குறைந்தது 13 மாவோயிஸ்ட் போராளிகள் ஒடிசா காட்டுப் பகுதியில் போலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலிஸ் தரப்பு தகவல்களின் அடிப்படையில் சாலைக் கோட்டா காட்டிலுள்ள முகாம் ஒன்றைச் சுற்றிவளைத்ததாகவும் அங்கு 30 அல்லது 40 போராளிகள் வரை ஆயுதங்கள் வெடி மருந்துகளுடன் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த முகாம் மீதான தாக்குதலில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும் வெடி மருந்துகளும் ஆயுதங்களும் கையகப்படுத்தப்பட்டதாகவும் போலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலத்த துப்பாக்கிச் சண்டையின் பின்னதாக் 13 பெண்கள் ஆண்கள் உட்பட 13 உடல்களை கிளைமோர் வெடிகுண்டுக்கு அருகாமையில் கண்டதாக் போலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மல்கான்கிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர், மாவட்டத் தன்னார்வப் படையினர் இணைந்து சில குடா வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த தேடுதல் வேட்டையின்போது பாகாப்புப் படையினரை கண்டவுடன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் அக்குழுவின் தலைவர் ராகேஷ் தப்பிவிட்டார் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
2012 ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் நடந்ததோ வேறு; பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுகூடம், கொத்தகூடம், ராஜூபெண்டா என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் எண்ணூறு பேர் அன்று கூடினர். ஆட்டமும், பாட்டும், இசையும், இரவு முழுக்க நடந்து கொண்டிருந்தது. அது விவசாயிகளின் விழா நாள். பாம்புப் படை (CஓBறா fஒர்cஎச்) என்ற பெயரில் அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் சுமார் முன்னூறு பேர் அடங்கிய போலீஸ் படைகள் இந்தக் கூட்டத்தைச் சுற்றி வளைத்தது. கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கின. இந்தப் படைகள் பழங்குடிகளைக் கொலைகள் செய்வதில் பேரின்பம் கொள்ளும் போலீஸ் அதிகாரியான விஜயகுமார் தலைமையில் இயங்கின.
இது ஒடிசா போலீஸாருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று என்றும் ஒடிசா மாநில எல்லைக்கு அப்பால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாக அமையும்’ என்றும் காவல் துறை தலைமை இயக்குனர் மிஸ்ரா இன்றைய தாகுதல் குறித்துக் கூறினார்.
ஒடிசா-சத்தீஷ்கார் மாநில எல்லையில், போலீசாருக்கும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில், 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மோதலில் பலியானவர்கள், காங்கிரஸ் பேரணியில் தாக்குதல் நடத்தியவர்களா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒடிசா, சத்தீஷ்கார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் கொட்டத்தை அடக்குவதற்காக, போலீசாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒடிசா மாநிலம், மால்காங்கிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்து தங்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சத்தீஷ்கார் மாநில எல்லையில் உள்ள பாடியா கிராமத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த முகாம் அமைந்து இருந்தது.
கூட்டு அதிரடிப்படை போலீசாரும், மாவட்ட தன்னார்வ படைப்பிரிவினரும் இணைந்து, நேற்று அதிகாலையில் அந்த முகாமை திடீரென சுற்றி வளைத்தனர். போலீசாரைப் பார்த்ததும், மாவோயிஸ்டுகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள்.
போலீசார் திருப்பிச்சுட்டு பதிலடி தாக்குதல் தொடுத்தனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக, இரு தரப்பினருக்கும் இடையே அங்கு பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி சிறை பிடிக்கப்பட்டார்.
பலியான 13 தீவிரவாதிகளின் உடலையும் போலீசார் கைப்பற்றினார்கள். இந்த துப்பாக்கிச்சண்டையில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், காயம் அடைந்த மேலும் சில தீவிரவாதிகள் தப்பிச்சென்று விட்டதாகவும் முதலில் வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டது.
Modern satellite technology helped Sri Lankan Armed Forces. I am wondering why India is dilly dallying with these kinds of problems there.