரமாக ஊடுருவியவர். எனவே அவரும் புலி அல்ல. அரசாங்கத்தைப் பழிவாங்குவதாக எண்ணி எழுதுவதானால் அது தமிழர்களை அவமானப்படுத்துவதாகத்தான் அமையும். ஏனெனில் இலங்கைத்தமிழர்களின் கடவுளின் பிரதிநிதியான மாபெரும் கதாநாயகன் ஒரேயொரு தேசியத்தலைவன் பிரபாகரனின் வலதுகை பொட்டுஅம்மான் இடதுகை கருணாஅம்மான் பொட்டுஅம்மானின் வலதுகை(பெயர் தெரியவில்லை) எல்லோரும் இபபொழுது இலங்கையின் தேசியநாயகன் மேதகு ஜனாதிபதி மகிந்தராயபக்ஷ அவர்களிடம் சரணாகதி அடைந்து புலிகளைப் பற்றிய சகல வலையமைப்புக்களையும் அரசுக்கு அம்பலப்படுத்தியுள்ளார்கள். எனவே நீங்கள் அரசைக் களங்கப்படுத்துவது தமிழர்களின் மேதகுவைக் களங்கப்படுத்துவதாகும்.
எனவே தயவு செய்து உங்களை நீங்களே அசிங்கத்தை வாரித்து|ற்றாமல் செய்திகளை நிதானமாக எழுதவும்.
உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.