சென்னை வட பழனி கோவிலுக்குச் சொந்தமான 250 கோடி அளவிலான ஆக்ரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலம் சாலிகிராமம் அருகில் உள்ள காந்தி நகரில் 5.5 ஏக்கர் அளவுக்கு ஆக்ரமிக்கபப்ட்டிருந்தது. அந்த நிலத்தை மீட்ட அமைச்சர் அதில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் . மீட்கபப்ட்டுள்ள நிலங்களின் மதிப்பு 250 கோடி.
மேலும் கோவில் சொத்துக்களை யார் யாரெல்லாம் ஆக்ரமித்திருக்கிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதோடு நிலங்களும் மீட்கப்படும்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
தமிழ்நாட்டில் பாஜக தன்னை நிலைநிறுத்தி கொள்ள பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாத காலம் தான் நிறைவடைந்துள்ளது அதற்குள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் டிரைலர் தான் மேயின் பிச்சரை இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள். யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். அனைத்து சாதியினரும் ஆர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவில் நிலத்தில் நீண்ட நாள் இருக்கும் மக்களுக்கு அவர்கள் நலம் கருதி அந்த நிலத்தை அவர்களுக்கு வாடகை விடப்படும் கோவில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தற்போது மீட்ட இடத்தில் மக்களுக்கு நல்லது எதுவோ அது செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.