யாழ்ப்பாணத்தில் புற்றிநோய் சிகிச்சைப் பிரிவைத் திறந்துவைத்துப் பேசிய மகிந்த ராஜபக்ச 12000 படைகள் மட்டுமே அங்கு நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார். முள்ளிவாய்க்காலில் அணியணியாக மக்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்களின் தொகையை பலமடங்கு குறைத்துக் கூறிய மகிந்த அரசு பல சாகடித்தவர்களைக் கணக்கில் போடாமல் விட்டது.இன்று வடக்கிலிருக்கும் இராணுவத்தினரின் தொகையை 5 மடங்காகக் குறைத்துள்ளார்.
சர்வதேச நாடுகள் எதனைக் கூறினாலும் வடக்கில் இன்று 10க்கும் குறைவான இராணுவ முகாம்களே உள்ளன. வடக்கில் நிலைக் கொண்டிருந்த இருந்த 70 ஆயிரம் இராணுவத்தினரை அரசாங்கம் 12 ஆயிரமாக குறைத்துள்ளது மகிந்த இன்று குறிப்பிட்டார். தெற்காசியாவில் அதி வேகமாக வளர்ச்சியடையும் இராணுவத்தின் குடியிருப்புப் பிரதேசமாக மாறிவரும் இலங்கை இராணுவத்தின் தளமாக வட மாகாணம் மாறிவருகிறது. ஏகதிபத்திய நாடுகளின் அடியாட் படையாக மாற்றமடையும் இலங்கை இராணுவம் தெற்காசிய மக்களின் பாதுக்காபிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட மக்களின் பிணங்களின் மீது கட்டியெழுப்பப்படும் இராணுவ ராஜ்யம் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
Sri Lanka is now indeed a hub for the whole of South Asia in many spheres. . They will come from all over the world to learn from the three battle hardened armed forces. Then the American Touch.
Can you please elaborate on your claim, “Sri Lanka is now indeed a hub for the whole of South Asia in many spheres”. Why haven’t they already come, “They will come from all over the world to learn from the three battle hardened armed forces”. What is this nonsense about, “Then the American Touch”. ?