இலங்கையின் தேசியப் பிரசினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நினைத்தால் அதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை கோட்டை சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய அநுரகுமார திசாநாயக்க எம்.பி. மேலும் கூறியதாவது,
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன எமக்கு தெரிவித்தார்.
அமைச்சர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இலங்கை தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வோ 13 ஆவது திருத்தமோ பயனளிக்காது. மீண்டும் பிரிவினைவாதத்தை அரசியலின் ஊடாக இலங்கையில் விதைக்க வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்.
இதை டக்கிளசிற்கும் கேட்கும்படியாக சொல்லுங்கள் தலைவரே! மகிநதாவிறகு உங்களைப் போல ஆட்கள்தான் இப்ப முக்கியம் தேவை!