1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்ததின் பின்னர் சட்டமாக்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவில்லை. இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கூட் இலங்கை பேரினவாத அரசுகள் முன்வருவதில்லை, ஒரு தசாப்தகால ராஜபக்ச அரசில் இழுத்தடிக்கப்பட்ட நடைமுறைகள் இன்று சிரிசேன ஆட்சியிலும் ஆரம்பித்துள்ளது. சிரிசேனவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்த கட்சிகளிடையே பல உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உடன்பாடுமின்றி ஆதரவளித்தது.
13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படுத்தப்படவில்லை, அவ்வாறான உடன்படிக்கை இல்லாமையினால் அரசியலமைப்பிலிருக்கும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என ஜாதிக ஹெல உறுமைய என்ற பௌத்த சிங்கள அடிப்படைவாதக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த சம்பிக்க ரனவக்க என்பவரே ராஜபக்ச அரசைத் தொடர்ந்து இப்போதும் மின் வலு அமைச்சராகச் செயற்படுகிறார். யாழ்பாணப் பிரதேசம் முழுவதையும் நச்சாக்கி கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடும் சம்பிக்க சார்ந்த கட்சி 13வது திருத்தம் கூட நடைமுறைக்கு வராது எனத் தெரிவித்துள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கட்சிகளுக்கு இடையில் இன்னமும் இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் திட்டத்திற்கு மட்டுமே ஜாதிக ஹெல உறுமய கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் 13ம் திருத்தச் சட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்துவது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் கட்சிகளுக்கு இடையில் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Already before this election I mentioned this…
In this UNP-CBK-Sarath-JVP-SLFP(a part)-JHU-Rizzad-SLMC alliance, after the parliament election see their fight…
&!watch for TNA’s statements agsint them…
I give only one year time after parliament election…
13வது திருத்தச் சட்டத்ழத அடுல்படுத்துவதாக ரணில் மற்றும் மங்கள உறுதிப்படுத்தியுள்ளார். அதை பௌத்த கட்சி ஒன்றை போட்டு பின் தள்ள வேண்டாம். ஒரு கட்சி வந்ததும் அனைத்தையும் உடனடியாக செய்ய முடியாது. உள் மாற்றங்கள் அதிகம் உள்ளன. இது ஒரு தேர்தலால் பாராளுமன்றம் மாற்றப்பட்ட ஒரு தருணம் அல்ல.
என்ன பௌத்த கட்சி?
சிங்கள இனவாத மேலாதிக்க பௌத்தமதத்தை அவமதிக்க சுற்றுச்சூழலலை பாழாக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட ஒரு நாடகம் நடந்தேறுகிறது. சில ஊண்மை புத்த பிக்குகளையே தாக்கியும் விரட்டிவிட்டு உருவானதொன்றை கட்சி என்று மதிப்பிட முடியாது. மகா நாயக்க தேரோக்கள் ஏதோ கடவுள்கள் மாதிரி நடாத்தப்படும் தொல்லையைத் தாண்டி இனவழிப்பு என்ற நோக்குடன் செயல்பருவது அரசியல் ஆகாது. பாஸிஸம் என்ற சொல் பொருந்தலாம்.
ஒருவன் நூறு முள்ளிவாய்க்கால்கள் வரும் என பயமுறுத்திய பின்னரும் அதனைக் கன்டும் காணாமல் காணாமல் இருப்பது மிகவும் அபாயகரமானது.
நல்லிணக்கம் என்ற சொல்லே பாவிக்கப்படாமல் மக்களை மீண்டும் தவிக்க வைக்கப்படப்போவது.
வெறுமனே வாறது போறது எல்லாம் அரசியற் கட்சிகளாக முடியாது. இப்படித்தான் அலற்சியப்படுத்தியதால் மகிந்த ராஜபக்ச என்பது பூதாகரமாக உருவானது
https://inioru.com/?p=43835#comment-68073
மைத்திரியின் வரப் போகும் ஆட்சிக் காலத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினை பின் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கும் அதற்குரிய செயல் திட்டம் சிங்கள கொள்கைவகுப்பாளர்களிடம் உண்டு. இது எதையும் அவநம்பிக்கை உடன் பார்க்கும் தன்மை அல்ல! கடந்த கால அனுபவமும், நிகழ் கால நடை முறையும் அதனையே சுட்டி நிற்கின்றன. வட கிழக்கில் உள்ள ஸ்ரீலங்கா படைமுகாங்கள் அனைத்தும் சிங்கள குடியேற்ற திட்டங்கள் ஆக வழிவகை செய்யப் பட்ட பின் அங்கு சட்ட விரோதமாக பறிமுதல் செய்யப் பட்டு துரத்தி அடிக்கப் பட்ட மக்களின் காணிகள் திருப்பி ஒப்படைக்கப் படும் என எண்ணுதல் ……. வெறும் முட்டாள் தனம். தமிழ் மக்களின் காணிகளை வலோத் காரமாக பறிமுதல் செய்யும் சிங்கள் பேரினவாத திட்டத்துக்கு இந்தியாவின் அனுசரணையும் உண்டு. ஆக இந்த நிலைமையில் குறைந்த பட்சம் எமது நிலங்களை மீட்கும் அரசியல் போராட்டத்தை கூட முன்னெடுக்கும் எத்தனம் இன்றி இருக்கும் TNA போன்ற அமைப்புகள் காலத்தை ஓட்டுகின்றன. ஒரு விடயத்தை நாம் மனதில் இருத்த வேண்டும் மகிந்த ஆட்ச்சிக்கு முன்பு கூட திருகோணமலை , அம்பாறை வவுனியா , முல்லைத்தீவு (மணலாறு/ வெலிஓயா) போன்ற பகுதிகளில் தமிழர்களின் காணிகள் பறிமுதல் செய்யப் பட்டன அன்று நாம் அதை தீவிரமாக எதிர்க்கவில்லை காலம் கடந்து ஆறிய கஞ்சியாகி விட்டது இன்று அவை சிங்கள குடியேற்றங்க்காளாகி விட்டன. இன்றும் ராணுவத்தாலும் அரசாலும் பறிமுதல் செய்யப் பட்ட காணிகளை பெற நாம் காலத்தை கடத்துவோம் ஆனால், அக் குடியேற்றங்கள் சட்டபூர்வமாகவும் மாறிவிடும் (இப்போதும் இலங்கை சட்டப் படி அவை சட்ட பூர்வமாகவே நடைபெறுகிறது அல்லது காட்டப்படுகிறது) இதன் மூலம் அங்கு குடியேறி இருக்கும் படைகளின் குடும்பங்களின் வெளியேற்றம் சாத்தியப் படாது. நாம் சம காலத்தில் போராடாது காலத்தை கடத்தும் போது இக்க குடியேற்றங்களில் வசிக்கும் சிங்கள குடியேறிகள் அடுத்த தலை முறைக்கு உரியவர்கள் ஆகி விடுவர். இதனால் அவர்களை வெளியேற்றுதல் மனிதாபிமான பிரச்சினையாக மாறிவிடும் (சர்வதேசமும் ஏன் ஐநாவும் இதனை மனிதாபிமான பிரச்சினையாக பார்க்கும்). ஆக இன்று போராடவிட்டல் இந்த நிலங்கள் நிரந்தரமாகவே எம்மிடம் இருந்து பறிக்கப் பட்டு விடும். இந்த ஆபத்துகள் எல்லாவற்றையும் விளங்கும் தாற்பரியம் தமிழர் அரசியல் வாதிகளிடம் இல்லாமல் இலை ஆனால் அவர்கள் போராடும் குணாதிசயங்களுடன் இல்லை என்பதே இன்றுள்ள யதார்த்தம் ஆகும்.
Prasad your comments is 100 percent correct