30.12.20008.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கைதுசெய்து, கிளிநொச்சியில் விடுவிக்கப்படாத ஏனைய எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் கைதுசெய்யப்பட்டு, அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நீதிமன்றனத்தின் முன்நிலையில் நிறுத்தப்படுவார் என கண்டியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் குறிப்பிட்டார்.
“மிருகங்களைப் போல பதுங்கு குழியில் ஒழித்திருக்கும் பிரபாகரன் பெப்ரவரி 7ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்” என்றார் அமைச்சர்.
எனினும், விடுதலைப் புலிகளின் தலைவரை இராணுவத்தினர் எதிர்வரும் ஆறு அல்லது ஏழு வாரங்களில் கைதுசெய்வார்கள் என்பது உறுதியாகியுள்ளபோதும், எப்போது கைதுசெய்வார்கள் என்பதற்கான திகதி எதனையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது என கொழும்பு ஊடகமொன்று அமைச்சரைத் தொடர்புகொண்டபோது பதிலளித்துள்ளார்.
“பிரபாகரன் விடுவிக்கப்படாத பகுதியில்தான் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவ்வாறு அவர் அங்கிருந்தால் கைதுசெய்யப்படுவார்” என்றார் அமைச்சர் ரம்புக்வெல.
அதேநேரம், கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களை விடுவிப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு நாளைவரை அரசாங்கம் கால அவகாசம் வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவ்வாறு மக்களை அவர்கள் விடுவிக்காவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்ததாக அரசாங்கம் அறிவிக்கும் என்றார்.
எனினும், கிளிநொச்சியை இழந்தாலும் தாம் தொடர்ந்து போராடுவோம் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அண்மையில் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
very good jok! 2008!